என் வாழ்வில் மஹாபெரியவா -073

என் வாழ்வில் மஹாபெரியவா -073
பிரதி வியாழன் தோறும்
ஒரு மனிதனின் மாற்றம் என்பது
ஆத்மா மேலோங்கி மனது கீழ் தங்குவது
நொடிப்பொழுதில் நிகழக்கூடியதுதான் மாற்றம்
மனிதனின் மாற்றம் என்பது
இறைவனிடம் கேட்டு பெறுவதல்ல
பல கோடி ஆத்மாக்களில் இறைவன் உங்களை
தேர்ந்தெடுப்பதற்கு காரணம் இதுவென்று சொல்லமுடியாத
ஒரு பிரபஞ்ச ரகசியம் தேவ ரகசியம்
என் அனுபவத்தில் விளைந்த எழுத்துக்கள் இவை
மஹாபெரியவா பாதமே சரணம்
ஒருவருக்கு வாழ்க்கையில் மாற்றம் என்பது எப்பொழுதுவரும் எப்படி வரும் என்பது யாருக்கும் தெரியாது..நொடிப்பொழுதில் நிகழக்கூடிய மாற்றம் ஒரு மனிதனின் அக மாற்றம் புற மாற்றம் இரண்டையுமே புரட்டிப்போட்டு ஐம்பது அறுபது வயதுகளில் ஒருபுதிய தோற்றப்பொலிவுடன் சமுதாயமே நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு மாற்றம் கண்ட மனிதனை மாற்றிவிடும்.
சமுதாயம் கூட உங்கள் மாற்றத்தை அறிந்து அனுபவித்த பிறகு ஏற்றுக்கொள்ளும்.ஆனால் உங்களை சேர்ந்த நெருங்கிய சொந்தங்கள் எல்லோருமே உங்கள் பழைய வாழ்க்கையை பேசிக்கொண்டு உங்கள் மாற்றத்தை நிச்சயம் ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். .அவர்களால் உங்கள் மாற்றத்தை ஜீரணிக்கவே முடியாது.
நீங்கள் எதிர்த்து நின்று சொந்தங்களுடன் போரிட்டாலும் உங்களால் சமாளித்து அவர்களுக்கு புரிய வைக்க முடியாது.. புரிந்தாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் இறைவனின் அருளும் ஒரு மஹானின் அருள் கடாக்க்ஷமும் இருந்தால் எந்த எதிர்ப்பையும் சமாளித்து உங்களால் முன்னேற முடியும்....உங்கள் முன்னேற்றம் தொட முடியாத உயரத்திற்கு சென்று விடும்..அப்பொழுது உங்கள் சொந்தங்களால் கூட உங்களை தொட முடியாது.
நொடிப்பொழுதில் நிகழக்கூடிய இந்த மாற்றம் எண்பத்தி நான்குலக்க்ஷம் பிறவிகளில் மிகவும் உயர்ந்த பிறவி மனிதபிறவி. பல லக்க்ஷம் மனித பிறவியில் ஏதாவது ஒரு பிறவியில் உங்களை ஒரு குரு அழைத்து அனுக்கிரஹம் செய்து தன்னுடைய தவத்தின் பலனை உங்களுடன் வாழும் சமுதாயத்திற்காக பகிர்ந்து கொண்டு அருள் செய்வது என்பது இறைவனே நேரில் வந்து வாழ்த்தி விட்டு போகும் ஒருநிகழ்வு.
மாற்றம் நிகழ்ந்த பிறகு உங்கள் எண்ணங்கள் நினைவாகும் சொற்கள் சபையேறும்.செயல்களில் இறைவனே தரிசனம் கொடுப்பான். நீங்கள் இந்த எல்லையில்லா பிரபஞ்சத்துடன் ஒன்றாக கலக்கும் நேரம் உங்களுக்கு வந்து விட்டது என்று அர்த்தம்.
