பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-001-ஸ்ரீ ராமதுரை ஐயர் மாமா

சர்வம் ஜகத் சர்வம் மஹாபெரியவா ஈஸ்வரன் நீ விஷ்ணுவும் நீ பிரும்மனும் நீ சர்வமும் சகலமும் நீ எல்லையில்லா பிரபஞ்சமும் நீ

ஸ்ரீ ராமதுரை மாமா
பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-001
பிரதி புதன் கிழமை தோறும்
ஸ்ரீ ராமதுரை ஐயர் மாமா
மஹாபெரியவாளின் ஆசிர்வாதத்தோடும் அனுகிரஹத்தோடும் இந்த “பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா” என்னும் தொடரை இன்று மீண்டும் ஒரு முறை துவங்குகிறேன். முதலில் பிள்ளையார் சுழி போடும் இந்த பக்தரின் அனுபவங்களை எடுத்துக்கொண்டதற்கு காரணம் இதுதான். எல்லோருக்கும் இருக்கும் சந்தேகம் தான் எனக்கும் இருந்தது.
மற்றவர்கள் குரலுக்கு செவி சாய்க்கும் மஹாபெரியவா என்னுடைய குரலுக்கு செவி சாய்ப்பரா.இதுதான் என்னுடைய மிகப்பெரிய சந்தேகமே.ஆனால் என்னுடைய அழைப்பும் அவர் காதில் விழுந்து என்னை மீட்டெடுக்க வந்துவிட்டார். மஹாபெரியவா. மீட்டும் எடுத்து விட்டார். நான் உங்களுக்கும் என்னுடைய அனுபவத்தை பரிமாறுகிறேன்.நம்பிக்கையுடன் அழையுங்கள் நிச்சயம் வருவார்.
இனி ராமதுரை மாமாவின் ஓரிரு அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.பெரிய விருந்துக்கு முன் பரிமாறும் பசி ஊக்கி தான் இந்த ஓரிரு அனுபவங்களை கொண்ட முகவுரை.
என்னுடைய அனுபவ அறிவுரை உங்களுக்கு : நீங்கள் இந்த விடியோவை பார்ப்பதற்கு முன் முழு கவனத்தையும் ஒரு சேர இந்த வீடியோ அனுபவத்தில் செலுத்துங்கள். நிச்சயம் நான் நம்புவது நீங்கள் காணும்போது மஹாபெரியவா அங்கு ப்ரசன்னமாகிறார். நீங்கள் பார்க்கும்பொழுது உங்கள் எண்ணங்களிலும் பிரார்த்தனைகளிலும் இருக்கிறார். எப்பொழுது வேண்டுமானாலும் பாருங்கள். மஹானை பார்ப்பதற்கு நேரமோ காலமோ இல்லையே. ஆனால் பக்தி சிரத்தையாக பாருங்கள்.
மற்றவர்கள் வாழ்வில் மஹாபெரியவா விளக்கேற்றும் பொழுது ஏன் உங்கள் வாழ்விலும் அற்புதங்கள் நடக்கக்கூடாது.
பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா -001- ராமதுரை மாமாவைப்பற்றி சிறு குறிப்பு:
ஸ்ரீ ராமதுரை மாமா
வெற்றிகளை துரத்தும் இந்த வாழ்கை வேண்டுமா
அல்லது நிம்மதியை அறுவடை செய்யும் வாழ்க்கை வேண்டுமா
மஹாபெரியவாளின் பொற்பாதங்களில் சரணடையுங்கள்
******
நம் எல்லோருக்குமே இருக்கும் ஒரு சந்தேகம். நல்லவைகள் மற்றவர்களுக்கு மட்டுமே நடக்கக்கூடிய ஒன்று. நமக்கெல்லாம் நடக்காது என்று. உண்மைதானே. இந்த எண்ணமே வேண்டாம். மாமாவின் பக்தியை பாருங்கள். எப்படி ஒரு எதார்த்தமான பக்தி. அப்பழுக்கற்ற பக்தி.
மாமாவின் உண்மை மாறாத எதார்த்தமான வார்த்தைகள். தன்னை ஒரு உயரமான இடத்தில் வைத்துக்கொள்ளாது நமக்கு இணையான தளத்தில் இருந்து தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் அழகே அழகு.
இந்த வீடியோவில் வரும் சில அசர வைக்கும் தகவல்கள் :
நான் ஒரு கங்கை நதி: மஹாபெரியவாளே ஒரு முறை மாமாவிடம் சொல்லியிருக்கிறார். நான் ஒரு கங்கை நதி போல. என்னை ஒருமுறை தரிசனம் செய்வது முன்னூறு முறை கங்கையில் ஸ்னானம் (குளிப்பதற்கு ) செய்ததற்கு சமம் என்று.
இன்னொரு தகவல்: மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர்களில் ஒருவர் மிராசுதார். சாத்தூர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒரு முறை மஹாபெரியவாளிடம் தான் அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நீராட உத்தரவு வேண்டினார். திரிவேணி சங்கமும் சென்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் பொழுது தனக்கேற்பட்ட கடவுளை நேரில் கண்ட அனுபவத்தை மஹாபெரியவாளிடம் பகிர்ந்து கொள்ள மஹாபெரியவாளிடம் சென்றார்.
மஹாபெரியவா கேட்டார் நீ என்னிடம் ஏதாவது சொல்லவேண்டுமா என்று கேட்டார். மிராசுதாரும் ஆமாம் பெரியவா என்றார். மஹாபெரியவாளும் சரி சொல்லு என்று உட்கார்ந்து விட்டார். பெரியவா நான் மூன்று முறை திரிவேணி சங்கமத்தில் மூழ்கி எழுந்தேன். முதல் முறை முங்கி எழும்போது மகாலட்சுமியும் மஹாவிஷ்ணுவும் தரிசனம் கொடுத்தார்கள்.இரண்டாவது முறை முங்கி எழும்போது பார்வதி பரமேஸ்வரன் தரிசனம் கொடுத்தார்கள். மூன்றாவது முறை முங்கி எழும் போது பிரம்மாவும் சரஸ்வதியும் தரிசனம் கொடுத்தார்கள்.
