குரு பூஜை அற்புதங்கள்--பாகம்-III- சரண்யமாலா
குரு பூஜை அற்புதங்கள்--பாகம்-III-சரண்யமாலா
பிரதி திங்கள் தோறும்

“சுய நலத்திற்க்காக உழைத்தால்
நீ மட்டுமே உழைக்கவேண்டும்
பொது நலத்திற்க்காக உழைத்தால்
உலகமே உன்னுடன் சேர்ந்து உழைக்கும்”
நாம் கடந்த இரண்டு வாரங்களாக சரண்யமாலாவின் மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்களை படித்து அனுபவித்து வருகிறோம். சரண்யமாலாவின் இருபது வருட வயிற்று கோளாறு பிரச்சனைகள் பெரும்பாலும் ஒரு இரவில் சரியான அற்புதம், வீடு வாங்கும் கனவில் தங்கள் வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் பங்கு சந்தையில் முதலீடு செய்து மொத்த பணத்தையும் இழக்கும் தறுவாயில் எப்படி மஹாபெரியவா குரு பூஜை மூலம் திரும்ப கிடைக்கச்செய்தார் என்பது நாம் எல்லோரும் படித்து புரிந்து அனுபவிதோம்.
புராணங்களில் பார்த்த கடவுள்கள், புத்தகத்திலும் மற்றவர் அனுபவத்திலும் கேட்டு
தெரிந்த கொண்ட அற்புதங்கள் எல்லாமேஒரு பெயர்ச்சொல்லில் அடங்கும்
மஹாபெரியவா
நம்முடைய மூன்று மஹாபெரியவா குரு பூஜை நாயகிகள் விஷ்ணுமாயா, சூர்யகாயத்ரி மற்றும் சரண்யமாலா இவர்கள் எல்லோரும் மற்றவர்களைப்போல் படித்தும் பார்த்தும் கேட்டும் மஹாபெரியவாளின் அற்புதங்களை அறிந்தவர்கள் மஹாபெரியவா குரு பூஜையை பற்றி தெரியும் வரை.
மஹாபெரியவா உத்தரவு கிடைத்து ஒன்பது வார குரு பூஜை செய்து பூஜையின் அற்புதங்களை அனுபவித்த பிறகுr தெரிந்து கொண்டார்கள் கடவுள் எங்கோ இருப்பதாக தேடிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் உண்மையில் இந்த பிரபஞ்சத்தையும்
உயிரினங்களையும் படைத்த
பரமேஸ்வரன் அவதாரம், பாற்கடல் நாராயணன்
நம்முடன் தான் இருக்கிறார்கள்
மஹாபெரியவா ரூபத்தில்
இந்த குரு பூஜை செய்து தங்களுடைய வாழ்க்கை பிரச்சனைகள் தீர்ந்தது மட்டுமல்லாமல் நான் இருக்கிறேன் என்று மூன்று நாயகிகளுக்கும் மஹாபெரியவா புரிய வைத்த விதம் அலாதி அற்புதம். இதைச்சொல்லி புரியவைக்க முடியாது.அனுபவித்தால்தான் புரியும். இந்த அற்புதங்களை வரும் ஏதோ ஒரு சனிக்கிழமை அல்லது ஞாற்றுக்கிழமைகளில் தனியாக எழுதுகிறேன்.
இனி மூன்றாவது அற்புதத்திற்கு வருவோம்!
சரண்யமாலாவின் வயிற்றுக்கோளாறு பிரச்சனைகளை நாம் எல்லோரும் பாகம் ஒன்றில் அறிந்துகொண்டோம். மஹாபெரியவா எப்படி அந்த இருபது வருட பிரச்சனைக்கு குரு பூஜை மூலம் தீர்வு கொடுத்தார் என்பதை அனுபவித்தோம். தொன்னூறு சதவீதம் சரியாகி மீதம் பத்து சதவீதம் போகப்போக சரியாகிவிடும் என்று சரண்யமாலாவும் நிம்மதியாக இருந்தாள்.
ஆனால் இந்த வயிற்று கோளாறு பிரச்சனை இருபது வருடமாக தன்னை பாடாய் படுத்தின நாட்கள். அவளுக்கு இன்று நினைத்தாலும் சிம்ம சொப்பனம் தான். இதை கருத்தில் கொண்டு மஹாபெரியவாளிடம் பிரார்த்தனை மூலம் முறையிட தீர்மானித்தாள். அவளுக்கு பிரார்த்தனை செய்யும் முறைப்பற்றி நான் ஏற்கனவே கற்றுக்கொடுத்திருக்கிறேன்.
சரண்யமாலா மஹாபெரியவா குரு பூஜை தொடர்ந்து செய்வது பற்றி நான் முன்பே சொல்லியிருந்தேன். ஒன்பது வாரத்தையும் கடந்து செய்து கொண்டிருந்தாள். ஐந்து வார பூஜை முடித்து ஆறாவது வார பூஜை இந்த மாதம் பதினேழாம் தேதி வியாழக்கிழமை செய்யவேண்டும்.. சரண்யமாலா பதினாறாம் தேதி புதன் கிழமை மாலை நான் சொல்லிக்கொடுத்த முறையில் மஹாபெரியவா முன் உட்கார்ந்து நெக்குருக பிரார்த்தனை செய்தாள். பிரார்த்தனை விவரம் பின் வருமாறு.
