Featured Posts

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-


மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

“நீ உயர்ந்த இடத்தில் இருந்தால்

சமுதாயம் உன்னை மதிக்கும்

நிலைமை கொஞ்சம் இறங்கிப்போனால்

அதே சமுதாயம் உன்னை மிதிக்கும்”

நாம் இதுவரை மஹாபெரியவளின் அற்புதங்கள் பலவற்றயும் படித்தும் கேட்டும் அனுபவித்தோம்.அதில் அற்புதங்கள் பலவாக இருந்தாலும் இப்பொழுது நாம் பார்க்கப்போகும் அற்புதம் இரு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மனத்தாங்கல்கள் புரிதலின்மை இவை எல்லாமும் சேர்ந்து அவர்கள் இருவரும் நடத்திவந்த தொழிலை எவ்வாறு பாதித்தது. அந்தத்தொழில் ஈடுபட்டிருந்த தொழிலார்கள் வாழ்க்கை எப்படி இருட்டானது. என்ற இதய வலி கொடுக்கும் நிகழ்வுகளை பார்த்து நாமும் பாடம் கற்றுக்கொள்ளப்போகிறோம்.

இந்த பாதிக்கப்பட்ட நடப்பை மஹாபெரியவா எப்படி சரி செய்தார் நலிவுற்ற தொழிலை எப்படி சரி செய்யப்பட்டது. தொழிலார்களின் வாழ்வில் எப்படி மீண்டும் வசந்தம் வீசியது என்பதெல்லாம் அற்புதத்திலும் அற்புதம்.

நமக்கு தெரிந்த பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது, இரு சாராரையும் அழைத்து பேசுவது., பஞ்சாயத்து செய்து வைப்பது, கடைசியாக எதுவும் ஒத்துவரவில்லையென்றால் நீதி மன்றத்தின் கதவுகளை தட்டுவதுதான் நம் அறிவுக்கும் சக்திக்கும் எட்டும் விஷயம்.

ஆனால் தன் இரு விழிகளால் பார்த்த பார்வையால் மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரு சுமுகமான தீர்வு கண்ட அற்புதம்தான் இந்த அற்புதசாரல்கள் மூலம் நாம் அனுபவிக்கப்போகிறோம்.

மஹாபெரியவாளின் அற்புத தொடக்கம்:

திருநெல்வேலி நமக்கெல்லாம் அறிமுகமான ஒரு நகரம்.. தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள நகரம்.திருநெல்வேலி. திருநெல்வேலி என்றவுடன் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது திருநெல்வேலி அல்வாவும் நெல்லையப்பர் கோவிலும் தான்.

எப்படி மதுரை ஒரு தூங்கா நகரமோ, சற்றேறக்குறைய திருநெல்வேலியும் அப்படித்தான். திருநெல்வேலி மக்கள் நமக்கு தெரிந்த அல்வாவைவிட இனிமையானவர்கள். நெல்லையப்பர் போலவே மற்றவர்களிடத்தில் அன்பு மாறாத நடப்பும் புனிதமான உறவும் கொண்டவர்கள்..

திருநெல்வேலியை ஒரு அலங்கரிக்கப்பட்ட கிராமம் என்று சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. நான் கிராமம் என்று சொன்னது பொருளாதாரத்தை வைத்தோ பரப்பளவை வைத்தோ சொல்லவில்லை. கிராமத்திற்கே உண்டான மக்களின் எதார்த்தம்,, பழகும் விதம், விகல்பமில்லா உறவுகள் இன்னும் எத்தனையோ.

இப்படிப்பட்ட திருநெல்வேலியில் இரு நண்பர்கள் இணைந்து ஒரு தொழிலை தொடங்கினார்கள்.மிகவும் நல்ல முறையில் நடந்துகொண்டிருந்த தொழிலில் நண்பர்களிடையில் சிறு புரிதலின்மை, மனஸ்தாபம். கலியுக தீமைகள் அவர்களையும் சூழ்ந்து கொண்டது.. நட்பு வட்டாரங்கள் இருவர் மனஸ்தாபங்களையும் எண்ணெய் ஊற்றி எரியவிட்டு வேடிக்கை பார்த்தது. நட்பில் ஆழமான விரிசல், தொழிலை இழுத்துமூடும் அளவிற்கு சென்றுவிட்டது.

இந்த அற்புதத்தின் கதா பாத்திரங்களுக்கு பெயர் சூட்டினால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. . நமக்கு தெரிந்த புராணத்திலிருந்தே இரண்டு பெயர்கள் எடுப்போமே.

இந்த மஹாபெரியவாளின் அற்புத நிகழ்வுக்கு கண்ணன், கம்சன் என்ற நமக்கெல்லாம் புரிந்த இரு கதாபாத்திரங்களையே எடுத்துக்கொள்வோம்.

