top of page
Featured Posts

குரு பூஜை அற்புதங்கள்-சந்தரமதி


குரு பூஜை அற்புதங்கள்-சந்தரமதி

பிரதி திங்கள் தோறும்

“இன்றைய முதியவர்கள்

எழுதத்தெரிந்த பேனா

ஆனால் பேனாவில் மை இல்லை

இன்றைய இளைஞர்கள்

மை நிரம்பிய பேனா

ஆனால் எழுததெரியவில்லை”

நாம் இதுவரை மஹாபெரியவா குரு பூஜை மூலம் பக்தர்கள் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களை அனுபவித்து வந்தோம். ஆனால் மஹாபெரியவா படமும் விபூதி பிரசாதமும் மஹாபெரியவா முன் வைத்து என் கையால் கொடுத்து அதை பெற்றுக்கொண்ட பக்தை சந்திரமதி வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களைத்தான் இந்த தொடரில் படித்து அனுபவிப்போமா!.

இறைவனின் படைப்பில் ஏற்றத்தாழ்வுகள் தவிர்க்கமுடியாதது. படைப்பின் ரகசியத்தில் இதுவும் ஒன்று. பணக்காரன் ஏழை என்பது நம் கண்ணுக்குத்தெரியும் ஏற்றத்தாழ்வுகளுள் ஒன்று. ஆனால் ஏதோ ஒருவிதத்தில் ஏற்றத்தாழ்வு என்னும் பள்ளத்தை இறைவன் சரி செய்து விடுகிறான்.

ஏழை பணக்காரன் இடையே இருக்கும் பள்ளத்தை தைரியம் சரி செய்து விடுகிறது இறைவனின் படைப்பில். பணக்காரனிடம் தைரியம் இருக்காது. ஆனால் ஒரு ஏழையிடத்தில் தைரியம் இருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கும் மனசாட்சி இருக்கும்.

சோதனையான காலத்தில் பணக்காரனைத்தாங்க ஒரு கை கூட வராது. கடவுளும் கை விட்டுவிடுவான்.. ஆனால் ஒரு ஏழையின் சோதனையான காலகட்டத்தில் ஏழையை தாங்க பல கைகள் நீளும். கடவுளும் தாங்குவான்.

பணம் இருப்பவன் பாசத்திற்கு ஏங்குவான்

பாசம் இருப்பவன் பணத்திற்கு ஏங்குவான்

இதுதானே இறைவனின் படைப்பு ரகசியம்

அது இருந்தா இது இல்லே

இது இருந்தா அது இல்லே

அதுவும் இதுவும் சேர்ந்திருந்தா

அவணுக்கிங்கே இடமில்லே

இந்த அற்புதத்தின் நாயகியின் கற்பனைப்பெயர் சந்தரமதி. ஏழையாக இருக்கலாம். ஆனால் கடவுள் மேல் ஆசாத்திய நம்பிக்கை கொடுள்ள ஒரு பெண். சந்தரமதிக்கு இரண்டு பெண்கள். பெரியவள் பட்டப்படிப்பு முடிந்து ஒரு மீடியா கம்பெனியில் வேலை செய்கிறாள்.இரண்டாவது பெண் பட்டப்படிப்பு முடிந்து ஒரு சிறிய கால் சென்டர் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். அவள் விழுந்து எழுந்த சந்தர்ப்பங்கள் நிறைய.

அவளுக்கு நன்றாகவே தெரியும்,

விழுவதெல்லாம்

எழுவதற்குத்தானே தவிர

அழுவதற்காக இல்லை

சந்தரமதி என் வீடு உட்பட ஒரு நான்கு ஐந்து வீடுகளில் வீட்டு வேலை செய்து இந்த இரண்டு பெண்களையும் படிக்க வைத்து தன்னுடைய உடல்நிலை சரியில்லாத கணவனுக்கும் மருத்துவ செலவு செய்துகொண்டு தன் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகிறாள்.

என்னுடைய இரண்டு ஆண்டு கால வாழ்க்கைமாற்றங்களை தினமும் பார்த்து பார்த்து வியந்தவள். பல நேரங்களில் என்னிடம் கேட்ப்பாள் " ஒரு இரவில் உங்களின் வாழ்க்கை மாற்றத்திற்கு என்ன காரணம்" என்று கேட்பாள்.