ஆகவே உங்கள் சொந்தங்கள் என்ன கிண்டல் செய்தலும் கேலி செய்தாலும் கவலை படாதீர்கள்.நீங்களும் மற்றவர்களை அழைத்துக்கொண்டு கரை ஏறுங்கள்.கிடைத்த அரிதிலும் அரிதான பொக்கிஷத்திற்கு இணையான இந்த மாற்றத்தை தூய புனித உள்ளத்தோடு மற்றவர்களுக்கு எடுத்து செல்லுங்கள்..
இப்படிப்பட்ட சொந்தங்களுக்கு ஒரு செய்தி.. மாற்றம் என்பது எதோ ஒரு ஆத்மா இறைவனிடம் வேண்டிப்பெறுவதல்ல. இறைவன் ஒரு காரணத்திற்காக ஒரு ஆத்மாவை தேர்ந்தேடுத்து அந்த ஆத்மாவிற்கு சகல சக்தியையும் கொடுத்து இறைவன் செய்ய வேண்டிய வேலைகளில் ஒரு பகுதியை கொடுத்து செய்ய வைப்பான்.
வேண்டுமானால் உங்கள சந்தோஷத்திற்காக திண்ணைக்கு திண்ணை உட்கார்ந்து மாற்றம் கண்ட மனிதனை பற்றி கேவலமாக பேசிக்கொண்டிருக்கலாம்.உங்கள் கண் முன்னே இல்லாத ஒருவரை பற்றி கேவலமாக பேசி நார் நாராக கிழித்து தோரணம் கட்டலாம்..ஆனால் நீங்கள் இதன்மூலம் சாதிப்பது என்ன. எதிரில் இல்லாத ஒருவரை கேவலக பேசி மகிழ்வது ஒரு நிராயுத பணியை தாக்குவதற்கு ஒப்பாகும்.இது மிகப்பெரும் பாவம். இதற்கு இறைவன் சாம்ராஜ்யத்தில் விமோச்சனமே கிடையாது.
ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்.இறைவன் ஒருவருக்கு வாழ்க்கையில் மாற்றங்களை கொடுத்து ஒரு நல்ல ஆத்மாவாக பரிமளிக்க வைக்கும்பொழுது நீங்களும் அந்த இறை பணியில் பங்குகொண்டு அந்த மாற்றம் கண்ட மனிதனை ஊக்குவித்தால் உங்கள் ஜென்மாந்திரத்து பாவங்கள் கழிந்து அடுத்தபிறவியில் ஒரு நல்ல கற்பதில் நீங்கள் விதையுண்டு வளரலாம்.
ஒரு ஆத்மாவிற்கு இறைவன் கொடுத்த இட்ட கட்டளைகளையும் வேலைகளையும் யாரால் எதிர்க்க முடியும்.. ஒரு ஆத்மாவின் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாது எதிர்ப்பது இறைவனையே எதிர்க்கும் பெரும் பாவத்திற்கு இணையாக இறைவன் கருதுவான்.
ஆனால் என்னை இறைவனும் பிரபஞ்ச தெய்வமான மஹாபெரியவாளும் தேர்ந்தேடுத்து ஒரு ஆத்மீக பணியை எனக்குக்கொடுத்துளார்.. இதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. மஹாபெரியவா எனக்குக்கொடுத்த பணியை இது வரை பாதைமாறாமல் செய்து கொண்டு இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
மஹாபெரியவா கொடுத்த இந்த ஆன்மீகப்பணியில் எத்தனை எத்தனை அற்புதங்கள்..என் வாழ்க்கையிலும் சரி மற்றவர்கள் வாழ்க்கையில் என் மூலமாக நிகழ்ந்த நிகழ்ந்துகொண்டிருக்கிற நிகழப்போகும் அற்புதங்களுக்கு எல்லையே இல்லை.
எல்லா அற்புதங்களுமே அறிவியலை தாண்டியது காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டது..சாத்தியங்களை கடந்தது. இப்படி நிகழ்ந்த ஒருஅற்புதத்தை தான் இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன். இனி அற்புதத்திற்குள் உங்களை அழைத்து செல்கிறேன்.
