Featured Posts

குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-I- ஸ்வர்ணமால்யா


குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-I- ஸ்வர்ணமால்யா

ஸ்வர்ணமால்யாவின் வாழ்க்கையை

வரிகளாக்கினேன் கட்டுரையானது

இந்தக்கட்டுரை வாழ்க்கையாகும் பட்சத்தில்

மஹாபெரியவாளின் ஆசியும் கிடைத்துவிட்டால்

ஸ்வர்ணமால்யாவின் வாழ்க்கை வரலாறாகும்

என்பதில் சந்தேகமென்ன

இந்த அற்புதத்தின் நமது நாயகி பெயர் ஸ்வர்ணமால்யா

தமிழகத்தில் பண்பாடு மிகுந்த, பாசத்தில் தாயை மிஞ்சும், அடுத்தவர் மனதுக்கும் உணச்சிகள் உண்டு என்று என்னும் அணுகுமுறை, பிடித்து நடக்கும் குழந்தயை கூட தம்பி தங்கை என்று அழைக்கும் நாகரீகம், அடுத்தவர் வாழ தன் மொத்த சொத்தையும் தாரை வார்க்கும் கொடை வள்ளல் கர்ணனின் விசால மனம். இத்தனைக்கும் பெயர் போன மனிதாபிமானத்தை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு அழகான அலங்கரிக்கப்பட்ட கிராமம் என்றும் சொல்ல முடியாத நகரம் என்றும் வகை படுத்த முடியாத ஒரு நல்ல இதயங்கள் வாழும் ஒரு ஊர்.

இதயத்தில் ஈரமும்

பாசத்தில் தாயுள்ளமும்

கொண்ட ஊர் அது

இந்த ஊரில் தான் நம்முடைய இந்த அற்புதத்தின் நாயகி ஸ்வர்ணமால்யா வாழ்ந்து வருகிறாள். இந்த ஊரின் மண்ணில் பிறந்து இந்த ஊரின் தண்ணீரை குடித்து வளர்ந்த காரணத்தாலோ என்னவோ இவளது மனசும் வனத்தைப்போல விசாலமானது. இவளது இதய வானில் எவ்வளவு நட்ஷத்திரங்கள் வேண்டுமானாலும் மின்னலாம். எவ்வளவு பேர் வேண்டுமானாலும் சுவாசிக்கலாம்.

இவள் மிகுந்த பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு பெண். இவள் ஒரு நாகரீக புத்தகம், கனவு காண்பதில் அப்துல் கலாமின் வெளிப்பாடு, சாதிப்பதில் இவள் ஒரு வேலு நாச்சியார், பாசம் கட்டுவதில் இவள் ஒரு அன்னை தெரசா துணிச்சலில் இவள் ஒரு ஜான்சி ராணி, சிந்தித்து செயல் படுவதில் இவள் ஒரு பெர்னாட்ஷா. இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.மொத்தத்தில் இவளது வாழ்க்கை முறை ஒரு நூறாண்டு கால பாரம்பரியத்தின் வெளிப்பாடு.

மண்ணின் கலாச்சாரத்தை

பறை சாற்றும்

இவள் ஒரு

வரலாற்று புத்தகம்

இவ்வளவு நல்லகுணங்களையும் தன்னுள் கொண்டுள்ள ஸ்வர்ணமால்யாவின் பதினெட்டாவது வயது முதல், கடந்த பத்து ஆண்டுகளாக 2016 அக்டோபர் மாதம் 22 ம் தேதி வரை இவளைப்பிடித்த வாழ்க்கை பிரச்சனைகள் விடவில்லை. இவளுக்கு அப்படியென்ன பிரச்சனையென்று கேட்கிறீர்களா.

