top of page
Featured Posts

பெரியவா நீ என்னை இயக்குகிறாய் நான் உன் பக்தர்களை நோக்கி இயங்குகிறேன்


உதவி

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பது

கொடுக்கும் மனசு இருப்பவர்களிடம் மட்டுமே

இறைவன் தன் பணிக்காக

கொடுத்து வைக்கிறான்

கொடுப்பவன் இறைவனுக்கு சமம்

பெரியவா நீ என்னை இயக்குகிறாய்

நான் உன் பக்தர்களை நோக்கி இயங்குகிறேன்

என் ஆத்மார்த்தமான உறவுகளே

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பெண்ணின் கல்லூரி படிப்பிற்கு உதவி வேண்டி இந்த பதிவை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன். ஆம் நான் உங்களிடம் கை ஏந்துகிறேன்

திரு கல்யாணராமன் தம்பதியினர் குடும்பம் ப்ராமண வகுப்பை சார்ந்த குடும்பம். இவர்கள் குடும்பத்தில் மொத்தம் நான்கே பேர். கல்யாணராமன் மனைவி பிரியா ஒரு மகன் ஒரு மகள். மனைவி பிரியா சிறுநீரகம் இரண்டுமே பழுதடைந்து விட்டதால் கடந்த ஒரு வருடமாக டயாலிஸிஸ் எனப்படும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சையை வாரத்திற்கு மூன்று முறை செய்து கொள்கிறார்.

மகன் பள்ளியில் படிக்கிறான். மகள் கல்லூரியில் படிக்கிறாள். இந்த குடும்பம் என்னிடம் உதவி கேட்டு வந்த பொழுது நான் ஒரு வாரம் இவர்களிடம் அவகாசம் கேட்டேன். இரண்டு நாட்கள் யோசித்தேன். இவர்களின் கோரிக்கையை எப்படி எடுத்து செல்வது. யாரிடம் எடுத்து செல்வது என்று யோசித்தேன். பிறகு ஒரே முடிவாக மஹாபெரியவாளிடம் எடுத்து செல்வது என்று முடிவு செய்தேன்.

அன்று இரவு முழுவதும் இந்த குடும்பத்திற்கு எப்படி உதவி செய்வது என்று யோசித்தேன். அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை. உதவி செய்வது பெரிதல்ல. இறுதி வரை உதவி செய்து இந்த குடும்பத்தை எப்படி கரையேற்றுவது என்பது பற்றி யோசித்தேன். எனக்கு ஒன்றும் தெளிவு பிறக்கவில்லை. மற்றவர்கள் கஷ்டங்களை புரிந்து கொள்ள முடிந்ததே தவிர எப்படி உதவ வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. என் பிரபஞ்ச தெய்வம் மஹாபெரியவாளை சேவித்து யோசனை கேட்கலாம் என்று முடிவு செய்தேன். மறு நாள் காலையில் வழக்கம் போல் எழுந்தேன்.

காலைக்கடன்களை முடித்து விட்டு மஹாபெரியவா முன் நின்று கொண்டு கண்களை மூடி கைகளை கூப்பி த்யானம் செய்தேன். இரவு முழுவதும் தூங்கவில்லை.கண்கள் எரிந்தன. ஒரு காலில் நிற்க முடியவில்லை. இருந்தும் என் கஷ்டங்களை நான் தாங்கி கொண்டால் ஒரு குடும்பத்திற்கே விடிவு காலம் பிறக்கும் என்றால் எனக்கு துன்பமும் ஒரு இன்பமே.

இதோ என் மஹாபெரியவா சம்பாஷணை உங்களுக்காக.

நான்: பெரியவா ஒரே குழப்பமா இருக்கு.

பெரியவா: என்னடா குழப்பம்.

நான் : ஒரு குடும்பம் உதவி கேட்டு என்னிடம் இன்று வந்தது பெரியவா?

பெரியவா: அவாளுக்கு என்ன உதவி வேணுமாம்.

