குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-III-சந்தரமதி
குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-III-சந்தரமதி

“முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை
முடியுமா என்று கேட்பது அவ நம்பிக்கை
முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை”
*****
சந்தரமதியின் இரண்டு பெண்களில் மூத்த பெண்ணை மஹாபெரியவா ஆசிர்வாதத்துடன் திருமணம் முடித்து நல்ல படியாக ஒருவன் கையில் பிடித்து கொடுத்துவிட்டாள். பெற்றோர்களுக்கு ஒரு குழந்தை வாழ்க்கையில் கால் ஊன்றியவுடன் அடுத்த குழந்தை பற்றி கவலை... எல்லா கவலைகளுக்கும் விடை கிடைத்தவுடன் பெற்றோர்கள் தங்களின் இறுதி காலத்தைப்பற்றி கவலைப்படுவார்கள்.
பிறந்ததிலிருந்து இறக்கும் வரை வித விதமான கவலைகளை கொண்டது தான் வாழ்க்கை. கவலை இல்லாத வாழ்க்கைப்பருவம் எது தெரியுமா. பிறந்த நாளில் இருந்து ஓரளவு விவரம் தெரியும் பத்து வயது வரை. இதுதான் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் பொன்னான வாழ் நாட்கள்.
முதல் பெண்ணின் கடமை முடிந்தவுடன் தன்னுடைய அடுத்த குழந்தை பற்றி கவலை. அவளுக்கு நல்ல வேலை கிடைக்கவேண்டும்.. வேலை கிடைத்தவுடன் ஒருவன் கையில் பிடித்து கொடுக்க வேண்டும். இந்த நிலையில் சந்தரமதிக்கு மஹாபெரியவா நினைவு வந்துவிட்டது. ஒரு நல்ல வேலைக்காக என்னிடம் வந்து மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொள்ளச்சொன்னாள்.
நான் அவளிடம் சொன்னேன். நான் முதலிலேயே மஹாபெரியவா படமும் விபூதி பிரசாதமும் கொடுத்தேனே. நீ உன் வீட்டிலிலேயே பிரார்த்தனை செய்து கொள்ளலாமே என்று யோசனை சொன்னேன். அதற்கு அவள் இந்த முறையும் உங்கள் கைகளினாலேயே படமும் விபூதி பிரசாதமும் கொடுத்தால் நான் சற்று நிம்மதியாக இருப்பேன் என்று சொன்னாள். நானும் சரி என்று சொல்லி மறு நாள் காலை வேண்டிக்கொள்கிறேன் என்று சொன்னேன்.
வழக்கமாக நான் மஹாபெரியவாளிடம் மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் பொழுது நான் என்னக்காக என்னுடைய பிரச்சனைகளுக்காக எப்படி வேண்டிக்கொள்வானோ அப்படி வாய்மொழி பிரார்த்தனையாக வேண்டிக்கொள்வேன். அப்படித்தான் சந்தரமதியின் இரண்டாவது மகளுக்கும் பின்வருமாறு வேண்டிக்கொண்டேன்.
"பெரியவா, சந்தரமதியின் இரண்டாவது மகள் பட்டப்படிப்பு முடிந்து ஒரு சிறிய கால் சென்டர் கம்பெனியில் வேலை செய்கிறாள். பகல் டூட்டி இரவு டூட்டி என்று மாறி மாறி வருகிறது. நீங்கள்தானே சொல்லியிருக்கேள் பெரியவா. பெண் குழந்தைகள் மாலை ஆறு மணிக்கு உள்ளாக வீடு திரும்பவேண்டும் என்று.. இவள் இரவு முழுவதும் வெளியில் வேலை செய்வது ரொம்ப கொடுமையாக இருக்கிறது பெரியவா. அவள் வீடு திரும்பும் வரை பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஒரு முடிவு கொடுங்கள் பெரியவா. குடும்பத்தில் நிம்மதி நிலவும்.
