Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-003


பெரியவா பொதுவாக மனிதர்களை பலவாறு வகை படுத்துவார்கள் ஆனால் நீயோ மனிதனை மனிதனாக

மட்டுமே வகை படுத்துகிறாய் மனிதன் என்பதற்கு இறைவன் என்று

ஒரு பொருளையும் உணர்த்துகிறாய். உன்னை விவரிக்க முடியாது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட பிரும்மம் அல்லவா நீ நின் பாதமே சரணம்

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-003

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

Ahobila Madam Jeer Swamigal

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-003

ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மஹாதேசிகன் ஸ்வாமிகள்.

பிரதி புதன் கிழமை தோறும்

வலியோடு போராடினால்தான் ஒரு பெண் தாயாக முடியும்

இருளோடு போராடினால்தான்

ஒரு புழு வண்ணத்துப்பூசி ஆகமுடியும்.

மண்ணோடு போராடினால்தான் விதை மரமாக முடியும்

வழக்கையோடு போராடினால்தான் வரலாறு படைக்க முடியும்

நாம் வரலாறு படைக்கவேண்டாம்

ஸ்வாமிகளின் வரலாறை படிக்கலாமே

பக்தியை பற்றி எவ்வளவோ பேசுகிறோம். பக்திக்கு மேல் எதுவும் இல்லை என்றும் நமக்கு தெரியும். என்ன தான் கிடைத்தற்கறிய புதையலே கிடைத்தாலும் பக்தி சொன்னால் அந்த புதையலை கீழே போடும் அளவிற்கு குரு பக்தியும் குருவின் மேலுள்ள உள்ள அசைக்க முடியாத குரு நம்பிக்கையும் இருக்கவேண்டும்.

இந்த மாதிரி ஒரு பக்தி இருக்குமானால் கீழே போட்ட புதையலை போல பலமடங்கு கிடைத்தற்கரிய பாக்கியங்கள் கிடைக்கும் என்பது நிதர்சனம். இப்படிப்பட்ட குரு பக்தியையும் குரு நம்பிக்கையையும் இதிகாசத்தில் புராணங்களிலும் கேட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். ஆனால் நாம் வாழும் காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஆத்மாவை காண வேண்டுமா.

அந்த ஆத்மா வேறு யாருமல்ல. தன்னுடைய பூர்வாஸ்ரமத்தில் மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர்களில் ஒருவராக இருந்து தற்போது வைணவத்தின் உயர்ந்த பீடமான அஹோபில மடத்தின் தற்போதைய 46 வது பட்டத்தில் இருக்கும் ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மஹாதேசிகன் ஸ்வாமிகள் அந்த ஆத்மா.

இப்பொழுது உங்களை ஜீயர் ஸ்வாமிகளின் பூர்வாஸ்ரம வாழ்க்கைக்கு நான் அழைத்து செல்கிறேன்.

இப்பொழுது ஜீயர் ஸ்வாமிகளின் இளமைப்பருவத்திலிருந்து அழைத்துச்செல்வதை விட படிக்கும் பருவத்திலிருந்து உங்களை அழைத்துச்செல்கிறேன். ஆனால் உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது தவறாமல் ஜீயர் ஸ்வாமிகளின் வாழ்க்கையை படியுங்கள்.நீங்களும் உங்கள் வாழ்க்கையை படிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

வாழ்க்கையில் வெற்றி என்பது யாரோ எவரோ உங்களுக்கு தங்கத்தாம்பாளத்தில் வைத்து வழங்குவது அல்ல என்பதை நாம் நன்கு உணர முடியும். வெற்றி சம்பாதித்து பெற வேண்டிய ஒன்று. வெற்றி என்பது எவரோ கொடுத்து வாங்குவதல்ல என்பதை நாம் நன்கு உணர முடியும்.

மஹாபெரியவா ஜீயர் ஸ்வாமிகளை இளமை பருவத்தில் இருந்து வேதம் தர்க்கம் மற்றும் எல்லா பாடங்களையும் படிக்கவைத்து ஒரு மடாதிபதியாகும் அளவிற்கு தயார் செய்தார் மஹாபெரியவா.

மஹாபெரியவாளின் தீக்ஷண்யம்:

ஒரு முறை ஜீயர் ஸ்வாமிகளுக்கு ஜெர்மனி நாட்டில் ஒரு ஆராய்ச்சியாளராக வரும்படி அழைப்பு வந்தது. சம்பளம் அந்தக்காலத்தில் ஆண்டுக்கு மூன்று லக்ஷத்திற்கும் மேல். ஜீயர் ஸ்வாமிகளின் சம்பாத்தியம் அவரது குடும்பத்திற்கு மிகவும் தேவைப்பட்ட சமயம்.அப்பொழுது மஹாபெரியவா கடல் கடந்து வெளிநாடு செல்வதை ஒரு போதும் ஊக்குவித்ததில்லை.