"பெரியவா, என் இருபது வருட காலமாக மருத்துவர்களால் கூட தீர்க்க முடியாத வயிற்று கோளாறு பிரச்சனைக்கு குரு பூஜை மூலம் தீர்வு கொடுத்தீர்கள். மிக்க நன்றி பெரியவா. இன்னும் பத்து சதவீதம் பிரச்சனை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் என்னுடைய கடந்தகால அனுபவத்தை நினைத்தால் மிகவும் பயமாக இருக்கு பெரியவா. மீதம் பத்து சதவீதம் கோளாறையும் சரி செய்து விட்டால் நான் மன நிம்மதியுடன் என் அன்றாட வாழ்க்கையில் கவனம் செலுத்துவேன். கொஞ்சம் என்மேல் கருணை காண்பித்து மொத்தமாக குணப்படுத்துங்கள் பெரியவா " என்று சொல்லி தன் பிரார்த்தனையை முடித்துக்கொண்டாள்.
ஒரு நிம்மதி பெருமூச்சுடன் எழுந்து விட்டாள் சரண்யமாலா. அப்படியொரு நம்பிக்கை மஹாபெரியவா மேலே. சொன்னதை கண்டிப்பாக கேட்டுக்கொண்டிருக்கிறார். நிச்சயம் ஆவண செய்வார் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை.
நம்முடைய மஹாபெரியவா நம்பிக்கை என்பது
தாயின் மடியில் நம்பிக்கையுடன்
படுத்து உறங்கும் குழந்தைக்கு
இணையான நம்பிக்கை.
இந்த நம்பிக்கை எது போலெ என்றல் பிறந்த குழந்தை தாயின் மடியில் தன்னை மறந்து தூங்குவது எதனால் என்றால். தாயின் மீது அப்படியொரு நம்பிக்கை. மஹாபெரியவா மேல் நாம் வைக்கும் நம்பிக்கைக்கும் குழந்தை தாயின் மீது வைக்கும் நம்பிக்கைக்கும் கொஞ்சம் கூட வித்யாசமமில்லை. மஹாபெரியவாளும் ஒரு தாயின் ஸ்தானத்திலிருந்துதான் எல்லாருக்கும் அருள் பாலிக்கிறார்.
பிரார்த்தனை முடிந்தவுடன் இரவு சாப்பிட்டுவிட்டு படுக்கச்சென்றுவிட்டாள் சரண்யமாலா. அன்று பதினாறாம் தேதி இரவு மஹாபெரியவா சரண்யமாலாவிற்கு சொப்பனத்தில் தரிசனம் கொடுத்து அருள் பாலித்தார்.
சரண்யமாலாவின் கையில் எதையோ கொடுத்து சாப்பிடச்சொன்னார். சரண்யமாலாவும் சாப்பிட்டுவிட்டாள். மஹாபெரியவா சொன்னது" இன்னமே இந்த வயிற்று தொந்தரவு உனக்கு வராது " என்று சொல்லி மறைந்து விட்டார். மறுநாளில் இருந்து சரண்யமாலாவின் வயிற்றுக்கோளாறு போன இடம் தெரியவில்லை.
இதை என்னவென்று சொல்ல
அற்புதமென்று சொல்லவா
ஒரு தாயின் சேயின் உறவு என்று சொல்லவா
குழந்தை அழுதால் தாய் துடித்துப்போவாள்
இந்த தாய் சேய் உறவிற்கு தூரம் தெரியாது
காற்று மழை தெரியாது
தகிக்கும் வெய்யில் தெரியாது
காலில் குத்தும் முள்ளின் வலி தெரியாது
ஐம் புலன்களும் அடங்கி
குழந்தை அழுகுரல் மட்டும் தாயின் காதில் ஒலிக்கும்
ஓடிப்போய் குழந்தயை இருக்க அணைத்து
குழந்தையின் அழு குரல் ஓயும் வரை தாய் ஓயமாட்டாள்
மஹாபெரியவாளின் இந்த தாய் பாசமும் அப்படித்தான்
பக்தர்களின் கண்கள் கலங்கினால் தானும் கலங்கிப்போய்விடுவார்
இவருக்கும் தூரம் காலம் ஒரு பொருட்டே அல்ல
இந்த தாய்ப்பாசத்திற்கு
மஹாபெரியவா கேட்பதெல்லாம் ஒன்று தானே
நம்முடைய உருகும் பக்திதானே
எப்படி தாய் குழந்தை உறவு எவ்வளவு புனிதமோ
அவ்வளவு புனிதம் மஹாபெரியவா பக்தனின் உறவு
இந்த உறவை போற்றுவோம் கொண்டாடுவோம்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்