பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-009
பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-009
பிரதி புதன்கிழமை தோறும்
Experience of Sri Thiruvoittyur Ramaswamy

இந்தியாவே கர்ம பூமி என்றால்
தமிழகம் அதன் கோவில்
கோவிலின் மூலவர்
மஹாபெரியவா
காஞ்சி ஸ்ரீ மடத்தின் கைங்கர்ய மனுஷாளும் சரி மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர்களும் சரி படைக்கடை வெங்கட்ராமன் மாமாவை தெரியாமல் இருக்கமுடியாது. மாமாவைப்போல ஒரு பக்தரை பார்ப்பது என்பது மிகவும் அரிது. கைங்கர்ய மனுஷாளில் ஒரு சிலர் மட்டுமே மஹாபெரியவாளிடம் மிகவும் சுவாதீனமாக இருந்தனர்.அவர்களில் வெங்கட்ராமன் மாமாவும் ஒருவர்.
மாமாவின் பெண்களுக்கு கல்யாணம் முதல் பிரசவம் வரை மஹாபெரியவாளே பார்த்தார். மாமாவிற்கு ராமஸ்வாமி என்ற ஒரு மகனும் பிறந்தார். இந்த ராமஸ்வாமி தன்னுடைய ஒரு வயது முதல் ஸ்ரீ மடத்திலேயே வளர்ந்து விளையாடி வந்தார்.
பரமேஸ்வரன் பக்தன் என்ற தொடர்பயும் மீறி ஒரு தாத்தா பேரன் உறவு முறைதான் அவர்களிடையே நிலவியது. தாத்தா பேரன் உறவுமுறை என்றாலே பார்க்க மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்பதுதானே உண்மை. அப்படி இருந்த இவர்கள் உறவில் நிகழ்ந்த சில சுவாரசியமான நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே. இந்த சுவாரசியமான நிகழ்வுகளுக்கு "பொங்கும் பாசம் " என்று வைத்துக்கொள்ளுவோமா.
பொங்கிய பாசம் -1
ஒருமுறை மஹாபெரியவா திருப்பதி சென்றார். கூடவே குட்டி பையன் ராமசாமியும் சென்றான். அங்கே பரமேஸ்வரன் சென்றால் வெங்கடேஸ்வர பெருமாள் லட்டு தரமாட்டாரா. அப்படி கொடுத்த லட்டு எண்ணிக்கையில் ஐம்பது. அத்தனை லட்டுகளையும் ஒரு கூடையில் போட்டு ஒரு ஆள் எடுத்து வந்தான். நம்முடைய குட்டிப்பையன் ராமசாமிதான் அந்த லட்டுக்கும் காவலாளி. அந்தக்கூடையை சுமந்துகொண்டு வந்தவருக்கும் காவலாளி. ராமசாமியின் கண்கள் லட்டுகளின் மேலயே கவனமாக இருந்தன.
எப்படி எறும்புக்கு இனிப்பின் மேல் நட்டமோ
அப்படி சிறுவன் ராமசாமிக்கு லட்டின் மேல் ஆசை
அதுவும் ஐம்பது லட்டு கொண்ட ஒரு கூடை
லட்டு என்ன ஆயிற்று ராமசாமி என்ன ஆனான்
இந்த காணொளியை கண்டு மகிழுங்கள்
மஹாபெரியவா ராமசாமி பெருமாளை சேவிடா என்று சொல்லியும் லட்டின் மேலயே தன்னுடைய கவனம் முழுவதையும் வைத்திருந்தான். அதனை லட்டுகளையும் கூடையுடன் ராமசாமியே பாதுகாக்கும் அதிர்ஷ்டமும் அடித்தது. ராமசாமி எவ்வளவு லட்டு சாப்பிட்டிருப்பான். அவன் வயிறு என்ன ஆகியிருக்கும் என்று நினைக்கிறீர்களா. நீங்களே இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பொங்கிய பாசம்-2
திருப்பதி மற்றும் பழனி போன்ற இடங்களில் தரிசனத்திற்கு என்று பலவிதமான கட்டணங்கள் இருக்கும்.இந்த கட்டணங்களை வசூல் செய்ய தேவஸ்தானம் என்ற ஒரு அமைப்போ அல்லது இந்து அறநிலையத்துறையோ ஒரு அமைப்பை உருவாகியிருப்பார்கள்.உங்களுக்கு தெரியுமா.குட்டிப்பையன் ராமசாமி ஒரு தேவஸ்தானமாக மாறி மஹாபெரியவாளை தரிசனம் செய்ய வருபவர்களிடம் தரிசன கட்டணமாக தலைக்கு ரூபாய் பத்து வசூல் செய்துகொண்டிருந்தான். மிகவும் நியாயமானவன் எவ்வளவு பெரிய மனிதனுக்கும் இந்த பத்து ரூபாயில் இருந்து விதி விலக்கு கிடையாது.அதுவும் மிகச்சிறந்த நியாய வாதி. தரிசனம் முடிந்த பிறகே பணம் வசூல் செய்வான்.