அப்பொழுதெல்லாம் யாராவது என் வாழ்க்கை மாற்றங்களைப்பற்றி கேட்டால் எனக்கு தாங்க முடியாத சந்தோஷமாகிவிடும். ஏன் தெரியுமா? எனக்கு மஹாபெரியவாளைப்பற்றிப்பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே என்னும் மகிழ்ச்சி.

மஹாபெரியவா என்னை மாற்றிய அத்தனை அற்புதங்களும் இரவு பத்து மணிக்கு மேல் மணிக்கு மேல் காலை நான்கு மணிக்கு உள் தான். சந்தரமதி அத்தனை அற்புதங்களையும் கண்கூட பார்த்தவள். சந்தரமதி என்னிடம் கேட்பாள்.

"எனக்கும் உங்க

மஹாபெரியவா உதவி செய்வாரா"

என்று. நானும் சொல்லுவேன் மஹாபெரியவாளுக்கு ஜாதி கிடையாது ஏழை பணக்காரன் கிடையாது ஆண் பெண் பாகுபாடு கிடையாது. மஹாபெரியவா சர்வ ரக்க்ஷகன் எல்லா உயிரினங்களுக்கும் பாதுகாவலனாக இருக்கும் பரமேஸ்வரன். மஹாபெரியவா உனக்கும் உதவி செய்வார். உனக்கு என்ன வேண்டும் மஹாபெரியவளிடத்தில் கேள்.

நானும் உனக்காக மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொள்கிறேன்.என்று சொன்னேன். அன்று இரவே மஹாபெரியவாளிடத்தில் வேண்டிக்கொண்டேன்.

"பெரியவா நீங்கள் என்னை அனுக்கிரஹம் செய்து என் வாழ்க்கையை மாற்றினீர்கள். இன்னும் வாழ்க்கை மாற்றம் நின்ற பாடில்லை. தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சந்தரமதி என்னிடம் கேட்கிறாள். நீங்கள் அவளுக்கும் அனுக்கிரஹம் செய்வீர்களா என்று. நானும் அவளிடம் சொல்லிவிட்டேன் மஹாபெரியவா நிச்சயம் அனுக்கிரஹம் செய்வார் என்று. சரிதானே பெரியவா.

பெரியவா: எனக்கு எந்த வித்தியாசமும் கிடையாதே. நீயும் தெரிஞ்சுக்கோ. எந்த ஜீவனுக்கும் என் அனுக்கிரஹம் உண்டு. ஆசியும் உண்டு. நாளைக்கு என் முன்னால் நிற்கவைத்து என் படத்தை என் முன்னால் வைத்து அதில் குங்குமம் விபூதி வைத்து என்னை வேண்டி அந்த படத்தையும் பிரசாதத்தையும் அவள் கையில் கொடுத்து என்ன வேண்டுமோ வேண்டிக்கொள்ளச்சொல். என்று மஹாபெரியவா சொன்னார்.

நானும் சந்தரமதியிடம் மஹாபெரியவா சொன்ன விவரத்தை சொல்லி இன்று மதியம் மஹாபெரியவாளிடத்தில் உனக்கு என்ன வேண்டுமோ வேண்டிக்கோ. நீ வீட்டிற்கு போய் தலைக்கு குளித்துவிட்டு வா என்று சொல்லி அனுப்பினேன். அவளும் வீட்டிற்கு போய் குளித்குவிட்டு வந்தாள்.

வீட்டுவேலை முடித்து வீட்டிற்கு போகும் பொழுது வேண்டிக்கொள்கிறேன் என்று சொன்னாள். நானும் சரியென்று சொன்னேன். வீட்டு வேலை முடியும்பொழுது மாலை மணி சுமார் ஆறு இருக்கும். விளக்கு வைக்கும் நேரம்.

நான் சந்தரமதியை மஹாபெரியவாளிடத்தில் அழைத்து போனேன். நான் மதியமே மஹாபெரியவா படம் விபூதி மற்றும் குங்குமம் எல்லாவற்றயும் எடுத்து வைத்துவிட்டேன். நானும் சந்தரமதியை வேண்டிக்கொள்ளச்சொன்னேன். அவளும் பின்வருமாறு வேண்டிக்கொண்டாள்.

"சாமி, எனக்கு இரண்டு மகள்கள். இருவரையும் வீட்டு வேலை செய்தே பட்டப்படிப்பு படிக்கவைத்துவிட்டேன். பெரியவள் வேலைக்கு போகிறாள்.இருபதாயிரம் ருபாய் சம்மதிக்கிறாள். அவளுக்கு கல்யாணம் செய்து வைக்க நினைக்கிறேன். என் குடும்பத்துடைய மொத்த வருமானம் மாதத்திற்கு ருபாய் முப்பதாயிரம் தான். கல்யாணத்துக்கு எனக்கு இரண்டு பிரச்சனைகள் சாமி.