அப்பொழுது ஜீயர் ஸ்வாமிகளிடம் மஹாபெரியவா தன்னுடைய தீக்ஷண்யத்தால் சொல்கிறார். நீ வெளிநாடு போக வேண்டாம். நீ மிகப்பெரிய பதவிக்கு வரப்போகிறாய். இங்கயே இரு. கஷ்டம் இருந்தால் என்ன கஷ்டப்படேன் என்று சொன்னார். சொன்னது போலவே இன்று உலகத்தில் உள்ள அத்தனை வைஷ்ணவர்களுக்கும் ஆசார்யன் ஆகிவிட்டார்.

ஜீயர் ஸ்வாமிகளின் குரு பக்தி:

தன்னுடைய பூர்வாஸ்ரமத்தில் வேதங்கள் படித்து முடித்த பிறகு தன்னுடைய சகோதரிகளுக்கு திருமண வைபவம் நடத்த வேண்டும்.ஜீயர் ஸ்வாமிகளுக்கு குரு பக்தி எப்படியோ அப்படித்தான் பெற்றோர் பக்தியும்.தந்தையின் பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டார்.

ஒரு முறை தன் சம்பாத்தியம் குடும்பத்திற்கு அத்தியாவசியம் என்ற நிலையில் நல்ல சம்பாத்யத்திற்கும் நல்ல வழி பிறந்து விட்டது. ஆம் ஜெர்மனியில் இருக்கும் ஒரு அமைப்பு ஜீயர் ஸ்வாமிகளை ஆராய்ச்சியாளர் பணியில் அமர்த்த முடிவு செய்து வருடத்திற்கு மூன்று லக்க்ஷத்திற்கு மேல் சம்பளமும் பேசி வேலையில் சேரும் நாளையும் முடிவு செய்து வேலையில் சேருவதற்கான கடிதமும் அனுப்பிவிட்டார்கள்.

உங்கள் கவனத்திற்கு:

இந்த விஷயம் ஜீயர் ஸ்வாமிகளுக்கு அவரது தந்தையர்க்கும் மட்டுமே தெரியும்.

அப்பொழுது தீபாவளி சமயம். ஒரு அக்டோபர் மாதத்தின் இறுதி நாளான முப்பத்தியொன்றாம் தேதி மும்பையில் இருந்து விமானத்தில் பயணம்.மும்பை செல்லும் வழியில் சென்னையில் இறங்கி காஞ்சிபுரம் சென்று மஹாபெரியவாளிடத்தில் ஆசிர்வாதமும் வாங்கிட்டுக்கொண்டு சென்றால் மனதுக்கு அமைதியாக இருக்கும் என்று நினைத்தார்.

மஹாபெரியவாளிடம் வெளி நாடு செல்வத்தைப்பற்றி சொல்லவேண்டாம். ஏனென்றால் சொன்னால் போகவேண்டாம் என்று அறிவுரை சொல்லுவார். ஆனால் குடும்பத்திற்கு தன்னுடைய சம்பாத்தியம் மிகவும் தேவை என்பதை உணர்ந்த ஜீயர் ஸ்வாமிகள் மஹாபெரியவாளிடம் எதுவும் சொல்லாமலேயே சேவித்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு மும்பைக்கு கிளம்பி விடலாம் என்று நினைத்தார்

காஞ்சி மடத்திற்கு தொலைபேசியியில் தொடர்பு கொண்டு மஹரியாவா எங்கு இருக்கிறார் என்பதை உறுதி செய்து கொள்ளும் பொழுது மடத்து அதிகாரிகள் மஹாபெரியவா கர்நாடக மாநிலத்தில் உள்ள வனசங்கரி என்னும் இடத்தில முகாமிட்டுள்ளதாக தெரிவித்தார்கள். உடனே ஜீயர் ஸ்வாமிகள் வனசங்கரிக்கு விரைந்தார்.அங்கு மதியத்திற்கு மேல் சென்றடைந்தார். மஹாபெரியவா முகாமுக்கும் சென்று விட்டார்.

அங்கே சென்றவுடன் ஸ்ரீ கார்ய மனுஷாள் ஜீயர் ஸ்வாமிகளிடம் சொன்னார்கள். இன்று மஹாபெரியவா மௌனத்தில் இருக்கிறார். அவர் பேச மாட்டார் என்று சொன்னார்கள் ஜீயர் ஸ்வாமிகளுக்கு ஒரு விதத்தில் இந்த மஹாபெரியவா மௌன விரதம் சௌகரியமாகவும் இருந்தது.

