Featured Posts

குரு பூஜை அற்புதங்கள் பாகம் -1 சூர்யகாயத்ரி- U.S.A


மஹாபெரியவாளின் குரு பூஜையும் அதன் மஹிமைகளும்- பாகம் -1

சூர்யகாயத்ரி - U.S.A

இரண்டு வஸ்துக்கள் சேர்ந்தால் பிரித்து விடலாம் ஆனால்

இரண்டு வஸ்துக்கள் ஒன்றோடொன்று

கலந்து விட்டால் பிரிக்க முடியாது

வாழ்க்கையும் அதுபோலத்தான்

இரண்டு மனங்களின் சங்கமம்

சேர்வதை விட சங்கமித்து கலந்துவிடுவது

இனிய வாழ்க்கைக்கு வழி வகுக்கும்

*******

சூர்யகாயத்ரி- ஒரு அறிமுகம்

விண்ணளவு உயர்ந்தாலும் மண்ணை பார்த்து நடக்கும் தெய்வீக பெண் தான் நம்முடைய இந்த வார அற்புதத்தின் நாயகி சூர்யகாயத்ரி. என்றைக்கோ கிடைக்கும் பளபளப்பைவிட இன்றைக்கு இருக்கும் குடும்ப கலகலப்பை எக்காரணத்தை கொண்டும் இழந்துவிடத்தயாராக இல்லை சூர்யகாயத்ரி.

எல்லோரிடமும் ஆத்மார்த்தமாக அன்புடன் பழகக்கூடியவர்.. இவரை பொறுத்தவரை உண்மையான அன்புடன் அனைவரிடமும் பழகினால் அமெரிக்கா கூட அடுத்த வீடுதான். இல்லையென்றால் அடுத்த வீடு கூட அமெரிக்காதான்.. குடும்பத்திற்குள் நீ ஒரு உறுப்பினராக இருப்பதைவிட உனக்குள் குடும்பம் இருக்கவேண்டும் என்ற வாழ்க்கைத்தத்துவதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.

தடைகள் உள்ள வாழ்க்கை தான் சோபிக்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். நம் கண்களில் கூட கருப்பும் வெண்மையும் கலந்துதான் இருக்கிறது நம் வாழ்வும் அப்படித்தான் நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் நம் வாழ்க்கை.. ஒவ்வொரு மனிதனினடமும் நல்லது கெட்டது இரு குணங்களும் சேர்ந்தே இருக்கும்.

இதை எண்ணி வாழ்ந்தால் எண்ணியபடி வாழ்க்கை அமையும். இதை மறந்து வாழ்ந்தால் வாழ்க்கையின் கனவுப்பிறைகளை பௌர்ணமியாக்கும். நம் முயற்சி அமாவாசையில் தான் முடியும். இதை நன்கு அறிந்த நம் நாயகி சூர்யகாயத்ரி தடை கற்களை கூட படிக்கற்களாய் மாற்றும் திறமை பெற்றவர்.இப்படிப்பட்ட நம் நாயகி சூர்யகாயத்ரிக்கே சவாலாக இருந்தது தான் கணவரின், தொட்டால் சிணுங்கல் பட்டால் எரிமலை கோபம்.

ஒரு கோணத்தில் அவர் ஒரு ஸ்ரீராமன். மற்றொரு கோணத்தில் அவர் துர்வாச முனிவருக்கு அண்ணா. அப்படி ஒரு உச்சகட்ட கோபம்.. ஆமாம் அவர் ஒரு ஏக பத்தினி விரதன். கெட்ட பழக்கங்கள் என்பது மருந்துக்குக்கூட கிடையாது. ஆனால் அவருடைய அத்தனை நல்ல குணங்களும், கோபம் என்ற ஒரு குணத்தால் அடிபட்டுப்போகிறது. கோபத்தால் வீடு மட்டும் அல்ல. நாடும் அழிந்த வரலாற்றை உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.

சூர்யகாயத்ரிக்கு இந்த கணவரின் கோபம் ஒரு பெரிய சவாலாக இருந்தது. பல டாக்டரிடம் காண்பித்தும் பலனில்லை. எவ்வோளவோ சொல்லியும் கணவரால் இதை புரிந்துகொள்ள முடியவில்லை.

இது ஒரு வினோதமாக படவில்லையா உங்களுக்கு. எனக்கும் அப்படிதான் பட்டது

நாம் பொதுவாக கணவர் ஒரு சூதாடி,குடிகாரன் என்றல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு கெட்டபழக்கமும் இல்லை. ஆனால் மூக்கிற்கு மேல் கோபம். என்ன செய்யலாம். கடவுளிடம் முறையிடலாம். அதைத்தான் நம் நாயகியும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள்.

