top of page
Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-திரு பிந்து


பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-திரு பிந்து

கோபம் என்பது மற்றவர்கள் தவறுக்கு

உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொள்ளும் தண்டனை

நொடிப்பொழுது கோபத்தின் விளைவுகள்

யுகப்பொழுது தண்டனைகள்”

இந்த அற்புதத்தின் நாயகன் அன்று ஒரு சிறுவன்.. பெயர் பிந்து. இன்று ஒரு வளர்ந்த குடும்ப நாயகன்.. இப்பொழுது பிந்துவின் இளமை பருவத்திற்கு உங்களை அழைத்துச்செல்கிறேன்.

நமக்கெல்லாம் பள்ளிப்பருவ நாட்களில் கோடை விடுமுறை என்றால் நம்முடைய தாத்தா வீட்டிற்கோ பாட்டி வீட்டிற்கோ செல்வோம்.. வசதி படைத்தவர்கள் கோடை வாசஸ்தலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் செல்வர்.

ஆனால் சிறுவன் பிந்துவின் கோடை விடுமுறை சங்கர மடமோ அல்லது மஹாபெரியவா எங்கல்லாம் முகாமில் தங்கியிருக்கிறாரோ அங்கெல்லாம் பிந்துவும் சென்று விடுவான். பிந்துவுக்கும் மஹாபெரியவாளுக்கும் இருந்த உறவு ஒரு தாத்தா பேரனுக்குள்ள உறவு.

எவ்வளவு சுவாரசியமான தருணங்கள்.. அவைகளில் உணர்ச்சி பொங்கும் தருணங்கள்.கண்களில் கண்ணீர் வரவழைக்கும் தருணங்கள் பல.. ஒரு முறை பிந்துவின் கோபம் மஹாபெரியவா மேல் திரும்பியது.

ஆனால் இறுதியில் மஹாபெரியவாளின் செயல் பிந்துவின் உயிரையே காத்தவுடன் பிந்து தன்னையே கோபித்துக்கொண்ட அனுபவம் பிந்துவின் கணங்களில் மட்டுமல்ல நம்முடைய கண்களிலும் கண்ணீரை வரவழைத்து விடும்.

அப்படிப்பட்ட நெஞ்சை உருகும் நிகழ்வுகளில் இருந்து உங்களுக்காக சில துளிகள் இதோ.

நிகழ்வு

சிறுவன் பிந்து தன்னுடைய ஒன்பதாம் வகுப்பு முழு பரீட்சையை எழுதிவிட்டு கர்நாடகாவில் உள்ள குல்பர்கா என்னும் ஊருக்கு வந்து விட்டான். ஏனென்றால் அங்குதான் அந்த வருடம் மஹாபெரியவா முகாமிட்டிருந்தார்.

அங்கு சென்று மஹாபெரியவாளுடன் விளையாடுவது கேள்விகள் கேப்பது போன்ற செயல்கள் செய்து அன்றாடம் தன்னுடைய நேரத்தை கழித்துக்கொண்டிருந்தான். மஹாபெரியவாளுடன் கோவிலுக்கு செல்வதும் மஹாபெரியவா செய்யும் சந்திர மௌளீஸ்வர பூஜை பார்ப்பது போன்றவற்றில் தன்னுடைய கவனத்தை செலுத்திக்கொண்டிருந்தான் சிறுவன் பிந்து..

பிந்துவின் சட்டை நிக்கர் எல்லாவற்றையும் மடத்து கைங்கர்ய மனுஷாள் துவைத்து போடுவார்கள். விடுமுறை நாட்கள் கழிந்து சென்னைக்கு திரும்ப செல்லும் நாளும் வந்தது. பிந்து மஹாபெரியவாளிடம் கிளம்புவதற்கு உத்தரவு வேண்டி நின்று கொண்டிருந்தான்

ஆனால் மஹாபெரியவா பிந்துவின் பக்கம் திரும்பவே இல்லை. பிந்துவுக்கோ இருப்பு கொள்ளவில்லை. ஏனென்றால் மறு நாள் பத்தாம் வகுப்பு பொதுதேர்வுக்கு தயார் செய்ய பள்ளியில் சில முக்கியமான தேர்வுகளை நடத்துவதாக சொல்லியிருந்தார்கள்.மறு நாள் பள்ளி செல்லவில்லை என்றால் தண்டனை கொடுப்பார்கள். மேலும் மாணவனின் பேரில் ஒரு கருப்பு புள்ளி வைக்கப்படும்.

பிந்து செய்வதறியாது மஹாபெரியவா பக்கத்திலேயே நின்று கொண்டு அரித்துக்கொண்டிருந்தான். மஹாபெரியவா எந்த பதிலும் சொல்லாமல் வந்த பக்தர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

பிந்து சிறுவன் தானே. அவனுக்கு மனதெல்லாம் நாளை நடக்கப்போகும் பள்ளிதேர்வும் பள்ளிக்கு செல்லவிட்டால் அவர்கள் கொடுக்கும் தண்டனையே மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.. கூடவே பயமும் தொற்றிக்கொண்டது.

