குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-III-ஸ்ரீ ஆண்டாள்

அன்பும் பாசமும் பந்தமும் விலை பேசப்படும் இன்று எந்த பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் உருகும் பக்திக்கும்சிந்தும் கண்ணீர் துளிகளுக்கும் தான் பெற்ற தவ வலிமையை முகம் தெரியாத முகவரி அறியாத எல்லா ஆத்மாக்களின் அழைப்புக்கும் வந்து நின்று துயர் துடைக்கும் கலியுக பரமாத்மா நீயல்லவோ பெரியவா நின் பாதங்களை என் கண்ணீரால் நனைக்கிறேன்.
******
குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-III-ஸ்ரீ ஆண்டாள்
“ஆன்மிகம் என்பது
ஒரு சத்திய நெருப்பு”
மஹாபெரியவா குரு பூஜை செய்வது ஒரு அற்புதமென்றால், மஹாபெரியவா நம் இல்லத்திலும் நம் இதயத்திலும் கோவில்கொள்வது என்பது அற்புதத்திலும் அற்புதம். நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மஹாபெரியவா பதிலளிக்க தொடங்கிவிட்டார்கள் என்றால் நம்முடைய கோரிக்கைகளுக்கும் பிரார்த்தனைகளும் பஞ்சமேயில்லயே..
ஆண்டாளும் ஆண்டாள் குடும்பமும் விதிவிலக்கா என்ன? அப்படி மஹாபெரியவா பதிலளித்த ஒரு சில பிரச்சனைகள் உங்கள் கவனத்திற்கு.
அற்புதம் – 1
ஸ்ரீ ஆண்டாளுக்கு பலவருடங்களாகவே தன்னுடைய நாசியிலிருந்து (மூக்கு) ரத்தம் வந்துகொண்டிருந்தது. எல்லா மருத்துவ பரிசோதனைகளும் செய்தாகிவிட்டது. முடிவாக கல்லீரல் பாதிப்பால் ரத்தம் வடிகிறது என்று முடிவு செய்து அதற்கு மருந்தும் சாப்பிட்டு வந்தார்கள்.ஆனால் பலன் ஒன்றுமில்லை.
இந்த நிலையில் மஹாபெரியவாளை வேண்டிக்கொண்டு குரு பூஜை செய்யத்தொடங்கினார்கள். ஒன்பது வார குரு பூஜை சிறிது சிறிதாக குறைவது போல் ரத்தம் வடிவது சிறிது சிறிதாக குறைந்துகொண்டே வந்தது. கடைசியாக கிடைத்த தகவலின் படி ரத்தம் வாடுவது முற்றிலுமாக நின்றுவிட்டது என்னும் நல்ல சேதியை கேட்டுவிட்டு நான் மஹாபெரியவாளுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொண்டேன்.
உடம்பின் எந்த பாகத்திற்கும் ஒரு பழுதென்றால்
கண்கள் தானாக கலங்கும்
நீங்களும் அப்படித்தானே பெரியவா?
பக்தர்கள் வாழ்வில் ஒரு வலியென்றால்
உங்கள் இதயமும் கண்களும்
கலங்கும்தானே
இல்லாவிட்டால் கூப்பிட்ட குரலுக்கு
இப்படி ஓடோடி வருவீர்களா
அற்புதம் – 2
ஸ்ரீ ஆண்டாளின் கணவருக்கு வலது கை சுவாதீனம் குறைந்துகொண்டே வந்தது. டாக்டர்களிடம் காண்பித்தார். உள்ளுக்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டுக்கொண்டு வந்தார். ஆனால் கை வலி அதிகமாகிக்கொண்டே போனது. என்ன செய்வதென்றே தெரியவில்லை.
இறுதியில் டாக்டர்கள் அறுவை சிகிச்சைக்கு ஆலோசனை சொன்னார்கள்.இந்த நிலையில் ஆண்டாள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கீழ் கண்டவாறு சொன்னார்கள்.
"நீங்கள் மஹாபெரியவாளிடத்தில் பிரும்மமுகூர்த்த பிரார்த்தனை சமயத்தில் என் கணவருக்கு அறுவை சிகிச்சை இல்லாமலேயே கை சுவாதீனம் திரும்பவேணுமென்றும் கை வலியும் குறையவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுங்கள்” என்று என்னிடம் சொன்னார்கள். நானும் மஹாபெரியாவளிடத்தில் வேண்டிக்கொள்கிறேன் என்று சொன்னேன்.
