குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-II- ஸ்ரீ ஆண்டாள்

மஹாபெரியவா நீ உறவுகள் சங்கமிக்கும் ஒரு சாகரம் உன் குடும்பத்தில் உறவுகள் எத்தனையோ உறுப்பினர்கள் எத்தனை பேரோ ஒரு உறுப்பினருக்கு துன்பமென்றால் ஓடோடி வந்து கை கொடுக்கும் தாயல்லவா.நீ தாய்க்கும் ஒரு படி மேலே தாயுமானவன்
குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-II- ஸ்ரீ ஆண்டாள்
கடவுள் பொதுவாக இரண்டு விதமான மனிதர்களை படைகிறான். ஒன்று அவர்களை அவர்களே பார்த்து வாழுந்து கொள்ளும் ரகம். இந்தவகையான மனிதர்களை கட்டிக்கொண்டு வரச்சொன்னால் வெட்டிக்கொண்டு வரும் மனிதர்கள். இரண்டாம் ரக மனிதர்களை கடவுள்தான் பார்த்துக்கொள்ளவேண்டும். இந்த வகை மனிதர்களை கலியுக கொடுமைகளிலிருந்து கடவுள் தான் காப்பாற்றவேண்டும்.
தாம்பத்திய தம்பதிகளில் இருவரில் ஒருவர் ஒரு ரகமாகவும் மற்றோருவர் இன்னொரு ரகமாகவும் இருந்தால் வாழ்க்கை நன்றாக செல்லும். ஆனால் நம்முடைய நாயகி ஸ்ரீ ஆண்டாள் தம்பதியினர் இருவருமே இரண்டம் ரக மனிதர்கள். இருவரையும் படைத்த கடவுள் தான் காப்பற்றவேண்டும்.
சூது வாது தெரியாத
வெளுத்ததெல்லாம் பால் என நினைக்கும்
இரண்டு வளர்ந்த குழந்தைகள்
இந்த நாள் வரை கடவுள்தான் காப்பாற்றிக்கொண்டு வந்தார். இந்த நிலையில் தங்களுடைய மகனுக்கு திருமணம் நடத்திப்பார்க்கவேண்டும் என்ற இயற்கையான ஆசை வந்தது. பெற்றோர் என்ற முறையில் இது அவர்களின் கடமையும் கூட.
மணமகன் நல்ல படிப்பு. வெளிநாட்டுக்குடியுரிமை பெற்ற இந்தியர். கை நிறைய சம்பளம். மணமகனைப்பற்றி அதிகம் சொல்லவேண்டியதில்லை.கடவுளின் குழந்தைகளாக இருக்கும் தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை எப்படி இருக்கும். கடவுள் காப்பாற்றவேண்டிய குழந்தையாகத்தானே இருக்கும்.
இந்த அன்புக்குழந்தைக்கு இல்லத்தரசியாக, கட்டிக்கொண்டு வா என்றால் வெட்டிக்கொண்டு வரும் பெண்ணாக வந்தால் சரியான பொருத்தமாக இருக்கும. அந்தக்குழந்தை . அதாவது கணவனையும் குடும்பத்தையும் சேர்த்து வழிநடத்த வேண்டும். ஆனால் நடந்தது என்ன?.. கலியுகத்தின் மொத்த தீமைகளின் உருவமாக ஒருத்தி மனைவியாக வந்தால் கலியுகம் கலி நடனம் தான் ஆடும். கட்டிக்கொண்டு மட்டும் வரமால் கணவரையே வெட்டிப்போடும் ஒரு கலியுக பூதம்.
இறைவனின் படைப்புகளில் ஏன் இந்த பாரபட்ஷம்
நல்லவர்கள் கெட்டவர்கள்
இதுதான் கர்மா வினையோ
நமெல்லோரும் கை கோர்த்துக்கொண்டு
பிறப்பே இல்லாத இறைவனின்
சாம்ராஜ்ஜியத்தை அடைந்து விடுவோமா
வரப்போகும் நாட்களும் வருடங்களும் எப்படியிருக்குமோ
ஆனால் நடந்தது என்ன? கட்டிக்கொண்டு வா என்றால் வெட்டிக்கொண்டு வரும் ரகம். இந்த ரக மனிதர்களை புத்திசாலிகள், கெட்டிக்கார்கள் என்றால் குடும்பம் கவிழாமல் நடக்கும் என்பதுதான் பொதுவான கணிப்பு..
இந்த கணிப்பு முற்றிலும் உண்மை. கெட்டிக்காரத்தனம் தன் குடும்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் வரை. ஆனால் இந்த கெட்டிக்காரத்தனம் தன் குடும்பத்தை அழித்துவிடும் என்றால் அந்த கடவுளுக்கே இது பொறுக்காதே.