எல்லோருக்கும் வாழ்க்கையில் ஆரோக்கிய கோளாறு இருக்கும் பண பிரச்னைகளிருக்கும், திருமண பிரச்சனைகள் இருக்கும், இன்னும் எத்தனையோ வாழ்க்கை பிரச்சனைகள் இருக்கும். ஸ்வர்ணமால்யாவிற்கு வந்த பிரச்சனையை கேட்டால் தலையே சுற்றும். ஆம் இவளை பிடித்து ஒரு பேய் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது.

இரவு தூங்க ஆரம்பித்தால் அந்த பேய் இவள் நெஞ்சில் உட்கார்ந்து அழுத்தும். இவளுக்கு மூச்சு முட்டும். சமயத்தில் இவள் தலை மாட்டிலேயே கருப்பு நிறத்தில் நின்று கொண்டு பயமுத்திக்கொண்டிருக்கும். அம்மா அப்பா தன்னுடைய தங்கைகளை எழுப்பலாம் என்றால் பேசுவோ கத்தவோ குரல் வராது. பயத்தில் தொண்டை அடைத்துவிடும்.

இரவு முழுவதும் இப்படியே தூங்க விடாமல் அதிகாலை நேரத்தில் இவளை விட்டுவிட்டு போய் விடும். பேயுடன் உரையாடிவிட்டு அன்றாடம் இவள் தூங்கும் நேரம் காலை நான்கு மணிக்கு. எழுவது மாலை ஆறு மணிக்கு.

ஊருக்கே சூரிய உதயமென்றால்

இவளுக்கு மட்டும் சூரிய அஸ்தமனம்

இவளுக்கென்று ஒரு உலகம்

அதற்கு பெயர் பேய் உலகம்

போகாத கோயில் இல்லை பார்க்காத ஜோசியர் இல்லை. எந்தக்கடவுளுக்கும் எப்படிப்பட்ட வழிபாட்டுமுறைக்கும் சற்றும் சமாதானமாகாமல் ஸ்வர்ணமால்யாவை பிடித்து ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது அந்த பேய்..

பதினெட்டு வயது என்பது ஒரு பட்டாம்பூச்சி வயது. வண்ண வண்ண கனவுகள், மத்தாப்பு கற்பனைகள் இவையனைத்தையும் நெஞ்சில் சுமந்துகொண்டு வாழ்ந்துகொண்டிருந்த காலம்.. இவளது கனவுகள் கற்பனைகள் எல்லாமே தேய்பிறை நிலவானது. தேய் பிறை நிலவு அமாவாசையில் முடிந்து பத்து வருடங்களாக அம்மாவாசை இருட்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

இவளது வயதை ஒத்த பெண்கள் எல்லோரும்

சிறகடித்துப்பறக்கும்பொழுது

ஸ்வர்ணமால்யா மட்டும்

கூட்டுப்புழுவாக வாழ்ந்து கொண்டிருந்தாள்.

இந்த சமயத்தில் தான் தன்னுடைய மூத்த சகோதரி மூலம் கண்கண்ட கடவுளான மஹாபெரியவாளைப்பற்றி கேள்விப்பட்டு ப்ரபஞ்சக்கடவுளான மஹாபெரியவாளை வழிபட ஆரம்பித்தாள். வழிபட ஆரம்பித்து ஒரு பத்து நாள் சென்றிருக்கும்.

ஒரு நாள் மஹாபெரியவா இவள் கனவில் தரிசனம் கொடுத்தார். கனவின் விவரம் இதுதான். " மஹாபெரியவா ஒரு டைரியில் ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறார். ஸ்வர்ணமால்யா மஹாபெரியவாளிடம் கேட்கிறாள்.பெரியவா என்ன எழுதுகிறீர்கள். மஹாபெரியவா கேட்கிறார் உன் பெயர் என்ன என்று. அவள் பெயரையும் கேட்டு. அதையும் டைரியில் எழுதிவிட்டு மௌனமானார்.

