என் வாழ்வில் மஹாபெரியவா -071
என் வாழ்வில் மஹாபெரியவா -071
பிரதி வியாழன் தோறும்

கேட்டதும் கொடுத்தான் கண்ணன் அன்று
கேட்டதும் கொடுக்கிறார் மஹாபெரியவா இன்று
ஒரே வித்தியாசம் துவாபரயுகத்தில்
பெரியவாளாக கண்ணன் அவதரித்தார்
இன்று கலியுகத்தில்
கண்ணனாக மஹாபெரியவா அவதரித்தார்.
கொடுத்து கொடுத்து கர்ணனுக்கு கரங்கள் மட்டும்தான் சிவந்தன
கலியுகத்தில் கொடுத்து கொடுத்து மேனியே சிவந்தது உனக்கு
மஹாபெரியவா நின் பாதம் சரணம்
இரண்டாவது அற்புதம்:
இந்த பத்து பேர் கொண்ட குழு அமையப்பெற்று பத்து நாட்கள் கூட நிறைவடையவில்லை.இதற்குள் நான்கு முறை தொலைபேசியில் கூடி பேசி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்தார்கள்.
அந்த குழு கூடி பேசி ஒரு மென் பொருளை தயாரித்தார்கள். எனக்கு வரக்கூடிய மின்னஞ்சல்களை வகை படுத்தி அதை ஒழுங்கு படுத்தி நானே பார்க்க வேண்டிய மின்னஞ்சல்களை எனக்கும் மற்றவைகளை அவர்களுக்குள் பிரித்து கொண்டு பக்தர்ளுக்கு தாமதம் இல்லாமல் பதில் கொடுத்து. இந்த மஹாபெரியவா பணியை சரியான பாதையில் எடுத்து செல்ல போகிறார்கள்.
இதற்கு என்னுடைய மடி கணினியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும்.ஆனால் நான் பணியாற்றும் மடிக்கணினி பழையது. அதில் இந்த மாற்றங்களை செய்ய முடியாது. ஆகவே நான் புதிய மடிக்கணினி வாங்கியாக வேண்டும். ஆனால் இப்போதைய நிலையில் என்னால் உடலாலும் உள்ளத்தாலும் மட்டுமே உழைக்க முடியும். என்னுடைய இயலாமையை நன்கு அறிந்த இந்த குழு அவர்களுக்குள் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
அவர்களுக்கும் என்னுடைய பொருளாதாரநிலை நன்கு தெரியும். ஆகவே ஸ்மார்ட் டிரஸ்ட் இல் இருந்து வாங்குங்கள் என்ற யோசனையை என்னிடம் தெரிவிப்பது என்று முடிவு செய்தார்கள். ஆனால் இந்த மாதிரி விஷயங்களுக்கு நிச்சயம் நான் ஒத்துக்கொள்ளமாட்டேன் என்பதும் அவர்களுக்கு தெரியும். ஆகவே என்னிடம் மிகவும் சுவாதீனமாக பழகும் பேசும் ராகவனிடம் விஷயத்தை சொல்லி என்னிடம் சொல்லி சம்மதம் பெற சொன்னார்கள்.
ராகவனும் என்னிடம் தொலை பேசியில் விவரத்தை சொல்லி என்னுடைய பதிலுக்கு காத்திருந்தார்..விஷயத்தை கேள்விப்பட்டதும் எனக்குள் ஒரு மன போராட்டமே நடந்து கொண்டிருந்தது. மஹாபெரியவா என் வாழ்க்கையில் வந்த பிறகு எனக்காக யாரிடமும் கை ஏந்துவது என்றால் பலமுறை யோசிப்பேன்
ஆனால் மற்றவர்களுக்காக என்றால் உடனே கை ஏந்தி பிச்சை கூட எடுத்து விடுவேன்.ஆனால் மற்றவர்கள் கண்ணீரை துடைக்க நான் பிச்சை எடுத்து நடத்தும் டிரஸ்ட் இல் இருந்து எனக்காக மடிக்கணினி வாங்குவது என்னும் யோசனையை என்னால் சாதாரணமாக எடுத்து கொள்ள முடியவில்லை.
