top of page
Featured Posts

மஹாபெரியவாளின் குரு பூஜையும் அதன் மஹிமைகளும் விஷ்ணுமாயா -001- பாகம்-4


மஹாபெரியவாளின் குரு பூஜையும் அதன் மஹிமைகளும்

விஷ்ணுமாயா -001- பாகம்-4

கலியின் விகாரங்கள்

அன்பு அரக்கனாக மாறியது

பண்பு பரதேசம் போனது

சத்தியம் சாணக்கியத்தனமானது

மனிதத்தன்மை மறந்து போனது

மனிதன் காணாமல் போனான்

மனிதமும் தொலைந்தது.

இந்த நிலையில் கூப்பிட குரலுக்கு ஓடோடி வந்து அனுக்கிரஹம் செய்யும் பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவா. விஷ்ணுமாயா இன்று வரை எதையுமே தொலைக்காத ஒரு பெண். அவள் மனிதத்தை இன்றும் கொண்டாடிக்கொண்டிருக்கும் ஒரு நல்ல தமிழ் பெண்.. மஹாபெரியவா அவளுக்கு அனுகிரஹமும் ஆசிர்வாதமும் செய்வதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா. உண்மைதான்.அங்கொன்றும் இங்கொன்றுமாக மனிதனும் மனிதமும் இன்றும் தொலையாமல் இருப்பதற்கு காரணம் விஷ்ணுமாயாவைப்போல சில சான்றுகள் இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பதுதான்.

வழக்கமாக எல்லோரும் ஒரு பிரார்த்தனையை முன் வைத்துதான் இறைவனை அழைப்பார்கள். பூஜையும் செய்வார்கள்.ஆனால் மஹாபெரியவா குரு பூஜை சற்று வித்தியாசமானது..நமக்கு என்ன தேவை எப்பொழுது தேவை என்பது நமக்கு தெரியாது. இறைவன் முன் நாமெல்லோரும் குழந்தைகள் மாதிரிதான்.

மஹாபெரியவா குரு பூஜை அற்புதம் இதுதான். ஒன்றை வேண்டி பூஜை ஆரம்பிப்போம். பூஜையும் முடியும். கேட்டதும் கிடைக்கும்..ஆனால் நமக்கே தெரியாமல் நமக்கு தேவயானதை மனதில் தோன்ற வைப்பார் மஹாபெரியவா..

விஷ்ணுமாயாவும் இதற்கு விதி விலக்கா என்ன? முதலில் உடல் நலத்திற்கு பிரார்த்தனை. பிறகு தனது தாயாரின் புற்று நோய்க்கு பிரார்த்தனை. வேலையில் ப்ரோமோஷன் அதற்கு பிரார்த்தனை. குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை.

அழைத்த குரலுக்கு ஓடோடி வந்து குழந்தையின் உடல் நிலையை சரியாக்கியது..நீங்கள் சற்று சிந்தித்துப்பாருங்கள்.கலியுகத்தில் யார் நமக்கு கேட்டதை தருவார்கள்.அதுவும் பக்தியுடன் ஓர் குரு பூஜை செய்தால் போதுமே, தெய்வம் கண்ணுக்கு தெரிவதை உங்களால் உணர முடியும்..

விஷ்ணு மாயாவின் சொந்த வீட்டுக்கனவு நாமெல்லாம் அறிந்ததே. அலுவலகத்தில் வேலை உயர்வும் சம்பள உயர்வும் கிடைத்தால் சொந்த வீட்டை பறி யோசிக்கலாம் என்று யோசியத்துக்கொண்டிருக்கும் பொழுதே ப்ரோமோஷன் வந்தது சம்பள உயர்வும் வந்தது.

விஷ்ணுமாயா சொந்த வீட்டைப்பற்றி யோசிக்காரம்பித்தாள். வீட்டையும் பார்க்கத்தொடங்கினாள். அப்பொழுதுதான் அவளுக்கு புரிந்தது.வீட்டின் விலையில் குறைந்தது பத்து சதவீதமாவது மார்ஜின் தொகை கட்டவேண்டும் என்பது...விஷ்ணுமாயா என்னிடம் தன்னுடைய இயலாமையை தெரிவித்தாள்.நானும் அவளிடம் மஹாபெரியவாளிடம் மறு நாள் காலை என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையில் வேண்டிக்கொள்வதாக சொன்னேன்.

