மஹாபெரியவாளின் அற்புதங்கள்

நீ பக்தர்களின் தூய உள்ளத்தை புரிந்து கொண்டால் உன்னுடைய உண்மையான அம்பாள் ஸ்வரூபத்தை கூட தரிசனம் செய்ய வைத்து விடுவாய் இந்த பதிவின் தியாகராஜ சுந்தரம் ஒரு வாழும் உதாரணம்

கலி காலத்தில் அம்பாள் காமாட்சியின் உயிருள்ள தரிசனம்
மஹாபெரியவா திருவடிகள் சரணம்
மஹாபெரியவாளின் நெறி பிறழா பக்தர்களுக்கு என் மரியாதைக்குரிய சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
மஹாபெரியவாளின் அற்புதங்கள் எத்தனை எத்தனையோ. அந்த அற்புதங்களில் ஒவ்வொன்றாக நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். என் ஜென்மம் முடியும் வரையில் நான் ஒவ்வொன்றாக உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறேன். எனக்குப்பிறகு இன்னொரு மஹாபெரியவாளின் பக்தர் இந்தப்பணியை தொடர்வார் என்பது மறுக்கமுடியாத உண்மை.
இது ஒரு தொடர் ஓட்டம்
ஓய்வு கிடையாது
இனி இந்த அற்புதசாரல்களுக்கு வருவோம்.
யாராவது உங்களிடம் அம்பாளை பார்த்ததுண்டா என்றால் உங்கள் பதில் என்னவாக இருக்கும். நிச்சயமாக இல்லை என்பதுதான் உங்கள் பதிலாக இருக்கும். ஆனால் பக்தர் "தியாகராஜ சுந்தரம்" என்பவரிடம் உங்கள் கேள்விக்கு பதில் என்னவாக இருக்கும் தெரியுமா.?
பார்த்திருக்கிறேன் என்பது தான் அந்த பதில்
மஹாபெரியவா காஞ்சி மடத்தைத்தவிர வெளியூர்களுக்கு பக்தர்களை சந்திக்கும் நிமித்தம் செல்லும் பொழுது அம்பாள் பூஜை நடக்கும் பொழுது தற்காலிகமா ஒருவர் திரையை அம்பாளையும் பெரியவாளையும் மறைக்கும் வண்ணம் இடக்கையையும் வலக்கையையும் நீட்டி திரையைப்பிடித்திருப்பார்.
அந்த பக்தர் தியகராஜ சுந்தரம் ஆஜானு பாகுவான தேகம் கொண்டவர். ஆறடி உயரம், பரந்த தோள்கள், நேர்த்தியான இரு நீண்ட கைகள். இவர் தன் இருகைகளையும் இருபுறமும் நீட்டி திரையை பெரியவாளையும் அம்பாள் விக்கிரஹத்தையும் மறைத்து சுமார் பத்து நிமிட நேரம் அசராமல் பிடித்திருப்பார்.
இவரது பக்திக்கு இணை ஈடு அந்தக்காலத்தில் யாரும்மில்லை.
இவரது ஆழமான அசைக்கமுடியாத பக்தியைக்கண்டு மஹாபெரியவாளே தன் நம்பிக்கைக்கு பாத்திரமான பக்தர்களுள் ஒருவராக ஸ்ரீ தியாகராஜ சுந்தரத்தை வைத்திருந்தார்.
பூஜை நேரத்தில் திரை பிடித்திருக்கும் பொழுது தன்னை மறந்தும் கூட பெரியவளையோ அம்பாளையோ பார்த்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார். அவ்வளவு ஒரு பக்தி மஹாபெரியவாளிடம்.
ஒரு நாள் திரையை பிடித்திருக்கும்பொழுது முதல் இரண்டு நிமிடங்களில் கைகள் வலிக்க ஆரம்பித்தன.இருந்தாலும் வலியை பொறுத்துக்கொண்டு பத்து நிமிடம் வரை பிடித்திருந்தார், அதற்கு மேல் அவரால் திரையை பிடித்துக்கொள்ளமுடியவில்லை..மஹாபெரியவாளிடம் தன் இயலாமையை சொல்லி விடலாம் என்று திரைக்கு உள்புறம் தன் பார்வையை திருப்பினார்.
தியராஜ சுந்தரத்தால் தன் பார்வையை தன்னாலேயே நம்ப முடியவில்லை
சத்ய ஸ்வரூபியாக சாட்ஷாத் அம்பாள் உயிருரடன் உட்காரர்ந்திருக்க மஹாபெரியவா பூஜை புஷ்பங்களை அம்பாள் காலில் சமர்பிக்கின்றார்.
தியாகராஜ சுந்தரத்தால் தன் கண்களை அம்பாள் மேலிருந்து எடுக்கமுடியவில்லை மஹாபெரியவா தியாகராஜ சுந்தரத்தை பார்த்து கேட்டார்.
அம்பாள் தரிசனம் ஆச்சா?
உன்னுடைய பக்திக்கும்,நேர்மைக்கும், தூய உள்ளத்திற்கும் தான் இந்த அம்பாள் தரிசனம். சந்தோஷமா. சேஷேமமா இரு என்று மஹாபெரியவா சிரிப்புடன் சொன்னார்.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
நம்முடைய ஆழமான பக்தி, அசைக்கமுடியாத இறை நம்பிக்கை, நேர்மையான எண்ணங்கள் தூய சிந்தனை இத்தனையும் கொண்ட ஒரு சிறந்த மனிதனாய் நாம் மாறுவோமேயானால் அந்த இறைவனும் நமக்காக ப்ரத்யக்ஷமாக காட்சி தருவான் என்பதில் இன்னும் என்ன ஐயம்.
மாறித்தான் பார்ப்போமே
அன்று பாஞ்சாலி கண்ணனிடத்தில் சேலை கேட்டாள்
பார்த்தன் கண்ணனிடத்தில் கீதை கேட்டான்
குசேலன் கண்ணனிடத்தில் கேட்காதது எல்லாம் கிடைக்கப்பெற்றான் பெற்றான்
கேட்டதும் கேட்காததும்
எல்லாம் கிடைக்கப்பெற்றது எதனால்
ஆழமான பக்தியால் தானே
நாம் ஆழமான பக்தியால்
அந்த கண்ணனையே கேட்போமே
மாறுவோம் இறை தரிசனம் காண்போம்
நம் வாழ்க்கை ஒளிமயமாகட்டும்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்