பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா

அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்றான் பாரதத்தில் கண்ணன் இன்றும் அழைத்தவர் குரலுக்கு ஓடோடி வந்து காக்கும் கலியுக கண்ணன் நீயல்லவோ மஹாபெரியவா
பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா
Shri Ravi Venkatraman
நாம் மஹாபெரியவாளை பார்த்தால் அது தரிசனம்
மஹாபெரியவா நம்மை பார்த்தால் அது திருஷ்டி
ரவிக்கு தரிசனமும் கிடைத்திருக்கிறது
மஹாபெரியவாளின் திருஷ்டியும்
ரவிமேல் நன்றாகவே விழுந்திருக்கிறது
ஸ்ரீமான் ரவி வெங்கட்ராமன் திருச்சிராப்பள்ளியை சொந்த ஊராகக்கொண்டவர். இவர் டெல்லியில் உள்ள புகழ் பெற்ற பிட்ஸ் பிலானி என்னும் கல்வி ஸ்தாபனத்தில் கட்டடப்பொறியாளர் படிப்பு படித்தவர். இவருடைய தயார் திருமதி ஜெயலட்சுமி அம்மாள். தந்தை வெங்கட்ராமன்.
ஸ்ரீமான் ரவியினுடைய பொருளாதார கட்டமைப்பு எனக்கு தெரியாது. அவர் குடும்ப விவரங்கள் எனக்கு தெரியாது. அவருடைய மாத வருமானமோ வருட வருமானமோ எனக்குதெரியது. ஆனால் ஒன்று நிச்சயமாக தெரியும்.இவர் இந்த காணொளியில் அவர் பேசிய நேரம் முழுவதும் வாழ்ந்தார் என்று தெரியும். நம்முடன் பகிர்நது கொண்ட மஹாபெரியவா அனுபவத்தை கேட்பவர்களுக்கு ஒரு ஆங்கில த்ரில்லர் படம் பார்த்தது போல் இருக்கும்.
என்னால் முடிந்தவரை அவர் கூறிய அனுபவங்களை என்னுடைய ஒரு விரல் சக்தியினாலும் என்னுடைய கற்பனையையும் கலந்து உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். படம் பார்க்கும் உணர்வு இல்லாவிட்டாலும் இந்தக்காணொளியை நேரம் கடத்தாமல் பார்க்க வேண்டும் என்ற தணியாத தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
இவருடைய குரளைப்பற்றி சொல்லியாக வேண்டும்.இவருடைய குரல் என்னை பொறுத்தவரை எப்படி இருக்கும் தெரியுமா. ஒரு எதார்த்தமும், உண்மையும், இறை நாதமும் கலந்து இருக்கும்.
இவர் பக்த ப்ரஹலாதனைப்போல் ஒரு கர்ப ஸ்ரீமான். ஏன் தெரியுமா. இவர் தாயின் வயிற்றில் கற்பதில் இருக்கும்பொழுதே மஹாபெரியவா அம்பாள் மேருவை தாயின் மடி சீலையை காண்பிக்கச்சொல்லி போட்டாராம். அதனால்தானோ என்னவோ இவரை மஹாபெரியவா எல்லாவிதத்திலும் ஆட்கொண்டார்.
முதல் அனுபவம்
ரவி பொறியாளர் படிப்பு முடிந்ததும் தன்னுடைய சொந்த ஊரான திருச்சிராப்பள்ளிக்கு வந்தார். தன்னுடைய பருவ நாட்களை மனதில் அசை போட்டுக்கொண்டே சில மாதங்கள் உருண்டோடி விட்டன.
ஒரு நாள் ரவி தன்னுடைய பட்டப்படிப்பு சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் சான்றில்தாள்களை வாங்க டெல்லியில் உள்ள பிட்ஸ் பிலானி கல்லூரிக்கு செல்ல கிளம்பினார். இவருடைய கல்லூரிக்கு செல்லும் வழியில் ஒரு சிறிய கிராமத்தில் இறங்கி பேருந்து மாற்ற வேண்டும்.
