Featured Posts

குரு பூஜை அற்புதங்கள்- ஸ்ரீ ஆண்டாள்


குரு பூஜை அற்புதங்கள்- ஸ்ரீ ஆண்டாள்

மஹாபெரியவாளின் மேலும் ஒரு அற்புதம்

“ஒவ்வொருவர் வாயிலும் ஓற்றை நாக்கு

உலகின் வாயினில் மட்டும் இரட்டை நாக்கு

நாக்கு எப்படி வேண்டுமானாலும்

இருந்துவிட்டு போகட்டும்

நாக்கு பிரசவிக்கும் வாக்குகள்

நல்லவையாக இருக்கட்டுமே”

குரு பூஜை அற்புதங்களில் ஒன்பதாவது பாகம் ஸ்ரீ ஆண்டாளின் வாழ்வில் மஹாபெரியவா குரு பூஜைக்கு தன்னுடைய அற்புதங்கள் மூலம் பதிலளித்ததை நம்மெல்லாம் படித்து மஹாபெரியவாளின் விஸ்வரூப தரிசனத்தை பக்தர்கள் வாழ்வில் கண்டு அதிசயத்தது மட்டுமல்லாமல் மஹாபெரியவாளின் இறை அற்புதத்தின் எல்லையை காண முடியாமல் நம் கண்கள் அகல விரிந்த நாட்களும் உண்டு.

இந்த பதிவில் ஸ்ரீ ஆண்டாள் வாழ்வில் நிகழ்ந்த மேலும் ஒரு அற்புதத்தை ஸ்ரீ ஆண்டாள் என்னிடம் பகிர்ந்துகொண்டதை உங்களிடம் நான் இப்பொழுது பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் எல்லோருக்குமே மீண்டும் ஒரு முறை சில வரிகளில் ஸ்ரீ ஆண்டாளையும் அவளுடைய குடும்ப வாழ்க்கையை பற்றியும் தெரிவித்து விட்டு சில நாட்களுக்கு முன் நிகழ்ந்த அற்புதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மனிதர்களில் இரண்டு வகை மனிதர்களை இறைவன் படைக்கிறான். ஒன்று தங்களை தாங்களே பார்த்துக்கொள்ளும் ரகம் இரண்டு கடவுள்தான் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற ரகம். இதில் இரண்டாவது ரகம்தான் ஆண்டாளும் அவளது கணவனும். மிகவும் நல்ல ஆத்மாக்கள்.

இன்னொருவருக்கு ஒரு கஷ்டம் என்றால் மதம் பார்க்காமல் ஜாதி பார்க்காமல் எந்த நாட்டினர் என்று பார்க்காமல் தன்னுடைய வேலைகளைக்கூட தள்ளிப்போட்டுவிட்டு உதவிக்கரம் நீட்டும் ஆத்மாக்கள் கணவனும் மனைவியும்.

இந்த தம்பதிகளுக்கு வந்த துன்பங்கள் எப்படி பட்டவை என்பதை நாமெல்லாம் அறிவோம்.நினைத்தாலே கண்கள் குளமாகின்றனே இன்றும். அந்த துன்பங்களில் இருந்தெல்லாம் மஹாபெரியவா எப்படியெல்லாம் அற்புதங்களை நிகழ்த்தி காப்பாற்றினார் என்பது நாமெல்லாம் அறிந்த ஒன்று.

புதிதாக நம்முடன் வந்து சேர்ந்த ஆத்மாக்களுக்காக ஸ்ரீ ஆண்டாளின் அற்புத அனுபவங்கள் அடங்கிய மூன்று பகுதிகளையும் மீண்டும் ஒரு முறை கடந்த மூன்று வாரங்களாக மறு வெளியீடு செய்து வருகிறோம்..

இனி நம்முடன் தொடர்பில் இல்லாத காலத்தில் மஹாபெரியவா ஆண்டாள் வாழ்க்கையில் நிகழ்த்திய மேலும் ஒரு அற்புதத்தை என்னிடம் ஆண்டாள் தெரிவித்தாள். நம்முடைய வழக்கப்படி மகிழ்ச்சியும் சந்தோஷமும் நாமெல்லோருக்கும் பொது என்ற எழுதப்படாத சட்டம் என்பதால் நான் கண்ட மஹாபெரியவா தரிசனத்தை உங்களுக்கும் காண்பிக்கும் ஒரு முயற்சகிதான் இந்த அற்புதத்தை உங்களுக்காக சமர்ப்பிக்கும் இந்தப்பதிவு.

இரண்டு மாதங்களுக்கு முன் நான் பிரும்ம முகூர்த்த நேர பூஜை முடித்தவுடன் என் கைபேசி என்னை அழைத்தது. அவ்வளவு அகால வேளையில் கைபேசி அழைப்பா என்று நினைக்கவேண்டாம். நானும் அப்படித்தான் முதலில் நினைத்தேன். ஆனால் பின்பு தான் புரிந்தது நம்முடைய அகாலம் அவர்களுக்கு காலம் என்று.

அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பது வெளிநாட்டில். நமக்கு இரவென்றால் அவர்களுக்கு அது பகல். இப்பொழுது புரிகிறதா உங்களுக்கு, கைபேசி அழைப்பை ஏற்று நான் குரல் கொடுத்தேன். மறுமுனையில் வருத்தம் தோய்ந்த குரலில் ஆண்டாள். அழ மாட்டாத குரலில் தன்னுடைய பிரச்னையை சொல்ல ஆரம்பித்தாள்.

"மாமா என்னுடைய மருமகள் பிரச்னையை மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்கள் மூலம் தீர்த்து வைத்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு எங்களுடைய குடும்பத்தில் பயம் அகன்று கவலை கரைந்து நன்றாக தூங்கி எழுந்தோம்.

இப்பொழுது எங்களுக்கு வந்த செய்தி என்னவென்றால் எங்கள் நாட்டு நீதி மன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்து எங்கள் மகனும் அவன் மனைவியும் பிரிந்து வாழவேண்டுமென்று என்ற தீர்ப்புக்கு எதிராக இந்திய நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது என்று கேள்விப்பட்டோம். மேலும் எங்களுக்கு வந்த செய்தி இந்திய மண்ணில் எந்த விமானதளத்திலும் கால் வைத்தால் உடனே கைது செய்யும் உத்திரவை பிறப்பித்திருப்பதாக தெரியவந்தது.

எப்பொழுதுமே நமக்கு கஷ்ட காலம் என்றால் ஒன்று மாற்றி ஒன்று நம் மனதை வறுத்து எடுத்து கொண்டே இருக்கும். இது முற்றலும் உண்மை என்று ஆண்டாளின் வாழக்கையில் இருந்து நமக்கு தெரிகிறது.

இந்த சூழ்நிலையில் ஆண்டாளின் மாமியார் அதாவது கணவரின் வயதான அம்மா இந்தியாவில் நோய்வாய்பட்டிருப்பதாகவும் எந்த நேரத்திலும் எங்கள் இந்திய பயணம் தள்ளிப்போட முடியாத நிலைக்கு வந்துவிடும். அப்பொழுது நீங்கள் மஹாபெரியவாளிடம் எங்களுக்கு நாங்கள் பயந்த மாதிரி எந்த தடையும் வந்து விடக்கூடாது என்று வேண்டிக்கொள்ளுங்கள் மாமா என்று கேட்டுக்கொண்டாள்

அப்படியொரு பயணம் மேற்கொள்ளவேண்டிய சந்தர்ப்பம் வந்தால் உங்களுக்கு தெரியப்படுத்திவிட்டு நாங்கள் இங்கிருந்து கிளம்புகிறோம். விமான பயணத்தின் போதோ அல்லது எந்த விமான நிலயத்திற்குள்ளும் இருந்து உங்களை தொலைபேசியில் அழைக்க முடியாது. கிளம்புவதற்கு முன் உங்களுக்கு தெரியப்படுத்திவிட்டு கிளம்புகிறோம். நீங்கள் மஹாபெரியவாளிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி விடைபெற்றாள்.

நானும் அடுத்த நாள் பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையின் போது மஹாபெரியவளிடம் ஸ்ரீ ஆண்டாளுக்காக பின் வருமாறு வேண்டிக்கொண்டேன்.

"பெரியவா, ஆண்டாளின் எல்லா பிரார்தனைகளுக்கும் நீங்கள் பதில் கொடுத்து நிம்மதியற்ற அவர்கள் வாழ்க்கையை அமைதியான தெளிந்த நிரீரோடை போல மாற்றினீர்கள். அவர்களுடைய மருமகள் கொடுத்த பிரச்சனைகளுக்கும் ஒரு தடுப்புசுவராக இருந்து பயம் கொண்ட வாழ்க்கையை பயமற்ற வாழ்க்கையாக மாற்றினீர்கள்.

இப்பொழுது அவர்களுக்கு இன்னொரு பிரச்சனை பெரியவா. ஆண்டாளின் மாமியார் இந்தியாவில் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறாள். எந்த நேரமும் ஆண்டாளும் அவளது கணவரும் இந்தியா வரவேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

இந்த நிலையில் அவர்களை இந்தியா வந்தால் எந்த விமான நிலையத்திலும் கைது நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்று நீதி மன்றம் அவளுடைய மருமகள் பதிந்த வழக்கிற்கு தீர்ப்பு கொடுத்துள்ளது என்று கேள்விப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள் இந்தியா வந்தால் எந்த வித கஷ்டமும் இல்லாமல் திரும்ப அவர்கள் நாட்டிற்கு செல்ல அவர்களுக்கு அனுக்கிரஹம் செய்யுங்கள் பெரியவா என்று சொல்லி என் பிரார்த்தனையை சமர்பித்தேன்.

மஹாபெரியவா எனக்கு கொடுத்த பதில் இதுதான். ? "நான் பார்த்துக்கிறேண்டா. நிம்மதியா வந்துவிட்டு திரும்புவா என்று சொல்லி தன்னுடைய பதிலை முடித்துக்கொண்டார்.

சரியாக ஒரு இரண்டு வாரத்தில் எனக்கு ஆண்டாளிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. தொலைபேசியின் அழைப்பு விவரம் இதுதான்.

