Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா


பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா

டாக்டர் விழிநாதன்

சுமைகளை சுமக்கத்தெரிந்தால்

சுமைகள் கூட சுகமான ராகங்கள்தானே

வாழ்க்கை துன்பங்களும் ஒரு சுமைதானே

சுமக்க கற்றுக்கொள்வோம்

வாழ்க்கையை சுகமாக வாழுவோம்

நாம் இதுவரையிலும் பக்தர்கள் வாழ்வில் நிகழ்ந்த மஹாபெரியவா அற்புத அனுபவங்களை நேரடியாக பக்தர்களே நம்மிடம் பேசினார்கள். ஆனால் இந்த காணொளி சற்றே வித்தியாசமானது.

இந்த காணொளியில் டாக்டர் விழிநாதன் மஹாபெரியவாளுடனேயே ஏறக்குறைய நாற்பதாண்டு காலம் கூடவே இருந்து மஹாபெரியவாளுக்கு சமஸ்க்ரிதம் சம்பந்தமான வேலைகளை செய்துகொண்டிருந்தார். டாக்டர் விழிநாதன் சமஸ்க்ரிதத்தில் புலமை பெற்றவர். மஹாபெரியவளோடு உரிமையாக பழகக்கூடியவர்.

இவர் பல அத்வைத சபைகளில் உறுப்பினர்கவும் முக்கிய நபர்களில் ஒருவராகவும் இருந்து கொண்டு பல ஸமஸ்க்ரித பொக்கிஷங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறார். பல ஊர்களில் மஹாபெரியவா தன்னுடைய முகாம்களை அமைக்கும்பொழுது கூடவே இருந்து பல கைங்கர்யங்களை மேற்கொண்டு வந்தார் டாக்டர் விழிநாதன்.

அந்த மாதிரி சமயங்களில் வெளியூர்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் முகாம்களுக்கு வந்து முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு மஹாபெரியவாளின் அனுமதியையும் ஆசீர்வாதங்களையும் பெறுவது வழக்கம். அந்த மாதிரி சமயங்களில் டாக்டர் விழிநாதன் கூடவே இருந்து பக்தர்களின் அனுபவத்தை அனுபவித்தவர்.

அந்த மாதிரி அனுபவங்களில் இருந்து டாக்டர் விழிநாதன் இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த காணொளியில் இருந்து ஒரு சில அற்புத அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆனால் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வது மஹாபெரியவா அற்புத சாகரத்தில் ஒரு துளி தான்.அற்புத சாகரத்தை முழுவதும் அனுபவிக்க இந்த காணொளியை காலம் தாழ்த்தாமல் உடனே காணுங்கள்.மஹாபெரியவா தரிசனத்தையும் அனுபவியுங்கள்.

இளையாத்தங்குடியில் நிகழ்ந்த அற்புதம்

மஹாபெரியவா இளையாத்தங்குடியில் முகாமிட்டிருந்த பொழுது மஹாபெரியவா பக்தர் ஒருவர் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்வதற்கு தன்னுடைய சகோதரியின் மகளுக்கே திருமணம் பேசிமுடிக்க முடிவு செய்திருந்தார். இவர் ஜோசியர்கள் பலரிடம் ஜாதகத்தை காண்பித்தார். ஆனால் எல்லா ஜோசியர்களுமே ஒருமித்த குரலில் இந்த இரண்டு ஜாதகத்தையும் சேர்த்தால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று தெரிவித்தார்கள்.

இப்பொழுது உங்களை இளையாத்தங்குடிக்கு அழைத்து செல்கிறேன்..

டாக்டர் விழிநாதனும் உடன் இருக்கிறார். மஹாபெரியவா விழிநாதனிடம் என்ன விஷயம் என்று கேள் என்று உத்தரவிடுகிறார்.

மஹாபெரியவா டாக்டர் விழிநாதனை விழி என்றுதான் அழைப்பர். ஆகவே நானும் மஹாபெரியவா அழைத்தபடியே எழுதுகிறேன். நீங்களும் உங்கள் அருகில் மஹாபெரியவா இருப்பதாக கற்பனை பணிக்கொள்ளலாம்.

மஹாபெரியவா சொல்கிறார் விழி அவருக்கு என்ன பிரச்சனை என்று கேள். விழியும் கேட்கிறார். அவர் நான் ஏற்கனவே எழுதியவற்றை ஒன்று விடாமல் சொல்கிறார்.

மஹாபெரியவா சொன்னது தன்னுடைய மகனுடைய திருமண விஷயமாக என்னிடம் பேச வந்திருக்கிறார். தன்னுடைய சகோதரி மகளுக்கே திருமணம் பேசிமுடிக்க நினைக்கிறார். ஆனால் நினைத்து பார்க்கமுடியாத விளைவுகள் ஏற்படும் என்று ஜோசியர்கள் சொன்னதாக சொல்கிறார். விளைவுகளை தன் வாயால் சொல்லவே பயப்படுகிறார்.

சகோதரி மகளுக்கே திருமணம் முடிப்பதற்கு இன்னொரு காரணம் சொத்து வெளியில் போகிறது. இது மட்டும் மஹாபெரியவா சேர்த்துக்கொள்கிறார்.

மஹாபெரியவா சில வினாடிகள் கண்ணை மூடி யோசித்து விட்டு சொன்னார். இவனை சகோதரி மகளுக்கே கல்யாணம் பண்ணிவைக்கச்சொல். நீண்ட நெடுங்காலம் நன்றாக வாழ்வார்கள். இன்று வரை சீரும் சிறப்புமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது புரிகிறதா அரைகுறை ஜோசியர்கள் எத்தனை பேர் வாழ்வில் விளையாடுகிறார்கள்.நான் எல்லா ஜோசியர்களையும் குறை கூறவில்லை.ஜோசியத்தையும் குறை கூறவில்லை. ஜோசியமும் நம் வேதத்தில் ஒரு பகுதி. வேதத்தில் கூறியது அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மை.

