Featured Posts

குரு பூஜை அற்புதங்கள் -பாகம்-2- சூர்யகாயத்ரி


மஹாபெரியவா

உருகும் பக்தியும்

ஹிமாலய நம்பிக்கையும் இருந்தால்

அமெரிக்காவும் அடுத்த வீடுதான்

லக்க்ஷம் என்ன கோடி என்ன

எல்லாமே உன்னை பொறுத்தவரை காகிதம் தானே

சூரிய காயத்ரி ஒரு வாழும் உதாரணம்

அற்புதத்தின் சுருக்கம்: மஹாபெரியவா குரு பூஜை எத்தனையோ பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுத்திருக்கிறது. ஆனால் பணம் கையை விட்டு சென்று விட்டது. பத்தோ இருபதோ அல்ல ஆயிரமோ ரெண்டாயிரமோ அல்ல சுமார் அரை கோடி. ஐம்பது லக்க்ஷம். அதுவும் வெளி நாட்டில் கையெழுத்து போட்டு குறிப்பிட்ட தேதியில் பாக்கி தொகையை கொடுத்துவிட்டு புதிய வீட்டை தங்கள் பெயருக்கு கிரயம் செய்ய வேண்டும். குறிப்பிட்டநாளில் கையெழுத்து போட்டபடி ஒன்றும் நடக்காது என்ற நிலையில் அரை கோடி சென்று விட்டது என்று தீர்மானமே செய்து விட்டார்கள் சூரிய கயாத்திரியின் குடும்பம்... வெளி நாட்டில் கரணம் தப்பினால் மரணம் என்றநிலையில் தான் சட்டங்கள் எல்லாமே. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மஹாபெரியவா குரு பூஜை எப்படி சூரிய கயாத்திரிக்கு கூடவே இருந்து பணம் போகாமல் இருக்க துணை போனது என்பதை படித்து மஹாபெரியவாளின் விஸ்வரூபத்தை காணுங்கள்.

*******

குரு பூஜை அற்புதங்கள் -பாகம்-2- சூர்யகாயத்ரி

நம்முடைய

எண்ணங்களும் சிந்தனைகளும் செயல்களும்

வெண்மைக்குரிய புனிதமும்

பசுவின் இறைத்தன்மையும் கொண்டிருந்தால்

இயற்கையும் கடவுளும் ஒன்றாக கைகோர்த்து

நம்மை வாழ்க்கையின் உச்சத்துக்கே கொண்டு செல்லுவார்கள்

இந்த வகை பக்தியும் புனிதமும் நம்மால் முடியாதா?

நமக்கு அப்பாற்ப்பட்ட விஷயமா

நிச்சயமாக இல்லை

சூர்யகாயத்ரி நம் கண்ணுக்கு தெரிந்த

ஒரு வாழும் உதாரணம்

சூர்யகாயத்ரியும் அவள் கணவரும் சேர்ந்து எடுத்த முடிவு:

தன் மணாளன் வேலை பார்க்கும் ஊரிலேயே ஒரு புது வீடு விலைக்கு வாங்கி அங்கு குடியேறுவது என்றும் சூர்யகாயத்ரி தற்போது வசிக்கும் வீட்டை விற்று விட்டு மொத்த குடும்பமும் கணவர் வேலை பார்க்கும் இடத்தில வாங்கும் புது வீட்டில் குடியேறுவது என்று முடிவு செய்யப்பட்டது.

கணவரும் இரண்டு மூன்று வீடுகளை பார்த்து சூர்யகாயத்ரியின் ஒப்புதலோடு ஒரு வீடு முடிவு செய்யப்பட்டது. சூர்யகாயத்ரி சரி என்று ஒரு வீட்டை தீர்மானித்தாள். இதற்கு காரணம் அந்த வீட்டில் மஹாபெரியவாளுக்கு என்று சரியான இடம் அமைந்ததுதான்.

தனக்கு சௌகரிய குறைச்சல் இருந்தால் கூட பரவாயில்லை. மஹாபெரியா படம் மற்றும் பெரியவா பூஜை சாமான்கள் வைக்க இடம் வசதியாக இருந்தால் போதும் என்ற நினைப்பு. எப்போதும் மஹாபெரியவா நினைவு தான்.. இதுவல்லோவோ மஹாபெரியவா பக்தி.