ஒரு முறை அந்தக்காலத்தில் மிகப்பிரபலமாக இருந்த நடிகரும் பின்னணி பாடகருமான T.R..மஹாலிங்கம் தன்னுடைய குடும்பத்துடன் மஹாபெரியவா தரிசனத்திற்கு வந்தார். இவரிடமும் ரூபாய் பத்து வசூல் செய்தான். உங்களுக்கு ஒன்று தெரியுமா. மஹாலிங்கம் ரூபாய் ஐநூறு கொடுத்தும் வாங்க மறுத்து ரூபாய் பத்து மட்டுமே வசூல் செய்த ஒரு ஆன்மீக நியாய வாதி.
இந்த விஷயம் மஹாபெரியவளுக்கு தெரிய வந்து அதை மஹாபெரியவா இந்த தேவஸ்தான ராமசாமியை எப்படி கையாண்டார். ராமசாமி அதை எப்படி கையாண்டார் என்பதை இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் காதுகளுக்கும் கண்களுக்கும் ஒரு மிகப்பெரிய ஆன்மீக விருந்து. மிகவும் ஆத்மார்த்தமான ஒரு நிகழ்வு.
பொங்கிய பாசம்-3
ராமசாமி என்னும் குட்டி பையன் கொஞ்சம் வளர்ந்து விட்டான். வளர்ந்தபிறகு மஹாபெரியவா கட்டாயப்படுத்தி .I.T.I.படிப்பு படிக்க வைத்து ராயல் என்பீல்ட் கம்பெனியில் வேலை கிடைத்து வேலை பார்த்து வந்தார்.
வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. தீடிரென்று ஒரு நாள் எதோ பிரச்னையின் காரணமாக கம்பெனியில் லாக் அவுட் செய்த்து விட்டார்கள். ராமஸ்வாமி சில நாட்கள் ஓய்வில் இருந்தபடியால் தன்னுடைய வருமானத்திற்கு மஹாபெரியவா படங்களை பிரிண்ட் செய்து விற்றுக்கொண்டிருந்தார்.
முக்கூர் வரதாச்சாரியார் என்பவர் மஹாபெரியவா ஆசிபெற்ற படம் என்று மஹாபெரியவா படத்தை எல்லோருக்கும் கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் நம்ப ராமசாமி ஒரு கேமரா யுக்தியை பயன்படுத்தி மற்ற இரண்டு பெரியவா படங்களையும் இணைத்து பத்தாயிரம் போட்டோ காபி போட்டு ஒரு காபி ஐம்பது பைசா வீதம் விற்றுவிட்டார். பத்தாயிரம் காபியும் தீர்ந்து விட மறுபடியும் ஒரு பத்தாயிரம் காபி பிரிண்ட் போட்டு விற்று விட்டார்.இந்த சமயத்தில் முக்கூர் வரதாச்சாரியாருக்கு விஷயம் தெரிந்து நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டார். விஷயம் மஹாபெரியவா காதுகளுக்கு சென்றது.
ஆரம்பகட்ட விசாரணை முடிந்தபின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த முக்கூர் வரதாச்சாரியார் ராமஸ்வாமி மாமாவின் காலில் விழுந்துகூட மன்னிப்புக்கேட்க தயாராக இருந்தார். எப்படி என்று இந்த காணொளியை பார்த்து அனுபவியுங்கள்.
கோவிலின் மறு பெயர் புனிதம்
புனிதத்தின் மறு பெயர் கோவில்
இவை இரண்டின் மறு பெயர்
மஹாபெரியவா
Video Play Duration: 57 minitues 35 secs
https://www.youtube.com/watch?v=qYgxBTHLHk8
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்