ஒன்று பையன் வரன் பார்க்கவேண்டும் இரண்டு கல்யாணத்திற்கு குறைந்தது ஒரு லக்க்ஷம் ரூபாயாவது வேண்டும். கடனாக வாங்கினால் கூட திருப்பி கட்ட மிகவும். கஷ்டமாக்தான் இருக்கும். இருந்தாலும் வயித்தை கட்டி வாயை கட்டியாவது கடன் வாங்கி ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி தாட்டி விடணும் சாமி. நீங்கள் தான் உதவி செய்யவேண்டும்." என்று தன் பிரார்த்தனையை முடித்துக்கொண்டாள். நான் சொல்லிக்கொடுத்த மாதிரியே பிரார்த்தனையை சொல்லி முடித்தாள்.

நானும் மஹாபெரியவா படத்தையும் விபூதி பிரசாதத்தையும் கொடுத்து மஹாபெரியவா உனக்கு ஆசிர்வாதம் செய்து விட்டார். இந்த பெரியவா படத்தை வீட்டில் வைத்துக்கொண்டு நீ என்ன சாப்பிடுகிறாயோ அதையே மஹாபெரியவாளுக்கும் கொடுத்துவிட்டு நீயும் உன் குடும்பமும் சாப்பிடுங்கள்.என்று எனக்கு தெரிந்ததை சொல்லி படத்தையும் பிரசாதத்தையும் கொடுத்தேன்.

.அவளும் நீங்கள் சொன்ன மாதிரியே செய்கிறேன் என்று சொல்லி வீட்டிற்கு சென்றாள். அவர்களை மாமிசம் சாப்பிடுவதை உடனே நிறுத்தச்சொன்னேன். அவளும் சரி என்று நிறுத்தி விட்டாள்

இது நடந்து சரியாக ஒரு பத்து நாட்கள் இருக்கும். நானும் தினமும் சந்திரமதியிடம் ஏதாவது விஷேஷம் உண்டா என்று விசாரிப்பேன். எனக்கும் மஹாபெரியவா அற்புதத்தை அருகிலிருந்து அனுபவிக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு. அவளும் இருந்தால் சொல்கிறேன் என்று சொல்லுவாள்.

பத்தாவது நாள் காலையில் சந்த்ரமதி என்னிடம் ஒரு சந்தோஷமான விஷயத்தை சொன்னாள். அவளுக்கு தெரிந்த இடத்தில ஒரு பையன் இருப்பதாகவும் அவன் முதுகலை பட்டதாரியென்றும் நல்ல வேலையில் இருப்பதாகவும் பையன் நல்ல அழகாகவும் இருப்பதாகவும் சொன்னாள். அவள் மேலும் சொன்னது

வடபழனியில் இருக்கும் முருகன் கோவிலில் ஒரு நல்ல நாளில் பையனும் பெண்ணும் தங்களுடைய பெற்றோர்களுடன் சந்தித்து இருவர் மனதும் ஒத்துப்போனால் நிச்சயம் செய்து விடலாம் என்று முடிவு செய்ததாகவும் சொன்னாள்.

ஒரு வருடத்தில் எதிர்பார்த்த

மகள் திருமணம்

ஒரே வாரத்தில் நிச்சயமாகும் என்பது

நினைத்து பார்க்கமுடியாத ஒன்று

ஒரு வாரமென்ன

மஹாபெரியவா நினைத்தால்

ஒரு நொடியில் கூட எதுவும் சாத்தியமே

சந்தரமதிக்கு ஒரு புறம் சந்தோஷம். மறுபுறம் இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் கூடி வரும் என்று நினைக்கவில்லை.உங்க மஹாபெரியவா இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் கூடி வர வைத்துவிட்டார். நான் சொன்னனேன் முதலில் பெண்ணும் பையனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளட்டும். இருவருக்கும் பிடிக்கட்டும். பின் கவலை படுவோம் என்று சொன்னேன்.

எனக்கு என்ன பயம் என்றால் எதுவும் மிகவும் எளிதாக கிடைத்துவிட்டால் அதற்கு மதிப்பு இருக்காது. ஆகையால் அவளுடைய கரை புரண்டோடும் சந்தோஷ வெள்ளத்திற்கு அவ்வப்போது அணை கட்டினேன்.