ஆனால் அந்த கடவுளுக்கே ஒரு சவாலான பிரார்த்தனையை எதிர்கொள்ளும் அனுபவம். கடவுளுக்கும் பிரார்த்தனைக்கு தீர்வு சொல்ல சிறிது நேரம் தேவைப்பட்டது. ஆனால் சூர்யகாயத்ரியின் தெர்மாமீட்டரில் உஷ்ணத்தின் அளவு சென்டிகிரேட்டில் ஏறிக்கொண்டே இருந்தது.

கணவரின் கோபம் குறைவதாக இல்லை சூர்யாகயாத்திரியின் தெர்மாமீட்டரில் உஷ்ணத்தின் அளவும் குறைவதாக இல்லை. இந்த சூழ்நிலையில் தான், சூர்யகாயத்ரி என் அறிமுகத்திற்கு பிறகு தன்னுடைய குடும்ப சூழ்நிலைகளையும் குழந்தைகளின் எதிர்காலகவலைகளையும் என்னிடம் தெரிவித்து மஹாபெரியவாளிடம் இதை சமர்ப்பித்து ஒரு தீர்வு வேண்டும் என்று வேண்டினாள்.

நானும் என்னுடைய பிரும்ம முகூர்த்த வழிபாட்டு நேரத்தில் மஹாபெரியவாளிடம் முறையிட்டு ஒரு தீர்வு வேண்டினேன். என்னுடைய பிரார்த்தனையின் சாராம்சம் இதுதான்.

"பெரியவா, இத்தனை நேரம் சூர்யகாயத்ரியின் மனக்கவலைகளையும் குடும்பம் இருக்கும் சூழ்நிலையில் குழந்தைகளின் எதிர் காலத்தை பற்றிய கவலைகளையும் உங்களிடம் சொன்னேன். அவளுக்கு இந்த பிரார்த்தனைக்கு எந்த கடவுளிடமும் ஒரு தீர்வு கிடைக்கவில்லை. இறுதியாக என் மூலமாக உங்களிடம் வேண்டுகிறாள் விடுக்கச்சொன்னாள். கூட பிறந்தால்தான் சகோதரியா பெரியவா. என்னுடைய கூடப்பிறக்காத சகோதரியாக நினைத்து வேண்டுகிறேன் சூர்யகாயத்ரிக்கு தீர்வு ஒன்று சொல்லுங்கள் பெரியவா."

என்னுடைய பிரார்த்தனையின் முடிவில் சிறிது மௌனத்திற்கு பிறகு மஹாபெரியவா என்னிடம் கீழ் கண்டவாறு தெரிவித்தார்.

"அவளை ஒன்பது வாரம் என்னுடைய குரு பூஜை பண்ணச்சொல்லு...எல்லாம் ஒரு நல்ல முடிவுக்கு வரும். குடும்பமும் சேஷமமா இருக்கும் என்று தன்னுடைய பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தார். சரி பெரியவான்னு சொல்லிவிட்டு என் மற்றவர்களுக்கான பிரார்த்தனைகளை முடித்துவிட்டு காயத்ரி ஜெபத்தில் உட்கார்ந்துவிட்டேன்.

வழக்கம் போல் சூர்யகாயத்ரி என்னை தினமும் தொடர்புகொள்ளும் வேளையில் அழைத்தாள்.

நானும் சூர்யகாயத்ரியிடம் மஹாபெரியவா குரு பூஜை பற்றி விவரமாக சொல்லி தவறாமல் ஒன்பது வாரம் பூஜையை முடிக்கச்சொன்னேன்.

சூர்யகாயத்ரி என்னிடம் எல்லா பக்தர்களும் கேட்கும் வழக்கமான கேள்வியை கேட்டாள் " எல்லாம் சரியா போயிடுமா மாமா. என் வாழ்க்கையும் குழந்தைகளின் எதிர்காலமும் நன்னா இருக்குமா மாமா."

நான் சூர்யகாயத்ரியிடம் சொன்னது.

உன்னுடைய வேண்டுதலை புறந்தள்ளி மஹாபெரியவா பக்தியை முன் நிறுத்தி மஹாபெரியவா பூஜையை தொடர்ந்து செய்து வரவும். வேண்டியதும் விரும்பியதும் கேட்காமலேயே வந்து விழும்.

“மஹாபெரியவா நீ சேஷமமா இருப்பேன்னு சொன்னாரம்மா. ஆனால் ஒன்பது வார குரு பூஜை முக்கியம். நான் பத்து பேருக்கு பிரார்த்தனை செய்தால் ஒருவருக்கு தான் குரு பூஜை உத்தரவு வரும். உனக்கு வந்திருக்கு.நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரியம்மா. நன்னா ஷேஷமமா இருப்பேம்மா. என்று சொல்லி என் பேச்சை முடித்தேன்

சூர்யகாயத்ரியும் மிகவும் சந்தோஷம் மாமா. நானும் ஒன்பது வார குரு பூஜையும் முடித்துவிடுகிறேன். என்று சொல்லி தொலைபேசி அழைப்பை துண்டித்தாள்.