வேலியே பயிரை மேய்ந்துவிட்டால் அந்த வேலியை அடுத்த வினாடியே வெட்டியெறிய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியதே. நம் கடவுளின் தம்பதியினர் ஒரு அமைதியான அழகான குடும்பத்தை எதிர்பார்த்தனர். பொதுவாக மணமகள் தான் தனிக்குடும்பத்திற்க்கு அஸ்திவாரமிடுவர். ஆனால் நம் ஆண்டாள் தம்பதியினர் தாங்களாகவே முன்வந்து தனியாக குடுத்தனம் வைத்துவிட்டனர்.
இதுவரை நான் அறிந்தது.
இனிமேல் வருவது எனக்கு தெரிந்தது
கணவன் கையைப்பிடித்துக்கொண்டு மனைவி போவதோ அல்லது மனைவி கையைப்பிடித்துக்கொண்டு கணவன் போவதோ குடும்ப வாழ்கை இல்லை. கணவன் மனைவி இருவரும் கைகோர்த்துக்கொண்டு இணைத்து செல்வதே குடும்பம் ஆகும்.
ஒரு ரெட்டை மாட்டுவண்டியில் ஒவ்வொரு மாடும் ஒவ்வொரு திசையில் இழுத்தால் வண்டி போகுமா..இன்று ஆண் பெண் இருவருமே இன்று வேலைக்குச்செல்கிறார்கள். காலை வீட்டிலிருந்து அலுவலகம் சென்று வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் வரை தினந்தோறும் மஹாபாரதப்போர் தான்.
மாலையில் வீடு திரும்பும் நிலையில் இருவருக்கும் இருக்கும் ஒரே வழி நிம்மதியை நாடி வீட்டிற்கு செல்வதுதான். நிம்மதி வீட்டில் கிடைக்காத பக்க்ஷத்தில். வீட்டைவிட பிரச்சனைகளே மேல் என்று முடிவு செய்து விட்டால் பிரச்சனைகள் நம்மை எங்கே கொண்டு செல்லும் என்று நமக்கு தெரியும்.
பிரச்சனைகளின் புகலிடம்
குடிகார பார்களும் சூதாட்ட விடுதிகளும் தான்.
வாழ்க்கை பயணமே திசை மாறிப்போய்விடும்.
இந்த அபாயத்தை எண்ணிப்பார்த்து நாம் திருத்தித்திக்கொள்ளாவிட்டால் வாழ்க்கை என்னும் தோனி கரைசேராது. வாழ்க்கை என்னும் தோனியின் இரு துடுப்புக்கள் தான் கணவன் மனைவி.
இரு துடுப்புகளும் சம வேகத்தில் தண்ணீரை எதிர்த்து போராடினால் தான் தோனி வெற்றிகரமாக கரை சேரும்.. இது தான் வாழ்க்கையின் வழிகாட்டி. இந்த வாழ்க்கை இல்லகணமெல்லாம் வாழ விரும்பும் மணமக்களுக்குத்தான்.. எண்ணங்கள் வேறு மாதிரியாக இருந்தால் எந்த இலக்கணமும் புத்தியில் ஏறாது உரைக்காது..
பெரும்பான்மையோருக்கு வாழ்க்கை ஒரு அத்யாயம் ஆனால் ஒரு சிலருக்கு வாழ்க்கை ஒரு பொழுது போக்கு. இந்த இரண்டாம் ரகம் தான் நம்முடைய நாயகி குடும்பத்தின் மருமகள்.
இதில் கொடுமை என்னவென்றால் மருமகளின் தாயும் வாழ்க்கையை ஒரு பொழுதுபோக்காகத்தான் கழித்துக்கொண்டிருந்தவள். இது போல் திருமணம் முடித்துக்கொண்டு பின்பு விவாகரத்துக்கோரி பெரும் பணமும் பறிக்கும் வியாபாரம் தான் இது. இப்படி கூட மனிதர்கள் இருப்பார்களா என்று நீங்கள் நினைக்கிறீர்கள் இல்லையா. நீங்கள் நினைப்பது சரிதான். கண் கூடாகப்பார்க்கிரோமே.
இந்த நிலையில் மணமகன் வாழும் நாட்டிலேயே மணமகன் மற்றும் மணமகனின் தாய் தந்தை இருவரும் தனியாக ஒரு வீட்டைப்பார்த்து மணமகனின் தாய் தந்தை இருவரும் தங்கள் மனங்களில் கனவுகளை சுமந்தபடி தனிக்குடித்தனம் வைத்தனர்.