இனி அற்புதங்களுக்கு செல்வோம்.

கண்ணனும் கம்சனும் இருவரும் இணைந்து ஒரு தொழில் தொடங்கினார்கள். தொழில் மிகவும் நன்றாக சென்றுகொண்டிருந்தது. நல்லதும் கெட்டதும் கலந்த கலவைதானே வாழ்க்கை. இதற்கு எந்த வியபாரமும் தொழிலும் விதிவிலக்கல்ல.

நட்பில் விரிசல் தொழில் முடக்கம் வேலையற்றுப்போன தொழிலார்கள். வாழ்க்கையில் பிரச்சனைகள் என்றாலே நட்பும் சுற்றமும் விலகிவிடும் என்பது நமக்கெல்லாம் தெரிந்த ஒரு ரகசியம். ரகசியம் என்பது தவறான வார்த்தை. நாமெல்லாம் அன்றாடம் காணும் காட்சி.. கம்பெனி இழுத்து மூடப்பட்டது. வியாபாரமில்லா கம்பெனியில் செலவு மட்டும் கூடிக்கொண்டே இருந்தது.

வாழ்க்கையில் பிரச்சனைகள் என்றாலே நடப்பும் சுற்றமும் விலகுமென்று நான் முன்பே சொன்னேன். நண்பனான கம்சனும் விலகினான்.. சுற்றமும் விலகியிருக்க வேண்டும்.

மாட்டிக்கொண்டவர் கண்ணன் மட்டுமே. நல்ல உள்ளம் கொண்டவர். தொழிலில் வந்த பிரச்சனைகளால் தொழிலார்கள் எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார் கண்ணன். தமக்கு தெரிந்த இடத்தில் கடன் பெற்று தொழிலார்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்தார்.

அவர்கள் நட்பின் விரிசல் அதிகமாகப்போயிற்று. சமரசத்துக்கு வழியில்லாமல் போனது. இருவரும் பேசிக்கொள்வது அடியோடு நின்று விட்டது. இறுதியாக இந்த பிரச்சனை நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியது.

கடந்தகால நண்பர்கள் இருவரும் தங்களுக்கென வழக்கறிகஞர்களை நியமித்தார்கள். கண்ணனின் வக்கீலின் கற்பனை பெயர் குமரன் வக்கீல் குமரன் தெய்வ பக்தி மிக்கவர். நம் மஹாபெரியவளின் அத்தியந்த பக்தர்.

தனது கட்சிக்காரர் கண்ணனிடம் வக்கீல் குமரன் ஒரு யோசனை சொன்னார்.

நாம் இருவரும் நாளை காலை காஞ்சிபுரம் சென்று மஹாபெரியவளை தரிசனம் செய்து இந்த வழக்கிற்கு ஆசிர்வாதம் வாங்கி வருவோம் என்று தன யோசனையை சொல்லி முடித்தார் வக்கீல் குமரன்.

கண்ணனுக்கு இதற்கு மனம் ஒப்ப வில்லை. மஹாபெரியவா கடவுளின் அவதாரம். எத்தனையோ பேருக்கு அறிவுரை சொல்லவேண்டும். காஞ்சி ஸ்ரீமடத்திற்கு அன்றாட யோசனைகள் சொல்லி வழி நடத்தவேண்டும்.

எத்தனையோ கோவில்களுக்கு புணருத்தாரணம் செய்ய வேண்டும். இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவில் நம்முடைய கம்பெனி பிரச்சனைகளையும் வழக்கு வியாஜ்ஜியங்களையும் சொல்லி அனுக்கிரஹம் வாங்க வேண்டுமா.இதில் எனக்கு உடன்பாடில்லை என்றார் கண்ணன்.

கண்ணனல்லவா குணமும் அப்படிதான்.

ஆனால் வக்கீல் குமரனின் எண்ணம் வேறு விதமாக இருந்தது. குமரன் கண்ணனிடம் விளக்கினார். நாம் கம்பெனி விவகாரம் முடியவேண்டுமென்றோ இந்த கேஸ் நல்லபடியாக முடியவேண்டுமென்றோ கேட்கப்போவதில்லை. நம் முயற்சிக்கு பெரியவா ஆசிர்வாதம் வேண்டுமென்றுதான் கேட்கப்போகிறோம்.

கண்ணனும் ஓரளவு சமாதானமானார்.

மறு நாள் காலை வக்கீல் குமரன் காருடன் கண்ணனின் வீட்டுக்கு வந்துவிட்டார். கண்ணனும் தயாராக இருந்ததால் அவரும் உடனே கிளம்பிவிட்டார். இருவரும் காருக்குள் ஏறி விட்டனர்.

