Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா


பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா

குருவே சரணம் குரு பாதமே சரணம்

“மஹாபெரியவா” பக்தி “குரு பக்தி”

“குரு பக்தி” கலியின் கேடயம்

இதோ ஒரு நம் கண் முன்னே

வாழும் உதாரணம்

என்றும் உங்கள் உள்ளத்தில் குடியிருக்கும் நான் இன்று என்னுடைய “பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா” தொடர் பதிவில் திருவண்ணாமலையை சேர்ந்த கௌரிஷங்கர் மாமாவின் மஹாபெரியவா அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் என் ஆத்மா மிகவும் மகிழ்ச்சி அடைகிறது.

மாமாவின் பள்ளிப்படிப்பில் ஒரு பகுதி சென்னை ஸமஸ்க்ரித கல்லூரிக்கு அருகில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியிலும் மீதி படிப்பை கல்லூரி வரை கல்கத்தாவில் மாலை நேர கல்லூரியில் சேர்ந்து படித்தார்.

மாமாவை பொறுத்தவரை பகவான் ரமண மகரிஷியும் சேஷாத்ரி ஸ்வாமிகளும் மட்டுமே கடவுளின் அவதாரங்கள் என்றும் மஹாபெரியவா ஒரு மடாதிபதி ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே அவர் குரு என்ற எண்ணத்தில் இருந்த காலம்.. ஆனால் பலநாள் மஹாபெரியவா தடுத்து ஆட்கொண்ட பிறகு மாமா உணரத்தொடங்கினார் மஹாபெரியவா பரமேஸ்வர அவதாரம் என்று. மாமாவை மஹாபெரியவா பக்திக்கு ஒரு வாழும் உதாரணம் என்று சொல்வதற்கு பல கரணங்கள் உண்டு. அவற்றில் சில உங்களுக்காக இதோ.

குரு பக்தி : 1

ஒரு முறை மாமா மஹாபெரியவாளை தரிசனம் செய்ய சென்றபொழுது மாமாவிடம் மஹாபெரியவா கட்டளையிட்டாராம். " வேதம் தழைக்க வேண்டும் அதுனாலே உன்னோட பசங்களை வேதம் படிக்க அனுப்பு. அவர்கள் உன்னைவிட மூன்று மடங்கு சம்பாதிப்பார்கள்." என்று சொன்னவுடன் மறு பேச்சு பேசாமல் சரி பெரியவா என்று சொன்னது மட்டுமல்லாமல் வேத பட சாலையில் சேர்த்தும் விட்டார்.

வேதம் கற்று மாமாவின் புதல்வர்கள் வைதீக காரியத்தில் ஈடுபட்டனர். மஹாபெரியவா சொன்னபடி வருமானமும் மூன்று மடங்கு பெருகியது. இதுவரை மஹாபெரியவா சொன்னதை கடைபிடித்தார்.

இனிமேல்தான் மஹாபெரியவா சொல்லாதததயும் செய்தார். தன்னுடைய மகன்களை ஒரு வைதீக குடும்பத்திற்கு திருமணம் செய்துவைத்து வீட்டிற்கு வரும் மருமகள்கள் வைதீக குடும்பத்தை சேர்ந்தவளாகத்தான் இருக்கவேண்டும் என்று முயற்சி செய்தார் மாமா. முயற்சியின் முடிவு அதுபோலவே அமைந்தது.

.முயற்சி மட்டும்தான் மாமாவுடையது.முயற்சியை திருவினையாக்கியது மஹாபெரியவா. குருவின் வார்த்தை நிச்சயம் கரையேறும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயம் கரையேறுவோம். இது சாத்தியம் மட்டுமல்ல சத்தியமும் கூட..

இன்று மாமாவின் இல்லத்தை சுற்றிலும் வேதம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆல மரத்தின் விதைகள் சிறிய பொட்டு போலத்தான் இதுக்கும்.ஆனால் எதிர்காலத்தில் மண்ணுக்கும் விண்ணுக்கும் விழுதுகளுடன் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. வாழ்வில் எப்பொழுதுமே முயற்சி மிகவும் சிறியதுதான்.

ஆனால் நம் முயற்சி கொடுக்கும் பலன் ஆல மரத்தை போன்றது. நாம் வாழ்க்கையில் செய்யும் தவறுகளே, சிறிய முயற்சியை கூட பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிபோடுகிறோம்.

நம்முடைய முயற்சி முயற்சி மட்டுமே கண்ணுக்கு தெரியும் ஆனால் முயற்சி கொடுக்கும் பலன் கண்ணுக்கு தெரியாது. விளைவு ஒரு கற்பக விருக்ஷமாக கூட இருக்கலாம். நாமே நம்முடைய தலைவிதியை நிர்ணயித்துக்கொள்கிறோம் எதோ எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். .தவறாக நினைக்க வேண்டாம்.

