Featured Posts

குரு பூஜை அற்புதங்கள் - சூர்யகாயத்ரி-பாகம்-3


எதை கேட்டாலும் கொடுத்து விடுகிறாய்

எவ்வளவு கேட்டாலும் கொடுத்து விடுகிறாய்

நீ என்ன அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமா

இல்லை எதை கேட்டலும் கொடுக்கக்கூடிய காமதேனுவா

எங்களை பொறுத்தவரை நீ ஒரு குழந்தை

பக்தி எங்கிருந்தலும் விரல்களை பிடித்துக்கொண்டு

ஒரு குழந்தை மாதிரி சென்று விடுவாய்

நின் பாதம் சரணம்

காயத்ரி ராஜகோபால்

அற்புதத்தின் சுருக்கம்: நம்முடைய விலை மதிப்பு மிக்க பொருள் ஒன்று காணாமல் போய் விட்டால் என்ன செய்வோம்.தேடுவதை நிறுத்தி விட்டு நம்முடைய இஷ்ட தெய்வத்தை வேண்டுவோம். அப்படித்தான் சூரிய காயத்ரி தன்னுடைய சகோதரர் லக்க்ஷக்கணக்கில் விலை மதிப்பு மிக்க கேமராவை தொலைத்துவிட்டார். அது திரும்ப கிடைக்க மஹாபெரியவாளை பிரார்த்தனை செய்ய சொன்னாள். நானும் செய்தேன். மஹாபெரியவா எப்படி பதில் அளித்தார் என்பதை படித்து மஹாபெரியவா விஸ்வரூபத்தை காணுங்கள். மேலும் இரண்டு அற்புதங்கள் இடம் பெற்றுள்ளன இங்கித பதிவில்.

குரு பூஜை அற்புதங்கள் - சூர்யகாயத்ரி-பாகம்-3

வாழ்க்கையில் வெற்றிபெற எல்லா சக்தியைவிட

ஆத்ம சக்தி ஓங்கியிருக்க வேண்டும்

வாழ்க்கையை எப்போதும் நிபந்தனைகளோடு தொடங்காதீர்கள் ஆழமான அன்புடனும் ஒரு பாசப்பிணைப்போடும் வாழ்க்கையை அணுகுங்கள். வாழ்க்கை புரிதலுக்கு அறிவு அவசியம். ஆனால் வாழ்க்கையை வாழ்வதற்கு மனித உணர்வுகள இருந்தாலே போதும்

இது ஒரு யோசனை இல்லை

வாழ்க்கை தத்துவம்

வாழ்க்கையில் வரும் சில பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும். சில பிரச்சனைகளுக்கு சில பல மாதங்களில் தீர்வு காணலாம். சூர்யகாயத்ரியும் உடனே தீர்வு காணவேண்டிய பிரச்சனைகளை தன் வாழ்க்கையில் சந்தித்தார். அவற்றில் ஒன்று தாம்பத்தியம் மற்றும் வீடு. இவை இரண்டையும் மஹாபெரியவா குரு பூஜை மூலம் மிகவும் அழகாக முடித்துவிட்டார் என்பதை நாம் எல்லோருமே அறிவோம்..

மேலும் உடனே தீர்வு காண வேண்டிய இரண்டு பிரச்சனைகளை சந்தித்தார்.

வழக்கம் போல் ஒரு நாள் என் கைபேசி என்னை அழைத்தது. மறுமுனையில் சூரியகாயத்ரி. விவரம் இதுதான்..

1) தன்னுடைய மூத்த சகோதரர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிந்த ஒரு ஊரில் தன்னுடைய மிகவும் விலை மதிப்புமிக்க கேமரா ஒன்றை தொலைத்துவிட்டார்.

2) தன்னுடைய வயதான தந்தயை பார்த்துக்கொண்டிருக்கும் தன்னுடைய தாய்க்கு இரண்டு கால்களும் நடக்கமுடியாமல் கட்டை போலாகிவிட்டது.இது உடனே சரியாகவில்லையென்றால் தந்தையை பார்த்துக்கொள்ள யாருமில்லை.

இந்த இரண்டு பிரச்சனைகளையும் என்னிடம் சொல்லி மஹாபெரியவாளிடம் தீர்வு வேண்டினாள்.

இந்த பிரச்னையின் ஆழத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது..

மஹாபெரியவா எல்லா பிரார்த்தனைகளும்

பதில் அளிக்கிறார் என்றால்

அதன் பின்னிருக்கும் விஷயங்கள் இரண்டு

நம்முடைய உருகும் பக்தியும்

மலையை தூக்கும் நம்பிக்கையும்

பிரார்த்தனை செய்வது யார்

என்பது முக்கியமல்ல

எப்படி செய்கிறோம்

என்பதுதான் முக்கியம்

ஆகவே பிரும்மமுகூர்த்த ப்ரார்தனையின்போது மஹாபெரியவாளிடம் மன்றாடி வேண்டினேன்.. சூர்யகாயத்ரியின் தாய் நாளை காலை கால் சரியாகி எழுந்துவிட வேண்டும். தன் கணவருக்கு செய்யவேண்டிய பணிவிடைகளை எந்த வித சிரமும் இல்லாமல் தொடர வேண்டும்.