நான்: பெரியவா குடும்பத்தின் தலைவர் கல்யாணராமன் மனைவி ப்ரியா.இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள். மகன் பள்ளிக்கூடத்தில் ஒன்பதாவது படிக்கிறான். பெண் கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கிறாள். மனைவி ப்ரியாவிற்கு இரண்டு சிறு நீரகமும் பழுதடைந்து விட்டது. வாரத்திற்கு மூன்று முறை டயாலிஸிஸ் என்னும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பண்ணனும் பெரியவா. இதை தவிர மருந்து மாத்திரைகள் செலவு.

பெரியவா: கல்யாணராமன் மாசத்துக்கு எவ்வளவு சம்பாதிக்கிறான்

நான்: பெரியவா மாசத்துக்கு இருபத்தி அஞ்சாயிரம் சம்பளம் வாங்கறார் பெரியவா. இவர் வாங்கும் சம்பளம் இவா நாலு பேரும் சாப்பிடுவதற்கும் வீட்டு வாடகை கொடுப்பதற்கும் மட்டுமே போதாது. இதை தவிர குழந்தைகளின் துணிமணிகள் வாங்கு வதற்கும் படிப்பு செலவுக்கும் எல்லாம் சேர்ந்து மாசத்துக்கு ஐம்பதாயிரம் ரூபாய் செலவாகும்..

பெரியவா: இவா எப்படி சமாளிக்கிறா.

நான்: இவாளுக்கு கடனே பத்து லக்ஷம் இருக்கு பெரியவா.இவாளுக்கு எப்படி உதவறதுன்னே தெரியுமே ராத்திரி பூரா குழம்பிண்டு இருந்தேன். ஒன்னும் புரியல உங்ககிட்டே வந்துட்டேன்.

பெரியவா: இப்போ நான் சொல்லறபடி பண்ணு.

இந்த குழந்தைகளின் படிப்பு செலவை நீயே ஏத்துக்கோ. யாரு கிட்டயாவது பிச்சை கேளு கொடுப்பா. மாமியின் மருத்துவ செலவை நீயே ஏத்துக்கோ. இன்னொனயும் புரிஞ்சுக்கோ. ஒருத்தருக்கு உதவி செய்யும் போது அரைகுறையாக பண்ணாதே.

உனக்கு அந்தமாதிரி ஒருகஷ்டம் வந்தால் எப்படிப்பட்ட உதவி உனக்கு வந்தால் சௌகரியமாக இருக்கும். என்று யோசிச்சுக்கோ. அதே மாதிரி உதவியை அவாளுக்கு பண்ண முயற்சி செய். செய்யற உதவி முழுமையாக இருக்கனும்.

நான்: சரி பெரியவா செஞ்சுடறேன்.

பெரியவா; உன்னாலே அந்த மாமிக்கு எவ்வளவு உதவ முடியும்.

நான்; இப்போதைக்கு ஒரு லக்ஷம் ரூபாய் வரை என்னால் உதவ முடியும். பெரியவா.

பெரியவா: நீ எங்கே போய் சம்பாதிச்சே.

நான்; நீங்கள் அனுக்கிரஹம் செஞ்சு புத்தகம் எழுத வெச்சேள். அந்த புத்தகம் வித்த பணத்தில் இருந்து அவாளுக்கு உதவ முடியும் பெரியவா.

பெரியவா; மொத்த பணத்தையும் அவா கையிலே கொடுத்துடாதே. வாராவாரம் அவா வந்து பில்லை கொடுத்துட்டு உன்கிட்டே இருந்து பணம் வாங்கிக்கட்டும்.மொத்தமா கொடுத்தா ஏதாவது செலவு வந்தா கையில் இருக்கிற பணத்தை செலவழிச்சிட்டு. முழிச்சிண்டு இருப்பா. நீ செஞ்ச உதவி அத்தனையும் வீணாயிடும். புரிஞ்சிதா

நான் : புரிஞ்சுது பெரியவா. நீங்கள் சொன்ன மாதிரி வாராவாரம் வந்து பில்லை கொடுத்துட்டு பணம் வாங்கிண்டு போகட்டும்.

இது உங்கள் கவனத்திற்கு: இதுவரை .SMART.டிரஸ்டில் இருந்து இதுவரை ஏறக்குறைய எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் கொடுத்து இருக்கிறோம். மகனின் படிப்புக்கு சுவிஸ் நாட்டில் உள்ள திரு லட்சுமி வராகன் என்னும் மஹாபெரியவா பக்தர் டிரஸ்ட் மூலம் உதவி செய்து வருகிறார்.