ஏனென்றால் தான் வெளிநாடு போவதை சொல்லவில்லை என்ற குற்ற உணர்ச்சி இருக்காது. நமஸ்காரம் செய்து ஆசீர்வாதங்களை வாங்கிக்கொண்டு கிளம்பி விடலாம் என்று நினைத்து கோவில் குளத்தில் கை கால்கள் அலம்ப ஆரம்பித்தார்.

முகம் அலம்பிக்கொண்டிருக்கும் பொழுது மடத்து கைங்கர்ய மனுஷாளில் ஒருவர் ஜீயர் ஸ்வாமிகளை மஹாபெரியவா உத்தரவு ஆயிற்று என்று சொன்னார். உத்தரவு ஆறது என்று சொன்னார். இதன் அர்த்தம் மஹாபெரியவாளை உடனே சென்று சந்திக்கவேண்டும் என்று பொருள் .

ஜீயர் ஸ்வாமிகளும் அவசரமாக சென்று மஹாபெரியவாளை நமகரித்தார். சில நிமிடங்கள் அங்கே மௌனம் நிலவியது. மஹாபெரியவாளே மௌனத்தை கலைத்தார். இந்த உரையாடலை ஒரு சம்பாஷணை வடிவில் சமர்ப்பித்தால் இன்னும் சுவையாக இருக்கும் என்பது என் கருத்து. இதோ உங்களுக்காக சம்பாஷணை.

பெரியவா: எப்போ கிளம்பப்போறே?

ஜீயர் : பெரியவா உத்தரவு கிடைத்தவுடன்

பெரியவா: சிறிது மௌனத்திற்கு பிறகு மீண்டும் அதே கேள்வி. எப்போ கிளம்பப்போறே?

ஜீயர்: நிச்சயம் மஹாபெரியவாளுக்கு தன்னுடைய ஜெர்மனி பயணம் தெரியாது என்பதை தனக்குள்ளே உறுதி செய்து கொண்டு திரும்பவும் அதே பதிலை சொன்னார். பெரியவா உத்தரவு கிடைத்தவுடன் கிளம்பறேன்

பெரியவா: நீ உன் வீட்டிற்கு போவதை கேட்கலை. நீ எங்கயோ வெளிநாடு போகப்போறியே. அதெ கேட்கிறேன். எப்போ கிளம்பறே.

ஜீயர்: ஜீயர் ஸ்வாமிகளுக்கு தொண்டை எல்லாம் ஒரு வினாடி வறண்டு போனது. என்னை தவிர யாருக்கும் தெரியாதே. எப்படி மஹாபெரியவளுக்கு தெரியும் என்று நடுங்கி போய் மீண்டும் அதே பதிலை திரும்ப சொன்னார். உத்தரவு கிடைத்தவுடன் என்று சொன்னார்.

பெரியவா: ஜீயர் ஸ்வாமிகள் என்ன வேலைக்கு ஜெர்மனி போகிறார். அங்கு என்ன தேதியில் வேலையில் சேர வேண்டும் எனபத்தையெல்லாம் சொல்லிவிட்டு முதல் நாள் இரவு ஜீயர் ஸ்வாமிகளுக்கும் அவருடைய தகப்பனாருக்கும் நடந்த அவர்களுடைய சம்பாஷணை விபரங்களை எல்லாம் சொல்லிவிட்டு எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக சொன்னார்

"நீ வெளிநாடு போகிறேன் என்று சொன்னதற்கு உன் தந்தை உன்னிடம் கேட்டார் நீ மஹாபெரியவா கிட்டே சொல்லியாச்சா என்று.இதுதானே கடைசியாக நடந்தது. இனிமேலாவது மீதியை நீ சொல்லேன் என்று ஒரு குழந்தையின் போல ஜீயரிடம் கேட்டார் மஹாபெரியவா.

ஜீயர் ஸ்வாமிகள் என்ன சொல்லுவார். தனக்கு எதிரே உட்கார்ந்திருப்பது சாக்கஷாத் பரமேஸ்வரன் என்று காண்பித்த பிறகு என்ன சொல்லுவார் ஜீயர் ஸ்வாமிகள்.

ஜீயர் ஸ்வாமிகள் முன்னே இரண்டு சவால்கள் காத்திருந்தன. ஒன்று ஒரு தந்தைக்கு சத் புத்திரனாக இருப்பதா இல்லை ஒரு குருவுக்கு சிறந்த மாணவனாக இருப்பதா.

குடும்பமா குருகுலமா தந்தையா குருவா. குடும்பமும் தந்தையும் சகோதரியின் வாழ்க்கையும் முக்கியம் என்று முடிவெடுத்தால் குடும்பத்தில் உறுப்பினர்களில் ஒருவன் என்ற முறையில் சரி.. தன்னை ஒரு நல்ல வேத அத்தியாயனம் செய்யும் ப்ராஹ்மண குல தர்மத்தின் படி வாழக்கூடிய நல்ல ஆத்மாவாக மாற்றிய குருவின் வாக்கு முக்கியம் என்று முடிவெடுத்தால் அதுவும் சரியே.

