Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா -கனகதாரா லட்சுமி நாராயணன்


குருவே சரணம் குரு பாதமே சரணம்

இறை அற்புதங்கள் என்றுமே அழியாதவை

யுகத்திற்கு யுகம் காலத்திற்கு காலம் அவை

ஒரு நிகழ்வின் மூலம் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்

அன்று ஆதி சங்கரர் கனகதாரா சோஸ்திரத்தால்

தங்கமழை கொட்டவைத்தார்

இன்று சங்கரரின் அவதாரம் மஹாபெரியவா

நம் கண்முன்னே பணக் கட்டுகளை

மழையாக கொட்டவைத்தார்

உருகும் பக்தியுடன் நாம் சொல்லும்

கனகதாரா சோஸ்திரம்

அன்றும் இன்றும் என்றும்

தங்க மழையை கொட்டும்

இது சத்தியம்

வறுமையின் வெளிப்பாடு கண்களில் கண்ணீர்

மனதில் வெறுமை எண்ணங்களில் கலக்கம்

செயல்களில் தடுமாற்றம்

இறைவன் இருக்கிறானா இல்லையா என்ற ஒரு சந்தேகம்

இவைகள் எல்லாமே வறுமையின் வெளிப்பாடுதான்

ஒரு வாழும் உத்தாரணம் தான் இந்த பக்தர்

லட்சுமி நாராயணன் மாமா

&&&&&

பெயரில் மட்டுமே லட்சுமி. ஆனால் நிஜ வாழ்க்கையில் இவர் வாழ்க்கையில் லக்ஷ்மியின் சகோதரியின் விளையாட்டு ஏகம். லக்ஷ்மியின் சகோதரி பெயர் நான் சொல்லவில்லை.நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

மாமா தன்னுடைய வறுமையை வார்த்தைகளால் வரிகளால் சொல்லும்பொழுது யாருமே அழாமல் இருக்கமுடியாது அப்படியொரு உச்சகட்ட வறுமை.நாம் யாருடைய வீட்டிற்கு சென்றாலும் அவர்கள் நம்மை கேப்பது என்ன. நீங்கள் நலமா? இதுதானே?.

ஆனால் மாமா எதிர்பார்த்தது நீங்கள் ஏதாவது சாப்பிடுகிறீர்களா.இந்த உபசரிப்பைத்தான் மாமா எதிர்பார்த்தார்.நிச்சயமாக மாமா கேட்டிடிருக்க வாய்ப்பில்லை.யாருக்குமே சங்கோஜமாக இருக்குமில்லையா.நிச்சயமாக மாமாவின் வயிறு பசி தாங்கமுடியாமல் கேட்டிருக்கும் மாமாவின் வாய் மூலமாக.

இனி மாமாவின் வாழ்க்கைக்கு செல்வோம்.மாமா மாயவரத்திற்கு அருகில் உள்ள மறையனூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர். மாமாவின் பெற்றோர்களும் மூதாதையர்கள் எல்லாம் பெரும் நிலக்கிழார்கள்.பணமும் பொருளும் குவியல் குவியலாக இருந்த காலம் .

நானூறு ஏக்கர் நிலங்களை உழுது விவசாயம் பார்த்த குடும்பம்.சுமார் ஐம்பது குடும்பங்கள் இவர்களை நம்பி வாழ்ந்துவந்தது.சுமார் முன்னூறு வருடங்கள் சிவ பூஜை செய்து கொண்டிருந்தது மாமாவின் குடும்பம். ஆனால் மாமா வளர்ந்தது படித்தது எல்லாம் வறுமையில் மட்டுமே.

மொத்த குடும்பமும் தெருவில் நின்றது என்று சொல்லுவோமே. அந்த வார்த்தை மாமாவின் குடும்பத்தை பொறுத்தவரை நிதர்சனமான உண்மை. மாமா பிறந்ததில் இருந்து வளர்ந்தது வரை வறுமை மட்டுமே மாமாவின் சொத்து.

அப்பொழுது மாமாவின் குடும்பம் சென்னையில் மாம்பலத்தில் வாழ்ந்து வந்தது. மாமாவின் மாத சம்பளம் நூற்றி என்பது ரூபாய். இந்த சம்பளத்தில் பதினேழு குடும்ப உறுப்பினர்கள் சாப்பிடவேண்டும்.ஒரு நாளைக்கு ஒரு வேலை கூட சாப்பிடமுடியதே.

