Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா- ஸ்ரீ ஸ்ரீதர்


குருவே சரணம் குரு பாதமே சரணம்

இறைவன் பணியை ஸ்ரீதர் செய்கிறார்

ஸ்ரீதருக்கு இறைவன் பணி செய்கிறார்.

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-002

பிரதி புதன் கிழமை தோறும்

ஸ்ரீ ஸ்ரீதர்

“வாழ்க்கை என்பது ஒரு அரிய சந்தர்ப்பம் நழுவ விடாதீர்கள்

ஒரு லட்சியத்தை நிர்ணயத்துக்கொள்ளுங்கள்

லட்சியத்தின் பாதையை வகுத்துக்கொள்ளுங்கள்

வாழ்க்கை பயணத்தை வெற்றிகரமாக நடத்தி முடியுங்கள்”

ஸ்ரீதர் ஒரு வாழும் உதாரணம்

இந்தத்தொடரில் இந்த வாரம் நாம் காணப்போவது ஸ்ரீமான் ஸ்ரீதர் என்பவரது வாழ்க்கையில் மஹாபெரியவாளின் தெய்வத்தின் குரல் புத்தகம் செய்த ஒரு அற்புதத்தை அனுபவிக்கப்போகிறோம். நமெக்கெல்லாம் தெரியும் இறை பணி என்பது என்ன. அந்த இறைப்பணியை எப்படியெல்லாம் செய்யலாம் என்றும் தெரியும். செய்துகொண்டும் இருக்கிறோம். ஸ்ரீதரின் இறைப்பணியும் வாழ்க்கையின் குறிக்கோளும் எப்படி பிண்ணிப்பிணைந்திருக்கின்றது என்பதை பார்ப்போம்.

எல்லோருக்கும் வாழ்க்கையில் குறிக்கோள் மிகவும் முக்கியம். குறிக்கோள் எதுவாக இருந்தாலும் அந்த குறிக்கோள் இந்த ஜென்மத்தில் நாம் வாழும் நாள் வரைதான் இருக்கும். ஒரு சிலரே இந்த ஜெமத்தையும் தாண்டி தன்னுடைய குறிக்கோளை நிர்ணயிப்பார்கள்.

அந்த ஒரு சிலருக்கும் அதீத ஞானமும் அளவு கடந்த இறை அனுகிரஹமும் ஆசிர்வாதமும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு ஆத்மாதான் நம்முடைய இந்த வார மஹாபெரியவா பக்தர் ஸ்ரீதர். மறைந்து கிடந்த ஞானமும் புதைந்து கிடந்த தீக்ஷண்யமும் மஹாபெரியவாளின் தெய்வத்தின் குரல் புத்தகத்தின் மூலம் வெளிப்பட்டு இன்று ஸ்ரீதர் இந்த இறை பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.

ஸ்ரீதர் இறைவன் செய்ய வேண்டிய பணியை தளராது இடைவிடாமல் செய்து வருகிறார். இறைவன் பணியை ஸ்ரீதர் செய்யும் பொழுது ஸ்ரீதரின் வாழ்கை பயணத்தை இறைவன் நடத்துவதுதானே நியாயம். முறையும் கூட. மிகப்பெரிய கம்பெனியில் இவர் ஒரு பெரிய பதவியில் இருக்கிறார். இவருடைய அலுவலக வேலையையும் குடும்பத்தையும் மிக நல்ல முறையில் மஹாபெரியவா சீரமைத்து பார்த்துக்கொள்கிறார். தன்னுடைய இறை பணிக்கென்று இதுவரை மற்றவர்களிடம் எந்தவிதமான உதவிக்கும் சென்றதில்லை. மஹாபெரியவா இவருடன் இருக்கும் பொழுது எந்த உதவியும் கேட்காமலேயே வருமல்லவா.

