Featured Posts

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்


மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

நான் ஒரு ஆன்மீக விவசாயி

தூவும் விதைகள் பண்பட்ட நிலத்தில் விழுந்தால்

விளைச்சல் எப்படி அமோகமோ

அப்படி என்னுடைய மஹாபெரியவா

என்னும் விதைகள் பக்குவப்பட்ட

மனதில் விழுந்தால் மஹாபெரியவா

என்னும் விருட்க்ஷம்

வானளாவ வளரும் நாம் எல்லோருமே

பண்பட்ட பக்குவப்பட்ட இதயங்கள்

என்பதில் சந்தேகமென்ன

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

இடம்: ஸ்ரீசைலம்

மாநிலம்: ஆந்திரா

நேரம்: மாலை சுமார் ஆறு மணி

சூழல்: காட்டுச்சூழல்

பகலும் இரவும் சந்திக்கும் மாலை நேரம். ஓங்கிய அடர்ந்த காடு. விலங்குகளும் பறவைகளும் அவர் அவர் கூட்டிற்கும் குகைகளுக்கும் சென்றடையும் நேரம்.. எதைப்பற்றியும் கவலைப்படாமல் சலசலவென்று ஓடிக்கொண்டிருக்கும் நதிகள். தடதடவென்று கொட்டும் அருவிகள். குக்கூ என்னும் குயிலின் இன்னிசை கச்சேரி இரவில் மட்டுமே பார்க்கத்தெரிந்த ஆந்தைகளின் உருட்டு விழிகள்.

எங்கோ எதையோ பார்த்து பயந்து ஊளையிடும் நரிகள். இதையெல்லாம் பார்த்து பயந்து போன குரங்குக்குட்டிகள் தாயின் வயிற்றை இருக்க அணைத்து நடுங்கிக்கொண்டிருந்தன.. நினைத்துப்பாருங்கள் இதயத்தை உறைய வைக்கும் பயங்கர இந்தக்காட்டுச்சூழல்.

இவற்றிக்கெல்லாம் முத்தாய்ப்பாக இந்தக்காட்டில் வசிக்கும் கொள்ளைக்காரர்கள். தப்பித்தவறி யாரும் இந்தக்காட்டை கடக்க நினைத்தால் அவர்களிடமிருந்து எல்லாவற்றயும் கொள்ளையடித்து விட்டு சமயத்தில் அவர்களை கொன்றும் நர மாமிசம் சாப்பிடும் காட்டுவாசிகள்.

இவர்களுக்கு "செஞ்சுக்கள்" என்னும் பெயர். அந்த வட்டாரத்தில் செஞ்சுக்கள் என்றாலே யாருக்கும் குலை நடுங்கும். அந்தப்பகுதியில் குழந்தைகளுக்கு அன்னம் ஊட்டும் பொழுது கூட செஞ்சுக்கள் பெயரை சொல்லித்தான் அன்னம் ஊட்டுவார்கள். இது தான் இன்றைய அற்புதத்தின் சூழல். வாருங்கள் இனி மஹாபெரியவா நிகழ்த்திய அற்புதங்களுக்குள் நுழைவோம்.

ஒரு முறை மஹாபெரியவா ஆந்தராவிலுள்ள ஸ்ரீசைலம் என்னும் ஊரில் முகாமிட்டு தங்கியிருந்தார். வட மாநிலம் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகம் ஓரிசாவிலிருந்தும் பக்தர்கள் வந்து மஹாபெரியவாளை தரிசம் செய்துவிட்டு ஆசிர்வாதங்களையும் வாங்கிச்சென்றனர்

மஹாபெரியவா ஒரு முகாமை காலி செய்துவிட்டு வேறு ஊருக்கோ அல்லது வேறு கிராமத்திற்கோ செல்ல எப்போது முடிவு செய்வார் என்பது யாருக்கும் தெரியாது. இப்படி ஒரு நாள் ஸ்ரீசைலம் முகாமை முடித்துக்கொண்டு பக்கத்து ஊருக்கு செல்ல மஹாபெரியவா முடிவெடுத்தார்கள். நேரம் மாலை சுமார் ஆறு மணி இருக்கும்.