மஹாபெரியவளுக்கு வந்த சந்தேகம்:

மஹாபெரியவா விழியை அழைத்து"ஏன்டா விழி நான் நிறைய பேருக்கு அனுக்கிரஹம் பண்ணறேன். பிரார்த்தனை பலித்தவர்கள் வந்து என்னிடம் சொல்லுகிறார்கள்.இன்னும் எத்தனையோ பேர் பிரார்த்தனைகள் பலிக்காதவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்களே.

அப்படியானால் நான் அனுக்கிரஹம் பண்ணுவதில் பராபட்க்ஷம் காட்டுவதாக ஆகி விடாதா.? அப்படியானால் நான் என்னடா உண்மையான சன்யாசி. என் சன்யாச இலக்கணம் கெட்டு போய்விடாதா. இதற்கு ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும். விழி நீ ஒன்னு பண்ணு. இப்போ ஒரு சதஸ் நடத்தியாக வேண்டும்.(சதஸ் என்றல் ஒரு பொருளின் மீது விவாதம் நடத்தி முடிவு காணுவது)

அன்று மாலையே சதஸ் கூட்டப்பட்டது. கற்றறிந்தவர்கள் பண்டிதர்கள் என்று எல்லோருமே வந்தார்கள். பல மணி நேரம் சதஸ் நடந்தது. இறுதியில் மஹாபெரியவாளே ஒரு விளக்கத்தை கொடுத்து சதசை முடித்து வைத்தார். என் சந்தேகத்திற்கும் இது ஒரு விளக்கமாக அமைந்தது.

விளக்கம் இதோ உங்களுக்காக:

"நூறு பக்தர்கள் முகம் பார்க்கும் கண்ணாடியை பரப்பி வைத்து அதில் சூரிய ஒளியை பிரதிபலிக்க வைக்கிறார்கள். எல்லா கண்ணாடியிலும் சூரிய ஒளி ஒரே மாதிரி பிரதிபலிக்குமா. நிச்சயமாக இல்லை.அப்படியானால் இது சூரியனின் குற்றமா இல்ல கண்ணாடியின் குற்றமா. மஹாபெரியவா ஓர் முடிவுக்கு வந்து இந்த சதசை முடிக்கிறார். பிரதிபலிப்பில் வித்யாசம் சூரியனின் தவறு கிடையாது.

கண்ணாடி உடைந்திருக்கலாம் அளவு சிறியதாக இருக்கலாம் கண்ணாடியின் மேற் பரப்பு தூசி படித்திருக்கலாம். ஆகவே இது கண்ணாடியின் தவறேயன்றி சூரியனின் தவறில்லை. இது போல பக்தர்களின் மனது பக்தி நம்பிக்கை இன்னும் எவ்வளவோ விஷயங்கள் பிரார்த்தனை பலிப்பதை முடிவு செய்கிறது. ஆகவே இது என் தவறல்ல என்று முடிக்கிறார்.

மொழிக்கு இலக்கணம் இருக்கலாம் நட்புக்கு இலக்கணம் இருக்கலாம் உறவுகளுக்கு இலக்கணம் இருக்கலாம். ஆனால் சன்யாசத்திற்கு இலக்கண கண்ட ஒருவர் உண்டென்றால் அவர் மஹாபெரியவா ஒருவரே.

தன்னை எவ்வளவு வருத்திக்கொண்டு தன்னையே புடம் போட்டுக்கொள்கிறார். இப்பொழுது புரிகிறதா நமக்கும் இறைவனுக்கும் உள்ள வித்யாசம்..மஹாபெரியவாளே சொல்லியிருக்கிறார். தன்னிடம் ஒரு ஆத்மாவை நெருங்க அனுமதிப்பதற்கு முன்னால் பதினோரு முறை சல்லடையில் போட்டு சலித்த பின்தான் அனுமதிப்பேன் என்று. எனக்கு என்னுடைய அனுமதியை நினைத்து பார்க்கவே மலைப்பாகவும் பயமாகவும் இருக்கிறது.

இந்த வீடியோ காணொளியின் மூலம் நீங்கள் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ளலாம்.அவைகளில் சில இதோ உங்களுக்காக.

  • எதார்த்தமான வாழக்கையும் திறந்த மனதுடன் கடைபிடித்து வாழக்கூடிய வாழ்க்கை எவ்வளவு இனிமையானது அழகானது என்பது உங்களுக்கு புரியும்..

  • உங்களுடைய மஹாபெரியவா நெருக்கம் இன்னும் பல படிகள் முன்னேறும்.

  • வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையும் பிடிப்பும் உண்டாகும்.

  • சுருக்கமாக சொன்னால் மஹாபெரியவளின் இறை சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த ஒரு சந்தோஷமும் திருப்தியும் கிடைக்கும்.

வழக்கமாக வாழ்க்கையில் வேலைகளை தள்ளிபோடுவதை போலெ இந்த வீடியோ காணொளியை தள்ளிப்போடாதீர்கள். மிகப்பெரிய பொக்கிஷத்தை இழந்த ஏமாற்றமே மிஞ்சும். இந்த வீடியோ காணொளியை பார்த்து விட்டு உங்கள் எண்ணங்களை இந்த இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/watch?v=9l98-F67lYw&t=1644s

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square