மாற்ற வேண்டிய பேருந்தும் வந்தது. ரவியும் பேருந்தில் ஏறி தனக்கு சௌகரியமான இருக்கையில் அமர்ந்து கொண்டார். ரவியை தவிர மேலும் மூன்று நடுத்தர வயதைக்கொண்ட மனிதர்களும் ஏறினார்கள். இந்த மூன்று பேரில் ஒருவர் ரவியின் பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டான். இனொருவர் ரவியின் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.மூன்றாவது நபர் ரவியின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
உங்களுக்கு புரிகிறதா? ரவி தப்பிக்கவே முடியாத படி அமர்ந்து கொண்டனர்.
பேருந்து கிளம்பி விட்டது.அந்த மூன்று நபர்களும் மிகவும் இயல்பான முறையில் ரவியிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்கள். ரவியும் அவர்களை நண்பர்கள் போலவே பாவித்து சகஜமாக பேச ஆரம்பித்தார்.
அந்த மூன்று பேரும் ரவியின் அடுத்த நாள் வேலையைப்பற்றியும் எத்தனை மணிக்கு பிட்ஸ் பிலானி கல்லூரிக்கு செல்வார் என்றும் அங்கிருந்து பின்னர் எத்தனை மணிக்கு வேலை முடிந்து கிளம்புவார் என்றும் அனைத்தையும் தெரிந்து கொண்டனர். ரவிக்கு பாவம் அவர்களின் சதித்திட்டம் தெரியாது. அந்த மூவரும் பேருந்தில் இருந்து இறங்கிக்கொண்டனர்.
மறு நாள் ரவி கல்லூரிக்கு சென்று அணைத்து சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டு திருச்சிராப்பள்ளிக்கு கிளம்ப ரயில்நிலையத்திற்கு செல்ல வந்துகொண்டிருந்தார். அந்த மூவரும் ரவியை பார்த்து வணக்கம் தெரிவித்தார்கள்.ரவியும் அவர்களை நண்பர்கள்தானே என்று பதிலுக்கு தன் வணக்கங்களையும் தெரிவித்தார்.
அந்த மூவரும் ரவியை மிகவும் நெருங்கி சற்று கடினமான குரலில் பின் வருமாறு கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தார்கள்.
"நீ திரும்பவும் உன்னுடைய ஊருக்கு செல்ல முடியாது.எங்களுடன் வந்து விடவேண்டும்.நீ உங்கள் வீட்டிற்கு கடிதம் எழுதி விடு. நீ இனிமேல் வீட்டிற்கு வரமாட்டாய் என்றும் என்னை எந்த காரணம் கொண்டும் தேடவோ தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுக்கவோ கூடாது. இனிமேல். என்னை மறந்து விடுங்கள்." என்று எழுதச்சொல்லி கடிதத்தை அவர்களே தபாலில் சேர்த்து விட்டனர். மேலும் அந்த மூன்று பேரும் ரவியை எச்சரிக்கை செய்தார்கள்.ரவி எதாவது புத்திசாலித்தனமாக செய்ய நினைத்தால் அவர்களிடம் உள்ள துப்பாக்கியால் சுட்டுவிடுவதாக மிரட்டினார்கள்.
வழக்கமாக டெல்லியில் இருந்து செல்லும் கடிதம் ஒரு வாரம் கழித்துதான் தமிழ் நாட்டிற்கு வரும். ஆனால் இந்தக்கடிதம் மட்டும் இரண்டு நாட்களில் திருச்சிராப்பள்ளிக்கு வந்து விட்டது.
ரவி எங்கிருந்தோ செய்த பிரார்த்தனை எப்படி மஹாபெரியவாளை சென்றடைந்தது. ரவி எப்படியெல்லாம் பிரார்த்தனை செய்திருப்பார் என்று யூகிக்க முடிகிறதா உங்களால். நம்முடைய உள்ளத்தில் இருந்து வரும் உண்மையான பக்திக்கு எப்படி மஹாபெரியவா அபயக்குரல் கொடுப்பார் என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்.
ரவியின் தயார் அந்த கடிதத்தை மஹாபெரியவாளிடம் கொண்டு சென்றாரா. மஹாபெரியவா அதற்கு என்ன பதில் அளித்தார். இதற்கு நடுவில் மஹாபெரியவா எப்படி இந்திய ராணுவத்தை அங்கு வரவழைத்து ஒரு ஆங்கில படத்திற்கு இணையான சம்பவத்துடன் எப்படி ரவியை காப்பாற்றப்பட்டார் என்பது அதிசயத்திலும் அதிசயம்..
