Featured Posts

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்


இறைவனின் படைப்பில் உன்னத படைப்பு மனிதன்

எந்த விஞ்ஞானத்தாலும் உருவாக்க முடியாத ஒரு அற்புதம்

உயிர் இருக்கும் வரை மனிதன் உயிர் போய் விட்டால்

அது ஒரு உடல் அப்படிப்பட்ட அற்புத படைப்பில்

சென்ற உயிரை விஞ்ஞானத்தால் திரும்ப கொண்டு வரமுடியுமா

நிச்சயம் முடியாது ஆனால் பிரும்மத்தின் மறு உருவம் .

மஹாபெரியவா சென்ற உயிரை திரும்ப கொண்டுவந்த அறுபுதம்

இந்த அற்புத சாரல்

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-011

வெற்றி என்பது இமயத்தை தொடுவதல்ல

நம்மை சுற்றி இருப்பவர்களின் இதயத்தை தொடுவது

மஹாபெரியவாளின் கைங்கர்ய சிரோன்மணிகள் எவ்வளவு புண்ணியம் செய்திருந்தால் இந்த கைங்கர்ய பணி அவர்களுக்கு கிடைத்திருக்கும். அவர்களுக்கெல்லாம் மறுபிறவி என்பது இல்லை என்ற நிலை கிடைக்க எத்தனை தவம் செய்திருக்கவேண்டும். அப்படி புண்ணியம் செய்த கைங்கர்ய சிரோன்மணிகளில் நரசிம்மன் என்பவரும் ஒருவர்.

இவர் மனைவி ராஜேஸ்வரி மிகவும் புண்ணியம் செய்த ஒரு ஆத்மா. இல்லயாபின்னே. மனைவி ராஜேஸ்வரியும் காஞ்சி ஸ்ரீ மடத்திற்கு அடிக்கடி வந்து போகும் பக்தர்களில் ஒருவர்.. அப்படி ஒருமுறை மஹாபெரியவா தரிசினம் காண காஞ்சி வந்தார்.

மஹாபெரியவா கண்களை மூடி த்யானத்தில் ஆழ்ந்திருந்தார். மனைவி ராஜேஸ்வரி மடத்தில் மஹாபெரியவா மௌனத்திலிருந்ததை பார்த்துவிட்டு ஒரு மூலையில் கண்களை மூடி த்யானத்தில் ஆழுந்துவிட்டார். இவர் அடிக்கடி மடத்திற்கு வரும் பக்தர்களில் ஒருவர் என்பதாலும் கைங்கர்ய சிரோன்மணி நரசிம்மனின் மனைவி என்பதாலும் யாரும் எவரும் ஒன்றும் சொல்லவில்லை.

சிறுது நேர தியானத்திற்குபிறகு தன்னையும் அறியாமல் மனதிற்குள் ஏதோ செய்தி " உடனே சென்னைக்கு கிளம்பு என்று.இதே கட்டளை திரும்ப திரும்ப மனதிற்குள் சொல்லிக்கொண்டிருந்தது. என்னவென்று புரியாமல் காஞ்சி பஸ் நிலையத்திற்கு வந்து உடனே கிளம்பப்போகும் பஸ்சில் டிக்கெட் வாங்கிக்கொண்டு பஸ்சிற்குள் அமர்ந்தார். காஞ்சயிலிருந்து சென்னை வரை மஹாபெரியவாளை தியானித்துக்கொண்டே பயணம் செய்தார்.

சென்னை வந்து அவசரமாக தன் வீட்டிற்கு விரைந்தாள் ராஜேஸ்வரி. வீட்டிற்கு முன்னால் அக்கம்பக்கத்தாரெல்லாம் கூட்டமாய் நின்றுகொண்டிருந்தார்கள். மாமி ராஜேஸ்வரி பதைபதைப்பாக வண்டியிருந்து இறங்கி விவரம் கேட்ப்பதுற்குள் பக்கத்துக்கு வீட்டுக்காரர் விவரம் சொன்னார். மாமி உங்களுடைய பேரன் பிரவீன் மாடியிலிருந்து கீழே விழுந்து மண்டை உடைந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோயிருக்கா. சீக்கரம் போங்கோ மாமி என்று சொல்லி மாமிகூடவே பக்கத்துவீட்டுக்காரரும் ஆஸ்பத்திரி விரைந்தார்.

ஆஸ்பத்திரி வாசலில் ஒரே கூட்டம். மாமி தன் பெண்ணை கட்டிக்கொண்டு என்பேரனுக்கு என்னடி ஆச்சு.இப்போ எப்படி இருக்கானாம் என்று அழுத கண்களுடன் கேட்டாள். பதிலுக்கு என்ன சொல்வாள் பெண்ணும் அம்மாவை கட்டிக்கொண்டு அழுதாள்..