இந்த மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி வியாழக்கிழமை அதிகாலை மணி மூன்றுமுப்பது. எனக்கு ஒருகனவு. 21/02/19
கனவின் விவரம் இதோ உங்களுக்காக.:
மும்பையில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வயதான தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகள்..அவர் அமெரிக்காவில் படித்துக்கொண்டே வேலை தேடுகிறார். இவர்கள் மகள் ஒரு புனித ஆத்மா.சுய நலத்தை மையமாக வைத்து பொன் பொருள் மீதே கவனம் வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் பெற்றோர்களை தன்னுடன் அமெரிக்காவில் வாழ வைத்து அவர்கள் தனக்காக பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் தான் ஒரு ஆறுதல் மருந்தாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒருகுழந்தை.
இந்த குடும்பம் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான குடும்பம். நம்முடைய இணைய தளத்தில் நாகலட்சுமி மாமியின் ஏழு வருட ஒற்றை தலை வலி எவ்வளவோ செலவழித்தும் போகாமல் குரு பூஜைக்கு உத்தரவு வேண்டி எனக்கு மின்னஞ்சல் கொடுத்த அதே வினாடி ஏழு வருட தலை வலியும் இருக்குமிடம் தெரியாமல் பறந்தது. இந்த அற்புதத்தை இந்த தம்பதியினரின் ஒரே மகள் ஹரிணி உங்களுக்கு காணொளி மூலம் உங்களுடன் பேசியது நினைவிருக்கலாம்.
வேண்டுமானால் உங்களுக்காக அந்த காணொளியின் சுட்டியை உங்களுக்கு இங்கே கொடுத்துளேன்.பார்த்து கேட்டு மகிழுங்கள்.
https://www.youtube.com/watch?v=jkqrtT40qdU&t=126s
சென்ற குரு வாரம் வியாழக்கிழமை மும்பையில் நிகந்த அற்புதத்தை தன்னுடைய அம்மா சொல்லக்கேட்டு அமெரிக்காவில் இருந்து பேசி இன்னொரு காணொளி மூலம் உங்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் உங்களுடன் பேசுவார். அதற்கு முன்னோட்டமாக இந்த அற்புதத்தை இந்த பதிவின்மூலம் நான் ஒரு பதிவாக உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
அந்த அதிகாலை வேளையில் நாகலட்சுமி மாமி என்கனவில் வருகிறார். மிகவும் உச்ச ஸ்தாயியில் அழுகிறார். மாமிக்கு அருகில் மாமா ஒரு கட்டிலில் படுத்து கொண்டு இருக்கிறார்.மாமி அழுதுகொண்டே என்னிடம் சொன்னது.
"மாமா நீங்கள் மஹாபெரியவா குரு பூஜைக்கு உத்தரவு வாங்கிக்கொடுத்து நானும் முடிந்த அளவு சிரத்தையுடன் பண்ணேன். ஏழு வருஷம் நரகமாய் இருந்த ஒத்தை தலை வலி நொடி பொழுதில் சரியானது.. இப்போ நீங்கள் மஹாபெரியவாளிடம் சொல்லி என் மாமாவை எனக்கு திருப்பி கொடுக்க சொல்லுங்கள் என்று கதறி அழுதார்.
எனக்கு கனவு கலைந்து விட்டது. ஆனால் என்மனம் மிகவும் பாரமாக இருந்தது.நானும் குளித்து விட்டு மஹாபெரியவா முன் போய் நின்றேன்.பிறகு முதல் பிரார்த்தனையாக நாகலட்சுமி மாமிக்கு செய்தேன். பின் வருமாறு மஹாபெரியவாளிடம் பேசினேன்.
நான்:பெரியவா இன்னிக்கு காத்தலே எனக்கு ஒருகனவு வந்தது பெரியவா நான் ரொம்ப கனத்த மனோசோட இருக்கேன்.
பெரியவா :என்னடா கனவு.சொல்லு
நான் :பெரியவா மும்பை நாகலட்சுமி மாமியின் ஏழு வருஷ ஒற்றை தலை வலியை நொடிப்பொழுதில் போக வெச்சேள். இன்னிக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னோட கனவிலே வந்து உங்க கிட்டே சொல்லி என் ஆத்துகாரரைவாங்கித்தாங்கோ என்றர் . எனக்கு பயமா இருக்கு பெரியவா.ஏதாவது நடக்ககூடாதது நடக்க வேண்டாம் பெரியவா..கொஞ்சம் அவாளுக்குஅருள் பண்ணுங்கோ பெரியவா.என் கண்கள் கண்ணீர் குளமானது. ஹரிணி என் பொண்ணுமாதிரி பெரியவா.