நீங்கள் வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு அனுபவம். நீங்கள் எந்த விதமான ஆபத்தில் இருந்தாலும் மஹாபெரியவா காப்பாற்றுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்தால் மஹாபெரியவா நம் நம்பிக்கை வீணாகாமல் எப்படியாவது வந்து காப்பாற்றி விடுவார்.
காலம் தாழ்த்தாமல் இந்த காணொளியை காணுங்கள்
இரண்டாவது சம்பவம் l
தன்னுடைய படிப்புக்கு ஏற்றாற்போல் ஒரு தகுந்த வேலை வட இந்தியாவில் பதான்கோட் என்ற இடத்தில் அணை கட்டும் கம்பெனியில் வேலை கிடைத்தது. இந்த வேலையில் சேருவதற்காக தன்னுடைய தாயாரையும் மஹாபெரியவாளையும் சேவித்து விட்டு கிளம்பினார் ரவி.
முன்னேற்பாடு எப்படியென்றால் ரவி செல்லும் ரயில் மாலை நான்கு மணிக்கு வழக்கமாக சென்று விடும். ஆகவே கம்பெனியின் ஜீப் வந்து ரவியை கூட்டிக்கொண்டு கம்பெனியின் விடுதியில் தங்கவைக்க வேண்டும். ஆனால் ரவி சென்ற ரயில் மூன்று மணிநேரம் தாமதமாக சென்றதால் இரவாகிவிட்டது. கம்பெனி ஜீப்பும் சென்று விட்டது. என்ன செய்வது. அந்த இடம் ஒரு மலை பிரதேசம். வட இந்தியா அல்லவா குளிர் நடுக்குகிறது. ரவிக்கு தெரிந்த ஒரே தாரக மந்திரம் மஹாபெரியவா சரணம் மட்டும்தான். மஹாபெரியவாளை ஜெபம் செய்து விட்டு அங்கேயே காத்துக்கொண்டிருந்தார்.
குளிர் நடுக்கத்துடன் பயமும் சேர்ந்து ரவியை மேலும் நடுங்க வைத்தது.ஏனென்றால் ஏற்கனவே மூன்று பேரிடம் மாட்டிக்கொண்டு வாழ்க்கையே பாதை மாறி போகத்தெரிந்த வேலையில் மஹாபெரியவா நாமத்தை சொன்னவுடன் ராணுவம் வந்து காப்பாற்றியது. இப்பொழுது திரும்பவும் யாரிடமாவது மாட்டிக்கொண்டால் என்ன செய்வது. இருந்தாலும் ரவிக்கு அப்படியொரு அபார நம்பிக்கை. மஹாபெரியவாளை அழைத்தால் யாராவது வந்து உதவுவார்கள் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தவர் ரவி.
ரவி காத்திருந்து காத்திருந்து இரவு நேரம் ஒன்பதை நெருங்கியது. கடுங்குளிர், யாரையும் தெரியாது, தங்கும் விடுதிகள் கிடையாது.என்னதான் வழி என்று ஒன்றும் தெரியவில்லை.எல்லாமே கையை விட்டு போய்விட்டாலும் நமக்கு தெரிந்த ஓர் அற்புதப்பெயர் இருக்கிறதே.மஹாபெரியவா என்னும் பெயர்தான். ரவி அந்த பெயரை சொல்லி மனதிற்குள் ஜெபம் செய்தார். அதே வேலையில் முன்பின் தெரியாத அந்த ஊரில் யார்வந்து காப்பாற்றினார். எப்படி இரவு உணவு உட்கொண்டார் என்பதெல்லாம் அற்புதத்திலும் அற்புதம். பாருங்கள் இந்த காணொளியை.
அன்று அழைத்த வினாடி பிரகலாதனுக்கு
அபயம் அளித்தார் நரசிங்கபெருமாள்
இன்று ரவிக்கு அழைத்த வினாடி
அபயம் அளித்தார் மஹாபெரியவா
ஈஸ்வரனோ நாராயணனோ
அவதாரம் ஒன்றே
மஹாபெரியவா
https://www.youtube.com/watch?v=kR5I4wKKXOQ
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்