உங்கள் G.R.மாமா மீண்டும் உங்களிடம்

நீ என் தாயுமானவன்
என் இனிய உறவுகளே,
உங்கள் G.R.மாமா மீண்டும் உங்களிடம்.
கடந்த இருபது நாட்களுக்கும் மேலான நம்முடைய நெருக்கமான உறவில் சிறு தடை ஏற்பட்டுவிட்டது. இது என்னை மனதளவில் மிகவும் பாதித்துவிட்டது. நம்முடைய உறவு என்பது நாம் இருவருமே இறைவனிடம் கேட்டு பெற்றது இல்லை. .இறைவனால் ஒரு இறை காரணத்திற்காக ஏற்படுத்தப்பட்ட உறவு நம் உறவு.. .
என் உடல் நிலை பாதிப்பு காரணமாக கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக நான் படுக்கையிலேயே இருக்க வேண்டிய கட்டாயம்... என்னுடைய அன்றைய நாட்கள் என் மனத்திரையில் ஒரு திரை படமாக ஓடியது..
எனக்கு உடல் நிலை சரியில்லை என்பது மஹாபெரியவளுக்கு தெரியாதா என்ன.? நிச்சயம் தெரிந்திருக்கும்.. அதனால் தான் மருத்துவர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல ஆத்மாவை எனக்காக என் கண்களில் காண்பித்து எனக்குள் ஒரு ஆத்ம உறவை உருவாக்கினார் மஹாபெரியவா. .
அந்த மருத்துவரும் தொழில் முறை மருத்துவத்தை தாண்டி எனக்கு சிகிசை அளிக்க ஆரம்பித்தார். ஆத்ம மருத்துவம் பொய்க்குமா என்ன? சிகிச்சை நடந்தேறியது. நானும் குணமடைந்தேன்.அந்த மருத்துவர் ஒரு இஸ்லாமியர். நான் அந்த மருத்துவரிடம் என் ஆத்ம தெய்வமான மஹாபெரியவாளை பார்த்தேன். சர்வமும் மஹாபெரியவா மயமாக மாறியது..
இன்னும் ஒரு சில நாட்களில் நான் மீண்டும் உங்களில் ஒருவனாக கலந்து விடுவேன். இந்த இருபது நாட்களில் இந்த உலகமும் அண்ட சராசரங்களும் என்னுடைய நலன் நாடி பிரார்த்தனை செய்ததை நான் என்னவென்று சொல்ல. உங்களுக்கும் உங்கள் பிரார்த்தனைகளுக்கும் என் இதயம் நொடிப்பொழுதும் நன்றி சொல்லிக்கொண்டே இருக்கும்.
வரும் திங்கள்கிழமையில் இருந்து (28/01/19) நம்முடைய உறவு மீண்டும் புத்துணர்வு பெற்று புதிய உத்வேகத்துடன் மஹாபெரியவாளின் ஆன்மீக பாதையில் பீடு நடை போடும் என்பதில் சந்தேகமில்லை.
நம் இருவருடைய ஆத்மாக்கள் சந்தித்து கொண்டு மீண்டும் ஒரு புதிய சகாப்தம்படைக்கும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் அன்பையும் ஆதரவையும் பாசத்தையும் காதலையும் என்மீது பொழிந்து கொண்டே இருங்கள். என்னுடைய பலமே நீங்கள்தான்.நம் உறவு நொடிப்பொழுதும் மலர்ந்து கொண்டே இருக்கட்டும். இதய துடிப்பிற்கு இணையான நம் உறவுக்கு நிற்கவும் நேரமுண்டோ.?
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள் நலன் நாடும்
உங்கள்
காயத்ரி ராஜகோபால்