பெரியவா:சரி போடா நான் பாத்துக்கறேன்
மற்றவர்கள் பிரார்த்தனையை முடித்துக்கொண்டு நான்விடைப்பெற்றேன். நான் என்னுடைய கடமைகளை முடித்து விட்டு என்னுடைய அறைக்கு வந்து என்னுடைய மடிக்கணினியில் அன்றைய பதிவுகளை எழுத ஆரம்பித்தேன். ஆனால் என் மனம் முழுவதும் மும்பையில் நாகலட்சுமி மாமியின் இல்லத்திலேயே இருந்தது.
நானே தொலைபேசியில் அழைத்து விவரங்களை தெரிந்து கொண்டு கனத்த மனதை லேசாக்கலாம் என்ற யோசனையில் இருந்தேன்.அதே சமயத்தில் மும்பை நாகலட்சுமி மாமி கைபேசியில் என்னை அழைத்தாள்
என் கனத்த மனது மேலும் கனத்தது. மஹாபெரியவாளை வேண்டிக்கொண்டே கைபேசியியை எடுத்தேன்.மாமிக்கு குரல்கொடுத்தேன். மாமி GR மாமா என்று கத்தினார்.நான்பயந்து விட்டேன் ஏதோ நடக்கூடாதது நடந்து விட்டதோ.பயந்த மாதிரியே நடந்து விட்டதோ.என்று நினைதேன்.நான் மாமியிடம் அழாமல் சொல்லுங்கள் மாமி என்றேன்.
மாமி சொல்ல ஆரம்பித்தாள் "மாமா இன்னிக்கு காத்தலே மாமாவுக்கு தலை சுற்றல்.ஏதோ பேசுகிறார். ண்ணும்புரியவில்லை.ஆஸ்பத்திரிக்கு அழைத்து போலாம்னு ஆட்டோவில் ஏற்றினேன். மாமாவும் தள்ளாடிக்கொண்டே ஆட்டோவில் ஏறினார்.
ஆஸ்பத்திரியை சென்று சேர்ந்தோம்.மாவை ஆட்டோவிலிருந்து இறக்கவே முடியவில்லை.பிறகு ஒரு வழியாக எல்லோருடைய உதவியுடன் சக்கரநாற்காலியில் உட்கார வைத்து ஆஸ்பித்திரிக்குள் அழைத்து சென்றோம்.
ஆனால் டாக்டர் அறைக்கு கொண்டு செல்வதற்குள் தலை தொங்கிவிட்டது.கைகள் துவண்டு விழுந்தன. மருத்துவர்கள் வந்து பார்த்தனர்.நாடி துடிப்பு அடங்கிவிட்டது.உடல் ஜில்லிட்டு போய் விட்டது என்பதை அறிந்தார்கள்.
உயிர் பிரிந்து விட்டது என்றுசொல்லவில்லை.ஆனால் எல்லா மருத்துவர்களும் அதிகார பூர்வமாக அறிவிப்பதற்கு முன் தலைமை மருத்துவர் வந்து அறிவிக்க வேண்டும் என்று காத்திருந்தனர் இருந்தனர்.
அதே சமயத்தில் மாமி முடிவு செய்து விட்டார். மாமாவின் உயிர் பிரிந்துவிட்டது. அன்று வியாழக்கிழமை குரு வாரம்.மாமி அங்கேயே தரையில் உட்கார்ந்து விட்டார். மாமி கண்களை மூடிக்கொண்டு மஹாபெரியவாளிடம் பின்வருமாறு பேச ஆரம்பித்து விட்டார்.
"பெரியவா G.R .மாமா உங்களிடம் குரு பூஜைக்கு உத்தரவு வாங்கி கொடுத்தார்.நான் ஈமெயில் அனுப்பிய அதே நொடி என்னுடைய ஏழு வருட தலை வலியை போக்கினீர்கள்.இப்பொழுதும் .G.R மாமாவை அழைத்து உங்களிடம் வேண்டி கொள்ளப்போகிறேன்.