என் பிரார்த்தனை முடிந்து ஒருவார காலம் இருக்கும். இரவு டூட்டி ஒரு வார காலம் பார்த்ததின் விளைவு தாங்கமுடியாத குளிர் காய்ச்சல். எவ்வளவு மருந்து கொடுத்தும் காய்ச்சல் இறங்கவில்லை. என்னிடம் வந்து மஹாபெரியவாளிடம் வேண்டி பிரசாதம் தரச்சொன்னாள். நானும் மஹாபெரியவாளிடம் பின்வருமாறு வேண்டிக்கொண்டேன்.
:"பெரியவா, சந்தரமதியின் இரண்டாவது மகள் மிகவும் கஷ்டப்படுகிறான். அவளுக்கு ஒரு நல்ல வேலைக்கு அனுக்கிரஹம் செய்யுங்கள் பெரியவா.காலை பத்து மணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை வேலை கிடைத்தால் அவளுக்கும் நல்லது குடும்பத்திற்கும் அது நல்லது. இப்போ வந்திருக்கும் குளிர் காய்ச்சலுக்கும் ஒரு நிவர்த்தி கொடுங்கள் பெரியவா.என்று வேண்டிக்கொண்டு என் பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.
ஒரு வார காலத்திற்கு பின் குளிர் காய்ச்சல் சரியாகி பகல் டூட்டி பார்ப்பதற்காக ஆபீஸ் கிளம்பினாள். ஒரு வார காலம் முடிந்திருக்கும். அவள் எப்பொழுதோ விண்ணப்பம் செய்து மொத்தமாக மறந்து போன இந்திய பயணிகள் விமான போக்குவரத்து துறையில் இருந்து ஒரு தொலை பேசி அழைப்பு.
மறு முனையில் பேசியவர் ஹிந்தியில் பேசினார். இரண்டாவது பெண்ணை முதல் சுற்று இன்டெர்வியூவிற்கு தேர்வாகியிருப்பதாகவும் மறு நாள் காலை பத்து மணிக்கு தொலைபேசியில் இன்டெர்வியூ இருப்பதாகவும் அதற்கு தயாராக இருக்குமாறு சொல்லிவிட்டு தொலை பேசியை துண்டித்து விட்டார்.
அன்று மாலையே சந்திரமதி வந்து என்னை சந்தித்தாள். சந்தித்து அவளுடைய இரண்டாவது மகள் வேலை விஷயத்தை என்னிடம் சொல்லி மஹாபெரியவாளிடம் வேண்டிக்கொள்ளச்சொன்னாள். நானும் மனம் உருக வேண்டிக்கொண்டேன். எனக்கு மஹாபெரியவா மேல் உள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையால் உன் பெண்ணுக்கு வேலை கிடைத்துவிட்டதாக வைத்துக்கொள். உன்னை மஹாபெரியவா கைவிட மாட்டார் என்று சொல்லி விபூதி பிரசாதம் கொடுத்து அனுப்பிவைத்தேன்.
சரியாக ஒரு பத்து நாள் இருக்கும். டெல்லியில் இருந்து ஒரு ஆஃபீசர் இந்தியில் பேசினார். அவளுடைய இரண்டாவது மகளுக்கு ஹிந்தி தெரியும். பள்ளியில் ஹிந்தி கட்டாயக்கல்வி. அதனால் மிகவும் சரளமாக பேசினாள்
அவளுடைய பேச்சுத்திறமையை பார்த்து அவளை தேர்வு செய்து விட்டார்கள். வரும் ஜனவரி மாதம் அவள் சென்னை ஆஃபிஸில் ரிப்போர்ட் செய்து வேலையில் சேரவேண்டும். இரண்டாவது பெண்ணுக்கும் மஹாபெரியவா நல்ல வேலை அவள் நினைத்தபடியே மனதுக்கும் குடும்பத்துக்கும் சந்தோஷமாக இருக்கும்படி வேலை அமைந்தது.
அவனவன் அரசாங்க வேலைக்கு
எவ்வளவு போட்டி போடுகிறான்
என்றோ விண்ணப்பம் செய்த விண்ணப்ப படிவத்தை
தூசி தட்டி எடுத்து யார் வேலை தருவார்கள்
நிச்சயம் வேலை தருவார்கள்
மஹாபெரியவா மனது வைத்தால்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்