Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா பழைய தொடர் புதிய பொலிவுடன்


நீ இருப்பதால் தான்

என் வயதும் வயோதிகமும் என்னை

ஒன்றும் செய்ய இயலவில்லை

உன் ஆசியால்

நான் உழைக்கும் உழைப்பை பார்த்து சர்க்கரைக்கே

சர்க்கரை நோய் வந்து விட்டது

வயோதிகம் காணாமல் போய் வாலிபம் திரும்பி விட்டது

உன் அற்புதங்களில் நானே ஒரு அற்புத படைப்போ

இதோ பழைய படைப்பு புதிய பொலிவுடன்

"பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா"

- காயத்ரி ராஜகோபால் -

என் ஆத்ம சமர்ப்பணம் :

இந்த தொடரை எழுதுவதற்கு முன்னால் என்னுடைய இதயம் கனிந்த நன்றிகளை திரு. சிவராமன் அவர்களுக்கும் மற்றும் அவரை போலவே மஹாபெரியவா பக்தர்களிடம் நேர்காணல் நடத்தி இணைய தளத்தில் வெளியிட்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் தெரிவித்து கொள்ளகிறேன்.

அன்று திரு சிவராமனை போன்றவர்கள் கிராமம் கிராமமாக சென்று பக்தர்களின் சௌகரியத்தை மட்டுமே முன்னிறுத்தி தன்னுடைய அசௌகரியங்களை பொருட் படுத்தாமல் மஹாபெரியவா என்னும் பிரபஞ்ச சக்தியை மட்டுமே மையமாக கொண்டு தங்களை இயக்கிக்கொண்டு இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.

அன்று அவர்கள் செய்த இந்த அளர்ப்பரிய பணியால் இன்று உங்களுக்கு இந்த பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா என்ற தொடரை என்னால் தொகுத்து வழங்க முடிகிறது.

நான் மஹாபெரியவாளை வேண்டிக்கொள்வது இதுதான். இந்த தொடரை எழுதுவதற்கு எனக்கு உதவிய திரு. சிவராமன் அவர்களுக்கும் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கும் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கி ஆசிர்வதிக்குமாறு மஹாபெரியவாளை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

இந்த தொடரை படிக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனக்கு ஒரு தன்னம்பிக்கை பிறந்து சோதனைகளை கடந்து வந்து எனக்காக காத்துக்கொண்டிருந்த ஒரு நல்ல அழகான வாழ்க்கையை அமைத்து கொண்டதுபோல் உங்களுக்கும் ஒரு புதிய வாழ்கை உதயமாகட்டும் என்று வாழ்த்தி இந்த தொடரை மீண்டும் ஒரு முறை துவங்குகிறேன்.

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா

“விட்டுக்கொடுங்கள் விருப்பங்கள் நிறைவேறும்

தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும்

மனம் விட்டுப்பேசுங்கள் அன்பு பெருகும்”

*****

நம்முடைய பூமிக்கோளில் வாழும் ஒவ்வொரு ஆத்மாவும் நோய் நொடியின்று ஆரோக்கியமாக வாழவும் குற்றம் குறைகளற்ற மனசுடனும் தன்னுடைய கஷ்டங்களையும் மற்றவர் கஷ்டங்களையும் ஒன்று போல பார்க்கும் மனப்பான்மையும் சக ஆத்மாவிற்கு ஒரு இக்கட்டு என்றால் ஓடோடி சென்று உதவும் மனப்பான்மையும் இன்னும் மனிதனுக்குள்ள அத்தனை நல்ல குணங்களும் ஒரு சேர நம்மிடம் வளரவும் பரமேஸ்வர அவதாரமான மஹாபெரியவாளை சேவித்து ப்ராத்தித்துக்கொள்கிறேன்.

மஹாபெரியவா வாழும் காலத்திலேயே வாழ்ந்து ஒருமுறை கூட தரிசனம் காணவில்லையே என்ற ஏக்கம் இனி வேண்டாம்.அந்த ஏக்கத்தையெல்லாம் துடைத்தெறியும் இந்த தொடரின் அனுபவங்கள். அப்படியும் ஏக்கம் தனியவில்லையா காட்சி மடத்திற்கு செல்லுங்கள். அங்கே மஹாபெரியவா அதிஷ்டானத்தில் அமைதியாக அமர்ந்து கண்கள் குளமாக நெஞ்சுருக தியானம் செய்யுங்கள்.

பிறகு பால பெரியவாளை நமஸ்கரித்து ஆசீர்வாதங்களை பெறுங்கள். நிச்சயம் உங்கள் தணியாத தாகம் தணியும்.உங்கள் பிரார்த்தனைக்கும் பதிலும் கிடைக்கும். இதை சாதாரண வார்த்தை வாக்கியங்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.. அனுபவித்து பாருங்கள் உங்களுக்கே தெரிய வரும்.