ஸ்வர்ணமால்யா மஹாபெரியவாளிடம் கேட்டாள்" எனக்கு இந்த பேய் தொந்தரவு எப்போ சரியாகும் பெரியவா என்று. இதற்கு மஹாபெரியவா சொன்ன பதில் இன்னும் சில நாட்களில் நீ என்னுடைய பக்தர் ஒருவரை தொடர்பு கொள்வாய். அவர் மூலம் உன்னுடைய பேய் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்லி மறைந்துவிட்டார்.

இந்தக்கனவு தரிசனம் முடிந்து சில நாட்கள் சென்றன. சரியாக அக்டோபர் 22 ம் தேதி மதியம் ஒரு மணியளவில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறு முனையில் பேசியது ஸ்வர்ணமால்யா.

தன்னுடைய பிரச்சனைகளை மொத்தமாக கொட்டித்தீர்த்தாள். மஹாபெரியவா கனவு தரிசனத்தையும் கனவில் மஹாபெரியவா சொன்ன செய்திகள் அனைத்தையும் சொன்னாள்.

மேலும் நான் உங்களை தொடர்பு கொள்வது பற்றி மஹாபெரியவா என்னிடம் ஏற்கனவே கனவில் வந்து சொல்லியிருந்தார். நான் கேட்டேன் உங்களுக்கு என்னை எப்படி தெரியும். ஸ்வர்ணமால்யா சொன்னது என் மின்னஞ்சல் முகவரி கொடுத்து உங்களிடம் இருந்த வந்த பதிலில் நீங்கள் அனுப்பியிருந்தீர்கள்..

நான் ஸ்வர்ணமால்யா சொன்ன அத்தனை பிரச்சனைகளையும் உள்வாங்கிக்கொண்டு அவளிடம் சொன்னேன் " நான் மஹாபெரியவா பொற்பாதங்களில் அனைத்தையும் சமர்ப்பித்து தீர்வு வேண்டுகிறேன். அதற்கு மஹாபெரியவா என்ன பதில் சொல்கிறார்களோ நன் உடனே உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துகிறேன் என்று சொன்னேன்.

ஆனால் என்னுடைய பதில் ஸ்வர்ணமால்யாவிற்கு முழு திருப்தி அளிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவள் சொன்னாள். “மாமா நான் கடந்த பத்து வருடங்களாக மன உளைச்சலுடன் வாழ்ந்துகொண்டுருக்கிறேன். இதற்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வதென்றே தெரியவில்லை.” அவளுடைய அழுகையின் விசும்பல் எனக்கு பதிலாக கிடைத்தது.

நான் திரும்ப திரும்ப சொன்னேன் இதற்கு ஒரே தீர்வு பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவா தான். நான் மஹாபெரியவா உத்திரவு கொடுக்கும் வரை நீங்கள் மஹாபெரியவா த்யானமாகவே இருங்கள்.எல்லாம் நல்ல படியாக முடியும். என்று என்னுடைய நிதர்சனமான நம்பிக்கை வார்த்தைகளை சொன்னேன்.

ஸ்வர்ணமால்யா மீண்டும் என்னிடம் கேட்டாள் "யாருடைய வாழ்கையையாவது மஹாபெரியவா மாற்றியிருக்கிறார்களா. அவர்களைப்போல எனக்கும் மறு வாழ்வு கிடைக்குமா மாமா என்று கேட்டாள். அவள் கேட்கும் கேள்வி எனக்கு நியமாகப்பட்டது. வேதனை படும்பொழுதுதானே வேதனையின் வலி தெரியும். நானும் என் வாழ்க்கையில் தோல்வியை சந்தித்ததால் தோல்வியின் வலி பற்றி எனக்கு தெரியும் புரியும்.

