top of page
Featured Posts

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-


மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

“உங்களை தெரிந்து கொள்ள உங்கள்

மூளையை உபயோகப்படுத்துங்கள்

மற்றவர்களை தெரிந்து கொள்ள உங்கள்

இதயத்தை உபயோகப்படுத்துங்கள்”

****

“மஹாபெரியவா” இந்தச்சொல்லை கேட்டவுடன் ஒரு சிலிர்ப்பு

மஹாபெரியவாளின் அற்புதங்களை கேட்டவுடன் வியப்பு ஒரு நெகிழ்ச்சி

ஒரு முறை மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது குண்டோதரர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நாம் கூட கடோதகஜன் சாப்பிடுவதை திரைப்படத்தில் பார்த்திருக்கிறோம். பாட்டுகூட பாடுவான்

"கல்யாண சமையல் சாதம்

காய்கறிகளும் பிரமாதம்

அந்த கௌரவப்பிரசாதம்

இதுவே எனக்கு போதும்"

என்ற பாடல் வரிகள்

இந்த கடோதகஜ திருவிளையாடலை நம் மஹாபெரியவா ஒரு முறை காஞ்சி ஸ்ரீ மடத்தில் நடத்தியிருக்கிறார். ஆச்சர்யமாக இருக்கிறதா. எனக்கும் தான். வாருங்கள் அந்த ஆச்சரியத்தை நாமும் கண்டு ஆச்சரியப்படுவோம்.

திருவிளையாடல் என்றாலே

நமக்கு ஞாபகம் வருவது பரமேஸ்வரன்

நம் கண் முன்னே நிகழ்ந்த திருவிளையாடல் பரமேஸ்வரனின் அவதாரம்

மஹாபெரியவா நிகழ்த்தியது

இந்த கடோதகஜன் பிரதாபம் ஏன் என்று உங்களுக்கு இந்த திருவிளையாடலின் முடிவில் தெரியும்.

காஞ்சி ஸ்ரீ மடத்தில் ஸ்ரீ கார்யம் மனுஷாளில் ராமஸ்வாமி என்பவரும் ஒருவர். இவர் ஸ்ரீ மடத்தின் வரவு செலவு கணக்குகளை பார்த்து வந்தார். இதனால் இவருக்கு கஜானா ராமஸ்வாமி என்ற காரணப்பெயரும் உண்டு.

கஜானா பொறுப்புகளையும் தாண்டி மஹாபெரியவாளிடத்தில் அலாதி பக்தியும் பற்றும் பிரியமும் கொண்டவர். மஹாபெரியவாளுக்கு அன்றாடம் என்ன என்ன தேவை என்று பார்த்து பார்த்து செய்தவர். இவரது அக்கறையையும் பொறுப்புணர்ச்சியை கண்டு மஹாபெரியவா இவர் சொல்லுக்கு எப்பொழுதும் மரியாதை கொடுப்பார்.

ஆத்மாவிலிருந்து வெளி வரும் வார்த்தைகள்

எப்பொழுதும் உண்மையானவை

ஆத்மார்தமானவை

சபையேறுவதில் என்ன ஆச்சர்யம்

கஜானா ராஸ்வாமியின் சொல் மஹாபெரியவா சபையேறும். இதனால் மடத்தில் யாருக்காவது ஏதாவது காரியம் நடக்கவேண்டுமென்றால் இவரை அணுகுவார்கள். பொறுப்பும் பக்தியும் யாரிடம் இருந்தாலும் அவர் குதிரை வண்டிக்காரர் முதல் கஜானா ராமஸ்வாமி வரை எல்லோருக்கும் மஹாபெரியவாளிடத்தில் ஒரு போலெ மதிப்பும் மரியாதையும் இருக்கும்.

நமக்கெல்லாம் தெரிந்த விஷயம் மஹாபெரியவாளின் உபவாசம். ஒரு சமயம் பத்து நாட்கள் பதினைந்து நாட்கள் வரை கூட உபவாசம் இருப்பார். ஒரு முறை தனக்கு ஒரு கீரையின் மீது மிகுந்த பற்று வந்த காரணத்தால் ஒரு நாள் அல்ல மூன்று நாள் கீரை கூட்டு செய்தார்கள் மடத்து கைங்கர்ய மனுஷாள்.

ஒரு சந்நியாசிக்கு நாவை கட்டுப்படுத்தமுடியல்லனா

அவன் என்னடா சன்யாசி என்று

தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொண்டார்

ஒரு சன்யாசி தனைத்தானே ஒரு சிற்ப்பி போலெ செதுக்கிக்கொண்டது ஆச்சர்யத்தில் ஆச்சர்யம். சன்யாசத்திற்கு இலக்கணம் வகுத்தவர் நம் மஹாபெரியவா. மஹாபெரியவா ஒரு சன்யாச தீப்பிழம்பு. நெருங்க முடியாது.