ஆனால் ஆதரவின்றி கேட்பாரற்று நோயால் அவதிப்பட்டு உயிரை விடும் சக ஆத்மாவை அடக்கம் செய்யும் இறை பணியை பற்றி நமக்குள் எத்தனை பேருக்குதெரியும். அதுவும் அவர்கள் ஜாதி முறைப்படியும் மதங்களின் முறைப்படியும் ஒரு ஆத்மா குடி கொண்டிருந்த உடலை அடக்கம் செய்து அந்த ஆத்மாவை இறைவனிடமே சகல மரியாதைகளுடன் திரும்ப அனுப்புவது என்பது பல அஸ்வமேத யாகம் செய்வதற்கு நிகராகும்.

நமக்கெல்லாம் தெரியும் மஹாபெரியவாளின் அற்புத இறை சக்தி எங்கும் பாயும் எதிலும் பாயும் யாரிடமும் பாயும். அப்படி மஹாபெரியவாளின் புத்தகமான தெய்வத்தின் குரல் இவர் மீது பாய்ந்து உள்ளே புகுந்து ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது.

அந்த வாழ்க்கை மற்றம் தான் "அனாதை பிரேத கைங்கர்யம்" என்னும் இறை பணி. இது எப்படிப்பட்ட பணி. யாருக்கு சித்திக்கும். ஒரு ஆத்மா அரை நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்த ஒரு உடலை விட்டு பிரியா விடை பெரும்பொழுது அந்த உடலுக்குண்டான மரியாதையைத்தான் நாம் இறுதி சடங்கு என்கிறோம்.

இந்த மாதிரி இறைபணியில் கிடைக்கும் புண்ணியம் இந்த ஜென்மத்தில் நமக்குமட்டுமல்ல வரும் ஜென்மத்திலும் நம்முடைய சந்ததியினருக்கும் சென்று சேரும். நமக்கு நன்றாகதெரிகிறது இந்த ஜென்மத்தில் நாம் படும் கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் காரணம் நம்முடைய பூர்வ ஜென்ம கர்ம வினைகள் தான் காரணம் என்று. இந்த ஜென்மத்தில் சிறிது ஞானத்துடன் இருக்கிறோம். சிந்தித்து செயல் படுவோம்.

நமக்கு இந்த ஜென்மத்தில் கிடைத்த இரு வாய்ப்புகள். ஒன்று பிறப்பு இறப்பு இல்லாத இறை சாம்ராஜ்யத்தை அடைவது இரண்டு நல்ல புண்ணிய காரியங்களை செய்து அடுத்த ஜென்மத்தில் ஒரு நல்ல பிறவிக்கு இப்பொழுதே பாடுபட்டு வாழ்க்கை என்னும் ஆழமும் திசையும் தெரியாத சம்ஹார சாகரத்தை நீந்தி கடக்க முயல்வோம்.

மஹாபெரியவா பக்தர் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய வீடியோ அனுபவம். இந்த விடீயோவின் இறுதியில் மயானத்தில் இறந்தவர் உடலை எப்படி அடக்கம் செய்கிறார்கள் என்ற காட்சியை பார்க்கும்பொழுது என் கண்கள் குளமாகின. எந்த இந்து மதத்தினருக்கும் இவர் ஒரு பொதுவான பாட்டு வைத்திருக்கிறார் ஸ்ரீதர். அந்த பாட்டு "ரகுபதி ராகவா ராஜாராம் பாதீத பாவன சீதாராம்"

இந்த வீடியோ காணொளி பலரது உள்ளத்திற்குள்ளும் இல்லத்திற்குள்ளும் ஒரு மாற்றத்தை கொண்டுவரும் என்பது சர்வ நிச்சயம்.

ஒன்றை மறந்து விடாதீர்கள்

இறைவன் பணியை நீங்கள் செய்யும் பொழுது

உங்களுக்காக இறைவன் பணி செய்வான்

ஸ்ரீமான் ஸ்ரீதர் ஒரு வாழும் உதாரணம்

https://www.youtube.com/watch?v=257zgOyTBhE

Play time: 28 minitues 54 seconds

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்