இனி இவர்களின் பெண்ணின் கல்லூரி படிப்புக்கு இந்த மாதத்திற்குள் கட்ட வேண்டிய தொகை ஏறக்குறைய ஒரு லக்க்ஷம் ரூபாய். எனக்கு ஒரு கையும் காலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் மஹாபெரியவா என்னும் பிரபஞ்ச சக்தி என்னை இயக்க எனக்குள் இருக்கும் நம்பிக்கை வடக்கு வானில் தோன்றும் துருவ நட்சித்திரமாக பிரகாசிக்க ஆரம்பித்தது.

அந்த பெண்ணின் படிப்புக்காக நான் உங்களிடம் கை ஏந்தி வந்திருக்கிறேன்.வருடத்திற்கு ஒரு லக்க்ஷம் ரூபாய்க்கும் மேலாக செலவாகிறது. நீங்கள் இந்த குடும்பத்திற்காக உதவும் ஒவ்வொரு பைசாவும் மஹாபெரியவா கைங்கர்யத்திற்கு நீங்கள் செலவிடும் பணம் என்று நினைத்து கொள்ளுங்கள்.

இதுபோல் இன்னும் எத்தனையோ குடும்பங்களை கரை சேர்க்க வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். உங்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவுங்கள். ஊர் கூடி தேர் இழுப்போம்.

நாம் சில பல குடும்பங்களின் வறுமையை போக்கி வாழ வைப்பதால் வறுமை ஒழிந்து விடப்போவதில்லை.இருந்தாலும் நாம் வாழும் காலத்தில் ஒரு சில குடும்பங்களையாவது வாழ வைத்தால் நாம் இறைவனின் அருள் கடாக்ஷத்திற்கு பாத்திரமாவோம்.

அந்த நொடியே நம் ஜென்மாந்திரத்து பாவங்கள் அனைத்தும் எரித்து போகும்.. இறைவன் நமக்கு சோதனைகளை கொடுப்பதே நமக்கு ஞானம் பெற்று நமக்குள் இருக்கும் இறைவனை நம்மையே தரிசனம் காணவைப்பது தான் இறைவனின் தலையாய கடமை. நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி தான தருமங்களை செய்தால் இறைவன் அவனையும் அறியாமல் நம் பக்கம்திரும்புவான்.

அடுத்த பிறவியில் ஒரு மிக சிறந்த பிறப்பை நமக்கு கொடுத்து மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனத்தையும் கொடுப்பான். நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல முக்கியம். ஒரு ரூபாய் கொடுத்தாலும் கொடுக்க வேண்டும் என்ற மனது தான் முக்கியம்.

உங்கள் மனக்கதவை ஒரு வாய்ப்பு தட்டுகிறது. கதவை திறவுங்கள். நாமெல்லாம் சேர்ந்து பல குடும்பங்களை கரை ஏற்றுவோம்.

உங்களை மஹாபெரியவா நன்கு ஆசிர்வதித்து சகல ஐஸ்வர்யங்களோடு வாழ வைக்கட்டும். உங்களால் உதவ முடியவில்லையா? கவலை வேண்டாம். இந்த குடும்பம் கரையேற நீங்கள் மஹாபெரியவாளை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

நானும் இவர்களுக்காகவும் உங்களுக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். நீங்கள் பணம்செலுத்த வேண்டிய வங்கி எண்.வங்கியின் பெயர் ஆகிய விவரங்கள் கேழே கொடுத்துளேன்.நீங்கள் பணம் அனுப்பிய விவரங்களை என்னுடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்துங்கள்.

Name of the Trust: SMART (Sri Mahaperiyava Arul Trust)

Type of Account: Savings Account

Account No: 500101011876937

IFSC Code: CIUB0000279

Name of the bank: City union Bank

Branch: Mylapore branch

Advice to be sent to Email: Gurumahimai@hotmail.com

உங்கள் உதவிக்கு என் சிரம் தாழ்ந்த நமஸ்கரங்கள்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் நலன் நாடும்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page