என்னை சேர்ந்தவர்கள் எனக்கு சொல்லி புரிய வைக்க பார்த்தார்கள். அவர்கள் சொன்னது. நீங்கள் உங்கள் நலனை பின்னுக்கு தள்ளி உடலாலும் உள்ளதாலும் நாள் முழுவதும் உழைக்கிறீர்கள். நீங்கள் எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல் உழைக்கிறீர்கள். இந்த மடிக்கணினி கூட மற்றவர்கள் நலனுக்காக மட்டுமே நீங்கள் உபயோகிக்கப்போகிறீர்கள். யோசிக்காமல் டிரஸ்ட் இல் இருந்து வாங்குங்கள் என்று சொன்னார்கள்..
ஆனால் என் யோசனை இன்னும் ஆழமாக சென்றது. மஹாபெரியவா என்னுள் இருந்து என்னை இயக்குகிறார் என்பதை நிச்சயம் நம்புகிறேன்.மஹாபெரியவா என்னுள் இருக்கிறார் என்றால் நான் எப்படி இருக்க வேண்டும். நானே ஒரு கோவிலாக மாற வேண்டாமா?
என் சிந்தனைகளில் புனிதம் இருக்க வேண்டும். பேசும் பேச்சில் புனிதம் இருக்க வேண்டும்... செய்யும் செயல்களில் புனிதமும் இறை தன்மையும் இருக்க வேண்டுமென்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பேன்.
நான் வாழும் காலத்திலும் என் காலத்திற்குப்பிறகும் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக வாழ்ந்து விட்டு செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருந்து கொண்டிருக்கிறேன்..அன்று இரவு முழுவதும் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை.
மற்றவர்கள் யோசனையை நான் ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் என் மனசாட்சி அதை ஏற்றுக்கொள்ளுமா?. மஹாபெரியவா ஏற்றுக்கொள்வாரா? தூங்க முடியாமல் பிரண்டு பிரண்டு படுத்தேன். தூக்கம் வரவில்லை.. நேரத்தை பார்த்தேன். மணி அதிகாலை இரண்டு. மஹாபெரியவாளிடமே கேட்டுவிடுவது என்று முடிவு செய்தேன்.
எழுந்து உட்கார்ந்தேன். என்னுடைய அன்றைய நாட்களின் நினைவுகள் என் இதயத்தில் அலை அலையாய் மோதின.. நள்ளிரவு எழுந்து மஹாபெரியவாளிடம்
நடை பயிற்சி எடுக்க சென்ற நாட்கள் என்னை ஆரத்தழுவின. எழுந்து மஹாபெரியவா முன் நின்றேன்.இனி என்னுடைய சம்பாஷணை உங்களுக்காக.
நான்: பெரியவா
பெரியவா: என்னடா இந்த அகால வேலைலே வந்து நிக்கறே.
நான்: தூக்கம் வரலை பெரியவா
பெரியவா: என்னடா குழப்பம்.
நான் : நீங்க தான் எல்லாத்தையும் பாத்துண்டு இருக்கேளே.. நான் என்ன பண்ணட்டும். என் மன சாட்சி ஏத்துக்க மாட்டேங்கறது பெரியவா. ஆனால் மடிக்கணினி இல்லாமல் அடுத்து என் பயணம் வேகத்தில் செல்லாது. என்ன பண்ணட்டும்..
பெரியவா: இதுதாண்டா ஒழுக்கம் அப்படிங்கறது. நீ மடிக்கணினி வாங்கறதுக்கு ஆயிரம் நியாயமான காரணங்கள் இருந்தும் வாங்கமாட்டேன் அப்படின்னு உறுதியா இருக்கையேடா. இதே மாதிரி இந்த ஜென்மம் பூரா இரு.
நான்: நீங்கதான் அந்த மன உறுதியையும் வைராகியத்தையும் கொடுத்தேள்.இப்பபோ என்ன பண்ணறது பெரியவா மடிக்கணினி வாங்க..
பெரியவா: நீ போய் கொஞ்ச நேரமாவது தூங்கு. காத்தலே எழுந்திருக்கணும். நா எல்லாத்தையும் பாத்துக்கறேன்.
நான்: ரொம்ப நன்றி பெரியவா. போய் கொஞ்ச நேரம் தூங்கறேன். இப்போ தான் பாரத்தை இறக்கி வெச்சது மாதிரி இருக்கு. மனசு லேசா இருக்கு பெரியவா. என்று விடை பெற்று வந்து படுத்தேன்.
நான் மஹாபெரியவாளிடம் விடை பெற்று வந்தேனே தவிர எனக்கு தூக்கம் வரவில்லை. மனதில் துக்கம் இருந்தாலோ அல்லது சந்தோஷம் இருந்தாலோ தூக்கம் வராது. என் மனசு நிறைந்த சந்தோஷத்தால் அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை.
