Featured Posts

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்


மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

"நான் ஒரு “அமங்கலி” என்று நினைத்த எந்தப்பெண்ணும்

நொடிப்பொழுதில் “சுமங்கலி” ஆகிவிட முடியும்

மஹாபெரியவா அனுகிரஹமிருந்தால்"

-------------- இந்த அற்புதச்சரால் உங்களுக்கு ஒரு ஆத்ம விருந்து -------

நாமெல்லாம் இதுவரை தனிமனிதனொரு வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தந்த பெரியவாளை பார்த்திருக்கிறோம். இந்த அற்புதசாரல் மட்டும் சாரல் அல்ல கொட்டும் மழை. வாருங்கள். இனி அற்புதசாரல்களில் நனைவோம்.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை காஞ்சி ஸ்ரீமடத்தில் சுமங்கலிகளுக்கு சுமங்கலி பூஜைக்கு ஏற்பாடாகியிருந்தது. மடமே விழாக்கோலம் பூண்டிருந்தது..வாழைமர தோரணங்களும் மங்கள வாத்தியங்களும் முழங்கிக்கொண்டிருந்தது.

சுமங்கலி பெண்கள் அனைவரும் முகத்தில் மஞ்சள் பூசிக்கொண்டு தழைய தழைய தொங்கும் தாலியில் குங்குமம் வைத்து தலை நிறைய மல்லிகைபூ சரங்களை வைத்துக்கொண்டு அம்பாள் காமாட்சியாக மடத்தை வலம் வந்துகொண்டிருந்தனர்..

ஆனால் இந்த சுமங்கலி பெண்களுக்கு நடுவில் நெற்றியில் குங்குமம் இல்லாமல் வாடிய முகத்துடன் சுமங்கலிகளை பார்ப்பதை தவிர்த்துக்கொண்டிருந்தார் ஒரு பெண்.

மற்ற சுமங்கலிகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். "என்ன இந்த பெண் சுமங்கலிகள் நாமெல்லாம் இருக்கும் போது இப்படி நெற்றியில் குங்குமம் இல்லாமல் பாழும் நெற்றியாக வந்திருக்கிறாளே என்று நினைத்தனர். அந்த பெண்களில் சிலர் சொன்னார்கள். அவள் குங்குமம் வைக்கமறந்திருப்பாள். சில பெண்கள் குங்குமச்சிமிழைகளை நீட்டினர்.

ஆனால் அந்த பெண் மிகவும் பத பதைத்து ஏதோ பார்க்கக்கூடாத பொருளை பார்த்துவிட்டாற்போல் பின் வாங்கினாள். தன்னுடைய பாழும் நெத்தி மற்றவர்களுக்கு சங்கடத்தை தரவேண்டாமென்று மடத்தின் ஒரு மூலையில் சென்று நின்று கொண்டாள்.

மஹாபெரியவாளும் தன்னுடைய பீடத்தில் இருந்தவாறே இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கவனித்துவிட்டு அந்த பெண்ணை தன் அருகில் வருமாறு அழைத்தார். ஆனால் அந்த பெண் முன்னே வராமல் தயக்கத்துடன் தான் இருந்த இடத்திலேயே நின்றுகொண்டிருந்தாள்.

மற்ற பெண்கள் அவளை பெரியவா அருகில் போகுமாறு அறிவுறுத்தினார்கள். ஆனால் அந்த பெண் அசைவதாகக்காணோம். ஸ்ரீ மட கைங்கர்ய மனுஷாள் கையைப்பிடித்து இழுக்காதகுறையாக மஹாபெரியவா முன் நிறுத்தினார்கள். அந்தப்பெண்ணுக்கு அழகை பீறிட்டுக்கொண்டுவந்தது.

மஹாபெரியவா அந்த பெண்ணிடம் சொன்னார். இங்க சுமங்கலி பூஜை நடந்திருக்கு. இப்படி அமங்கலமா அழறாயே. உனக்கு என்ன மனக்கஷ்டம் என்று கேட்டார்கள்.

அந்தப்பெண்ணும் அழுகையை நிறுத்திவிட்டு பின் வருமாறு சொன்னாள்.

"பெரியவா, அண்டை நாட்டு போரில் என்கணவர் உயிரிழந்து விட்டார். அவருக்கு காரியம் எப்படி செய்வது என்று எனக்கு தெரியவில்லை. உங்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் என்று வந்தேன் என்று சொன்னாள்.

மஹாபெரியவா கண்களை மூடி இரண்டு நிமிடம் த்யானம் செய்துவிட்டு கண்களை திறந்து தன் கை நிறைய குங்குமத்தை எடுத்து அவள் கையில் கொடுத்து நெற்றியில் இட்டுக்கொள்ளச்சொன்னார். அந்த பெண் சற்று தயங்கினாள். மற்ற பெண்கள் எல்லோரும் அவளிடம் சொன்னார்கள் நீ எவ்வளவு அத்ரிஷ்டசாலி மஹாபெரியவளே குங்குமம் கொடுக்கிறார்.நெற்றியில் இட்டுக்கோ என்று சொன்னார்கள்.