மேலும் விலை மதிப்புமிக்க கேமரா சீக்கிரமே திரும்ப கிடைக்கவேண்டும். சூர்யகாயத்ரிக்கு அனுக்கிரஹம் பண்ணுங்கள் பெரியவா. எனக்கு நாளை காலை சூர்யகாயத்ரி போன் செய்து அவள் அம்மா சரியாகிவிட்டார் என்று சொல்லவேண்டும் பெரியவா. என் பிரார்த்தனை சூர்யகாயத்ரியின் இரண்டு பிரச்சனைகளுக்கும் முடிந்தது.

அற்புதம்

மறுநாள்; காலை நாம் சமயலறையில் சமைத்துக்கொண்டிருக்கும் பொழுது சூரிய காயத்ரி என்னை என் கைபேசியில் அழைத்தாள். நானும் சொல்லும்மா என்றேன். சூர்யகாயத்ரி சொன்னாள் தன் தாய் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் கொஞ்சம் வலியிருக்கிறது. இந்த பிரார்த்தனைக்கு பதிலளித்த மஹாபெரியவா இந்த வலியையும் சரி பண்ணுவார் என்று சொல்லி போனை வைத்துவிட்டேன்.

என் கண்களில் கண்ணீர் கசிந்தது. முகம் தெரியாத ஒரு பக்தை பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வசிக்கிறாள். என் பிரார்த்தனைக்கு இப்படி ஒரு தாக்கமா? எனக்கு உடம்பெல்லாம் என்னமோ செய்தது..

எனக்கு சொல்ல வார்த்தைகள் தெரியவில்லை

இன்னும் வார்த்தையை தேடுகிறேன் தமிழில்

கேமரா அற்புதம்

சரியாக ஒரே வாரம். சூர்யகாயத்ரியின் மூத்த சகோதரர் வேறு ஒரு ஊரில் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. உங்கள் கேமரா எங்களிடம் உள்ளது. வந்து வாங்கிக்கொள்ளுங்கள். அவரும் சென்றார் கேமராவை பத்திரமாக வாங்கிக்கொண்டார்,.

நான் என்னையே மறந்து அழுதபடியே

மஹாபெரியவா முன் நின்றுகொண்டிருந்தேன்

மேலும் ஒரு அற்புதம்

சூர்யகாயத்ரியின் இரண்டு குழந்தைகளும் படிப்பில் படு சுட்டிகள். நமது பாரம்பரிய இசையான கர்நாடக சங்கீதத்திலும் பயிற்சி, சமூக சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது மற்றும் பரத நாட்டியம் போன்ற எண்ணற்ற கலைகளை கற்று வருகின்றனர்.

இத்தனை திறமைகளிருந்தும் அந்தக்குழந்தைளுக்கு சாப்பிடும் உணவு சேர வில்லையென்றால் ஸ்கின் அலர்ஜி போன்று அடிக்கடி வந்து மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

இந்த பிரார்த்தனைகளையும் என்னுடைய பிரும்ம முகூர்த்த நேர வழிபாட்டில் மஹாபெரியாவளிடம் ஒரு கோரிக்கையாக வைத்து வேண்டினேன்.ஒரே வாரத்தில் அந்த குழந்தைகளுக்கு ஓரளவு இந்த அலர்ஜி கட்டுப்பட்டது. அநேகமாக இந்த போஸ்ட் ஹோஸ்ட் செய்யும் நேரத்தில் குழந்தைகள் முற்றிலும் இந்த கஷ்டத்திலிருந்து விடுப்பட்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

நம் கஷ்டகாலங்களில்

நாம் நம்மையே கேட்டுக்கொள்ளும் ஒரு கேள்வி

கடவுளுக்கு கண் இல்லையா

கடவுள் இருக்கிறாரா இல்லையா

இருக்கார்னா எங்கே இருக்கார்

இதற்கு எல்லாம் பதில் மஹாபெரியவா

நாம் அழைத்தால் நேரில் வந்து

அனுக்கிரஹம் பண்ணும் பரமேஸ்வரன்

மஹாபெரியவா குரு பூஜை பண்ணி அந்த பரமேஸ்வர அவதாரத்தை அழையுங்கள் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுங்கள் கையில் தீர்வை வைத்துக்கொண்டு நாம் ஏன் கஷ்டப்படவேண்டும்

நொந்துகொண்டு ஏன் வாழவேண்டும்

வாழ்க்கை வாழ்வதற்க்கே

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

சூர்யகாயத்ரி தற்சமயம் நம்மிடமிருந்து விடை பெறுகிறாள் எதிர் காலத்தில் தேவைக்கேற்ப மீண்டும் நமையெல்லாம் சந்திக்க வருவாள். சூர்யகாயத்ரிக்கு உங்கள் வாழ்த்துக்களை போஸ்ட் செய்யுங்கள்

காயத்ரி ராஜகோபால்