என் சந்தோஷத்திற்கு இரண்டுகாரணங்கள்.
ஒன்று மஹாபெரியவாளிடம் என் தேவையை தெரிவித்து விட்டேன். அது எப்படியும் நிறைவேறி விடும் என்பது
இரண்டு. நியாயமான காரணங்கள் இருந்தும் டிரஸ்ட் இல் இருந்து வாங்க மாட்டேன் என்று உறுதியாக இருப்பது தனக்கு பிடித்து இருக்கிறது என்று மஹாபெரியவா என்னிடம் சொன்னது.
கொஞ்ச நேரம் கண் அசந்து இருப்பேன்.என் காதுகளில் சங்கர கோஷம் ஒலிக்க ஆரம்பித்தது. எழுந்து இரண்டு நிமிடங்கள் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்து த்யானம் செய்தேன். இந்த இரண்டு நிமிட தியானம் தான் என்னை நாள் முழுவதும் அப்பொழுது மலர்ந்த தாமரை போல புதிய உணர்வுகளுடன் வைத்திருக்கும்.
காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு மஹாபெரியவா முன் நின்று என் மற்றவர்களுக்காக பிரார்த்தனைகளை ஆரம்பித்தேன்.பிரார்த்தனைகளை முடித்து விட்டு மஹாபெரியவாளிடம் கேட்டேன்.
நான்: பெரியவா என் மடிக்கணினி பிரார்த்தனைக்கு விடை கிடைக்குமா பெரியவா?
பெரியவா: நீ என்கிட்டே பிரார்த்தனை பண்ணிடயோனோ. நான் பாத்துக்கறேன்.
நான்: பெரியவா இன்னும் ஒரு வாரத்திலே கிடைச்சுடுமா பெரியவா.?
பெரியவா; ஏண்டா இன்னிக்கு ராத்திரிக்குள்ளே கிடைச்சா வேண்டாமா?
நான்: பெரியவா இன்னிக்கு ராத்திரிக்குள்ளவா ? முடியுமா ? யார் கொண்டுவருவா பெரியவா
பெரியவா: உனக்கு அதெல்லாம் தெரியனுமா ? நான் சொல்லறேண்டா இன்னிக்கு ராத்திரிக்குள்ளே உனக்கு மடிக்கணினி வரும்ன்னு சொல்லறேன். வாங்கிண்டு வேலையை பாரு. கேள்வி கேட்டு தொணதொணக்காதே..
நான் : சரி பெரியவா. என்று விடை பெற்றேன்.
அன்று முழுவதும் ஒரு மன நிம்மதியுடன் வேலை பார்த்தேன். ஏனென்றால் என் வேலையை துரிதப்படுத்த மடிக்கணினி மஹாபெரியவா கொடுக்கப்போகிறார். எங்கிருந்து வரும். யார் கொண்டுவருவார்கள்.என்பது எனக்கு தெரியாது.
ஆனால் மஹாபெரியவா ஒன்றை நினைத்துவிட்டாலோ அல்லது சொல்லிவிட்டாலோ இந்த பிரபஞ்சமே ஒன்று கூடி அந்த சங்கல்பத்தை நிறைவேற்றிவிடும் என்பதை நான் நன்கு அறிவேன். பலமுறை அனுபவித்தும் இருக்கிறேன்.
நான் என் வழக்கமான வேலைகளை செய்துகொண்டிருந்தேனே தவிர எனக்குள் என் ஆழ் மனம் யோசித்துக்கொண்டே இருந்தது. எனக்கு தெரிந்து அன்று ராத்திரிக்குள் மடிக்கணினி எப்படி வரும்?.யார் கொண்டு வருவார்கள்?.என்று யோசித்து கொண்டே இருந்தேன்.
அன்றைய நாள் மதியம் விடை பெற்று மாலைக்குள் பிரவேசித்தது. மாலையில் நான் வழக்கம்போல் மஹாபெரியவாளை நமஸ்கரிக்க சென்றேன். நானும் கண்களை மூடிக்கொண்டு மஹாபெரியவாளை த்யானம் செய்தேன்.