அந்த பிரபஞ்சமே

மஹாபெரியவாளின் ஒழுக்கத்தைக்கண்டு வெட்கப்படும்.

நமிடையே இருந்தவர் மஹாபெரியவா

என்னும் சன்யாசி என்றுதான் நமக்கு தெரியும்.

அண்ட சராசரத்தை தான் நாம் கடவுள் என்கிறோம். பிரபஞ்சத்தை நம்மால் உருவகப்படுத்தமுடியுமா? அதனால் தான் நாம் ஒரு உருவமாக பிரபஞ்சத்தை வழிபடுகிறோம். அந்த பிரபஞ்ச தெய்வம்தான் நம்மிடையே வாழ்ந்த மஹாபெரியவா. இப்பொழுது மஹாபெரியவாளை ஓரளவுக்கு நம்மால் நம் கண்ணுக்கு தெரியும் உருவமாக நினைத்து பார்க்கலாம்.

மஹாபெரியவாளை அறிய முடியாது

ஆனால் மஹாபெரியவாளை

ஓரளவுக்கு உணரலாம்

இந்த பரப்பிரம்ம ஸ்வரூபம் நிகழ்த்திய திருவிளையாடலை அனுபவிப்போமா?

ஒரு முறை மஹாபெரியவா சில நாட்கள் உபவாசம் இருந்தார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.ஆனால் யார் மஹாபெரியவளை அணுகி இதைப்பற்றி கேட்கமுடியும். மஹாபெரியவாளிடம் போய் பேசவேண்டுமானால் எத்தனை கடவுளை வேண்டிக்கொண்டு போக வேண்டும்.பூனைக்கு யார் மணி கட்டுவது என்று ஒரே குழப்பம்.

முடிவாக எல்லோரும் முடிவாக கஜானா ராமஸ்வாமியை அணுகுவது என்று முடிவு செய்தார்கள்.

கஜானா ராமஸ்வாமிக்கு மஹாபெரியவாளிடத்தில் ரொம்ப ஸ்வாதீனமாக போய் பேசும் உரிமை இருந்தது. கஜானா ராமஸ்வாமியும் மற்ற ஸ்ரீகார்யம் மனுஷாளின் கோரிக்கையை ஏற்று போய் பேச முடிவு செய்தார்.

கஜானா ராமஸ்வாமி நேராக மஹாபெரியவாளை பார்க்கப்போனார். இனி மஹாபெரியவாளும் மஹாபெரியவளும் கஜானா ராமஸ்வாமியும் சம்பாஷித்த விஷயங்களை கீழே சம்பாஷணை வடிவிலேயே தருகிறேன் மிகவும் சுவாரசியமாக இருப்பதற்காக.

உதட்டளவு வார்த்தைகள் மலர்ந்த நொடியில் வாடிவிடும்

உள்ளத்து வார்த்தைகள் அடுத்தவர் இதயத்தை தட்டும்

கஜானா ராமஸ்வாமியின் வார்த்தைகள்

மஹாபெரியவாளின் இதயத்தை தொட்டதில் என்ன ஆச்சர்யம்

இனி சம்பாஷணை கீழே

கஜானா: பெரியவா! நீங்கோ இப்படி உபவாசம் இருந்து உங்க உடம்பை பாத்துக்கறதே இல்லை. நீங்கள் எங்களுக்கும் உலக நாடுகளில் இருக்கும் பக்த ஜனங்களுக்காக வேணும் பெரியவா. நீங்கள் மத்தவாளுக்காகவும் உடம்பை கொஞ்சம் பாத்துக்கணும்.

பெரியவா: உபவாசம் இருக்கேன்டா.

கஜானா: உடம்பு ஒத்துழைக்க வேண்டாமா பெரியவா. உங்களுக்கு வயசும் ஆயிடுத்து. வேண்டாம் பெரியவா.

பெரியவா: பத்துக்கறேண்டா.

கஜானா: பெரியவா நீங்க சாப்பிடலைன்னா நான் மடத்தை விட்டு போயிடுவேன்.

பெரியவா: கொஞ்சம் மெளனமாக இருந்துவிட்டு சொன்னார். ஏன்டா நீ இல்லைனா மடம் நடக்காதா?

கஜானா: அதிர்ந்து விட்டார். என்ன பேசுவார் கஜானா, .இருந்தாலும் சிறிது மௌனத்திற்கு பிறகு கீழ் வருமாறு சொன்னார்.

கஜானா: மடம் இல்லே பெரியவா. இந்த உலகத்தை விட்டே போயிடுவேன்.

இப்பொழுது பெரியவா சற்று அதிர்ந்துதான் போனார். அதிர்ந்து போய் சொன்னார்.