மஹாபெரியவா சலனமில்லாமல் இருந்தார். பின் சிறிது நேரம் கழித்து
மிராசுதாரிடம் கேட்டார். "நீ ஒவ்வொரு முறை முங்கி எழும்போது யாரை மனதில் நினைத்துக்கொண்டு முங்கி எழுந்தாய் என்று கேட்டவுடன் மிராசுதார் சொன்னார். ஒவ்வொரு முறையும் உங்களை நினைத்துக்கொண்டுதான் முங்கி எழுந்தேன் பெரியவா என்றார்.மஹாபெரியவா மிராசுதாரை பார்த்து ஒரு புன் சிரிப்பு பூத்தார். இந்த நிகழ்வின் பொழுது மஹாபெரியவாளுடன் பக்தர்களும் புது பெரியவாளும் பால பெரியவாளும் உடன் இருந்தனர்.
உங்களுக்கு புரிகிறதா சர்வமும் சகலமுமான பெரியவா என்று ஏன் அழைக்கப்படுகிறர் என்று. ஈரேழு லோகத்திற்கு சக்கரவர்த்தி மஹாபெரியவா. நாம் வழிபாடும் அத்தனை கடவுள்களின் மொத்த உருவம் தான் மஹாபெரியவா. நமக்கு இணையாக இறங்கி வந்து நம்முடனேயே வாழ்ந்து நமக்கு அனுகிரஹமும் ஆசிர்வாதமும் செய்தார் செய்து கொண்டும் இருக்கிறார்.
இன்றும் அதிஷ்டானம் சென்று மஹாபெரியவா முன் உட்கார்ந்து த்யானம் செய்து பாருங்கள். உங்கள் உடலுக்குள்ளும் உளத்திற்குள்ளும் மஹாபெரியவா குடி புகுவதை நீங்கள் உணர்வீர்கள்
பரமேஸ்வர தரிசனம்: ஒரு முறை கிருஷ்ணமூர்த்தி ஐயருக்கு மஹாபெரியவா தன்னுடைய தண்டத்தை கையில் எடுத்துக்கொண்டு ஆடாமல் அசையாமல் முப்பது நிடங்கள் வரை பராமரேஸ்வரன் தரிசனம் கொடுத்தார். இந்த தரிசனத்தின் பொழுது கதவுகளும் ஜன்னல் கதவுகளும் புயல் காற்றில் அடித்துக்கொள்வது போல பட படவென்று அடித்துக்கொண்டது.சுற்றி இருந்தவர்கள் எல்லாம் பயந்து போய் அந்த ஈஸ்வரனையே தரிசனம் செய்தார்கள்.
பதினைந்து நாட்களில் மோக்க்ஷம்:பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவா கிருஷ்ணமூர்த்தி ஐயரிடம் "உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் நான் உனக்கு வரமளிக்கிறேன்” என்று சொன்னார். கிருஷ்ணமூர்த்தி ஐயரும் சொன்னார் “பெரியவா நானும் ஐம்பது வருட காலமாக உங்களை தரிசனம் செய்து கொண்டிருக்கிறேன்.
இந்த காது கேட்டுத்தான் பழக்கமே தவிர இந்த வாய் பேசியதில்லை”.என்று சொன்னவுடன் பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவா சொன்னார். உனக்கு நானே ஒரு வரம் அளிக்கிறேன். “இன்னும் பதினைந்து நாட்களில் உனக்கு மோக்க்ஷம் கொடுத்து விட்டேன்.உனக்கு சந்தோஷமா என்று கேட்டார். பதினைந்து நாட்கள் கழித்து கிருஷ்ணமூர்த்தி ஐயருக்கு மோக்க்ஷம் கிடைத்ததா. பாருங்கள் இந்த விடியோவை.
தரையில் கோலம் போடுவது சுலபம்
தண்ணீரில் கோலம் போடுவது மிகவும் கஷ்டம்
ஆகாயத்தில் கோலம் போடுவது யாரால் முடியும்
நாம் ஒரு பேராசைக்காரன்
ஆகாயத்தில் புள்ளியாவது வைக்க முயற்சிக்கிறேன்
மஹாபெரியவாளை பற்றி எழுதுகிறேன் என்று மார் தட்டிக்கொள்வது எதற்கு சமம் தெரியுமா. வான் கோழி வானத்தை அளக்க தன்னுடைய சிறகை விரித்தது போல. மஹாபெரியவா இந்த பிரபஞ்சத்தையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பரமேஸ்வரன்.
அளக்க முடியாது
அறியவும் முடியாது
வேண்டுமானால் உணரலாம்
அடுத்த புதன் கிழமை மற்றொரு பக்தரின் வாழ்வில் நடந்த அனுபவத்துடன் உங்களை சந்திக்கிறேன். இப்பொழுது உங்களிடம் இருந்து தற்காலிகமாக விடை பெறுகிறேன்.
மஹாபெரியவா பூஜைக்கு ஏற்ற
வில்வ இலைகள் கொண்ட வில்வ மரம்
https://www.youtube.com/results?search_query=experience+with+mahaperiyava
Ramadurai mama-Part-I
Play time: 2 hours.5 minitues.50 seconds
https://www.youtube.com/watch?v=_qxqrjv0wMM
Ramadurai+mama-Part-II
Play time 1 hour 55 minitues 19 seconds.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்