நான் அழைக்காமலேயே

தான் அழைத்து எனக்கு அனுக்கிரஹம் செய்த

மஹாபெரியவா தாமரை பாதங்களில் தான்

என் மீதி வாழ்க்கை

நான் என்னுடைய சொந்தவாழ்க்கையையும் சந்தித்த பிரச்சனைகளையும் எடுத்துச்சொன்னேன். அப்பொழுதேல்லாம் நான் எல்லா கடவுளையும் துணைக்கு அழைத்தேன். யாரும் வரவில்லை. வாழ்க்கையில் வெறுப்பின் உச்சத்திலுருக்கும்பொழுது தான் மஹாபெரியவா என்னை ஆட்கொண்டார்.

என்னுடைய நல்ல குணங்களுக்கு சமுதாயம் கூட காரணம் கற்பித்து ஏளனம் செய்தது. பல முறை என்னுடைய நல்ல குணங்களே எனக்கு எமனாக முடிந்தது. பல முறை அடி பட்டும் என்னுடைய உதவும் குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. இறைவன் எனக்கு இந்த குணத்தோடு பிறக்க வேண்டுமென்று என் தலையில் எழுதி நல்ல பெற்றோருக்கு பிறக்க வைத்தான். மற்றவர்களுக்காக என் குணத்தை மாற்றிக்கொண்டே இருந்தால் என் குணம் தான் என்ன.

என்னைப்பொறுத்தவரை வரை

மனிதப்பிறவி என்பது மணம் கொண்ட மலர் போன்றது

பூவோடு சேர்ந்த நார் மணக்கலாம்

ஆனால் நாரோடு சேர்ந்த பூ நாறக்கூடாது

பூ பூவாகத்தான் இருக்கவேண்டும்

நான் பூவாகவே தான் இருந்தேன் இருக்கிறேன்

என் நல்ல குணங்களை அங்கீகரித்த ஒரே கடவுள்

சர்வமும் சகலமுமான கண் கண்ட தெய்வம்

என்னுடைய மஹாபெரியவா தான்

இந்த இடத்தில் என் கண்களில் கண்ணீர் துளிர்த்தது

நான் கண்ட ஒரே பிரத்தியட்ச தெய்வம் மஹாபெரியவா தான்.. ஏனென்றால் நான் அழைக்காமலேயே தான் என்னை அழைத்து ஆட்கொண்டு என் வாழ்க்கையை மாற்றி அமைத்தார்.

இறைவனே அழைத்து

ஒரு ஆத்மாவிற்கு இறைப்பணி கொடுக்கவேண்டுமென்றால்

இது எத்தனையோ ஜென்மங்களுக்கு

ஒரு முறை வாய்க்கும் பாக்கியம்

இதில் எனக்கு பெருமையில்லை

அடக்கமும் பணிவும் தான் வருகிறது

ஒரு வேளை அடக்கமும் பணிவும் கூட இறைவன் கொடுத்ததுதான?.

இதற்கு நன்றிக்கடனாக என்னைப்போல் வாழ்ந்து வாழ்க்கையில் தோற்றுப்போன அல்லது வாழ்க்கையில் தோற்கும் நிலையிலும் தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருப்பவர்களையும் என் முழு முயற்சியை கொடுத்து தோல்வியிலிருந்து மஹாபெரியவாளின் அருளாசியுடன் மீட்டெடுப்பதுதான் என் தலையாய இறை பணி என்று முடிவு செய்தேன்.

என் எண்ணத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில் மiஹாபெரியவா என்னை ஆட்கொண்டது மட்டுமல்லாமல் என்னுடைய பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கவும் ஆரம்பித்து விட்டார். பிரார்த்தனை நேரங்களில் சூஷ்மமாக என்னுடன் உரையாடுவதும் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையை கொடுத்தது.

இதன் விளைவாக என்னுடைய சக ஆத்மாக்களை வாழ்க்கை பயத்திலுருந்தும் தோல்வியிலுருந்தும் மீட்டெடுக்க ஆரம்பித்தேன். மஹாபெரியவா என் மூலம் மீட்டெடுத்த ஆத்மாக்கள் மிக விரைவில் தங்கள் அனுபவங்களை வீடியோ மூலம் விவரிக்க உங்களை எல்லாம் சந்திக்க வருவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

இனி ஸ்வர்ணமால்யாவின் வாழ்க்கைக்கு வருவோம்.