இந்த “பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா” என்னும் தொடர் என்னுடைய அனுபவத்தின் வெளிப்பாடுதான். இந்த தொடரை பிரசவித்த என்னுடைய அனுபவத்தை சுருக்கமாக உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

இமயத்தில் எம தர்ம ராஜா கரங்களில் மரணப்பிடியில் இருந்த என்னை உயிருடன் மீட்டு மஹாபெரியவா இன்று நான் செய்து கொண்டிருக்கும் இறைப்பணியை எனக்கு கொடுத்து செய்யுமாறு கட்டளை இட்டார்.. இமயத்தில் இருந்து என்னுடைய இல்லத்தில் கொண்டு வந்து ஒரு காய்கறியை போல கட்டிலில் போட்டர்கள். ஒரு வருட காலம் காலையில் பல் துலக்குவதில் இருந்து இரவு தூங்கப்போகும் வரை எல்லாம் என்னுடைய கட்டிலில் தான்.

என்னுடைய கட்டில் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்த நிலையில் "Experience with Mahaperiyava” என்னும் பக்தர்களின் வாழ்வில் மஹாபெரியவா நிகழ்த்திய அற்புதங்களை பார்த்தும் படித்தும் வருவேன். எனக்கு நிர்மூலமான வாழ்க்கையில் மீண்டும் சிறு பசுமை குருத்தாக நம்பிக்கைச்செடி துளிர்விட்டது. இந்த பக்தர்கள் வாழ்வில் நடந்த அற்புதங்களை கேட்டுத்தான் எனக்கும் நம்பிக்கை வந்தது.

இத்தனை பக்தர்க்ளுக்கு அருள்பலித்த மஹாபெரியவா எனக்கு கருணை காட்டமாட்டாரா என்ற அசைக்கமுடியாத என்ற நம்பிக்கை துளிர்த்தது. ஒரு சமயத்தில் அழுது அழுதே கூப்பிட ஆரம்பித்தேன். என் கண்ணீருக்கு பதில் கிடைத்தது. மஹாபெரியவா வந்தார். என்னையும் ஆட்கொண்டார்.

என்னுடைய அனுபவங்களை எல்லாம் தொகுத்து வழங்கிய “ Showers of Miracles in my Life” என்னும் தொடர் ஆங்கிலத்தில் எல்லோர் மனதையும் தொட்ட ஒரு தொடர். இந்தத்தொடரை எழுத ஆரம்பிக்கும் பொழுது தான் மஹாபெரியவா என்னிடம் சொன்னது.

"உனக்கு பத்து விரல்களின் பலத்தை ஒரு விரலில் தருகிறேன். நீ எழுத ஆரம்பி. நன்றாக எழுவாய்” என்று சொல்லி கட்டளை இட்டார். இன்று வரை எழுதிக்கொண்டிருக்கிறேன். இமயத்தில் எனக்கு பக்கவாத நோய் வந்து என்னுடைய இடதுபுறம் மிகவும் பாதிக்கப்பட்டது.

என் வாழ்வில் துளிர்த்த நம்பிக்கைச்செடி ஏன் மற்றவர்கள் வாழ்விலும் துளிர்த்து விருக்ஷமாக வளர்ந்து அவர்கள் வாழ்விலும் ஏன் வசந்தம் வீசக்கூடாது என்ற எண்ணத்தில் இந்தத்தொடர் “பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா” எழுதி உங்களுக்காக சமர்ப்பிக்கிறேன்.

இந்தத்தொடர் வரும் வாரம் புதன் கிழமையில் இருந்து ஒவ்வொரு வாரமும் பதிவுகளாக வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். இந்த பதிவின் மூலம் உங்கள் வாழ்விலும் மஹாபெரியவா நிகழ்த்தும் அற்புதங்களை நீங்களும் சக ஆத்மாக்களுடன் பகிர்ந்து கொண்டு மஹாபெரியவா சத்சங்க இறைபணியில் கலந்து கொள்ளுங்கள்.

வரும் புதன் கிழமையிலிருந்து இந்த இணைய தளத்தில் “பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா” தொடர் வெளியாகிறது. உங்கள் மஹாபெரியவா என்னும் நம்பிக்கைச்செடி விருக்ஷமாக வளரட்டும்.

நமக்கென்று யாரும் இல்லையே என்ற ஏக்கம் வேண்டாம்

நமக்கென்று மஹாபெரியவா இருக்கிறார்

எல்லா கஷ்டங்களையும் துக்கங்களையும் கொட்டுங்கள்

நிம்மதியான சலனமற்ற வாழ்கை வாழுங்கள்

கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு

நெய்க்கு அலைவதா

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்களில் ஒருவன்

காயத்ரி ராஜகோபால்