மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
மஹாபெரியவா திருவடிகள் சரணம்
“வாழ்க்கையில் வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
மஹாபெரியவாளின் அருட்பார்வையில்
எவருக்கும் தோல்வி என்பது கிடையாது
மஹாபெரியவாளின் ஜீவ காருண்யம், பழமை மாறாத கொள்கை மற்றும் வாழ்க்கை முறை, பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள், எளிமையான, உணவு உண்ணும் விதம், ஹாஸ்யம்,பிரபஞ்சத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அற்புத நிகழ்வுகள், எந்த ஒரு பிரச்சனைக்கும் எளிமையான யாரும் எதிர்பாராத ஒரு தீர்வு, கடவுளின் அவதாரமாக இருந்தாலும் தன் நிலையில் இருந்து எவ்வளவு கீழே இறங்கி வரமுடியுமோ அவ்வளவு கீழே இறங்கி பக்தர்களின் நன்மைக்காக இறங்கி வந்த நிகழ்வுகள் இன்னும் எத்தனையோ அடுக்கிக்கொண்டே போகலாம். இவை எல்லாவற்றையும் முடிந்த அளவிற்கு, நாம் ஓவ்வொரு பதிவாக பார்க்கப்போகிறோம்.
இந்த வாரம் நம் பார்க்கப்போவது மஹாபெரியவாளின் ஒரு முயற்சி: கலியுக தாக்கத்திலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள எடுத்துக்கொண்ட முயற்சிகள் நம் அனைவரும் அறிந்ததே.. பதவி என்னும் கலியுக தாக்கத்திலிந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள மஹாபெரியவா எடுத்த முயற்சி யாரையும் அசர வைத்துவிடும்.
அப்படியொருமுறை தனக்கு வரும் பதவியில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள மஹாபெரியவா எடுத்த முயற்சியை நாம் இந்த பதிவில் அனுபவிப்போம்.
சாதாரண மனுடப்பிறவிகளாகிய நமக்கு ஒரு பதவியோ அல்லது ஒரு பாராட்டுதலோ வந்ததால் தலை கால் புரிவதில்லை. பதவி நம்மை நோக்கி வராவிட்டால் கூட நாம் பதவியை தேடி ஓடும் முயற்சியை நாம் அன்றாட வாழ்வில் கண்கூடாக பார்க்கிறோம்.
அப்படியிருக்க மஹாபெரியவா இந்த கலி யுகத்தில் வாழ்ந்து கொண்டே க்ரித யுகம், த்ரேதா யுகம்,த்வாபர யுகம் ஆகிய மற்ற மூன்று யுகங்களின் வாழ்க்கை நெறிமுறைகளையும் ஆச்சார அனுஷ்டங்களையும் எவ்விதத்திலும் சமசரமோ சமாதானமோ இல்லாமல் கடைபித்து வந்ததை நாம் எல்லோரும் கண் கூடாக பார்த்து அனுபவித்திருக்கிறோம்.
அப்படிப்பட்ட மஹாபெரியவாளுக்கு வந்த ஒரு சோதனையான இக்கட்டான நிலையை நம் மஹாபெரியவா தனது தெய்வ சக்தியால் எப்படி தவிர்த்தார் என்பது மிகவும் ஆச்சரியப்படவும் ஆனந்தமாக அனுபவிக்க தகுந்ததுமான ஒரு நிகழ்வு.
இனி அற்புத நிகழ்வுக்கு செல்வோம்:
அப்பொழுது தமிழக முதலமைச்சராக இருந்த ஸ்ரீ பக்தவச்சலம் மற்ற மாநிலங்களில் உள்ளது போல் தமிழகத்திலும் தெய்வீகப்பேரவை ஒன்றை துவக்க முயற்சி மேற்கொண்டார்.. இதன் தலைவராக ஒரே மனதுடன் காஞ்சி மஹாபெரியவாளை நியமிக்க பிரும்ம பிரயத்தனம் செய்து அரைகுறை ஒப்புதலை பெற்று விட்டார் ஸ்ரீ பக்தவத்சலம்.
இதன் துவக்க விழா சென்னை பி.ஸ். உயர்நிலை பள்ளி மைதானத்தில் ஏற்பாடாகியிருந்தது. விழா துவங்கியது.. எல்லோரும் தெய்வீகப்பேரவையின் தேவை பற்றியும் அதன் கடமைகள் பற்றியும் ஒவ்வொரு அதிஷ்டானத்தின் மடாதிபதியும் பேச ஆரம்பித்தார்கள்.
யாரும் எதிர்பாராத சமயத்தில் திடீர் என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் எழுந்து தருமபுரம் ஆதீனம் அவர்களை தலைவர் பதவிக்கு முன்மொழிவதாக அறிவித்தார்கள். யாரும் எதிர் பாரத வண்ணம் "அதை நான் வழிமொழிகிறேன்" என்று ஒரு குரல் கேட்டது.
அந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா?
நம் மஹாபெரியவாதான்!
எல்லோரும் அதிர்ந்து போனார்கள் முதலமைச்சர் ஸ்ரீ பக்தவத்சலம் உட்பட... மஹாபெரியவா இது இப்படித்தான் நடக்கும் என்று முன்கூட்டியே தன் தெய்வ சக்தியால் அறிந்திருந்ததால் தனக்கு பின்புறம் கை நீட்டினார் ஒரு சால்வை வந்தது..
அந்த சால்வயை தருமபுரம் ஆதீனத்திற்கு போர்த்தச்சொன்னார்கள். மஹாபெரியவா தன்னுடைய ஆசிகளையும் வாழ்த்துக்களையும் வழங்கிவிட்டு விழா மேடையை விட்டு இறங்கி சென்றுவிட்டார்கள்.
கொஞ்சம் நம்மையும் நினைத்துப்பார்ப்போமா.. மனிதர்களாகிய நமக்கும் இறைவனின் அவதாரபுருஷராகிய மஹாபெரியவாளுக்கும் உள்ள வித்யாசம்
விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும் உள்ள வித்தியாசம்
மலைக்கும் மடுவுக்கும் உலா வித்தியாசம்.
வித்தியாசம் புரிகிறதா?
இன்றைய வாழ்க்கையில் நாம் எங்கே போகிறோம
கண் போன போக்கிலே கால் போகிறது
கால் போன போக்கிலே மனம் போகிறது
மனம் போன போக்கிலே மனிதர்களாகிய நாம் போகிறோம்
சொன்ன வார்த்தைகள் எல்லாம் காற்றோடு போகிறது
பார்த்த பார்வைகள் எல்லாம் கனவாகப்போகிறது
நம்முடைய கனவுப்பிறைகளை பௌர்ணமி ஆக்கும்
நம்முடைய முயற்சி அமாவாசையில் முடியவேண்டாமே
வானத்து விஷயங்கள் நம் முயற்சிக்கு அப்பாற்பட்டது ஆனால்
வையத்து விஷயங்கள் நம் கட்டுப்பாட்டுக்குள் தானே இருக்கிறது
நாம் ஏன் முயற்சி செய்து ஒரு நல்ல வாழ்க்கை வாழக்கூடாது
நாமும் வாழ்வோம் நம்மை சுற்றியுள்ளோரையும் வாழ வைப்போம்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்