இறைவனின் அற்புதத்தை பார்த்தீர்களா? சமத்துவம் என்ற சொல்லை எப்படி கையாண்டிருக்கிறான்.வயிறு என்ற ஒன்றையும் கொடுத்து அதில் பசியையும் வைத்தான். இதுவரை சமத்துவம் புரிகிறது. ஆனால் பசி வயிறு இவைகளின் ஸ்நேகத்தை மட்டும் சமத்துவம் இல்லாமல் வைத்தான். இங்குதான் விதியின் விளையாட்டு இருக்கிறதோ.?

துன்பத்தில் நம்முடைய பாவங்கள் கழிகின்றன

இன்பத்தில் நம்முடைய புண்ணியங்கள் கழிகின்றன

இவைகளை யாரும் நமக்கு கொடுப்பதில்லை

நாம்தான் ஒவ்வொரு பிறவியிலும்

சேர்த்துக்கொள்கிரோம் இந்த பிறவி உட்பட

இந்த சிந்தனை நம்முடைய

வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கட்டும்

வறுமையின் உச்சம் என்ன தெரியுமா. மாமாவும் மாமாவின் தாயாரும் எல்லோருக்கும் உணவளித்து விட்டு தங்களுடைய பசிக்கு தண்ணீரை குடித்து விட்டு பசியாறுவார்கள். நினைத்துப்பாருங்கள் பிறந்தது முதல் முப்பது வருடங்கள் ஏழ்மை வறுமை பசி பட்டினி. மாமாவின் வாழ்க்கையில் இருந்து உங்களுக்காக சில துளிகள்:

வறுமைத்துளி:-1

பள்ளி படிப்புக்கு பிறகு அரசாங்க தேர்வு எழுதி ஒரு சிறிய கிராமத்தில் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக வேலை பெற்றார். வேலைக்கான ஆர்டர் வந்தவுடன் மொத்த குடும்பமே சந்தோஷத்தில் திளைத்தனர். வயிறு நிறைந்தது போல ஓர் சந்தோஷம்.

மாமா தனக்கு வந்த வேலைக்கான அனுமதி கடிதத்தை எடுத்துக்கொண்டு தன்னுடைய பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து ஆசி பெற சென்றார். தலைமை ஆசிரியர் வேலைக்கான கடிதத்தை கிழித்து போட்டுவிட்டு சொன்னார். இதுக்கடா உன்னை இப்படி படிக்கவைத்தேன். நீ மெட்ராஸ் போயி தெருத்தெருவாக பிச்சை எடுடா என்று சொன்னார். மொத்த குடும்பத்தின் வயிறு மறுபடியும் வாடியது.

ஒரு குடும்பத்தின் வறுமைக்கு வந்த விடிவெள்ளி கடிதத்தை ஒரு தலைமை ஆசிரியர் கிழித்துப்போடலாமா. கிழித்துப்போடும் அளவுக்கு தலைமை ஆசிரியருக்கு உரிமை எப்படி வந்தது. அந்த நேரத்தில் மாமாவின் மனநிலை எப்படி இருந்தது என்பதை அறிய இந்த வீடியோ காணொளியை தாமதமில்லாமல் காணுங்கள்.

வறுமைத்துளி:-2

மாமாவை பொறுத்தவரை

இறைவன் கிடையாது இறைவன் இருந்தாலும்

அவனுக்கு கண்ணும் கிடையாது காதும் கேட்காது

இது அவருடைய ஏழ்மை நாட்களின் எண்ணங்கள்

மாமாவின் வறுமை சித்தாந்தம்

ஒரு முறை மஹாபெரியவா சென்னையிலுள்ள மாமபலம் ராமேஸ்வரம் தெருவுக்கு வந்து முகமிட்டிருந்தார்அப்பொழுது பக்தர்கள் எல்லோரும் வந்து மஹாபெரியவாளை தரிசனம் செய்து ஆசிர்வாதமும் பெற்றனர்.

அப்பொழுது மாமாவின் தந்தை லட்சுமி நாராயணனை மஹாபெரியவாளை தரிசனம் செய்துவிட்டு வர அழைத்தார். ஆனால் அந்த நேரத்தில் வறுமையின் கொடுமையால் மனது எல்லா விதத்திலும் வறண்டு போயிருந்தது. மாமா வர மறுத்தார்.

இருந்தாலும் தந்தை விடாப்பிடியாக வலியுறுத்தி தரிசனம் காண அழைத்துச்சென்றார்.மாமாவும் தந்தையும் ராமேஸ்வரம் தெருவில் வரிசையில் நின்றார்கள். வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.மாமாவின் தந்தை ஏற்கனவே மஹாபெரியவாளிடம் மாமாவை பற்றி சொல்லியிருந்தார்.