பலரும் அவர்களுக்கு தெரிந்த வழிகளை சொல்லிக்கொண்டிருந்தார்கள்.அதில் ஒரு உள்ளூர் thiவாசி மட்டும் கீழ் வருமாறு சொன்னார்.

பெரியவா, பக்கத்தில் உள்ள அடர்ந்த காட்டின் வழியே சென்றால் நீங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு விரைவாக சென்று அடையலாம். ஆனால் அந்த காட்டுவழி மிகவும் ஆபத்தானது. நேரம் வேறு ஆகிவிட்டது. நீங்கள் அந்தக்காட்டை சென்றடையும் பொழுது இருள் சூழும் நேரமாகி விடும்.மாற்று பாதையில் சென்றால் நீங்கள் தொலை தூரம் நடக்க வேண்டும். நீங்கள் நாளை காலையில் கிளம்பலாமே என்று யோசனை சொன்னார்.

மஹாபெரியவா ஒரு முறை முடிவு செய்து விட்டால் அதை யாரும் மாற்ற முடியாது. ஆகவே மஹாபெரியவா முடிவு செய்த படி கிளம்ப ஆயத்தமாகிவிட்டார்.. ஸ்ரீகார்ய மனுஷாளில் சிலர் மஹாபெரியவாளிடத்தில் தங்கள் பயத்தை சொன்னார்கள். அவர்கள் சொன்னது "விலங்குகள் கூட பரவாயில்லை பெரியவா. அந்த கொள்ளை கூட்டம் தான் சற்று பயமாக இருக்கிறது." என்று தங்கள் பயத்தை சொன்னார்கள்.

அதற்கு மஹாபெரியவா அளித்த பதில் என்ன தெரியுமா? திருடர்களும் நம்மைப்போல மனிதர்கள் தானே. அவர்களுக்கு வயிற்றுக்கு இல்லை திருடுகிறார்கள்.அவர்களும் நல்லவர்கள் தான். கைங்கர்ய மனுஷாள் மஹாபெரியவாளிடம் கேட்டார்கள் எப்படி பெரியவா அவர்கள் திருடர்கள் நல்லவர்களாக இருக்க முடியும். அதற்கு மஹாபெரியவா சொன்னார் நம் கண்ணப்ப நாயனாரும் அவர்கள் குலத்திலிருந்து வந்தவர் தான். மனுஷாள்ன்னு இருந்தால் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும் நல்லதயே பாருங்கோ கெட்டது காணாமல் போயிடும்.

இந்த மானுட அணுகுமுறை

யாருக்கு வரும்

மஹாபெரியவாளைத்தவிர.

மஹாபெரியவா சொன்னா சொன்னதுதான். .எல்லோரும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இஷ்ட தெய்வத்தை நினைத்து வணங்கிவிட்டு வண்டியை கட்டிக்கொண்டு கிளம்பி விட்டனர். ஊரின் எல்லையை கடந்து அந்த பயங்கர காட்டை நெருங்கும் நேரம் வந்து விட்டது.

காட்டின் எல்லை கோட்டை மிதித்து விட்டனர் மஹாபெரியவாளின் ஸ்ரீகார்ய மனுஷாள். மஹாபெரியவா பல்லக்கின் உள்ளே அமர்ந்திருந்தார். எல்லோரும் ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர மந்திரத்தை சொல்லிக்கொண்டு நடந்தார்கள். சிலர் காமாட்சி அம்பாள் ஸ்லோகத்தையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும் சொல்லிக்கொண்டு ஒரு வித பயத்துடனேயே நடந்து கொண்டிருந்தார்கள்.

பகல் இரவு சந்திப்பில் இருந்த அந்த நாள் இரவுப்பகுதிக்குள் பிரவேசித்தது.

மஹாபெரியவாளை பல்லக்கில் சுமந்தப்படி ஸ்ரீகார்ய மனுஷாள் நடந்து கொண்டிருந்தனர். அவர்கள் எல்லோரும் மந்திர கோஷங்களை சொல்லிக்கொண்டே நடந்தனர். இந்த சமயத்தில் சற்று தொலைவில் தீப்பந்தங்களை ஏந்திக்கொண்டு பார்க்கவே பயங்கரமாக இருக்கும். மனித உருவங்கள் இவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தனர். எல்லோரும் மஹாபெரியவாளை அழைத்து தங்கள் உயிர் போகும் பயத்தை தெரிவித்து தங்களை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டனர்.

