Featured Posts

குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-II- சரண்யமாலா


குரு பூஜை அற்புதங்கள்--பாகம்-II-

சரண்யமாலா

பிரதி திங்கள் தோறும்

“வாழ்க்கைப்பயணத்தில் மேடு பள்ளங்கள்

வருவது சகஜம்

அத்தனை மேடு பள்ளங்களையும் சரி செய்து

வாழ்க்கைப்பயணத்தை

சீராக கொண்டு செல்வது ஒரு பெண்ணே”

நம்முடைய நாயகி சரண்யமாலா அந்த மாதிரி பொறுப்புள்ள ஒரு குடும்பப்பெண் தான். வாழ்க்கை மேட்டிலிருந்தாலும் பள்ளத்திலிருந்தாலும் இரண்டையும் ஒரு போல பாவித்து மிகவும் புத்திசாலித்தனமாக வாழ்க்கை என்னும் பாதையிலே சீராக பயணம் செய்யக்கூடிய பெண் தான் சரண்யமாலா.

வாரம் ஒரு முறை தொலைபேசியில் என்னை அழைத்து மஹாபெரியவா ஏதாவது எனக்கு அறிவுரை சொன்னாரா என்று கேட்பதை வழக்கமாக கொண்டிருந்தாள் நம்முடைய நாயகி சரண்யமாலா.

தன்னையும் தன் வாழ்க்கையையும் மஹாபெரியவாதான் வழிநடத்துகிறார் என்று நம்பும் ஒரு பெண்.. அவளுடைய நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு பிரச்சனைக்கும் மஹாபெரியவா தீர்வு கொடுத்து சரண்யமாலாவின் வாழ்க்கையின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார் மஹாபெரியவா. இன்றும் இருக்கிறார்.

நாம் அன்றாடம் சந்திக்கும் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு கண்ணுமில்லை. இரக்கமுமில்லை. அப்படியொரு எதிர்பாராத பிரச்னையை சரண்யமாலா தன் வாழ்க்கையில் சந்திக்க நேரிட்டது.

எந்தவொரு கணவன் மனைவிக்கும் நியாயமான கனவுகளில் ஒன்று சொந்தமாக ஒரு வீடு. இந்த கனவு சரண்யமாலாவிற்கும் இல்லாமலில்லை. கணவனும் மனைவியும் சேர்ந்து ஆலோசித்து, இது நாள் வரை சேமித்த சேமிப்பை பங்கு சந்தையில் முதலீடு செய்ய முடிவு செய்தனர்.

அவர்களுடைய திட்டம் என்னவென்றால் சில பல மாதங்களுக்கு பிறகு தாங்கள் வாங்கிய பங்குகளின் விலை உயர்ந்த பிறகு மொத்த தொகையும் எடுத்து, தாங்கள் வாங்கும் வீட்டிற்கு முன் பணமாக கட்டி பாக்கி தொகையை மாதாந்திர தவணை முறையில் கட்டி வீட்டை சொந்தமாக்கிக்கொள்ளலாம் என்பது தான்.

வாழ்க்கையில் நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது. நாம் எல்லோருமே அனுபவித்த அனுபவமொழி. சரண்யமாலா ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்து விட்டது. ஆம்

பங்கு சந்தையில் தாங்கள் சேமிப்பு முழுவதையும் முதலீடு செய்த ஒரு சில நாட்களில் தாங்கள் வாங்கிய பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தகித்தது.ஒரு நிலையில் தாங்கள் செய்த முதலீடு முழுவதும் கையை விட்டு போய் விடும் நிலைமை.. முடிவாக முதலீடு முழுவதும் கையை விட்டு போய் விட்டது.

கணவன் மனைவி இருவரும் தங்கள் நிதானத்தை இழந்த நிலை.அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர். எல்லோருக்கும் தீர்க்கமுடியாத பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமானால்

மனதுக்கும் கண்ணுக்கும்

தெரியும் ஒரே கலியுகக்கடவுள்

பரமேஸ்வரன் அவதாரம் மஹாபெரியவா தானே.