மாமாவின் தரிசன முறையும் வந்தது.மஹாபெரியவா சில கேள்விகள் கேட்க அதற்கு மாமா சொன்ன பதில்களையும் சம்பாஷணை வடிவில் தருகிறேன் மிகவும் சுவாரசியமாக இருப்பதற்காக:

பெரியவா : நீ என்ன பண்ணிண்டு இருக்கே.

மாமா: மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் கல்லூரியில் (M.I.T) விரிவுரையாளராக வேலை பார்த்து வருகிறேன்.

பெரியவா: ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் வேலை செய்வாய்.

மாமா:ஆறு மணிநேரம்

பெரியவா : பாக்கி நேரம் என்ன செய்வாய்

மாமா: தன்னுடைய அன்றாட பணிகளை சொன்னார்.

பெரியவா:எத்தனை மணிக்கு எழுந்திருப்பே

மாமா :காலை ஆறு மணிக்கு

பெரியவா:எத்தனை மணிக்கு படுக்க போவே

மாமா: இரவு பதினோரு மணிக்கு

பெரியவா : என்னடா உனக்கு நேரமே இல்லையேடா.

இந்த சமயத்தில் மாமாவின் மன நிலை.

இறைவன் இருக்கிறான் என்ற தத்துவத்தையே தகர்தெறியவேண்டும் என்ற எண்ணம்.இந்த மனநிலையில் தான் மாமா மஹாபெரியவளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.இன்னொன்றும் கவனித்தீர்களா? ஒரு இடத்தில் கூட பெரியவா என்ற வார்த்தையை மாமா சொல்லவே இல்லை.

மாமாவின் மன நிலையை மஹாபெரியவா நன்கு படித்து விட்டார். மஹாபெரியவா மாமாவிற்கு ஆதி சங்கரர் எப்படி கனகதாராவிடம் சண்டை போட்டு தங்க மழை கொட்டவைத்தார் என்பதை உணர்த்தினார். இதன் பிறகு மாமா என்ன செய்தார். வீடியோ காணொளியை காணுங்கள்.

மாமாவின் வாழ்க்கையில் தங்க மழை கொட்டவில்லை. பணம் கட்டு கட்டுகளாக கொட்டியது. ஒரு சமயத்தில் தான் குடியிருந்த தெருவையே வாங்கும் அளவிற்கு சக்தி படைத்தவரானார்.அன்றிலிருந்து மாமா ரூபாயை தாளாக பார்க்கவில்லை.கட்டுக்கட்டாகத்தான் பார்த்தார். எப்படியென்று கேளுங்கள்.

என்னால் நிச்சயமாக சொல்ல முடியும்.இந்த காணொளியை பார்த்த பின்பு உங்களுக்குள் ஒரு மாற்றம் வந்திருப்பதை உணர்வீர்கள். இதன் மூலம் உங்கள் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் வரும். பக்தி என்பது ஏதோ மற்றவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்து வருவதில்லை.

உங்கள் ஆத்மாவை முன்னிறுத்தி வாழுங்கள். உங்களுக்காக உங்கள் ஆத்மா பரமாத்மாவிடம் முறையிட்டு உங்களை இன்னல்கள் அற்ற வாழ்க்கை வாழ வைக்கும். அறிவையும் மூளையையும் பக்தியில் கலக்காதீர்கள்.

அது பணம் காசு கணக்குப்பார்க்க ஆரம்பிக்கும். ஆத்மாவிற்கு இந்த கணக்கெல்லாம் தெரியாது. ஆத்மாவிற்கு தெரிந்தது நல்லது எது கேட்டது எது என்பது மட்டுமே. ஆத்மா உங்கள் இதயத்துடன் தொடர்புடையது. அறிவு மூளையுடன் தொடர்புடையது.

ஆத்மா மட்டுமே பரமாத்மாவுடன் தொடர்பு கொள்ள முடியும்.ஏனென்றால் ஒவ்வொரு ஆத்மாவும் பரமாத்மாவின் குழந்தைகள். இங்கு தாய் குழந்தை உறவு முறை மட்டுமே பேசும். என் ஆத்மா உங்களிடம் பேசட்டும் உங்கள் ஆத்மா இறைவனிடம் பேசட்டும். எல்லோரும் ஒரு ஆர்த்மார்தமான வாழ்க்கை வாழுவோம்.

வாழும் இடமே சொர்கம். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

அகமே ஆன்மிகம்

புறமே வாழ்க்கை

மனமே கோயில்

ஆத்மாவே கடவுள்

வழிபடுவோம் நாமே நம்மை

Video Play Duration: 1 hour 22 minitues 17 secs

https://www.youtube.com/watch?v=WtrJKHRSMVA

Hara Hara Shankara Jaya Jaya Shankara

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square