வெளிநாட்டிலில் இருந்து ஒரு நாளைப்போல குறிப்பிட்ட நேரத்திற்கு சுமார் முப்பது நிமிடமாவது என்னுடன் மஹாபெரியவாளை பற்றி பேசவேண்டுமானால் எவ்வளவு செலவாகும். யோசித்து பாருங்கள்.சூரியகாயத்ரிக்கு செலவைவிட மஹாபெரியவா தான் முக்கியமாக தெரிந்தார். க்ஷண பொழுதில் அப்படியொரு மஹாபெரியவா ஈடுபாடு.

ஒவ்வொரு நாளும் என்னை அழைத்து மஹாபெரியவளை பற்றி பேச தவறியதில்லை. அப்படி ஒரு பக்தி மஹாபெரியவளிடம்.. நானும் சூர்யகாயத்ரிக்கு அறிவுரை சொல்லுவேன். தினமும் தொலைபேசியில் அழைத்து உன் நேரத்தையும் பணத்தையும் விரயமாக்க வேண்டாமே. என்று நான் அவளுக்கு அறிவுரை சொன்னேன்

அவளும் பதிலுக்கு சொல்லுவாள். மாமா உங்களிடம் தினமும் பேசினால் மனதிற்கு தைரியமாக இருக்கு. .உங்களுக்கு இதில் ஏதாவது தொந்தரவா மாமா என்று கேட்டாள். நானும் சொன்னேன் எந்த மஹாபெரியவா பக்தாளுடனும் 24 மணி நேரமும் பேசினால் கூட எனக்கு மனச்சோர்வு கிடையாது. மனச்சோர்வு இருக்கும் நேரத்தில் யாரிடமாவது மஹாபெரியவளைப்பற்றி பேசினால் என் எல்லா சோர்வும் காற்றில் கரைத்து விடும். என்று சொன்னேன்

இப்படியே ஒன்பது வார பூஜையும் முடிந்துவிட்டது.

ஒன்பதாவது வார பூஜை முடிந்து மறுநாள் காலை மணி 5.30 என் கைபேசி என்னை அழைத்தது. மறு முனையில் சூர்யகாயத்ரி. என்னமா இந்த அகாலவேலையில் கூப்பிட்டு இருக்கயே. ஏதாவது முக்கியமான விஷயமா அம்மா. பின்புதான் என்னுடைய சிறிய அறிவுக்கு எட்டியது.நமக்கு அகாலம் என்பது அவர்களுக்கு காலம் என்று.

விவரம் இதுதான். பதிமூன்று வருட சேர்ந்தும் சேராத ஒரு வாழ்க்கை. சூர்யகாயத்ரியின் .வாழ்க்கை முடிவு தெரியாத திசையில் சென்றுகொண்டிருந்தது. ஒன்பது வார மஹாபெரியவா குரு பூஜைக்கு பிறகு கோபத்தை புறந்தள்ளி வாழ்க்கை தான் முக்கியம் என்று உணர்ந்த கணவன்.,இருவரும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்று உணர்ந்த மனைவி.

இருவரின் மனமும் பண்பட்டு வாழ்க்கையை புரிந்துகொண்டு எடுத்த முடிவு. இருவரும் புரிந்துகொண்டார்களா அல்லது புரிந்துகொள்ளவைக்கப்பட்டார்களா. சந்தேகமென்ன மஹாபெரியவாளும் மஹாபெரியவா குரு பூஜையும் ஒரு சேர இணைந்து அவர்கள் வாழ்க்கை என்னும் வானத்தில் நக்ஷத்திரங்களை பார்க்கவைத்தார்கள்.. நிலவின் ஒளியை காட்டினார்கள்.

பதிமூன்று ஆண்டு இடைவெளிக்குப்பின் இருவரும் கைகோர்த்து வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தார்கள். இருவரின் கைகளையும் இரு குழந்தைகளும் பிடித்துக்கொண்டு கூடவே நடந்தார்கள்.

இது அற்புதத்தின் ஒரு ஆரம்பம் தான். மேலும் பல பல அற்புதங்கள். நொடிப்பொழுதில் கனவு வாழ்க்கை நிஜ வாழ்க்கையாக பரிமளிக்க ஆரம்பித்தது. அவைகளை வரும் வாரங்களிலும் காண்போம்.

இந்த நிலையில் அவர்களை வாழ்த்தும் பல்லாயிரக்கணக்கான மனங்களில் என் மனத்தையும் பல்லாயிரக்கணக்கான கைகளில் என் கையையும் இணைத்துக்கொள்கிறேன். உங்களுடன் நானும்.

மின்சாரம் இல்லாத சம்சாரமாக

இருந்த வாழ்க்கை

பரஸ்பர அன்பு என்னும் மின்சாரம் பாய்ந்து

நாள் தோறும் ஒளிவெள்ளத்தில் மித