Featured Posts

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-


மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

கலிகாலத்தில் துன்பங்களும் கவலைகளும்

எங்கிருந்து வரும் எப்படி வரும் என்பது புரியாத புதிர்

.ஆபத்துகள் கண்களுக்கு தெரிவதில்லை

ஆனால் மஹாபெரியவா என்னும் பிரபஞ்சம்

கண்களுக்கு தெரியும் பாதுகாப்பு கேடயம்

கலியின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்வோம்

மஹாபெரியவா சரணம்

மஹாபெரியவாளின் ஞான த்ருஷ்ட்டிக்கு இதோ ஒரு அற்புதச்சரால்.

1964 ம் வருடம் மஹாபெரியவா நிகழ்த்திய ஒரு அற்புதத்தால் சகல ஜீவராசிகளும் (கற்பதிலிருக்கும் குழந்தை முதல் இன்றோ நாளையோ என்றிருக்கும் முதியவர் வரை) நாட்டிலும் காட்டிலும் வாழும் ஓர் அறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள ஜீவராசிகள் அனைத்தும் மஹாபெரியவாளுக்கு மண்டியிட்டு தன் நன்றியையும் நமஸ்கரங்களையும் தெரிவித்தன.

மஹாபெரியவா ஜகத்குரு என்பதற்காக அல்ல

மேல உங்கள் பிரயாணத்தை தொடருங்கள்

உங்களுக்கே புரியும்

ஜகத்குரு என்பது ஒரு சாதாரண பட்டம்

பிரபஞ்ச தெய்வம் என்பது

ஓரளவுக்கு பொருத்தமாக இருக்கும்

வாருங்கள் நானும் உங்களுடன் சேர்ந்து அந்த மஹாபெரியவாளின் அற்புதத்தை தரிசனம் செய்கிறேன்.

மஹாபெரியவா மற்றும் காஞ்சி ஸ்ரீ மடத்தின் பக்தர்கள் அனைவரும் மடத்திற்கு மஹாபெரியவாளை தரிசனம் செய்யும் பொருட்டு வரும்பொழுதேல்லாம் மடத்திற்கும் மஹாபெரியவாளுக்கும் அன்பிற்கும் பாசத்திற்கும் அடையாளமாக அரிசி, மளிகை சாமான்கள் பழங்கள், காய்கறிகள் எல்லாம் மஹாபெரியவாளின் பாதங்களில் சமர்ப்பணம் செய்வார்கள்.

இந்நிலையில் 1964 ம் வருடம் ஆரம்பம் முதலே ஸ்ரீ மடத்திற்கு வரும் அரிசி மற்றும் மளிகை சாமான்கள் எல்லாவற்றையும் ராமேஸ்வரத்திற்கு அனுப்பச்சொன்னார்கள். மஹாபெரியவா.

மஹாபெரியவாளின் உத்தரவை யாரால் மீற முடியும். எல்லாவற்றையும் மஹாபெரியவா உத்தரவுப்படி ராமேஸ்வரத்திற்கு அனுப்பப்பட்டது. வருடம் பாதிக்குமேல் முடிந்துவிட்டது. வருடம் இறுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. யாருக்கும் மஹாபெரியவாளை கேட்க துணிவுமில்லை.

இந்த சமயத்தில் ராமேஸ்வரத்திலிருந்து தகவல் வந்தது.அரிசி மற்றும் தானியங்களை வைக்க இடம் இல்லை. அரிசி தானியங்களை ஸ்ரீ மடத்திற்கு திருப்பி அனுப்பலாமா என்று கேட்கப்பட்டது.

மஹாபெரியவா மௌனம் சாதித்தார். அதுமட்டுமல்லாது கோபமும் கொண்டார். இடம் இல்லையென்றால் என்ன கல்யாண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து அங்க வைக்கச்சொன்னார்.

யாருக்கும் ஒன்னும் புரியவில்லை. யாருக்கும் கேட்கவும் துணிவுமில்லை. மஹாபெரியவாளின் உத்தரவை மட்டும் சிரமேற்கொண்டு செய்தனர். காஞ்சி மட்டுமல்லாது எல்லா இடத்திலுள்ள சங்கர மடத்திற்கும் தகவல் அனுப்பப்பட்டது. அதன் படியே எல்லா இடங்களிலும் இருந்து அரிசி, மளிகை சாமான்கள்,காய்கறிகள், துணி மணிகள் பழங்கள் எல்லாம் லாரி லாரியாக ராமேஸ்வரத்திற்கு அனுப்பப்பட்டன.

டிசம்பர் 20 தேதிக்கு மேல் ராமேஸ்வரத்திற்கு அனுப்பும் பொருட்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது.

இதுவரை மடத்திற்கோ பக்தர்களுக்கோ ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் காரணம் இல்லாமல் மஹாபெரியவா ஒரு செயலை செய்யச்சொல்லமாட்டார்கள்.

அந்த செயலின் காரணம் புரியும் போது

பேச வாய் இருக்காது,

வார்த்தைகள் வராது

மலைத்துப்போய் நிற்பார்கள்

அப்படி நடந்த ஒரு அற்புதம் தான் அன்றும் நடந்தது.