மஹாபெரியவாளிடம் பின்வருமாறு வேண்டிக்கொண்டேன்.

"பெரியவா விஷ்ணுமாயாவிற்கு அவள் கேட்டதை எல்லாம் கொடுத்தீர்கள். இப்பொழுது அவளுக்கு சொந்த வீடு வாங்குவதில் ஒரு பிரச்சனை.என்றேன்

அதற்கு மஹாபெரியவா நீ தானடா ப்ரோமோஷன் சம்பள உயர்வு எல்லாம் கேட்டாய். அதெல்லாம் கொடுத்தானே.

நான் சொன்னேன் "அதில்லை பெரியவா. வீடு வீலை எழுபது லக்க்ஷம் ரூபாய். இதற்கு மார்ஜின் பணம் மட்டுமே சுமார் பத்து லக்க்ஷம் வேண்டும்... கையில் இருப்பதோ ஐந்து லக்க்ஷம் மட்டுமே.

இன்னும் ஐந்து லக்க்ஷம் சேர்பதற்குள் வீட்டின் விலை கிடு கிடுவென உயர்ந்து விடும். விஷ்ணுமாயாவிற்கு கேட்டதை எல்லாம் கொடுத்தீர்கள்.இந்த சொந்த வீடு கனவை மட்டும் அவளுக்கு அனுக்கிரஹம் பண்ணுங்கள் பெரியவா. என்று கெஞ்சி கேட்டு என் பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.

.மேலும் நான் சொன்னேன் பெரியவா நான் எனக்குன்னு எதுவும் கேட்கவில்லையே. பெரியவா. மத்தவாளுக்குத்தானே கேட்கிறேன். கொஞ்சம் அனுக்கிரஹம் பண்ணுங்கோ பெரியவா என்று கேட்டு என் பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.

சில வினாடிகள் அமைதிக்கு பிறகு அவள் நிச்சயம் வீடு வாங்குவா. வாங்குவது மட்டுமல்ல,வீட்டுக்கடனை குறித்த காலத்திற்கு முன்பாகவே அடைத்து விடுவாள். அவளுக்கு அனுக்கிரஹம் பண்ணியாச்சு. உனக்கு சந்தோஷம் தானே என்று கேட்டுவிட்டு என்னிடம் மஹாபெரியவா கேட்கிறார். ஏண்டா உனக்குன்னு எதுவும் தேவையிலயா. உனக்கு எதுவும் வேண்டாமா. என்று கேட்கிறார்.

நான் அதற்கு மஹாபெரியவாளிடம் சொன்னேன். என் தேவைகளை எல்லாம் சுருக்கி விட்டீர்கள். சரீர சுத்தி பண்ணி எனது அறுபது வருட கால உணவுப்பழக்கவழக்கங்களை ஒரே இரவில் தூக்கி போட வைத்தீர்களே. ஆத்ம சுத்தி பண்ணி ஆசை அபிலாஷகளை எரித்து விட்டீர்களே .

மீறிப்போனால் எனக்கு உங்களது அற்புதங்கள் அடங்கிய புத்தகங்கள்தான் தேவை. அதையும் நான் நினைப்பதற்கு முன் எனக்கு கொடுத்து விடுகிறீர்கள் பெரியவா. நீங்கள் என்னை கேட்கும் படி வைக்கவில்லையே பெரியவா.

நீங்கள் என் பக்கத்திலேயே இருங்கள் பெரியவா. நான் மற்றவர்களுக்கு செய்யும் பிரார்த்தனைகள் எல்லாம் பலிக்க வேண்டும். எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்ய உடம்பில் தெம்பு கொடுங்கள். எனக்கு தேவை எப்பொழுதுமே நீங்களும் பக்தர்களும் மட்டுமே. பெரியவா என்று என் பதிலை முடித்துக்கொண்டேன்

.