பெரியவா: போடா போய் பெரிய வாழை இல்லை கொண்டு வா.

கஜானாவுக்கு இது ஒரு வாழ்நாள் மகிழ்ச்சி. குடு குடுவென்று ஓடிப்போய் பெரிய இலையை கொண்டு வந்து போட்டார். மஹாபெரியவா ஒரு பெரிய பாத்திரமும் அதில் முழுக்க தண்ணீரும் ஒரு டம்பளரும் கொண்டு வரச்சொன்னார். எல்லாம் வந்தாயிற்று.

பெரியவா: இன்னிக்கு என்ன சாப்பிட பண்ணிருக்கே.

கஜானா: பெரியவா, கேசரி, சொஜ்ஜி, பஜ்ஜி எல்லாம் இருக்கு பெரியவா.

பெரியவா: போய் எல்லாத்தையும் எடுத்துண்டு வா.

கஜானா போய் எல்லாத்தையும் எடுத்துண்டு வந்தார்.

பெரியவா: எல்லாத்தையும் பரிமாறு.

கஜானா எல்லாத்தையும் பரிமாறிவிட்டு உணவு சமைக்கும் இடத்திற்கு போனார்.போய்விட்டு திரும்பி வந்தார். மஹாபெரியவாளிடம் கேட்டார் இன்னும் ஏதாவது வேணுமா பெரியவா. ஆமாண்டா நீ மொதல்ல கொண்டு வந்து வச்சதையெல்லாம் சாப்பிட்டாச்சு.இன்னும் ஏதாவது இருந்தா எடுத்துண்டு வா. கஜானாவுக்கு ஒன்றும் புரியவில்லை. உள்ளே போய் இருக்கறது எல்லாத்தையும் மறுபடியும் எடுத்துண்டு வந்தார்.

பெரியவா கஜானாவிடம் எல்லாத்தையும் பரிமாறுமாறு சொன்னார்.கஜானாவும் எல்லாவற்றயும் பரிமாறிவிட்டு நின்றிந்தார். மஹாபெரியவா கஜானாவிடம் சொன்னார். என்னடா பேசாம நிக்கறே போய் இன்னும் எடுத்துண்டு வான்னு சொன்னார்.

இது உங்கள் சிந்தனைக்கு

இப்பொழுது நினைத்து பாருங்கள்.மெலிந்த தேகம் ஒரு சன்யாசி வயதோ அறுபது எழுபதை தாண்டியிருக்கும் எப்படி. இவ்வளவு சாப்பிட எப்படி முடியும்.இப்பொழுது தெரிகிறதா கடோதகஜன் கல்யாண சமையல் சாதம்.

இப்பொழுது கஜானாவிற்கு ஓரளவு புரிகிறது. ஒரு சந்நியாசியின் வாழ்க்கை முறையில் மற்றவர்களின் தலையீடு கூடாது என்று. சாஷ்டாங்கமாக மஹாபெரியவாளின் முன் கீழே விழுந்து வணங்கி பின் வருமாறு சொன்னார்.

"பெரியவா என்னுடைய தப்புதான் இது. நான் கொஞ்சம் என்ன எல்லையை மீறிவிட்டேன். மன்னிச்சுக்கோக்குங்கோ பெரியவா.இனிமே இப்படி நடக்காது என்று மன்னிப்பு வேண்டினார்.

பெரியவாளும் சொன்னார். ஒரு சன்யாசி வாழ்க்கையில் ஆயிரம் இருக்கும். உனக்கு அதலெல்லாம் தெரியாது புரியவும் புரியாது. போங்கோ எல்லாரும் போய் அவா அவா வேலையை பாருங்கோ என்று சொல்லி இந்த திருவிளையாடலை முடித்து வைத்தார்.

வாழ்க்கை என்பதே

இரண்டு எதிர் எதிர் நிலைப்பாடுகளின் தன்மை

இரவு பகல் - உதயம் மறைவு

துன்பம் இன்பம் வெப்பம் குளிர்

நன்மை தீமை

இந்த இரண்டு நிலைப்பாடுகளின் உச்சத்தை பார்த்துவிட்டுத்தான் ஒருவன்

சந்நியாசியாக முடியும்

நம் மஹாபெரியவா பரமேஸ்வரன் அவதாரம்

இரண்டு நிலைப்பாட்டின்

உச்சத்திலிருந்து என்ன வேண்டுமானாலும்

சாதிக்க முடியும்

ஓட்ட ஓட்ட பட்டினியும் கிடக்க முடியும்

கடோதகஜன் போல சாப்பிடவும் முடியும்

நம்மால் ஆச்சர்யப்படவோ

அதிர்ந்துபோகவோ மட்டும்தான் முடியும்

கீழே விழுந்து

சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யலாம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page