வக்கீல் குமரன் கேஸ் கட்டுகளை முன் சீட்டில் தன் இருக்கையின் பக்கத்தில் மிகுந்த பயபக்தியுடன் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த கண்ணனுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. வக்கீல் தன வாத திறமையை முன் வைத்து வாதாடினால் புரிந்து கொள்ள முடியும். கடவுள் பக்தியை முன்வைத்து வாதாடினால் நம் கேஸ் வெற்றி பெறுமா என்னும் சந்தேகம்.. இதை வக்கீலிடம் கேட்கவும் கேட்டுவிட்டார்.

வக்கீல் குமரன் சொன்னார் இந்த கேஸ் கட்டுகள் மேல் மஹாபெரியவா பார்வை பட்டாலே போதும் நாம் வெற்றி பெற்றமாதிரிதான். இதை கேட்ட கண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.

இருவரும் காஞ்சி சென்றைந்துவிட்டனர்.. மடத்தில் வழக்கத்திற்கு மாறாக ஒரே கூட்டம். தரிசனம் கிடைப்பது அறிதிலும் அறிதான வாய்ப்பு என்பது நிதர்சனமாக இருவருக்கும் தெரிந்துவிட்டது. ஆனால் வக்கீல் குமரன் தன்னுடைய காரை மஹாபெரியவா வெளியில் வரும் வழியில் நிறுத்திவிட்டார். தன்னுடைய முன் கார் கதவை திறந்து திறந்து மூடினார். கண்ணன் விவரம் கேட்டார்.

வக்கீல் சொன்னார் மஹாபெரியவா தரிசனம் கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை.மஹாபெரியவா கண் பார்வை இந்த கேஸ் கட்டுகள் மேல் பட்டால் போதும். கேஸ் வெற்றி பெற்ற மாதிரிதான்.

கண்ணனும் வக்கீல் குமரனும் காரின் முன் கதவுக்கருகில் நின்றுகொண்டு மஹாபெரியவா வருகைக்கு காத்துக்கொண்டிருந்தார்கள். பக்தர்கள் மிகவும் வேகமாக வெளியே வந்துகொண்டிருப்பது மஹாபெரியவா உடனே வந்து விடுவார் என்று சொல்லாமல் சொல்லிற்று.

வக்கீல் குமரன் காரின் முன் கதவுக்கு அருகில் நின்று கொண்டார். கண்ணனும் அருகில் நின்று கொண்டார்.. மஹாபெரியவா வேகமாக வந்துகொண்டிருந்தார். இவர்கள் அருகில் வந்ததும் சற்று நிதானித்து நின்றார்.. வக்கீலும் தன காரின் முன்கதவை திறந்துவைத்தார். மஹாபெரியவா ஒரு புன்முறுவலுடன் அந்த கேஸ் கட்டுகளை பார்த்துவிட்டு இவர்களையும் பார்த்து ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

வக்கீல் குமரனுக்கு மனநிறைவான தரிசனம். நிம்மதியான மனசு. வழக்கு ஒரு நல்ல முடிவுக்கு வந்துவிட்டதாக உணர்ந்தார். வக்கீல் குமரனும் கண்ணனும் காரில் ஏறிக்கொண்டு திருநெல்வேலி விரைந்தனர்.

பிரயாண அலுப்பில் கண்னன் பின் இருக்கையில் உட்கார்ந்தவுடன் கண்களை மூடி அடுத்த நாள் காலை தான் பணம் கொடுக்கவேண்டிய கடன்கார்களுக்கு பதில் சொல்லியாகவேண்டும். சம்பளம் கொடுக்க வேண்டிய தொழிலார்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். வீட்டிலும் தன்னுடைய மனைவி பொலிவிழந்து கலையிழந்து கவலை தோய்ந்த மனத்தோடு வாசல் கூட தெளிக்கமால் கோலமும் போடாமல் உட்கார்ந்திருப்பார்.

வீட்டுவாசலில் கால் வைக்கும்பொழுதே பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து நிற்கும். எல்லோருக்கும் பொழுது விடிந்து சூரியனை பார்க்கும்பொழுது மனது உற்சாமாகும். ஆனால் கண்ணன் குடும்பத்திற்கு ஒவ்வொரு சூரிய உதயமும் தங்கள் வாழ்நாளில் ஒரு நாளை வாங்கிவிடும் என்பது அனுதின உண்மை.

அவர்களுடைய கார் கண்ணனின் வீடு வாசலுக்கு வந்துவிட்டது. கண் விழித்த கண்ணன் வீட்டுவாசலில் யாரெல்லாம் கடன் வசூலிக்க நிற்பார்களோ எந்த தொழிலாளி சம்பள பாக்கி வசூலிக்க வந்திருப்பார்களோ என்ற கவலையடன் வீட்டை நெருங்கினார்.