நான் மஹாபெரியவாளிடத்தில் வேண்டிக்கொண்டேன.
"பெரியவா, ஆண்டாளின் கணவருக்கு அறுவை சிகிச்சை இல்லாமலேயே கை சரி பண்ணுங்கோ பெரியவா. ஆண்டாள் குடும்பத்தில் ஒவ்வொரு பிரச்சனைகளாக தீர்த்துக்கொண்டே வருகிறீர்கள். இந்த கை வலி பிரச்சனைக்கும் அறுவை சிகிச்சை இல்லாமலேயே ஒரு தீர்வு கொடுங்கள் பெரியவா" என்று வேண்டிக்கொண்டு
என் பிரார்த்தனையை முடித்துக்கொண்டு மறுநாள் ஆண்டாள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும்போது நான் மஹாபெரியவாளிடத்தில் வேண்டிக்கொண்ட விவரத்தை சொன்னனேன். அவர்களும் மனதிருப்தியுடன் டாக்டரிடம் காண்பித்து பின் விவரம் சொல்வதாக சொன்னார்கள்
ஒரு வாரம் கழித்து தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு கீழ் கண்டவாறு சொன்னார்கள்.
"மருந்து மாத்திரைகள் சாப்பிட்டபின் கைகளில் ரத்த ஓட்டம் சீராகிவருவதாக தெரிவதால் இப்போது அறுவை சிகிச்சை வேண்டாம்.மருந்து மாத்திரைகளை சாப்பிட்டுக்கொண்டு வருமாறு டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். என்று எனக்கு விவரம் சொன்னார்கள்.
நம்முடைய வைத்தியநாதன்
பரமேஸ்வரன் அவதாரம் மஹாபெரியவா
அனுகிரஹமும் விபூதியும்
டாக்டர்களின் மருந்து மாத்திரைகளுக்கெல்லாம் மேல்
இப்போதென்றில்லை இனி எப்போதுமே
அறுவை சிகிச்சை தேவையில்லை
என்பதுதான் நிதர்சன உண்மை
அற்புதம் – 3
ஆண்டாளின் இரு மகன்களில் இளைய மகன் கல்லூரி படிப்பு முடிந்து வேலைக்கு செல்லும் பருவத்திலிருக்கிறான். அவன் வேலை விஷயமாக மஹாபெரியவளிடம் வேண்டிக்கொள்ளச்சொன்னார்கள்.
நானும் வழக்கம்போல் மஹாபெரியவளிடத்தில் வேண்டிக்கொண்டேன்.
"பெரியவா ஆண்டாளின் இரண்டாவது மகனுக்கு வேலை வாங்கிக்கொடுங்கள் பெரியவா. ஆண்டாள் குடும்பத்தில் எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வு கொடுத்து அமைதி இழந்த மனதிற்கு மன அமைதி கொடுத்து எல்லா வழிகளிலும் கூடவே இருந்து வாழ்ந்து வருகிறீர்கள். இந்த இரண்டாவது பையனுக்கும் ஒரு வேலை வாங்கிக்கொடுத்து திருமணமும் முடித்துவைத்து கூடவே இருந்து ஆசியும் அனுகிரஹமும் வழங்குங்கள் பெரியவா."
என் பிரார்த்தனை முடிந்தது. கடைசியாக கிடைத்த தகவல்.
ஒரு கம்பெனியில் இன்டெர்வியூ நடந்து இரண்டாவது இன்டெர்வியூயும் முடிந்து வேலைக்கான ஆர்டரை எதிநோக்கி காத்திருப்பதாக தகவல்.
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். கூடப்பிறந்தவர்கள் கூடப்பிறக்காத அண்ணன் தம்பி மாமா மாமி சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா இவர்கள் எல்லோரும் தனித்தனி குடும்பங்களாக வாழும் இக்காலத்தில் அத்தனை சொந்தங்களுக்கும் இணையான ஒரு சொந்தம். சொந்தம்மட்டுமல்ல சொந்தத்திற்கும் ஒருபடி மேலேபோய்
நம்முடைய கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து
கோரிக்கைகளுக்கு பலன் மட்டுமே கொடுத்து
கவலைகளையும் வலியையும் தான் வாங்கிக்கொண்டு
என்றுமே நம் மனதில் நிறைந்திருக்கும் மஹாபெரியவளை
குரு பூஜை மூலம் சிரம் கரம் தாள் பணிந்து வணங்கவேண்டாமா?
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்