மஹாபெரியவாளும் சொன்னார் "உன் கணவர் சாகவில்லை உயிருடன்தான் இருக்கிறார். உன் கணவர் திரும்பி வந்து விடுவார் என்று மஹாபெரியவா சொன்னவுடன் அந்த பெண்ணும் தன் நெற்றியில் மிகவும் அழுத்தமாக குங்குமத்தை இட்டுக்கொண்டாள். தாலியிலும் குங்குமத்தை இட்டார்.

மிகவும் சந்தோஷமாக வீடுதிரும்பினார். சற்று யோசித்து பாருங்கள். உயிரிழந்த கணவன் மீண்டும் உயிர்பெற்று திரும்பினால் அந்த பெண்ணின் மன நிலை எப்படியிருக்கும்.சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்காதா.

பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவாளின்

அற்புதச்சாரல்களுக்கு ஒரு சிகரம்

இந்த சுமங்கலிச்சாரல்

இது அற்புதமா எதார்த்தமா? எங்கோ இந்திய நாட்டின் எல்லையில் உயிரிழந்துவிட்டதாக கருதப்பட்ட ராணுவவீரன் உயிர் இழக்கவில்லை என்று இங்கிருக்கும் மஹாபெரியவாளுக்கு எப்படி தெரியும். இதிலென்ன ஆச்சர்யம். இந்த பிரபஞ்சத்தை படைத்த பரமேஸ்வரனுக்கு இது தெரியாதா. எதுவும் தெரியும்.

அவனன்றி ஓர் அணுவும் அசையாது

சரியாக ஒரே வாரம். இறந்து விட்டதாக கருதப்பட்ட கணவன் அந்த பெண்ணின் வீட்டுவசால் கதவை தட்டுகிறான். அவள் கதவை திறந்தாள். கண்ணெதிரில் கணவன். முகம் வாடி உடம்பிளைத்து கலையிழந்த பொலிவுடன் கணவன் நின்றுகொண்டிருந்தான்.

வாசல் என்றுகூட பார்க்காமல் கணவனை கட்டி அணைத்தாள்.

ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையின் உச்ச கட்ட பாக்கியம் எது. பணமோ பங்களாவோ படகுபோன்ற காரோ இதில் எதுவுமே இல்லை. கழுத்தில் தொங்கும் தாலியும் நெற்றியில் வைக்கும் குங்குமமும் முகம் நிறைய மஞ்சளும் எந்த விசேஷங்களுக்கு போனாலும் சுமங்கலி என்னும் அந்தஸ்தும் தானே. இதற்கு வேண்டியதெல்லாம் கணவன் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக உயிருடன் இருந்தால் போதும்.

இந்த இழந்த பாக்கியம் ஒரு நொடிப்பொழுதில் அந்த பெண்ணுக்கு திரும்ப கிடைத்துவிட்டது. மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்ததால் கணவன் காலி வயிறு கூட கண்ணுக்குதெரியவில்லை. கணவனை குளிக்கவைத்துவிட்டு சாப்பாடு பறிமாறினாள்.

மறு நாள் அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு கணவனும் மனைவியும் காஞ்சி ஸ்ரீ மடத்திற்கு சென்று மஹாபெரியவாளை தரிசனம் காணும் பொருட்டு கிளம்பிவிட்டனர். அங்கிருந்த எல்லோரும் இந்த பெண்மணியை அடையாளம் கண்டுகொண்டனர். கணவன் மனைவி இருவரும் மஹாபெரியவாளின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்கள்.

சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் தம்பதிகளை ஆசிர்வாதம் செய்தனர். மஹாபெரியவாளும் தன்னுடைய இரு கைகளையும் உயர்த்தி மணமக்களை ஆசிர்வாதம் செய்தார்.

மஹாபெரியவாளை அறிய முயற்சிப்பது நம் சக்திக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒரு விஷயம்.

ஆனால் நம்மால் உணரமுடியும்

எப்படியென்றால்

மஹாபெரியவா அந்த பரமேஸ்வரன் அவதாரம்

கூப்பிட்ட குரலுக்கு நான் இருக்கேன் என்று சொல்லி நொடியில் நம்முன் ப்ரசன்னமாவது

பூகம்பத்தை கூட பூவாக மாற்றும் அற்புதம்

அழுகையை கூட சிரிப்பாக மற்றும் விந்தை

அந்த பிரபஞ்சமே நம் கையில் என்னும் நம்பிக்கை

மொத்தத்தில்

அந்த பரமேஸ்வரனே நம் கைபிடித்து

நம் வாழ்க்கையில் நம்முடன் நடக்கும் ஒரு இறை தாத்தா

மஹாபெரியவா

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

/காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square