ஒரே நம்பிக்கை நட்ஷத்திரமான மஹாபெரியவாளை அணுகி தங்கள் கஷ்டத்திற்கு ஒரு விமோச்சனம் வேண்ட முடிவு செய்தனர். இந்த முடிவின் எதிரொலியாக அடுத்த நாள் காலை என்னை தொலைபேசியில் அழைத்தாள் சரண்யமாலா. நானும் மறுமுனையில் குரல் கொடுத்தேன். சரண்யமாலாவின் குரலில் வழக்கமாக இருக்கும் உற்சாகம் இல்லை. மாறாக குரலில் ஒரு சோகம் இழையோடுவதை என்னால் உணரமுடிந்தது.

நான் சரண்யமாலாவிற்கு தைரியம் கொடுத்தேன். "மஹாபெரியவா இருக்க நீ ஏன் கவலைப்படுகிறாய். எதுவானாலும் தைரியமாக சொல். நான் மஹாபெரியாவளிடம் உனக்காக மன்றாடி ஒரு தீர்வு வேண்டுகிறேன்." என்னுடைய தைரிய சொற்கள் முடிந்தன.

சரண்யமாலா தன்னுடைய குரலை செருமிவிட்டு முதலில் இருந்து ஒன்று விடாமல் சொல்ல ஆரம்பித்தாள். தாங்கள் வீடு வாங்கும் கனவு இதன் விளைவாக தாங்கள் மொத்த சேமிப்பு அனைத்தயும் பங்கு சந்தையில் முதலீடு செய்தது விலை வீழ்ச்சி காரணமாக தாங்கள் முதலீடு அனைத்தும் கரைந்து போனதையும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க சொல்லி முடித்தாள்.

எனக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. இந்த சோகத்தை என்னவென்று சொல்வது. ஒரே இரவில் ரத்தம் வியர்வை சிந்தி சேமித்துவைத்த மொத்த பணமும் முதலை வாய்க்குள் போன பூச்சியை போல காணாமல் போயிற்று.

அமைதியை தேடி

விண்ணுக்கும் செல்லமுடியாது

மண்ணிலும் அமைதி கிடையாது

எனக்கு இந்த இடத்தில் ஒன்று புரியவில்லை.

எல்லாம் கர்ம விதியென்றால் சாராயம் விற்பவன் படுகுக்காரில் போகிறான். கொலைகாரன் கையில் அதிகாரம் இருக்கிறது. பொய் சொல்பவன் பள்ளிக்கூடம் கல்லூரிகள் நடத்துகிறான்.

நல்லவை எல்லாம் கெட்டவர்களுக்கே நடக்கிறது

கெட்டவை எல்லாம் நல்லவர்களுக்கே நடக்கிறது.

இதுதான் கர்மவினையா. இதுதான் கர்மவினையன்றால் நல்லவர்களுக்கு போக்கிடம் இல்லையா? நல்லவர்கள் எங்கே போவார்கள்? நல்லவை எல்லாம் கெட்டவர்களுக்கே என்றால் நாமும் ஏன் கெட்டவர்களாக மாறக்கூடாது என்னும் எண்ணம் உங்களுக்கு எல்லாம் மேலோங்குவது தெரிகிறது. எனக்கும் புரிகிறது.

நானும் அப்படிதான் நினைத்தேன் மஹாபெரியவா எனக்கு அறிவுரை கூறி புரியவைக்கும் வரை.

நான் இந்த "கர்மவினையும் வாழ்க்கையும்" என்னும் தலைப்பில் வரும் வாரங்களில் எனக்கு மஹாபெரியவா புரியவைத்த விஷயங்களையும் இதன் பிறகு மற்ற சிந்தனையாளர்களின் விளக்களங்களையும் மத குரு மார்களின் தெளிவுரைகளையும் இதனுடன் என்னுடைய அபிப்பிராயங்களையும் சேர்த்து மேல கூறிய தலைப்பில் உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பிக்கிறேன் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஒருவனுடைய கஷ்டமும் நஷ்டமும் இன்பமும் மகிழ்ச்சியும் ஒருவனுடைய கர்ம வினை என்பதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம்.

இனி சரண்யமாலாவின் கனவு வீட்டின் நினைவுக்கு வருவோம்.

நான் சரண்யமாலாவிடம் மஹாபெரியவாளிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறேன் என்று சொல்லி தைரியமாக இருக்குமாறு சொன்னேன். சரண்யமாலாவும் இரண்டு நாட்கள் சென்று என்னை தொடர்பு கொள்வதாக சொல்லி தொலைபேசியை துண்டித்தாள்.