கோபத்தின் உச்சியில் பிந்து மஹாபெரியவாளிடம் சப்தம் போடத்தொடங்கினான். அதுவும் எப்படி?

“பெரியவா உங்களுக்கு என்ன தெரியும் எங்கள் ஸ்கூலை பற்றி. நாளைக்கு பரீட்சை. அது எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்கு தெரியாது பெரியவா. எனக்கு என் டிக்கெட்டை கொடுக்கச்சொல்லுங்கோ,.நான் கிளம்பறேன் என்று சப்தம் போட்டவுடன் மஹாபெரியவா கைங்கர்ய மனுஷாளை கூப்பிட்டு அந்த டிக்கெட்டை கிழித்து போடுமாறு சொன்னார்.

சுற்றி இருந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. நாளைக்கு முக்கியமான பரீச்சை என்கிறான் சிறுவன் பிந்து. மஹாபெரியவா இப்படி பண்ணிட்டாளே என்று மிகவும் வருத்தப்பட்டனர். ஆனால் விஷயம் புரிந்த பலர் நினைத்து கொண்டார்கள் கரணம் புரியும்பொழுது கண்கள் கலங்கும் இதயம் அழும் என்று. சிறுவன் பிந்துவுக்கு கோபமும் அதிர்ச்சியும் ஒரு சேர செய்வதறியாது விழித்துக்கொண்டு நின்றிருந்தான்.

மறு நாள் காலை சிறுவன் பிந்துவுக்கு மட்டுமல்ல. அங்கிருந்த எல்லோருக்கும் டிக்கெட்டை கிழித்துப்போட காரணத்தை அன்றைய செய்தி தாள் உணர்த்தியது.

மறு நாள் காலை மணி ஆறு

மஹாபெரியவா தன்னுடைய மேனாவில் உட்கார்ந்திருந்தார். அப்பொழுது ஸ்ரீ கார்ய மனுஷாலில் ஒருவர் மஹாபெரியவாளிடம் அன்றைய செய்தி தாளை கொடுத்தார். மஹாபெரியவா ஒரு வார்த்தை கூட படிக்காமல் செய்தித்தாளை தூக்கி விசிறி எறிந்தார். செய்தித்தாள் கீழே மல்லாக்க விழுந்தது. முதல் பக்கம் வானத்தை பார்த்துக்கொண்டிருந்தது.

செய்தித்தாளின் தலைப்பு செய்தி " குல்பர்க்கா சென்னை விரைவு ரயில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. S-5 இருக்கை எண் 36 வரை வெள்ளத்தில் காணாமல் போனது. பலத்த உயிர் சேதம் என்று செய்தி வந்திருந்தது.

சிறுவன் பிந்து பயணம் செய்திருக்க வேண்டிய பெட்டி S-5 இருக்கை எண் 36. உங்களுக்கும் இப்பொழுது புரிந்திருக்கும் என் நினைக்கிறேன்

மடத்து மனுஷாள் ஒவ்வொருவர் கண்களிலும் கண்ணீர். சுற்ற இருந்த பக்தர்கள் எல்லோரும் ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர என்று கோஷமிட்டனர். சிறுவன் பிந்து நடுங்கிக்கொண்டே நின்று கொண்டிருந்தான். அன்று பிந்து புரிந்துகொண்டான் மஹாபெரியவா ஒரு சன்யாசி இல்லை. சாட்ஷாத் அந்த பரமேஸ்வரன் என்பதை தெரிந்துகொண்டான்.

சிறுவன் பிந்து எப்படி பரீக்ஷை எழுதினான். பிந்து சென்ற காரின் முன்னும் பின்னும் காவல்துறை பந்தோபஸ்துடன் எப்படி சென்றான் என்பதை இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இது மஹாபெரியவா சாகரத்தில் ஒரு துளிதான். அலைகளோடு கடலின் அழகை ரசிக்க வேண்டுமா. தாமதமின்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியை காணுங்கள். மஹாபெரியவாளின் விஸ்வருபத்தை தரிசியுங்கள்.

விஸ்வரூபம் என்பது காண்பிப்பது அல்ல

நெஞ்சை அள்ளும் நிகழ்வுகள் மூலம்

நாம் காண்பது

மஹாபெரியவாளின் அற்புத செயல்கள்

எல்லாமே விஸ்வரூபம்தானே

https://www.youtube.com/watch?v=-TEV4TkI0xs&t=8s

எவ்வளவு முறை பிந்துவை சாவின் விளிம்பில் இருந்து மஹாபெரியவா காப்பாற்றி இருக்கிறார். காணுங்கள் இந்தக்காணொளியை.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page