சில நாட்கள் கழிந்தன. மணமகனின் பெற்றோர் தங்கள் மகனும் மருமகளும் வாழ்க்கை நடத்தும் விதத்தை கண்டுரசிக்க மகன் வீட்டிற்கு சென்றனர். சென்றவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. மருமகளும் தாயும் சிரித்து தொலைக்காட்சியைப்பார்த்து கூத்தடிக்கொண்டிருந்தனர்.
தன்னுடைய மகன் இருவருக்கும் காபி கொண்டுவந்து கொடுத்தார். தன் மகனை ஒரு வீட்டு வேலைக்காரனை போல் நடத்தினார்கள். உண்மையில் வீட்டு வேலையாளை மிகவும் நல்ல முறையில் நடத்தினால் தான் அவர்களும் நமக்கு மரியாதை கொடுப்பார்கள்.
எந்த பெற்றோருக்குத்தான் வயிறு எரியாது. பெற்ற வயிரல்லவா பற்றியெரிந்தது. மணமகனின் பெற்றோர்கள் இந்தக்கொடுமையை தட்டிக்கேட்டனர். உடனே தாயும் மகளும் சேர்ந்து ஒரு நாடகம் நடத்தினார்கள்.. மணமகனின் பெற்றோர்கள் மணமகனுடன் சேர்ந்து தங்களை கொடுமைப்படுத்துகிறார்கள். இனிமேல் இவருடன் சேர்ந்து வாழமுடியாது.ஆகவே விவாகரத்து வேண்டுமென்று கேட்டார்கள்.
தாயும் மகளும் எதிபார்த்தது இதுதானே. தாயும் மகளும் தங்களுடைய பண வேட்டையை தொடங்கிவிட்டார்கள். விவாகரத்து கொடுக்க ஜீவனாம்சமாக சுமார் அரை கோடி வேண்டுமென்றார்கள். பெற்றோர்கள் இருவரும் சேர்ந்து சேர்த்த சேமிப்பு கூட அவ்வளவு தொகை இல்லை. மிகவும் வருத்தப்பட்டார்கள். தாயும் மகளும் சேர்ந்து ஒரு பெரிய சண்டையை குடும்பத்தில் உருவாக்கி மணமகனை அவனுடைய தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்.
இந்த சமயத்தில் தாயும் மகளும் சேர்ந்து தனக்குப்போட்ட நகை, விலையுர்ந்த சாமான்கள் மொத்த பணம் என்று எல்லாவற்றயும் மூட்டையாக கட்டிக்கொண்டு அந்த நாட்டிலிருந்து கிளம்பி இந்தியா வந்துவிட்டார்கள்.
இந்த மாதிரி மனித மிருகங்கள் இந்தியாவிற்கு தேவையா.
இந்தியா தாங்குமா. இந்தியா வந்தவுடன்
அவர்களின் இரண்டாம் கட்ட வேலையை ஆரம்பித்துவிட்டார்கள்.
தாங்கள் ஒரு வழக்கறிஞரை நியமித்து விவாகரத்தும் நோட்டீசும் அனுப்பிவிட்டனர். விவாக ரத்து பாத்திரத்தில் கையெழுத்து போட்டால்தான் மணமகன் மனநிம்மதியுடன் வாழ முடியும். இந்த மனநிம்மதியை கொடுக்க தாயும் மகளும் சேர்ந்து கேட்ட தொகை இந்திய மதிப்பில். சுமார் அரை கோடி..இதுவும் ஒரு பிழைப்பு என்று வாழும் மக்களைப்பற்றி என்ன சொல்வது.
ஒவ்வொருநாளும் மகனுக்கும் மகனைப்பெற்ற பெற்றோர்களுக்கும் மிகவும் பயமுறுவதுபோலே மெயில் அனுப்புவது. அந்த குடும்பமே நிம்மதி இழந்து ஒவ்வொரு நாளும் கழித்துக்கொண்டிருந்தனர். சில சமயம் பிரச்சனைகளை விட அந்த பிரச்சனைகள் கொடுக்கும் பயமே நம் வாழ்க்கையை விழுங்கி விடும். இந்தக்குடும்பத்திற்க்கு ஒவ்வொரு நொடியும் யுகங்களாக கழிந்துகொண்டிருந்தது.
தங்களுடைய கணினியில் மெயில் பார்ப்பதென்றாலே மிகவும் பயந்து பயந்து பார்க்கவேண்டியதாயிருந்தது. சூரிய உதயம் என்றாலே பயந்து குலை நடுங்கும் சந்தர்ப்பம்.