மறு நாள் விஷ்ணுமாயா என்னை தொடர்புகொண்டு மஹாபெரியவா பதிலை கேட்டாள். நான் சொன்னேன் மஹாபெரியவா உனக்கு அனுக்கிரஹம் பண்ணியாச்சு. நீ வீடு வாங்குவது மட்டுமல்ல. வீடு கடன் தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்பே முடித்து விடுவாயாம்.என்று சொன்னேன்.

விஷ்ணுமாயா என்னிடம் சொன்னாள். மாமா கேட்க சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் அதே சமயம் எனக்கு சிரிப்பு வருது மாமா என்றாள்.

நான் சொன்னேன் என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். மஹாபெரியவா ஒன்றை சொல்லிவிட்டால் அந்த சொல்லை இந்த பிரபஞ்சமே ஒன்று கூடி நடத்திவிடும். எப்படி ஏன் ஏதற்கு என்று என்னை கேட்காதே. மஹாபெரியவா சொன்னது நிச்சயம் நடக்கும். அவளும் சரி மாமா பார்க்கலாம் என்று அலுவலகம் கிளம்பி விட்டாள்.

அந்த வாரத்தில் வெள்ளிக்கிழமையன்று விஷ்ணுமாயா என்னை தொலை பேசியில் அழைக்கிறாள். அவள் குரலில் அப்படியொரு சந்தோஷம். ஆமாம். மஹாபெரியவா சொன்னது நடந்து விட்டது. இன்னும் பதினைந்து நாட்களில் விஷ்ணுமாயா அவளது அலுவலகம் வேலை விஷயமாக அமெரிக்கா கிளைக்கு செல்கிறாள்.

சுமார் மூன்று மாத காலம் அமெரிக்காவில் தங்கி வேலை செய்ய வேண்டும்.இதில் அவளுக்கு நிகர சேமிப்பாக கையில் கிடைப்பது சுமார் ஐந்து லக்க்ஷம் கிடைக்கும்.. வீட்டு மார்ஜின் பணம் தயாராகி விட்டது. அடுத்தது வீடு பார்க்க வேண்டியது தான். நானும் மிகவும் சந்தோஷமாக மஹாபெரியவளிடம் அழுது கொண்டே அதிகாலை நான்கு மணிக்கு நன்றி சொன்னேன்.

மஹாபெரியவா என்னிடம் கேட்கிறார். ஏண்டா நீயே வீடு வாங்கின மாதிரி சம்தோஷ்ப்படறே. அவள் இன்னும் பல முறை அமெரிக்கா போவாள். உனக்கு சந்தோஷம் தானே. என்று கேட்டார்.

நான் என்ன பதில் சொல்லமுடியும் அழுவதை தவிர.

அடுத்த இருபது நாட்களில் நடந்த அற்புதத்தை என்னவென்று சொல்ல. விஷ்ணுமாயாவின் சொந்தக்காரர் ஒருவர் ஒரு வீடு விலைக்கு வருவதகவும் அதை வாங்கிவிடலாம் என்று சொல்லி வீட்டையும் வாங்கியாகி விட்டது. புதுமனை புகுவிழாவும் நடந்தேறியது. இன்று விஷ்ணுமாயாவின் குடும்பமும் அந்த புதிய வீட்டில் தான் வசிக்கிறார்கள்.

கலியின் விகாரங்கள் எத்தனை வேண்டுமானாலும் இருக்கட்டும்

அத்தனைக்கும் நமக்கு பாதுகாப்பு மஹாபெரியவா குரு பூஜை ஒன்றே

நடுத்தர வகுப்பினருக்கு சொந்தவீடு என்பது எட்டாக்கனி

ஆனால் விஷ்ணுமாயாவின் எட்டாக்கனி கனவு

எட்டும் கனி ஆகிவிட்டது

செய்தது மஹாபெரியவா குரு பூஜை

நீங்களும் மஹாபெரியவா குரு பூஜை செய்யுங்கள்

அமைதியான வாழ்க்கை வாழுங்கள்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page