Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-007


பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-007

அன்று குழந்தை மது மதி

இன்று ஒரு குழந்தைக்கு தாய் மது மதி

காணொளியில் பேசுவது டாக்டர் ரவிச்சந்தரன்

மது மதியின் தந்தை

வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும்

வாடி நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

மேலே குறிப்பிட்ட பாடல் வரிகளையும் டாக்டர் தம்பதிகளின் போராட்டங்களையும் போராடியே வாழ்க்கையை வென்ற மதுமதியையும் நினைத்து பாருங்கள். வாழ்க்கையின் அர்த்தம் விளங்கும்.

டாக்டர் ரவிச்சந்தரன் தஞ்சாவூர் மாவட்டத்தில் கணபதி அக்ராஹாரத்தை பிறந்த இடமாகக்கொண்டவர். டாக்டருக்கு திருமணமாகி திருமண பரிசாக ஒரு பெண் குழந்தையை கடவுள் கொடுத்தார். வாழ்க்கையில் உறவுகள் இரண்டு வகைப்படும். ஒன்று நம்முடைய கர்ம வினைகளுக்கு ஏற்றாற்போல் இறைவன் ஒரு உறவை கொடுத்து போய் வாழ்ந்து விட்டு வா என்று ஆசிர்வதித்து அனுப்புவார்.

இரண்டு சமய சந்தர்ப்பத்தால் அமைவது. இறைவன் கொடுக்கும் உறவு பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் உள்ள உறவு. மற்றும் சகோதர சகோதரி உறவுகள். மற்றும் ரத்த சம்பந்தமான உறவுகள் அணைத்தும் இறைவன் கொடுத்த உறவுகளே.

இறைவன் கொடுத்த உறவு என்பதற்காக கொண்டாடச்சொல்லவில்லை. கேலிக்கூத்தாக்கமால் வாழ்ந்து முடிக்கவேண்டும். ஆனால் மதுவின் தாய் தந்தை இருவருமே இறைவன் கொடுத்த உறவை இன்றும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். தாய் வயிற்றில் சுமந்தது பத்து மாதம் என்றால் மனதளவில் தாய் தந்தை இருவருமே சுமந்தது மீதி நாட்களை. ஒவ்வொரு நாளையும் அந்தக்குழந்தைக்காகவே அர்ப்பணித்து வாழ்ந்தார்கள்.

இந்தக்குழந்தைக்கு என்ன வந்தது எப்படி வந்தது எப்போது வந்தது என்பதை எல்லாம் இந்த காணொளி இணைப்பை கண்டு அதிசியத்தும் ஆச்சரியப்பட்டும் காணுங்கள்.

மஹாபெரியவாளின் அற்புதமஹிமை:

இந்தக்குழந்தையை டாக்டரின் தாய் அதாதாவது குழந்தையின் பாட்டி தினமும் குழந்தையை எடுத்துக்கொண்டு மஹாபெரியவா காலடியில் போட்டுவிடுவார். இவளை இனி நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று விட்டுவிடுவார். மஹாபெரியவாளும் மதுவுக்கு கண்களாலேயே சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். உலகில் உள்ள அத்தனை சிறப்பு மருத்துவர்களிடமும் இந்த மாதிரி குழந்தைக்கு இருக்கிறது. காப்பாற்ற முடியுமான்னு கேட்டார்கள். ஒருவர் விடாமல் கையை விரித்து விட்டார்கள்.

ஒரு முறை மஹாபெரியவாளிடம் கேட்டார்கள். மதுவுக்கு அறுவை சிகிச்சை செய்யச்சொல்கிறார்கள் செய்யலாமா என்று கேட்டவுடன் மஹாபெரியவா அதெல்லாம் வேண்டாம் அவள் சரியாயிடுவாள் என்று சொன்னாராம். இருந்தாலும் மறு நாள் இன்னொரு மருத்துவர் அறுவை சிகிச்சை நாளைக்குள் செய்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்து அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள்.

ஆனால் நடந்தது என்ன?

அறுவை சிகைச்சைக்கு அனுமதித்துவிட்டு மறு நாள் காலையில் மருத்துவத்திற்கே சவால் விடும் விதமாக ஒரு மாற்றம் தெரிந்ததால் அறுவை சிகிச்சையை கை விடவேண்டியதாயிற்று. மருத்துவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மருத்துவ அறிவியலின் படி இது சாத்தியமே இல்லை என்று குழம்பிப்போனார்கள். மஹாபெரியவா சொன்னபடி அறுவை சிகிச்சையை கைவிட்டார்கள்.

நித்ய கண்டம் பூர்ண ஆயிசு

நித்ய கண்டம் பூர்ண ஆயிசு என்று கேளிவிப்பட்டிருக்கிறீர்களா. அந்தமாதிரி வாழ்க்கைதான் மதுவின் வாழ்க்கை. டாக்டர் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும்பொழுதெலாம் தெரு முனையில் தன்னுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு தன்னுடைய வீட்டின் முன் கூட்டம் இருக்கிறதா என்று பார்ப்பாராம். கூட்டம் இல்லையென்றால் இன்று மதுவிற்கு எதுவும் ஆகவில்லை என்று மந்தை தேற்றிக்கொண்டு வீட்டிற்கு வருவாராம். கடவுள் ஒரு குழந்தையையும் கொடுத்து அந்தக்குழந்தையும் இன்றோ நாளையோ என்றிருந்தால் எப்படி இருக்கும் நினைத்துப்பாருங்கள்.

இத்தனைக்கும் உலகமே அசந்து போகும் அளவிற்கு தன்னுடைய இறை அற்புதத்தால் மதுவை காப்பாற்றி இன்று மது ஒரு மென்பொறியாளருக்கு மனைவியாகி ஒரு குழந்தைக்கும் தாயாகி விட்டாள்.


https://www.youtube.com/watch?v=19b8Fc9AUtw

தெளிவும் அறியாத

முடிவும் தெரியாத மதுவின் வாழ்க்கையை

இதுதான் என் முடிவு

இப்படித்தான் மதுவின் வாழ்க்கை என்று

தன்னுடைய இறை அற்புத சக்தியால் அழகாக முடித்துவைத்த

மஹாபெரியவா

பரமேஸ்வர அவதாரம் என்பது நிச்சயம் தானே!!

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square