ஒரு நாள் வடபழனி முருகன் கோவிலில் பெண் மாப்பிளை பார்க்கும் படலமும் வந்தது. சந்தரமதிக்கு சொல்லி மாளாத கவலை. பெண்ணுக்கும் பையனை பிடிக்க வேண்டுமே என்னும் கவலை. ஆனால் நான் அவர்களிடம் சொன்னேன் நிச்சயமாக நிச்சயதாரத்திற்கு நாள் குறித்து விட்டுத்தான் வருவீர்கள் என்று சொன்னேன். அவர்களுக்கு அப்படியொரு ஆச்சரியம்.

அதெப்படி நீங்கள் பையனை பார்க்காமலேயே அவ்வளவு நிச்சயமாக சொல்கிறீர்கள் . நானுiம் மனதில் நினைத்துக்கொண்டேன்

மஹாபெரியவளுக்கு பையனாவது பெண்ணாவது மஹாபெரியவா நினைத்துவிட்டால் அது நடக்கும் என்பது இறை விதி. இது அவளுக்கு தெரியுமா? நானும் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று சொல்லி வாழ்த்தி அனுப்பிவைத்தேன்

மறு நாள் வடபழனி முருகன் கோவிலில் காலை ஒன்பது மணிக்கு இரு கும்பத்தாரும் சந்தித்து இந்த பெண் பார்க்கும் படலத்தை நல்ல படியாக முடிக்கவேண்டும்.அவர்கள் என்னிடம் விடை பெற்று மஹாபெரியவாளை வணங்கிவிட்டு வடபழனி சென்றனர்.

நான் ஸ்தூலமாகவும்

மஹாபெரியவா சூஷ்மமாகவும்

அவர்களை வாழ்த்தி

விடைகொடுத்து அனுப்பிவைத்தோம்.

அவர்கள் இந்த பெண் பார்க்கும் படலத்தை நல்லபடியாக முடித்து மதியம் ஒரு மணிக்கு வீடு திரும்பவேண்டும்.

பன்னிரெண்டு மணியிலிருந்து எனக்கு இருப்புக்கொள்ளவில்லை. என் கை பேசி அழைக்கும் ஒவ்வொன்றையும் இவர்களாக இருக்குமோ என்று நினைத்து எடுப்பேன். ஆனால் வேறு ஒரு மஹாபெரியவா பக்தர் என்னுடன் தன் கவலைகளை சொல்லுவார். நானும் மிகவும் பொறுமையாக அழைத்தவர் மனம் ஆறுதல் அடையும் விதமாக பேசி தொலை பேசியை துண்டிப்பேன்.

ஒரு வழியாக மதியம் ஒரு மணிக்கு என் வீட்டிற்கு நேராக வந்தார்கள். வந்தவர்கள் முகத்தில் அவர்கள் சந்தோஷத்தின் அடையாளமாக ஒரு சிரிப்பு.

இருக்காத பின்னே. கல்யாணத்தின் முதலடி எடுத்து வைக்கவே ஒரு வருட காலம் ஆகும் என்று நினைத்தவளுக்கு ஒரே வாரத்தில் இதோ உன் மனம் கவர்ந்த மணாளன் என்று பெண்ணுக்கும் இவன் தான் உங்கள் வீட்டு மாப்பிள்ளை என்று சந்திரமதிக்கும் காண்பித்த மஹாபெரியவா

சந்தரமதிக்கு

மஹாபெரியவா யாரென்றே தெரியாது

ஆனால் மஹாபெரியவா அவளின்

குல சாமியாகிவிட்டார்

அவர்களின் குலக்கொழுந்து மொட்டையிலிருந்து குலக்கொழுந்து கல்யாணம் வரை கண்ணுக்குதெரியாத கடவுள் மஹாபெரியவா இன்னைக்கு கண்ணுக்குதெரியும் கடவுளாக குடும்ப குல சாமியாகி விட்டார்.

திருமணத்தின் முதலடி எடுத்துவைத்தாகி விட்டது

அடுத்தது பணப்பிரச்சனை

மஹாபெரியவா இந்த பணப்பிரச்னையை

எப்படி ஆசிர்வதித்து அனுகிரஹித்தார்

என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்ள

சந்தரமதி அடுத்த வாரமும் வருவாள்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page