Guru Pooja Experience by Mrs.Mythili

உறவுகள் என்பது நம்முடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப
இறைவன் நமக்கு கொடுக்கும் பிரசாதம்
உறவுகள் இறைவனின் பிரசாதம் என்பதற்காக
உங்களை கொண்டாட சொல்லவில்லை கேலி கூத்தாக்கமால்
வாழ்ந்து விட்டு போனால்
இறைவனும் மகிழ்வான் அடுத்த பிறப்பில் இதை விட
நல்ல உறவுகளை இறைவன் கொடுப்பான்
காணாமல் போன உறவை கண்டெடுத்து கொடுத்த அற்புதம்
மஹாபெரியவாளின் அற்புத பரிமாணங்களில் இதுவும் ஒன்று
Guru Pooja Experience by Mrs.Mythili
ஜி.ஆர்.சார் அவர்களுக்கு எனது வணக்கங்கள். இன்று மஹாபெரியவா அவர்களின் ஆசியுடன் இரண்டாம் வார குரு பூஜை நல்ல முறையில் நடை பெற்றது. முதல் வாரத்தின் குரு பூஜை முடிவில் அம்மா அக்காவை பார்க்க சென்றார். அக்காவின் மாமனார் மாமியார் எப்பொழுதும் என் அம்மா அப்பாவிடம் அலட்சியமாக நடந்து கொள்வார்கள். அக்காவை பார்க்க சென்றால் எதற்கு வந்தீர்கள் என்பார்.
ஆனால் இம்முறை மஹாபெரியவா அவர்களின் அருளால் அதிசயம் நிகழ்ந்தது. அம்மாவையும் அப்பாவையும் மிகவும் மரியாதையாக நடத்தினார்கள். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்போது தான் நன்றாக பேசியுள்ளனர்.
நான் அம்மாவிடம் நம்பிக்கையோடு மஹாபெரியவா அவர்களை நினைத்து கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என்றேன். அதே போல் பெரியவா , அவர்களின் கல் நெஞ்சையும் கரைத்து விட்டார். அம்மா அப்பா மகிழ்ச்சியோடு வீடு திரும்பினர்.
மஹாபெரியவா அவர்களின் அருளால் என் பெற்றோரும் நானும்ஆனந்தம் அடைந்தோம். ஹர ஹர சங்கர ! ஜெய ஜெய சங்கர !
With kind regards,
Mrs. Mythili