ஆண்டாளின் மாமியார் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாகவும் தயார் தன்னுடைய மகனை பார்க்கவிரும்புவதாகவும் அவர்கள் அன்றே இந்தியா கிளம்ப வேண்டிய கட்டாயம். அவர்கள் எந்தவித கஷ்டமும் இல்லாமல் இந்தியா வந்து செல்லவேண்டும்" என்பது அவர்களுடைய பிரார்த்தனை.நானும் மஹாபெரியவாளிடம் அவர்களுக்காக திரும்பவும் வேண்டிக்கொண்டேன்.

இந்திய நேரப்படி மறுநாள் மதியம் விமானம் சென்னை வந்து சேரவேண்டும். விமானமும் சென்னையில் தரையிறங்கி ஆண்டாளும் என்னிடம் பேசினாள். நான் ஆண்டாளிடம் பேசிய விவரத்தை உங்களுக்கு ஒரு நேர்முக வர்ணனையாக தருகிறேன்.

நேர்முக வர்ணனை

நீங்கள் சென்னை பன்னாட்டு விமானங்கள் பகுதியில் இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். விமானம் நின்றவுடன் எல்லா பயணிகளும் ஒவ்வொருவராக விமான நிலைய அதிகாரிகளிடம் தங்களுடைய பிரயாணத்துக்குரிய தஸ்தாவேஜுகளையும் பாஸ்ப்போர்ட்டுகளையும் அதிகாரிகளிடம் காண்பித்து வெளியே வந்து கொண்டிருந்தனர். ஆண்டாளும் மஹாபெரியவா சரணம் என்று ஜெபித்துக்கொண்டே வரிசையில் நகர்ந்து கொண்டிருந்தாள்.

ஆண்டாள் ஜெபத்துடன் என்னுடைய பிரார்த்தனையும் என் இல்லத்தில் தொடர்ந்து கொண்டிருந்தது.

ஆண்டாள் அதிகாரி முன் வந்து நின்றவுடன் பாஸ்ப்போர்ட்டை பார்த்த அதிகாரி தனியாக வந்து நித்திற்கும்படி சொன்னவுடன் உடல் எல்லாம் வியர்த்து போய் நின்று கொண்டிருந்தாள். மனதில் நினைத்துக்கொண்டிருந்தாள்.

ஆண்டாள் அதிகாரி முன் வந்து நின்றவுடன் பாஸ்ப்போர்ட்டை பார்த்த அதிகாரி தனியாக வந்து நிற்கும்படி சொன்னவுடன் உடல் எல்லாம் வியர்த்து போய் நின்று கொண்டிருந்தாள். மனதில் நினைத்துக்கொண்டிருந்தாள். இவ்வளவு தூரம் மஹாபெரியவளை ஜெபித்தும் இப்படி ஆகிவிட்டதே என்று கவலை ஒரு புறம் விமான நிலையத்தில் இருந்து நேராக நீதி மன்றத்திற்கோ அல்லது சிறைசாலைக்கோ கொண்டு செல்வார்கள். அங்கு தன்னுடைய மாமியார் உடல் நிலை எப்படி இருக்குமோ என்ற கவலை வேறு. ஆண்டாளின் கணவர் இரண்டு பிரயாணிகளுக்கு பிறகு வரிசையில் நின்று வந்து கொண்டிருந்தார்.

இந்தக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த ஆண்டாளின் கணவருக்கு உடம்பெல்லாம் வியர்த்துக்கொட்டியது. எவ்வளவு பூஜை செய்தோம். கடைசியில் இப்படி ஆயெடுத்தே. என்ற கவலையில் வரிசையில் அதிகாரிக்கு முன் வந்து நின்றவுடன் இவரையும் தனியாக நிற்க வைத்து விட்டார் அந்த அதிகாரி. கணவரும் மனைவியும் விரக்தியின் உச்சத்தில் இருந்தனர்.

செலவு பண்ணி பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைத்து இப்படியொரு மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டோம். கடவுளுக்கு கண்ணே இல்லையா. நாம் யாருக்கு என்ன துரோகம் செய்தோம். எல்லோருக்கும் நல்லதுதானே செய்தோம். மஹாபெரியவா குரு பூஜை எல்லாம் பண்ணினோமே. மஹாபெரியவளே நம்மளை கை விட்டுட்டாரே. கணவன் மனைவி இருவருக்கும் உலகமே இருண்டுவிட்டதாக தோன்றியது..

மஹாபெரியவா அற்புதம்

அந்த அதிகாரி கணவன் மனைவி இருவரையும் பார்த்து சிறிது விட்டு சொன்னார். யாருடைய பாஸ்போர்ட் யாரிடம் இருக்கிறது என்பதுகூட தெரியாமல் எப்படி பயணம் செய்கிறீர்களோ. உண்மையில் கணவரின் பாஸ்போர்ட் தன்னிடமும் தன்னுடைய பாஸ்போர்ட் கணவரிடமும் சென்று விட்டது. கவலையில் எல்லாமே மறந்து போய் விட்டது.