Featured Posts

மீண்டும் என் வாழ்வில் மஹாபெரியவா நாளை முதல் (7/2/19)


மஹாபெரியவா

சிரபுஞ்சியில் கூட மழைக்கு சில நாட்கள் விடுமுறை உண்டு

ஆனால் என் வாழ்வில் நீ நிகழ்த்தும் அற்புதங்களுக்கு

விடுமுறையும் இல்லை எல்லையும் இல்லை

நிகழ்த்தும் அத்தனை அற்புதங்களும் எல்லைகளை கடந்தது

அறிவியலை தாண்டியது அத்தனையும் அற்புதம் நீயே ஒரு அற்புதம் நீ

நிகழ்த்தும் அற்புதங்கள் எல்லா பரிமாணங்களையும் கடந்தது

மொத்த அற்புதங்களின் உருவம் நீயல்லவா

சிறு குறிப்பு: சிரபுஞ்சி என்பது இந்தியாவின் மேகாலயா பகுதியில் இருக்கும் ஒரு பகுதி.உலகத்தில் ஒரு வருடத்தில் மிகவும் அதிக அளவில் மழை பதிவாகும் ஓர் பகுதியாகும். உலகில் மிகவும் எப்பொழுதும் ஈரமான தரையை கொண்டது சிரபுஞ்சி

சிரபுஞ்சியில் ஒரு பகுதி

சிரபுஞ்சியில் மற்றுமொரு பகுதி

எனது நெஞ்சிற்கினிய உறவுகளே,

கடந்த ஒரு வார காலமாக நம்முடைய பதிவுகள் திங்களில் தொடங்கி புதன் வரை தடையின்றி வந்து கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் எல்லோரும் என்னிடம் கேட்கும் கேள்வி "என் வாழ்வில் மஹாபெரியவா தொடர் " தொடர்ந்து எப்பொழுது வரும் என்பதுதான்.

இது சம்பந்தமாக நான் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புவது

நாளை முதல் (7/2/19) என் வாழ்வில் மஹாபெரியவா தொடர் மீண்டும் வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.கடந்த பத்து நாட்களாக மஹாபெரியவா என் வாழ்வில் மிகவம் அதிசியக்கத்தக்க அற்புதங்களை நிகழ்த்தி கொண்டு இருக்கிறார். இந்த அற்புதங்களை எல்லாம் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன். சில வாரங்களுக்கு பிறகு மஹாபெரியவா என்னை சமையலில் நள மஹாராஜாவாக மாற்றிய அற்புதங்களை பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.

வழக்கம் போல் மஹாபெரியவா அற்புதங்களை படித்து அதிசயித்து மகிழுங்கள்.உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் நலன் நாடும்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square