குரு பக்தி : 2

மாமா கல்கத்தாவில் படித்துக்கொண்டிருக்கும் பொழுது ஒரு முறை T.M.P.மஹாதேவன் என்னும் உரை ஆசிரியர் இந்து மத தத்துவங்களின் முக்கியத்துவத்தை பற்றி வெளி நாட்டவருக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் போதித்து வந்தார்.வழக்கமாக தன்னுடைய விரிவுரை முடிந்தவுடன் மாணவர்களை கேள்வி கேட்க அனுமதிப்பார்.

அந்த நேரத்தில் நம்முடைய கௌரிஷங்கர் மாமா மஹாதேவன் ஐயாவிடம் கேள்வி ஒன்றை கேட்டார். அந்த கேள்வியும் மஹாதேவன் ஐயாவின் பதிலும் கீழே கொடுக்கிறேன்.

கேள்வி: ஐயா நீங்கள் ராமகிருஷ்ணர் மற்றும் பகவான் ரமணர் இவர்களை இறைவனின் அவதாரம் என்று கூறினீர்கள். அதுவரை சரி. எப்படி நீங்கள் ஒரு மடாதிபதி அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே குருவாக இருக்கக்கூடிய சங்கராச்சாரியாரை இறைவனின் அவதாரம் என்று சொல்கிறீர்கள். விளக்கம் கொடுக்க முடியுமா?

மஹாதேவன் ஐயா: நீ பெரியவாளை பார்த்திருக்கயா. போய் ஒரே ஒரு முறை பார்த்துவிட்டுவா. அதற்கு அப்பறமும் உனக்கு இந்தக்கேள்வியை கேட்காதோன்றினால் கேள் நான் பதில் சொல்கிறேன் என்றார். மாமா மஹாபெரியவாளை பார்த்தாரா. திரும்பவும் இதே கேள்வியை கேட்டாரா.காணுங்கள்

குரு பக்தி : 3

மாமா சொன்ன வார்த்தைகள். " நான் ராமணா எனக்கு தெரியவில்லை. ஆனால் என் தம்பி எனக்கு லக்ஷ்மணன்" யாருக்கு வரும் இந்த ஒரு பரந்த சிந்தனை. விவரங்களுக்கு மேலே படியுங்கள்.

மாமாவிற்கு சந்தரசேகர் என்று ஒரு தம்பி.இவருக்கு ஒரு முறை ஊசி போட்டதால் அதன் பக்க விளைவாக உடல் நலம் பாதிக்கப்பட்டது.இந்த மாதிரி பக்க விளைவுகள் லக்ஷத்தில் ஒருவருக்கு மட்டுமே வரும்.அதுபோல் மாமாவின் தம்பியும் பாதிப்புக்கு உள்ளாகி மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரை பரிசோதித்த மருத்துவர் உயிர் பிழைப்பது மிகவும் கடினம்.உங்கள் கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் என்று சொன்னார். கௌவ்ரிஷங்கர் மாமாவிற்கு தெரிந்த ஒரே கடவுள் மஹாபெரியவா.

ஓடினார் மஹாபெரியவாளிடம். மாமாவின் தம்பி காப்பாற்றப்பட்டாரா. எப்படி மஹாபெரியவா மாமாவின் தம்பி இருக்கும் மருத்துவமனைக்கு சென்று காட்சி கொடுத்து தம்பி லக்ஷ்மணனை காப்பாற்றினார். இதையெல்லாம் அறிந்து மஹாபெரியவா தரிசனம் காண உடனே பாருங்கள் இந்த காணொளியை.

இன்னும் எத்தனையோ அற்புதங்களை உள்ளடக்கிய வாழ்க்கை மாமாவின் வாழ்க்கை. எல்லா அற்புத அனுபவங்களையும் தன்னுள் கொண்டுள்ள இந்த காணொளியை தள்ளிப்போடாமல் உடனே கேட்டு மஹாபெரியவா தரிசனம் காணுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் இந்த காணொளியை காணுங்கள்.

நம்முடைய குணாதிசயங்களை மாற்றி அமைக்க வேண்டிய

நேரம் இது சிந்திப்போம் செயல் படுவோம்.

நாம் ஒரு சிஷ்யனுக்கு உண்டான தகுதியை

வளர்த்துக்கொண்டுவிட்டால்

இறைவன் நமக்கு ஒரு குருவை காண்பிப்பார்

அல்லது ஒரு குரு நம்மை அழைப்பார்

மஹாபெரியவா அழைக்கின்றார்

செல்வோம் வாருங்கள்

குருவின் குருகுலத்திற்கு

https://www.youtube.com/watch?v=hPf_Hcq2HkU

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்