சற்று சிந்தித்துப்பாருங்கள்:

உடல் திறனற்றுப்போன போன சன்யாசி

தங்களை காப்பாற்ற முடியும்

என்ற நம்பிக்கை எப்படி வந்தது.

இதிலென்ன சந்தேகம்.

மஹாபெரியவா

பரமேஸ்வரன் அவதாரம் என்பதால்தான்.

கொள்ளைக்கார கும்பல் மஹாபெரியவாளின் பல்லக்கை சுற்றி நின்று கொண்டு உள்ளே இருப்பது யார் என்று கொள்ளை கூட தலைவன் கர்ஜித்தான். சுற்றி இருப்பவர்கள் உச்ச குரலில் ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர என்று கோஷ்டியாக குரல் எழுப்பினார்கள்.

இந்த சமயத்தில் மஹாபெரியவா தன்னுடைய பல்லக்கின் திரைசீலையைவிலக்கிப்பார்த்தார். கொள்ளை கூட்டத்தலைவன் கண்கள் மஹாபெரியவாளின் கண்களை சந்தித்தது. விளைவு

கொள்ளை கூட்டத்தலைவன் கண்கள் பணிந்தன.

தரையில் மண்டியிட்டான்.

இதைப்பார்த்த மொத்த கூட்டமும்

தரையில் மண்டியிட்டு வணங்கினார்கள்.

கேட்கவேண்டுமா! மஹாபெரியபவாளுக்கு. மற்றவர்கள் வயிறு நிரம்புவதில் சந்தோஷப்படுவதில் அவருக்கு நிகர் அவர்தான். மஹாபெரியவா பல்லக்கை கீழே வைக்கச்சொன்னார். ஸ்ரீ கார்ய மனுஷாளை அந்த ஆற்றங்கரையிலேயே அடுப்பு மூட்டி சாம்பார் சாதம் அவியல் தயிர் சாதம் என்று வாயிக்கு ருசியாக சமைத்து அந்த கொள்ளைக்கூட்டத்திற்கு உணவு பரிமாற சொன்னார்கள்.

அந்த கொள்ளைக்கூட்ட கும்பல் இவ்வளவு ருசியாக சாப்பிட்டதே இல்லை. அவ்வளவு ருசி. கொள்ளை கூட்டத்திற்கு மகிழ்ச்சி.ஸ்ரீகார்ய மனுஷாளுக்கும் சந்தோஷம். இதைப்பார்த்த மஹாபெரியவாளுக்கு மனம் குளிர்ந்தது. இந்த மொத்த சந்தோஷம் வானத்தில் இருக்கும் வருணபகவானையும் சந்தோஷப்படுத்திருக்க வேண்டும். மழை பெய்து மண்ணும் குளிர்ந்தது.எல்லோர் வயிறும் நிறைந்தது மனமும் குளிர்ந்தது விளைவு பரமேஸ்வரனும் மகிழ்ந்தான் அண்ட பிரபஞ்சமும் மகிழ்ந்தன.

இரவு உணவு சாப்பிட்டு முடிந்தது. எல்லோரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர். இந்த சமயத்தில் கொள்ளை கூட்டத்தலைவன் ஸ்ரீ கார்ய மனுஷர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். ஸ்ரீ கார்ய மனுஷன் ஒருவர் வேகமாக முடியாது என்று தலையை இருபுறமும் வேகமாக அசைத்தார்.

இதைப்பார்த்த மஹாபெரியவா அவர்களை அழைத்து விவரம் கேட்டார். அப்பொழுது விவரம் தெரிவிக்கப்பட்டது. விவரம் இதுதான்.

"இந்த சந்தோஷ தருணத்தில் கொள்ளை கூட்டத்தின் பழக்கம் ஆண்களும் பெண்களும் இரு பாலரும் நடனம் ஆடுவது வழக்கம்.இந்த மகிழ்ச்சியான தருணத்தில் மஹாபெரியவாளை மகிழ்விக்க நடனம் ஆடவேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.மஹாபெரியவா சிரித்துக்கொண்டே அவர்களிடம் சொன்னார்.

நீங்கள் என்