ஸ்கேன் ரிபோர்டுடன் டாக்டர் வந்தார். டாக்டர் சொன்னது " தலையில் நல்ல அடிபட்டிருக்கு. பிழைப்பது ரொம்ப கஷ்டம்.அப்படி பிழைத்தாலும் அவனால் ஒன்றும் செய்யமுடியாது. அவன் ஒரு போட்டு வைத்த காய்கறி மாதிரிதான் வாழவேண்டும்.

என்ன ஒரு சோதனை உயிர் பிழைப்பது கஷ்டம் பிழைத்தாலும் தினம் தினம் பேரனைப்பார்த்து மனம் புழுங்கி சாக வேண்டியதுதான். என்ன கொடுமையிது.. ராஜேஸ்வரி மாமி தன் மகளிடம் சொன்னார்

"இங்க பார். இந்த டாக்டர்களுக்கெல்லாம் டாக்டர் நம்மோட மஹாபெரியவா தான். நீ கொஞ்சம் என் பேரனை பாத்துக்கோ. நான் காஞ்சிபுரம் போய் மஹாபெரியவாளை பார்த்து பெரியவா பிரசாதம் வாங்கிண்டு வரேன். எல்லாம் சரியாயிடும்."

மகள் கேட்டாள் என்னம்மா இந்த நிலைமையில என்ன விட்டுட்டுப்போரியே. மீண்டும் மாமி மகளுக்கு தைரியம் சொல்லிவிட்டு காஞ்சி விரைந்தார்.

மஹாபெரியவா த்யானத்திலிருந்தார். ஆனால் மாமிக்கு துக்கம் தாங்கவில்லை. அழுதுகொண்டே உச்சகட்ட குரலில் சொன்னார். பெரியவா நாங்கள் என்ன தப்புபண்ணிணோம். இந்த சோதனை வேண்டாம் பெரியவா. நாங்கள் தங்கமாட்டோம். விளையாட்டு போதும் பெரியவா. என் பேரன் எனக்கு வேணும். பழையமாதிரி ஓடியாடி விளையாடனும்.என்ன பண்ணுவேளோ எனக்குதெரியது. பரமேஸ்வரா என்னோட பேரனை பழையமாதிரி எனக்கு திருப்பிகொடுங்கோ.என்று அழுதுகொண்டே கேட்டாள்.

கைங்கர்ய மனுஷாளெலாம் மாமிகிட்டே வந்து "சப்தம் போடாதீங்கோ பெரியவா த்யானத்திலிருக்கார் என்று சொல்லி அமைதியருக்கும்படிசொன்னார்கள்.. மஹாபெரியவா கண்களை திறந்து அவர்களை அமைதியாக இருக்கும்படி சொன்னார். சொன்னதுமட்டுமல்லாமல் விபூதி ,குங்குமம் மற்றும் ஒரு ஆப்பிள் பழத்தையும் கொடுத்தார்கள்.கொடுக்கும்பொழுது பெரியவா சொன்னார் " ஒன்னோட பேரன் பழையமாதிரியே ஒனக்குகிடைப்பான். நன்னாயிரு. என்று சொல்லி மீண்டும் த்யானத்திற்கு திரும்பிவிட்டரர்.

ராஜேஸ்வரிமாமியும் மிகவும் சந்தோஷத்துடன் சென்னை ஆஸ்பத்திரிக்கு திரும்பினாள். I.C.U வாசலில் கூட்டமாக இருந்தது. மகள் அம்மாவை கட்டிக்கொண்டு அழுதாள்."அம்மா டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். பிழைப்பது கஷ்டம். ரத்த குழாய்கள் உடைந்துவிட்டன. பிழைப்பது கஷ்டம் பிழைத்தாலும் உபயோகம் ஒன்றுமில்லை என்று சொல்லி வயித்தெரிச்சல் தீர கத்தி அழுதாள். பெற்ற வயிறு பற்றி எரிந்தது மீண்டும் மீண்டும் அழுதாள்.

யார் ஆறுதல் சொல்லமுடியும்.யாரால் போகும் உயிரை திரும்பக்கொண்டுவரமுடியும். ஆனால் ராஜேஸ்வரி மாமி சொன்னாள். இதோ பாருடி அந்த பரமேஸ்வரன் பிரசாதம் கொடுத்திருக்கார். போன உயிர் கூட திரும்பிவிடும். என் பேரன் பழையமாதிரியே எனக்கு திரும்ப கிடைப்பான்.