இந்த சூழ்நிலையில் தான் ஸ்ரீ ஆண்டாள் இந்த இனைய தளத்தின் மூலம் என்னை தொடர்பு கொண்டார். நானும் மஹாபெரியவளிடம் இந்த குடும்பத்தின் தீர்க்கமுடியாத பிரச்சனைகளை சமர்ப்பித்து தீர்வு வேண்டினேன். என் பிரார்த்தனையின் சாராம்சம் இதுதான்.
"பெரியவா ஸ்ரீ ஆண்டாள் குடும்பம் நிம்மதி இன்றி தவிக்கிறது.இதற்கு ஒரு தீர்வு இல்லையா பெரியவா? நீங்களும் அமைதி காத்தால் அமைதியின்றி தவிக்கும் ஜீவாத்மாக்களுக்கு அமைதி யார் தருவார்கள்.. நீங்கள் சர்வ ரக்க்ஷகன் தானே. உங்களிடம் பார பக்க்ஷம் கிடையாதே.
ஆண்டாள் குடும்பத்தினர் உங்கள் குழந்தைகள்.. தெரியாமல் இப்படியொரு புதை குழியில் விழுந்துவிட்டனர். அவர்களை புதை குழியிலிருந்து வெளியே கொண்டுவந்து நிம்மதியான வாழ்க்கை கொடுங்கள் பெரியவா.
வழக்கமாக நான் ஒரு பத்து நாட்கள் என் பிரும்ம முகூர்த்த நேர வழிப்பாட்டில் வேண்டிக்கொண்டால் தான் ஒருவருக்கு மஹாபெரியவா குரு பூஜை உத்தரவு வரும். ஆனால் ஆண்டாள் குடும்பத்திற்கு முதல் நாளிலேயே குரு பூஜை உத்தரவு கொடுத்துவிட்டார் மஹாபெரியவா.
மஹாபெரியவா கொடுத்த குரு பூஜை உத்தரவை ஸ்ரீ ஆண்டாளிடம் சொல்லி பூஜை வழிபாட்டுமுறையையும் சொன்னேன். அவர்களும் பக்தி பூர்வமாக செய்வதாக சொன்னார்கள்.சொன்னது மட்டுமல்லாமல் அந்த வார வியாழக்கிழமையிலேயே பூஜை தொடங்கி விட்டார்கள்.
முதல் வாரத்திலேயே ஒரு அற்புதம்.ஆண்டாள் கொத்தாக ஒரு கை அளவு கொண்டை கடலையை தண்ணீரில் ஊறப்போட்டார்கள். சிறிது நேரம் கழித்து அந்த கொண்டைக்கடலையை மலையாக கோர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். மீதி கொண்டக்கடலை இருந்தால் அதை சுண்டலாக செய்து குடும்ப நண்பர்களுக்கும் அண்டை வீட்டார்களுக்கும் கொடுக்கலாம் என்று நினைத்து கொண்டே மாலையை கோர்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
என்ன ஒரு ஆச்சர்யம் தண்ணீரில் ஊறப்போட்ட கொண்டைக்கடலையின் எண்ணிக்கை நூற்றியெட்டு தான் இருந்தது. இது மஹாபெரியவாளின் ஆசிர்வாதமும் திருவிளையாடலும் தான். அப்பொழுதே உறுதியாகி விட்டது, மஹாபெரியவா இந்த தம்பதிகளை புதை குழியிலிருந்து வெளியே கொண்டுவந்துவிடுவார்கள் என்று.
ஒவ்வொரு வாரமாக மஹாபெரியவா குரு பூஜை நடந்துகொண்டிருந்தது.
இதே சமயத்தில் கலியுக தாயிடமிருந்தும் மகளிடமிருந்தும் வரும் மெயில்களின் வீரியம் குறைந்தது ஆண்டாள் தம்பதியரின் மன இறுக்கமும் வெகுவாக குறைந்தது. ஒன்பதாவது வார குருபூஜை முடிந்தவுடன் தன் மருமகளிடமிருந்து ஒரு சமாதான புறா மெயில் மூலமாக வந்தது.
கடைசியாக கிடைத்த தகவல் :
பணம் கேட்டு மெயில் வருவது கூட நின்றுவிட்டது..
கூடப்பிறந்த ரத்த பந்தம் கூட
நம் அபயக்குரலுக்கு செவி
சாய்க்க யோசிக்கும் இந்தக்காலத்தில்
நம் அபயக்குரலுக்கு
யோசிக்காமல் ஓடோடி வந்து
அபயமளிக்கும் கலியுகக்கடவுள் நம் மஹாபெரியவா
அவர் நம்மிடம் என்ன கேட்கிறார் உருகும் பக்தியும் இறை நம்பிக்கையும் தானே
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்