நான் மறுநாள் காலை பிரும்ம முகூர்த்த நேரத்தில் சரண்யமாலாவிற்க்காக மஹாபெரியவாளிடம் கீழ்வருமாறு மன்றாடி வேண்டினேன்.

" பெரியவா, நான் பக்தர்களுக்காக அன்றாடம் பிரார்த்தனை செய்கிறேன். பக்தர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நானும் பிரார்த்தனை செய்கிறேன் நீங்களும் என் பிரார்த்தனைகளுக்கு தீர்வு சொல்லிக்கொண்டிருக்கீர்கள். ஒரு நடுத்தர வர்கத்தை சேர்ந்த குடும்பத்திற்கு வீடு என்பது ஒரு நியாயமான கனவுதானே..

இதன் வெளிப்பாடுதான் சரண்யமாலா குடும்பம் பங்கு சந்தையில் முதலீடு செய்து ஏமாந்து போய். மிகவும் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் நீங்களும் மௌனம் சாதித்தால் அந்த குடும்பத்தின் நிலை என்ன. நல்லவர்களுக்கு இந்த நிலமையென்றால் நல்லவர்கள் எங்கே போவார்கள்.அவர்களுக்கு ஒரு நல்ல முடிவும் தீர்வும் கொடுங்கள் பெரியவா." இத்துடன் என் பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.

சிறுது மௌனத்திற்கு பிறகு மஹாபெரியவா கீழ்கண்டவாறு கூறினார்.

"முதலீடு செய்து லாபம் சம்பாதிப்பது தப்பில்லே. ஆனால் பங்கு சந்தையில் முதலீடு செய்வதும் சூதாடுவதும் ஒன்றுதான். எந்த ஒரு லாபத்திலும் அல்லது நம் சம்பாதியத்திலும் நம்முடைய ரத்தமும் வியர்வையும் இருக்கவேண்டும்.

அதுதான் ஆபத்திலும் நம்மை காப்பாற்றும்..இல்லாவிட்டால் இதுதான் கதி. அவர்களை ஹனுமான் பூஜை செய்யச்சொல்லு. அவர்களின் பணம் கணிசமான அளவில் அவர்களை வந்தடையும். ஆனால் சரண்யமாலா மீண்டும் இந்த மாதிரி ஒரு தவறை செய்யக்க்கூடாது என்பதை நீ உறுதி செய்து கொள்" என்று சொல்லி தன் பதிலை முடித்துக்கொண்டார்.

இரண்டு நாட்கள் சென்று சரண்யமாலா என்னை தொடர்பு கொண்டாள்.

பெண் என்பவள் வீட்டில் முடங்கிக்கிடக்கும்

மண் கலமில்லை அவள் தான் வீட்டின் மங்களம்

நான் மஹாபெரியவா சொன்ன அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னேன். ஆனால் திரும்பவும் இந்த பங்கு சந்தை முதலீடு கூடாது என்பதை அழுத்தமாக சொன்னேன்.சரண்யமாலாவும் இனிமேல் இந்த மாதிரி முதலீடுகளை கனவிலும் நினைக்கமாட்டேன்.என்று சொல்லி நிறுத்தினாள். அவள் மேலும் சொன்னது நான் ஹனுமான் பூஜையை மிகவும் உண்மையாகவும் ஆத்மார்தமாகவும் செய்வதாக கூறி தொலை பேசியை ஒரு நிம்மதி பெருமூச்சுடன் துண்டித்தாள்.

குரு பூஜை முடிந்த கையுடன் ஹனுமான் பூஜையையும் தொடங்கிவிட்டார் சரண்யமாலா. என்னதான் பக்தி பூர்வமாக செய்தாலும் நம்முடைய மூளையின் ஒரு ஓரத்தில் எந்த பிரச்னைகளுக்காக பூஜை செய்கிறோமோ அந்த பிரச்சனை நம்மை அழைத்துக்கொண்டே இருக்கும்.சரண்யமாலாவிற்கும் இந்த பங்கு சந்தையின் வீழ்ச்சி அழைத்துக்கொண்டே இருந்தது.

இருப்பினும் தன்னுடைய கவனம் முழுவதும் ஹனுமான் பூஜையிலும் மஹாபெரியவா அனுகிரஹத்திலும் இருந்தது. முதல் வார ப