பெரியவா சொல்லிருக்கார். நிச்சயம் இது நடக்கும். எப்படியாவது பெரியவா கொடுத்த விபூதியை அவன் நெற்றியிலே வைக்கணும்.டாக்டரிடம் கெஞ்சி கேட்டாவது இந்த விபூதியை வைக்கணும்..

அந்த நேரத்தில் மாமியோட பேரனை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிக்கொண்டு வருகிறான் ஒரு வார்டு பாய். அவனிடம் மாமி கெஞ்சி கேட்டு விபூதி வைக்க அனுமதி கேட்டாள். வார்டுபாயும் ஒரு மனிதன்தானே. மாமியின் கெஞ்சலுக்கு இறங்கி சீக்கரம் வைங்கோ மாமி. டாக்டருக்கு தெரிந்தால் என் வேலை போயிடும்.

நெற்றியில் விபூதி வைக்க இடமே இல்லை.கடைசியில் கன்னத்திலிருந்த .ஒரு சின்ன இடத்தில விபூதியை இட்டுவிட்டாள். வார்டுபாய் மாமியிடம் சொன்னான் "மாமி திரும்பியும் ஸ்கேனுக்கு கொண்டுபோறோம்.கொஞ்சம் தள்ளுங்கோ மாமி என்று ஸ்ட்ரெச்சரை தள்ளிக்கொண்டு போனான்.

ஸ்கேனுக்கு சென்று சிறிது நேரத்திற்க்கெல்லாம் பேரன் பிரவீனை திரும்ப அழைத்துக்கொண்டு I.C.U வில் கொண்டு வந்து சேர்த்தார்கள் . மாமி கேட்டார்கள் வார்டுபாயிடம் ஸ்கேன் ரிப்போர்ட் எப்போவரும். டாக்டர் எப்போ வருவார். கேட்டுக்கொண்டிருக்கும்பொழுதே டாக்டரும் வந்துவிட்டார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு பையனுடைய அம்மா அப்பா யாராவது என் ரூமுக்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டு டாக்டர் அவர் ரூமுக்கு சென்றுவிட்டார். மாமியும் நான் ப்ரவீனுடைய பாட்டி. ஸ்கேன் ரிப்போர்ட் என்ன சொல்லறது என்று கேட்டார்.

டாக்டர் சொன்னார் இது ஒரு விஞ்ஞாயான அதிசயம். முதல் ஸ்கேன் ரிபோர்டுக்கும் இரண்டாவது ஸ்கேன் ரிபோர்டுக்கும் சம்பந்தமே இல்லை. இரண்டாவது ஸ்கேனில் ஒரு பாதிப்பும் தெரியவில்லை,.

டாக்டருக்கும் தெரியவில்லை.

சுற்றி இருப்பவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.

எப்படி புரியும்.

அந்த பரமேஸ்வரன் வைதீஸ்வரன்

அல்லவா வைத்தியம் பார்த்தார்

டாக்டரும் ராஜேஸ்வரிமாமியிடம் சொன்னார் "மாமி ஒங்க பேரன் முன்பு இருந்தது போலவே வந்து விடுவான். எனக்கும் ஒன்றும் புரியவில்லை.ஆனால் நல்லது நடந்து விட்டது. இனிமே தைரியமாக இருக்கலாம். டாக்டர் சென்றுவிட்டார். .

இறைவனின் அற்புதங்களை புராணங்களில் படித்திருக்கிறோம் கேட்டிருக்கிறோம் ஆனால் ஒன்று கவனித்தீர்களா?

நாம் வாழும் காலத்திலேயே நம்முடன் வாழ்ந்து அறிவியலுக்கு அப்பாற்பட்டு யார் புரிதலுக்கும் பதில் கிடைக்காமல் அற்புதங்கள் பல நிகழ்த்தி ஒவ்வொரு தனி மனித வாழ்விலும் விளக்கேற்றியவர் நம் மஹாபெரியவா.

மஹாபெரியவாளின்

அருட்பார்வையும் அற்புதனுபவங்களையும் அனுபவித்தவர்கள்

மஹாபெரியவாளின் சொந்தங்களோ உறவுகளோ இல்லை

முகம் தெரியாத முகவரி தெரியாத ஒரு மானுட உயிர்

நாமும் அப்படித்தானே கூப்பிட்ட

குரலுக்கு செவி சாய்க்க காத்திருக்கும்

அந்த பரமேஸ்வர அவதாரத்தை ஏன் அழைக்கக்கூடாது.

நமக்கு இதிலென்ன கஷ்டம் நமக்கு என்ன தயக்கம்

காசு இல்லை பணம் இல்லை ஆனால் கிடைக்கும் வெகுமதி எண்ணிப்பார்க்கமுடியாத வெளிச்சமான மன நிம்மதியான வாழ்க்கை

நம்முடைய கற