அந்த வீட்டை வாங்குவதென்றால் அந்த வீட்டுக்காரருக்கு டெபாசிட் தொகையாக இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் அரை கோடி கொடுக்கவேண்டும்.டெபாசிட் தொகை தொகை கொடுக்கும்பொழுது இன்ன தேதியில் பாக்கி தொகையை கொடுத்துவிட்டு வீட்டை தங்கள் பேருக்கு கிரயம் செய்து கொள்கிறோம் தவறினால் நாங்கள் டெபாசிட் தொகையை இழக்க தயாராக இருக்கிறோம்.என்று எழுதி சூர்யகாயத்ரியும் அவரது கணவரும் கையெப்பம் இட வேண்டும்.

வீட்டுக்காரரும் குறிப்பிட்ட தேதி வரை தன்னுடைய வீட்டை வேறு எவருக்கும் விற்க மாட்டேன் என்று எழுதி அவரும் அவரும் கையெப்பம் இட வேண்டும். அவரும் இவர்கள் மாதிரியே எல்லாவற்றையும் எழுதி கையெழுத்து போட்டுவிட்டார்.

வீட்டை வாங்க கையெழுயத்து போட்ட தேதி டெபாசிட் தொகை போக பாக்கி தொகையை கொடுத்துவிட்டு வீட்டை தங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ளும் தேதி, இந்த இடைப்பட்ட காலத்தில் வீடு லோன் கொடுக்கும் கம்பெனிக்கு வேண்டிய எல்லா தஸ்தாவேஜுகளையம் தயார் செய்யும் பணியில் சூர்யகாயத்ரியும் அவரது கணவரும் ஈடுபட்டிருந்தார்கள்.

சூர்யகாயத்ரியும் அவரது கணவரும் கனவுலகில் மிதந்தனர். திருமணம் ஆகி பதிமூன்று ஆண்டுகள் கழித்து இரு மனங்களும் ஒன்றுபட்டு தங்கள் குழந்தைச்செல்வங்களுடன் புது வாழ்வு வாழும் சந்தோஷத்தில் மிதந்தனர்.

ஆனால் இந்த சந்தோஷம் புதுமனை புகு விழா வரை கூட நீடிக்கவில்லை

குறிப்பிட்ட கிரய தேதியும் நெருங்கிக்கொண்டிருந்தது. ஒரு தேதியில் குறிப்பிட்ட நாளில் வீட்டை பாக்கி தொகை கொடுத்து வாங்கமுடியாது என்று தீர்மானமாக தெரிந்துவிட்டது.

இந்த நிலையில் சொன்ன தேதியில் வீட்டை வாங்கமுடியாவிட்டால் கொடுத்த டெபாசிட் தொகை அரை கோடியை இழக்க தயாராக வேண்டும்.நாளை மறுநாள் வீட்டை வாங்கும் நாள்.

வீடு இல்லையெனில் டெபாசிட்

தொகை அரை கோடி இழப்பு.

இந்த நிலையில் நம்மையும் சற்று வைத்து பார்ப்போமே. ஒரே நாளில் அத்தனை சேமிப்பும் இல்லயென்றானால் நம் மன நிலையை சொல்ல வார்த்தைகளை எங்கு போய் தேடுவது.

விடிந்தால் புது வீடு இல்லையெனில் அரை கோடி இழப்பு. அரை கோடி இழப்பு என்பது பலவருட உழைப்பு சிறிது சிறிதாக குருவி சேர்ப்பதுபோல் சேர்த்த சேமிப்பு. ரத்தக்கொதிப்பு வரும் மயக்கம் வரும் உலகமே சுற்றும். இல்லையா.

இந்த நிலையில் எனக்கு சூர்யகாயத்ரியிடமிருந்து கைபேசி அழைப்பு. மறு முனையில் என் இதயமே வெடித்துவிடும்போல அழு குரல். சூர்யகாயத்ரியைவிட எனக்கு நெஞ்சே வெடித்துவிடும் போலெ இருந்தது.

