Featured Posts

குரு பூஜை அற்புதங்கள்-3-பாகம்-1-ஸ்ரீ ஆண்டாள்


மஹாபெரியவாளின் இறை சன்னிதானத்தில்

எல்லா தீர்ப்புகளும் திருத்தி எழுதப்படும்

படைப்பாளிக்கும் படிப்பாளிக்கும் உள்ள ஆன்ம உறவு மிகவும் முக்கியம்

அந்த ஆன்ம உறவை என் எழுத்துக்கள் மூலம்

தக்கவைத்துக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்

****

குரு பூஜை அற்புதங்கள்-3-பாகம்-1-ஸ்ரீ ஆண்டாள்

****

வானம் ஆண் என்றால் பூமி பெண்

வானம் விசாலமானது பூமி ஆழமானது

விசாலத்திற்கும் ஆழத்திற்கும் நடக்கும்

திருமணத்தில் உதயமாகும்

நிலவுதான்தாம்பத்தியம்

வானத்து நிலவு தேயும் வளரும்

தாம்பத்ய நிலவு வளருமே தவிர தேயாது

****

இந்த வார குரு பூஜை அற்புதங்களின் நாயகி ஸ்ரீ ஆண்டாள். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும் கடல் கடந்து வாழ்ந்து வருகிறார். நமக்கெல்லாம் பெண் என்றவுடன் நம் கண் முன்னே தோன்றுவது அந்த அம்பாளுக்கே உண்டான ஆத்ம அழகு, அடக்கம், பணிவு, காருண்யம் ,பிறருக்கு வலிய சென்று உதவுதல், பேசும் ஒவ்வொரு சொல்லும் நம் இதய கதவுகளை மெதுவாக தட்டும்,. கடுமையான சொற்கள் பேசத்தெரியாத ஒரு தமிழ்நாட்டு பெண்.. அப்படிப்பட்ட ஒரு பெண் தான் இந்தவார நம் மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்களின் நாயகி. ஸ்ரீ ஆண்டாள்.

நாமெல்லாம் குரு பக்தி பற்றி பேசுவோம்.அழகாக பேசுவதற்கு பதிலாக ஆக்கபூர்வமான செயல் மேல் என்று சொல்வார்கள். இவரும் இவர் கணவரும் தாங்கள் என்றோ படித்த குருவுக்கு இன்றும் குரு சேவை செய்துகொண்டிருக்கிறார்கள்..

வழக்கமாக கணவன் மனைவி உறவு என்றால் இந்நாளில் எலியும் பூனையும் தான் நமக்கு நினைவுக்கு வரும். ஏனென்றால் நாம் அன்றாடம் காணும் இந்த உறவுகளின் வெளிப்பாடுகளை வீட்டிற்கு உள்ளேயும் காண்கிறோம் வெளியேயும் பார்க்கிறோம்.

முன்பெல்லாம் திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர் என்றுதான்

பார்த்திருக்கிறோம்.இன்று காலையில் தாலி ஏறுவதும் மறுநாள் காலை தாலி இறங்குவதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. என் வார்த்தைகள் சற்று கனமாக இருக்கலாம். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.

கனத்த இதயத்திலிருந்து வெளிவரும்

வார்த்தைகளும் கனமாகத்தானே இருக்கும்.

திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்களின் நிலைமையை சற்று யோசித்து பாருங்கள். அப்பா அம்மா இந்த இரண்டு உயிர்களும், ஐம்பது ஆண்டுகால உழைப்பு, கனவுகள் எல்லாவற்றியும் சுமந்து கொண்டு திருமணம் என்ற ஒரு நிகழ்வை தங்களுடைய சேமிப்பு, வியர்வை,ஆயுள் எல்லாவற்றையும் காசாக்கி நடக்கிறது.

திருமணத்தில் பெண்ணின் கழுத்தில் தாலி ஏறும் பொழுதோ, அல்லது மணமகன் தாலி கட்டும்பொழுதோ பெற்றோர்கள் கண்களில் இருந்து வழியும் கண்ணீர் இருக்கிறதே அது ஆயிரம் கதைகள் சொல்லும். நாம் சொல்லுவோம் அது ஆனந்தக்கண்ணீரென்று. மணமக்கள் வாழுந்து விட்டால் ஆனந்தம். இல்ல்லாவிட்டால் திண்டாட்டம் தானே.

பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையின் கனவுப்பிறைகள், பௌர்ணமி நிலவை நோக்கி செல்வதற்கு பதிலாக தம்பதிகளின் வாழ்க்கை பயணம் அமாவாசையில் முடிந்துவிட்டால் இருட்டு வெளியில் மட்டுமில்லை மனதிற்குள்ளும் வீட்டிற்குள்ளும் தான்.

ஆகாய நிலவின் வாழ்கையென்றால் என்றால் தேயும் வளரும். அது இயற்கையின் நியதி.. ஆனால் வாழ்க்கையென்னும் ஆகாயத்தில் தாம்பத்தியம் என்னும் நிலவுக்கு தேய்வு கிடையாது. வளர்ச்சியொன்றே அதன் நியதி.

ஆனால் இன்றைய நிலை என்ன

தாம்பத்தியம் சிறு குருத்தாக வெளிவரும் பொழுதே

வேரில் வெந்நீரை ஊற்றும்

அவல நிலைமைதானே இன்று

இதுதான் இன்றைய எதார்த்த நிலையென்றாலும.இதற்கு தீர்வு தான் என்ன? நானும் மஹாபெரியவாளிடம் தினமும் என் மனக்குமுறலை கொட்டுவேன் மஹாபெரியவா என்னிடம் சொல்லுவார்

“நீ பிரார்த்தனை மட்டும் பண்ணு. மத்ததை நான் பார்த்துகிறேன்” என்று சொல்லிவிடுவார்.

மஹாபெரியவாளிடம் மனக்குமுறலை கொட்டியது போதாதென்று உங்களிடமும் கொட்டுகிறேன்.

இத்தனை குமுறல்களுக்கும் மணக்காயங்களுக்கும் ஆறுதலான விஷயம் என்னவென்றால் அங்கொன்றும் இங்கேஒன்றுமாக ஆயிரம் காலத்து பயிர் என்னும் வார்த்தைகள் இன்னும் சாகவில்லை என்பதை சாற்றும் விதமாக, நன்றாக புரிந்து கொண்டும், ஒருவுக்கொருவர் விட்டுக்கொடுத்தும் வாழும் தம்பதிகளை பார்க்கும்பொழுது மனக்காயங்களுக்கு மயிலிறகால் மருந்து போடுவது போல் இருக்கிறது.

அப்படிப்பட்ட தாம்பத்ய இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக வாழும் குடும்பம் தான் நம்முடைய நாயகி ஸ்ரீ ஆண்டாளின் குடும்பம். ஸ்ரீ ஆண்டாளின் குரு பக்தியைப்போலவே கணவருக்கும் குரு பக்தி மிகவும் அதிகம். தன் வெற்றியை கூட மனைவிக்காக விட்டுக்கொடுத்து தோல்வியை ஏற்றுக்கொள்ளும் தாம்பத்திய தாரி..

உங்களுக்கு புரியவில்லையா "என்னடா மஹாபெரியவா அற்புதம் என்று சொல்லிவிட்டு தாம்பத்யத்திப்பற்றி இவ்வளவு எழுதுகிறானே என்று ஆச்சர்யப்படுகிறீர்கள். இல்லையா? இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்த தாம்பத்தியத்திற்கும் மஹாபெரியவா அற்புதத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது.

வாருங்கள் இனி நான் ஒவ்வொரு அற்புதங்களையும் காண உங்களை அழைத்துச்செல்கிறேன்.

காலம் என்பது கனிவே இல்லாத

ஒரு ஆசிரியன்

ஸ்ரீ ஆண்டாளின் கணவர் ஒரு கம்பெனியில் வெளிநாட்டில் வெகு நாட்களாக வேலை பார்த்துவருகிறார். அலுவலக வேலை மிகவும் சீராகத்தான் சென்றுகொண்டிருந்தது. நிஜ வாழ்க்கையில் எப்போது சுனாமி வரும் புயல் வீசும் என்று யாருக்கும் தெரியாது. எதுவும் தெரியாமல் இருந்தால்தான் வாழ்க்கை.. நாளை நடப்பது இன்றே தெரிந்துவிட்டால் வாழ்க்கையில் இருக்கும் சுவாரஸ்யமே போய்விடும்.

அலுவலக உத்தியோகம் சீராகத்தான் சென்றுகொண்டிருந்தது. ஒரு நாள் எல்லோருக்கும் அமைதியாகத்தான் விடிந்தது. நம் நாயகியின் குடும்பத்தைத்தவிர. கணவரின் அலுவலகத்தில் மிகப்பெரிய பொறுப்பிலிருக்கும் பதவியொன்று கலியாயிற்று.அந்தபதவிக்கு வேறு ஒரு வெளிநாட்டுக்காரரை நியமித்துவிட்டது அந்த கம்பெனி.