நானும் த்யானம் முடிந்தவுடன் பெரியவா என்று அழைத்து மடிக்கணினி பற்றி கேட்க ப்ரயத்தனப்பட்டேன். அப்பொழுது வாசலில் அழைப்பு மணி அடித்தது. நான் தியானத்தை முடித்து விட்டு கதவை திறக்கலாம் என்று இருந்தேன்.
அப்பொழுது மஹாபெரியவா என்னிடம் சொல்கிறார்.டேய் போய் கதவை திறந்து உன்னுடைய மடிக்கணினியை வாங்கிக்கோ என்றார்.
எனக்கு அபரிமிதனை சந்தோஷம். மடிக்கணினி வந்துவிட்டது என்பதற்காக அல்ல. பிரபஞ்ச தெய்வம் மஹாபெரியவா என்னை வைத்து உலகத்தில் உள்ள பக்தர்களுக்காக மீண்டும் ஒரு அற்புதம் நடத்தி விட்டார் என்பதற்காகத்தான் என் முதல் மகிழ்ச்சி..
நான் சென்று வாசல் கதவை திறந்தேன்.
வாசலில் என் மனதுக்கு நெருக்கமான பக்தர் ஒருவர் பெயர் திரு முத்து சுபராமணியம் அவர் மனைவி சுகன்யா அம்மையாரும் கையில் ஒரு பையுடன் நின்று கொண்டிருந்தார்கள்.
அவர்களை நான் உள்ளே வந்து அவர்களை அமர செய்தேன்.அப்பொழுது அவர்கள் கையில் இருந்த பையில் இருந்து புத்தம் புதிய மடிக்கணினியை எடுத்து என் கையில் கொடுத்தார்கள். என் கண்களில் கண்ணீர் தளும்பியது. நெஞ்சு விம்மி விம்மி அடங்கியது.
மடிக்கணினி வாங்கி வந்த தம்பதியினர் என்னிடம் சொன்னார்கள்.
"மாமா நீங்கள் உங்கள் ஒரு விரலால் டைப் செய்து கஷ்டப்படுவதை நாங்கள் பலமுறை பார்த்து சங்கடப்பட்டிருக்கிறோம். இந்த முறை நாங்கள் அமெரிக்கா சென்றிருந்த பொழுது உங்களுக்கு ஒரு மடிக்கணினி வாங்கி வருவது என்று முடிவு செய்தோம் . இதோ வாங்கி வந்த மடிக்கணினி. என்று சொல்லி என்னை வாழ்த்தினார்கள். உலக மஹாபெரியவா பக்தர்களுக்காக உங்கள் பணியும் பிரார்த்தனைகளும் இன்னும் வேகமாக தொடர வேண்டும்.என்று சொன்னார்கள்.
நானும் அந்த தம்பதிகளுக்கு நன்றி சொல்லிவிட்டு மஹாபெரியவா எனக்காக நடத்திய மடிக்கணினி அற்புதத்தை சொன்னேன். அவர்களும் வியந்து போனார்கள். எல்லோர் கண்களிலும் கண்ணீர்.
இந்த அற்புதத்தை நடத்திய மஹாபெரியவா இன்னும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அற்புதத்தை அனுபவித்த நானும் இருக்கிறேன்.மடிக்கணினி வாங்கி வந்த தம்பதிகளும் இருக்கிறார்கள். எனக்கு நடந்த நடந்து கொண்டிருக்கிற எல்லா அற்புதங்களுமே சாட்சிக்கு உட்பட்டே நடந்து கொண்டிருக்கிறது. இந்தமடிக்கணினி அற்புதமும் ஒரு சாட்சி கொண்ட அற்புதம்.
அந்த கருணா சாகரன் நம் கண்ணுக்கு தெரியாவிட்டாலும் நம் குறைகளை கேட்டு குறைகளுக்கு நொடிப்பொழுதில் தீர்வளிக்கும் கோவிந்தனாக நம்மிடையே நொடிப்பொழுதும் வாழ்ந்து வருகிறார் மஹாபெரியவா.
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி பெரியவா
கண்ணக்கு தெரியாமல் நிற்கின்றாய் பெரியவா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை பெரியவா
இந்த G.R. மாமாவையே உன் அற்புத சக்திக்கு
ஒரு வாழும் உதாரணமாக
மாற்றி உலகுக்கு கொடுத்த மஹாபெரியவா
உன்னுள் நான் என்னுள் நீ! என்று உரைகின்றோம்
மஹாபெரியவா சரணம் சரணம்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள் நலன் நாடும்
உங்கள்
காயத்ரி ராஜகோபால்