ஜீயர் ஸ்வாமிகள் என்ன முடிவெடுத்தார் என்பதை அறிய வேண்டுமா. இந்த விடியோவை காலம் தாழ்த்தாமல் பாருங்கள்.

இன்னும் எத்தனையோ அற்புதங்களை நான் இங்கே உங்களுக்காக இன்னும் எழுதலாம். நேரம் காலம் கருதி இத்துடன் என் எழுத்துக்களை முடித்துக்கொள்கிறேன்.ஜீயர் ஸ்வாமிகள் சில தருணங்களில் தன்னுடைய எண்ண அலைகளை வார்த்தைகளாக வெளிக்கொண்டு வரும் பொழுது அவர் கண்கள் குளமாவதை காணும் பொழுது காணும் நம் கண்களும் குளமாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த வீடியோ காணொளியை காணும் பொழுது ஜீயர் ஸ்வாமிகள் என்னுடனும் சம்பாஷிப்பதைப்போலவே எனக்குள் ஒரு உள் உணர்வு. நிச்சயம் உங்களுக்கும் அந்த உணர்வு வரும் என்பதில் சந்தேகமில்லை.

ஒன்று நிச்சயம். குரு பக்திக்கு ஒரு எடுத்துக்காட்டு. குருமேல் இருக்கும் நம்பிக்கைக்கு ஒரு உதாரணம். குடும்பமா குருவா என்று தன்னை வகை படுத்திக்கொள்ளும் சமயத்தில் குருவின் பக்கம் நின்றது பணமா பக்தியா என்ற நிலையில் பக்தியே என்று பக்தியின் பக்கம் நின்றது சன்யாசமா லௌகீகமா என்னும் பொழுது சன்யாசத்தின் பக்கம் நின்றது.

ஒரு ஆத்மாவின் எதிர்காலத்தை தன்னுடைய ஞான திருஷ்டியால் உணர்ந்து அன்றே எப்படி அந்த ஆத்மாவை ஒரு நிலைப்படுத்தி இன்று லோகத்திற்கே வழிகாட்டும் ஒரு ஆச்சார்யனாக உருவாக்கியது மஹாபெரியவாளின் மற்றுமொரு அற்புதம்.

இந்து மதத்தில் சைவம் வைஷ்ணவம் என்று இரு பிரிவுகள். பிரிவுகள் இரண்டாக இருந்தாலும் இந்து மதத்திற்கு சைவமும் வைஷ்ணவமும் இரு வேறு கண்கள் என்பதை காலம் மட்டும் நமக்கு உயர்த்தவில்லை. மஹாபெரியவாளும் உணர்த்தியிருக்கிறார்.

புத்திசாலித்தனமான வாழ்க்கை எது தெரியுமா. மற்றவர்கள் அனுபவத்தில் இருந்து வாழ்க்கை பாடம் படிப்பது. நமே எல்லா அனுபவங்களையும் பெற்றுத்தான் வாழ வேண்டுமென்றால் இந்த ஒரு ஜென்மம் போதாது.

இந்த வீடியோ நம்மை வாழ்க்கையில் வழி நடத்தும் அவ்வை பாட்டி. கலியுக வேதாந்த தேசிகன் உடையவராக நம் பெருமாள் ஜீயர் ஒரு காவியில் இருக்கும் சன்யாசி அல்ல காவியம் படைத்துக்கொண்டிருக்கும் கலியுக பார்த்தசாரதி

வைணவமும் சைவமும் இந்து மதத்தின் இரு கண்கள்

அத்வைதம் விசிஷ்டாத்வைதத்திற்கு நட்பு கரம் நீட்டியது

இது நமக்கு சொல்லும் பாடம் என்ன

தத்துவங்களில் வேறுபாடு இருக்கலாம்

நம்மை படைத்த இறைவன் ஒன்றே

வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டவன்

நமக்குள் எதற்கு வேறுபாடு

வேறுபாடு காண வேண்டாமே

அன்று மஹாபெரியவா ஏற்றிய தீபம்

இன்றும் சுடர் விட்டுக்கொண்டிருக்கிறது

ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மஹாதேசிகன் ஸ்வாமிகள்

மஹாபெரியவா

நூறாண்டு காலம் காவியில் வாழ்ந்த கற்பூர தீபம்

வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

தவறாமல் பார்த்து பயனடையுங்கள்

https://www.youtube.com/watch?v=K92VFt7rSb8

1 மணி . 15 நிமிடம் . 53 வினாடிகள்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square