எங்களுக்கு ஒரே பெண்.அமெரிக்காவில் படிக்கிறாள்.படித்த பிறகு அங்கேயே வேலை தேடிக்கொண்டு எங்களையும் அங்கயே தன்னுடன் வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறள். அவளுக்கு யாருமே இல்லை பெரியவா. எனக்கு என் கணவரை உயிருடன் தாங்கோ.கொஞ்ச காலம் அவர் வாழட்டும். இப்பொழுது வரும் தலைமை மருத்துவர் நீங்களாக இருக்கனும்.நீங்கள் என்கணவர் கைகளை தொட்டவுடன் அவர் கண் விழிக்க வேண்டும்.போன உயிர் திரும்ப வந்து அவரை காப்பாற்ற வேண்டும்..என்று பிரார்த்தனை செய்துமுடித்தார்.
இது சாத்தியமா என்ன?இருந்தாலும் மஹாபெரியவா என்ன வேண்டுமானாலும் செய்து போன உயிரை திரும்ப கொண்டுவந்து விடுவார் என்ற நம்பிக்கை மாமிக்கு. எனக்கே இந்த அனுபவம் இமயமலையில் ஏற்பட்டதை நீங்கள் அறிவீர்கள். இதுதான்ஹிமாலய நமிபிக்கை.
அந்த நொடியில் தலைமை மருத்துவர் வருகிறார். மாமி எழுந்து விட்டார்.தலைமை மருத்துவர் வேகமா வந்து மாமாவின் கையை பிடித்தார்.அதே நொடி மாமா கண் விழித்து விட்டார். சுற்றி இருந்த மருத்துவர்கள் எல்லோரும் அதிர்ந்த்து விட்டனர்.
மாமா வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.வீட்டில் அன்று செய்ய வேண்டிய சந்தியை மாமா செய்தார்.அதுமட்டுமல்ல மாமாவிற்கு பாணி பூரி சாப்பிட வேண்டுமென்று ஆசை வர அதையும் வாங்கி வரச்சொல்லி சாப்பிட்டார்.மேலே சொன்ன அனைத்தையும் மாமி என்னிடம் சொல்லிமுடித்தார்.
நாகலட்சுமி மாமியின் வீட்டில் இது போல ஒருநிகழ்வு நிகழப்போகிறது.என்பதை எனக்கு கனவில் காட்டி அதற்கு என்னை பிரார்தனையும் செய்ய சொல்லி பிரார்த்தனைக்கு பதிலும் சொல்லி விட்டார். ஆமாம் மாமா பிழைத்ததை தான் சொல்கிறேன்.
இந்த நிகழ்வை அமெரிக்காவில் உள்ள இவர்களது மகள் ஹரிணி பதிவு செய்து ஒருகாணொளியை அனுப்பியுள்ளார். இன்னும் இரு தினங்களில் அந்த காணொளியை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். ஹரிணிக்கு அவர் செய்த குரு பூஜையில் அமெரிக்காவில் அவருக்கு ஏற்பட்ட அற்புத அனுபவங்களை ஒரு தனி காணொளியாக உங்களுக்கு அதே நாளில் சமர்ப்பிக்கப்படும்.
உங்களுக்கு புரிகிறதா ? மஹாபெரியவா நினைத்தால் போன உயிர் கூட திரும்ப வந்து விடும்.
வானத்து விண் மீன்களை கூட எண்ணிவிடலாம்
கடல் நீரை கூட அளந்து விடலாம்
ஆனால் மஹாபெரியவா என்னும் பிரும்ம ஸ்வரூபத்தை
அறிந்து கொள்ளவும் முடியாது புரிந்துகொள்வதும் கடினம்
ஓரளவிற்கு உணர முடியும்
அவ்வ்வளவு தான் நம்மால் செய்ய முடியும்.
ஹர ஹர சங்கர ஜயஜய சங்கர
என்றும் உங்கள் நலன் நாடும்
காயத்ரி ராஜகோபால்