1964 டிசம்பர் 23 ம் தேதி இரவு 2 மணிக்கு நடந்த அந்த கோரச்சம்பவம் கல்லையும் கரைத்துவிடும். இனி வாருங்கள் நாம் எல்லோரும் ராமேஸ்வரத்திற்கு செல்லுவோம்.

உங்கள் மனோ சக்தி குதிரையை தட்டி விடுங்கள். ராமேஸ்வர யாத்திரையை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். இப்போது நாம் எல்லாம் ராமேஸ்வரத்தில் இருக்கிறோம்.

1964 டிசம்பர் 23 ம் காலை மணி 6.00 இடம் : ராமேஸ்வரம்

அன்று உலகித்திற்கே விடிந்தது ராமேஸ்வரம் உட்பட.. உங்கள் கவனம் முழுவதும் இப்போது ராமேஸ்வரத்தில்.. கிழக்கே உதித்த சூரியன் ராமேஸ்வரத்தையே சுறுசுப்பாகிக்கொண்டிருந்தான். மீனவர்கள் கடலில் பிடித்த மீன்களை சந்தைக்கு கொண்டு சென்றனர்.குழந்தைகள் பள்ளிக்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்தனர்.

மாலை மணி சுமார் 6.00- குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்யத்தொடங்கினர்.

இரவு மணி சுமார் 10.00. உணவு சாப்பிட்டபின் பெற்றோர்கள் குழந்தைகள் மற்றும் தாத்தா பாட்டிகள் எல்லோரும் தங்கள் வாழ்வையும் தாண்டி கனவுகளை சுமந்துகொண்டு தூங்கச்சென்றனர்.

இரவு மணி 1.00

ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் கடல் நீருடன் நண்டுகள். ஆம் கடல் மாதா கோபத்தின் உச்சியில் பொங்கிக்கொண்டிருந்தாள். ராமேஸ்வர வாசிகள் சாப்பிட்ட உணவு கூட ஜெரித்திருக்காது. எல்லோருடைய உயிர் உடல் சுமந்துகொண்டிருந்த கனவுகளுடன் எல்லாமுமாக சேர்ந்து கடல் மாதாவின் கோரப்பசிக்கு உணவனார்கள்.

100 பயணிகளுடன் நின்றுகொண்டிருந்த ரயிலும் கடல் மாதாவின் கோரப்பசிக்கு இறையாயினர்.

தகவல் தொர்பு கம்பங்கள் தரையில் சாய்ந்தன. ராமேஸ்வரம் வெளி உலகத்திலிருந்து முற்றிலும் துணிடிக்கப்பட்ட ஒரு தீவாக மாறியது..

தப்பிப்பிழைத்த குழந்தைகள் பெரியர்வர்கள் எல்லோரும் கடலின் கோரப்பசிக்கு இறையான தங்கள் உறவுகள் சொந்தங்கள் காணாமல் உள்ளம் சோகத்தில் முழ்கியிருந்தன.

சொந்தங்களை காணாமல் தவிக்கும் உள்ளங்கள்

ஆனால் உள்ளத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என

எல்லோர் வயிறும் கடல் பசிக்கு இணையாக துடித்தன

பசி எல்லை மீறி போக சொந்தங்களை இழந்த சோகம் கூட

வயிற்றுப்பசிக்கு இறையாயின

மீதமிருந்த மொத்த உயிர்களும் கால் போன போக்கிலே

பசிக்கு உணவைத்தேடி அலைந்துகொண்டிருந்தனர்

தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் வெளி உலகத்திற்கு தகவல் அனுப்ப முடியவில்லை. தகவல் கிடைத்தாலும் நிவாரண பொருட்கள் வந்து சேர இரண்டு நாட்களாவது வேண்டும். பசியால் தவித்தனர். எங்கு பார்த்தாலும் கொத்துக்கொத்தாக சடலங்கள். கடல் நீரை தவிர சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ அங்கு ஏதுமில்லை.. ஆனால் வயிறு பசிக்காமல் இருக்குமா?

மஹாபெரியவாளின் அற்புத மஹிமை

மஹாபெரியவாளின் உதவிக்கரங்கள் சங்கர மடத்தின் நீண்ட நாட்களாக. சேகரித்த அரிசி,மாளிகைப்பொருள்கள் காய்கறிகள் எல்லாம் தாற்காலிகமாப்போட்ட அடுப்படிக்கு வந்தன.

பசியால் துடிக்கும் ஒவ்வொரு ஜீரவாரசிகளுக்கும் தூரத்தில் எரிந்துகொண்டிரிந்த அடுப்புகளும் அதிலிருந்து மூக்கை துளைக்கும் உணவுப்பதார்தத்தின் வாசனையம் எஞ்சீய உயிர்களுக்கு உயிர் பிழைக்கும் நம்பிக்கை வந்தது.

அந்த பரமேஸ்வரன் மஹாபெரியவா சர்வரக்க்ஷகன் என்பதில் இன்னும் என்ன சந்தேகம்.

இயற்கையின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமான ராமேஸ்வரம்