சூரியகாயத்ரி சொன்னது " மாமா டெபாசிட் பணம் அரை கோடி கைய விட்டுப்போயிடுத்து.

நான் சூர்யகாயத்ரியை சமாதானம் செய்து விட்டு தைரியம் சொன்னேன்.

மஹாபெரியவா இருக்க உன் பணம் நிச்சயமாக வீண் போகாது., சூர்யகாயத்ரி பதிலுக்கு சொன்னாள் " ,மாமா நூற்றுக்கு நூறு சதவீதம் பணம் போனதுபோனதுதான்.99.99% போயிடுத்து மாமா. .0001% தான் வாய்ப்பு. மஹாபெரியவா என்ன பண்ண முடியும் மாமா.

நான் சொன்னேன் " நீ மஹாபெரியவா குரு பூஜை முடித்து விட்டாய் . மஹாபெரியவாளுக்கு அந்த 0.0001% போதும். மஹாபெரியவா அதிசயம் நடத்தி உன் அரை கோடி கைக்கு வரும். எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. உன் பணம் வீண் போகாது சூர்யா.என்று சொன்னேன்

சூர்யகாயத்ரியும் அரைகுறை நம்பிக்கையுடன் அடுத்த நாள் என்னை அழைத்து மேலும் விவரம் சொல்வதாக சொன்னாள். சொல்லிவிட்டேன் ஆனால் எனக்கும் தூக்கமில்லை.

நானும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. குரு பூஜை செய்யவைப்பது மட்டும்தான் என் வேலை. மற்றவற்றை பக்தர்களிடம் விட்டுவிடுவேன். ஆனால் என் கவலையெல்லாம் மஹாபெரியவா குரு பூஜை பொய்க்கக்கூடாது. குரு பூஜை செய்பவர்கள் மிகுந்த பக்தியுடனும் இமாலய நம்பிக்கையும் மஹாபெரியவா குரு பூஜை செய்தால் மஹாபெரியவா அருள்புரியாமல் இருக்க மாட்டார்

அற்புதம்

நம்மில் எந்த சக்தி

ஓங்கவில்லையென்றாலும் பரவாயில்லை

ஆத்ம சக்தி ஓங்கவேண்டும்

நாமும் உயர்வோம் நம் வாழ்க்கையும் உயரும்

மறு நாள் வழக்கமான நேரத்தில் சூர்யகாயத்ரியிடமிருந்து கைபேசி அழைப்பு வந்தது.நான் மஹாபெரியவாளை சில வினாடிகள் த்யானம் செத்துவிட்டு அழைப்புக்கு பதில் கொடுத்தேன்

மறுமுனையில் மீண்டும் அழுகுரல். என்னக்கு தூக்கிவாரிப்போட்டது. கொஞ்சம் அதிர்ந்து போனேன். நானும் சுதாரித்துக்கொண்டு சூர்யகாயத்ரியை அழுவதை நிறுத்திவிட்டு விவரம் சொல்லச்சொன்னேன்.

சூர்யகாயத்ரி சொன்னாள் "மாமா மஹாபெரியவா அனுக்கிரஹம் பண்ணிட்டா. என்வாழ்க்கையிலும் அற்புதம் நடந்துவிட்டது. எனக்கு மேலும் அறுபது நாட்கள் தவணை கொடுத்து இந்த வீட்டையே வாங்கச்சொல்லி அறிவுரையும் அருளாசியும் வழங்கினார்கள்.

நான் என்ன சொல்ல. வேறு ஒரு நாட்டுக்காரரின் மனதில் இந்த நல்ல சிந்தனையை யார் விதைத்தார்கள். வீட்டு லோன் கொடுக்கும் அலுவலகத்தில் யார் சென்று அவர்கள் மனதை மாற்றினார்கள்.

போக இருந்த அரை கோடியை போகவிடாமல் தடுத்து அதே வீட்டை வாங்கவும் செய்த அந்த இறை சக்தி யார்? எங்கே இருக்கிறது? எப்படி இருக்கிறது? நாம் பார்க்கமுடியுமா? பார்க்க முடியாது. என்று யார் சொன்னது?

நம்முடைய பிரார்த்தனைக்கு

பதிலளிக்கும் விதமாக