பெரியபதவிக்காரர்கள் தங்கள் பதவிக்கு வந்தவுடன் மிகப்பெரிய சந்தடிகளை உருவாக்குவார்கள்.. தாங்கள் ஒரு அசகாயசூரர் என்பதை காண்பிக்க. இவ்வளவு நாள் நம் கம்பெனிக்காக உழைத்தாராயிற்றே என்று யோசிக்காமல் அந்த அலுவலக பணியாரரை ஏதோ காரணத்தைக்காட்டி வேலையிலிருந்து வெளியேற்றி விடுவார்கள்.. கம்பெனியும் இதைப்பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் அந்த உண்மையான பணியாளரை வேலையை விட்டு எடுத்துவிடும்.

அப்படிப்பட்ட ஒரு கண்ணீர் சிந்தும் நிகழ்வு தன் கணவருக்கு நிகழப்போகிறது என்ற கவலையில் நொடிப்பொழுதும் கழிந்துகொண்டிருந்தது நம்முடைய இந்த அற்புதத்தின் நாயகி ஸ்ரீ ஆண்டாளுக்கு.

இந்த நிலையியல்தான் என்னை தொடர்பு கொண்டார் ஸ்ரீ ஆண்டாள். இன்னும் சொல்லப்போனால் ஸ்ரீ ஆண்டாள்தான் மஹாபெரியவா என்னிடம் அனுப்பிய முதல் பக்தை.. குரு பூஜை அற்புதங்களின் முதல்நாயகி விஷ்ணுமாயா ஸ்ரீ ஆண்டாள் என்னுடைய எழுத்துக்களுக்கும் முதல் விசிறி.

ஸ்ரீ வைஷ்ணவ சம்பரதாயத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.. மறந்தும் புறம் தொழா மாந்தர்கள் என்னும் வீர வைஷ்ணவ குடும்பத்தை சேர்ந்தவர். என்னுடைய பக்தி கட்டுரைகளை படித்துவிட்டு என்னை தொடர்பு கொண்டு தன்னுடைய கவலைகளையெல்லாம் கொட்டினார். நானும் மஹாபெரியவா முன் நின்று ஸ்ரீ ஆண்டாளின் வாழ்க்கைப்பிரச்னைகளுக்கு ஒரு தீர்வு வேண்டுவேன்.

இது தான் என் முதல் அனுபவம். ஒரு சக ஜீவிக்கு மன நிம்மதி வேண்டி வாழ்க்கைப்பிரச்னைகளுக்கு தீர்வு தருமாறு மஹாபெரியவாளிடம் மன்றாடிவேண்டுவது. என் முதல் அனுபவம். என் பிரார்த்தனை பின் வருமாறு.

"பெரியவா, ஸ்ரீ ஆண்டாளுக்கு இந்த சோதனை வேண்டாமே. ஸ்ரீ ஆண்டாளுக்கு மனநிம்மதி கொடுங்கள் பெரியவா. எத்தனை எத்தனை சோதனைகள்.ஒன்று இரண்டு என்றால் சமாளிக்கலாம். ஒரு சாதாரண ஜீவனுக்கு இது மிகவும் அதிகம் பெரியவா. என்னைபப்பொறுத்தவரை நீங்கள் தான் ஸ்ரீமன் நாராயணன் அவதாரம், பரமேஸ்வர அவதாரம்.

நான் ஸ்ரீமன் நாராயணனை பார்ததில்லை.ஆனால் உங்களை தரிசினம் கண்டிருக்கிறேன். அவளுக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் பெரியவா. இவ்வளவு வேண்டியபின் மஹாபெரியவா பதில்.

"அனுக்கிரஹம் பண்ணிட்டேன். அவா கிட்டே சொல்லு." என்று மஹாபெரியவா சொன்னார்

நானும் மன நிம்மதியுடன் ஸ்ரீ ஆண்டாளிடம் சொன்னேன். பெரியவா பாத்துப்பா. கவலை வேண்டாம். ஆனால் ஸ்ரீ ஆண்டாளுக்கு இதுதான் முதல் அனுபவம் என்னைப்போலவே.. ஸ்ரீ ஆண்டாளுக்கு அப்பவும் அரைகுறை நம்பிக்கைதான்.

அது எப்படி ஆபீசில் ஒரு முடிவு எடுத்த பின் யாரால் அதை மாற்றமுடியும்