நான் மறுநாள் காலை என் பிரும்ம முகூர்த்த நேரத்தில் ஸ்வர்ணமால்யாவின் பிரச்னைகளனைத்தையும் மஹாபெரியவாளிடத்தில் பின் வருமாறு சமர்பித்தேன்.

"பெரியவா, நீங்கள் ஏற்கனவே என்னை அடையாளம் காட்டி ஸ்வர்ணமால்யாவின் பேய் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று சொன்னதாக என்னிடம் அவள் சொன்னாள். ஸ்வர்ணமால்யாவின் பிரச்னையை நான் அவளிடம் கேட்ட வரையில் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் பெரியவா.

பெரியவா, ஒருவர் வாழ்க்கையில் காலையில் பிரச்சனை மாலையில் தீர்வு என்றால் அது எனக்குப்புரிகிறது. இன்று பிரச்சனை நாளை தீர்வு என்றல் அதுவும் எனக்கு புரிகிறது. இந்த வாரம் பிரச்சனை இந்த மாதம் பிரச்சனை அடுத்த வாரம் தீர்வு அடுத்த மாதம் தீர்வு என்றல் நன்றாக புரிந்து கொள்ளலாம்.

ஆனால் கடந்த பத்தாண்டுகளாக பிரச்னையென்றால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை பெரியவா,. ஸ்வர்ணமால்யா சிறகொண்டிந்த பறவையாக கூண்டிற்குள் அடைபட்டுக்கிடக்கிறாள். மனித வாழ்க்கையில் முக்கியமான பருவம் இளமைப்பருவம். சிறகடித்து பார்க்கவேண்டிய வயதில் சிறகொடிந்து வாழ முடியாமல் தவித்துக்கொண்டிருடுக்கிறாள். இவளுக்கு தீர்வே இல்லையா பெரியவா. உங்களுக்கு சர்வ ரக்ஷக்சன் என்று ஒரு பெயரும் உண்டே பெரியவா..

அத்தனை ஜீவராசிகளுக்கும் அடைக்கலம் கொடுத்து காக்கும் கடவுள் நீங்கள். ஸ்வர்ணமால்யாவும் ஒரு அடைக்கலம் கிடைக்கவேண்டிய ஜீவன் தானே. ஏன் பெரியவா இந்த பாரபக்ஷம். நான் ஸ்வர்ணமால்யாவுக்கு இத்தனை கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டதிற்கு காரணம் என் வாழ்க்கையில் நான் அடைந்த தோல்வி, தோல்வி கொடுத்த வலி, மன உளைச்சல் இத்தனையும் மொத்த நரகத்தின் அனுபவம். இந்த அனுபவத்தை ஸ்வர்ணமால்யா மட்டுமல்ல எந்த ஆத்மாவும் அனுபவிக்கக்கூடாது என்பது என் ஆத்மார்த்தமான ஆசை..

ஸ்வர்ணமால்யாவிற்காக நான் செய்த பிரார்த்தனைக்கு பதில் கொடுத்தார் மஹாபெரியவா. விவரம் பின் வருமாறு.

"அவளை காஞ்சிக்கு வந்து என் அதிஷ்டானத்தில் த்யானம் பண்ணச்சொல்லு. என்னுடைய அதிஷ்டானத்தை ப்ரதக்ஷினம் செய்யச்சொல்லு. இந்த பிரார்த்தனையை நான்கு வார குரு பூஜைக்கு பின் பண்ணச்சொல்லு. எல்லாம் சரியாய் போய்டும்". என்று சொல்லி என் ப்ரார்தனைக்குண்டான பதிலை முடித்துக்கொண்டார்.

அடுத்த வாரம் ஒவ்வொரு வாரமும் ஸ்வர்ணமால்யாவின் மன நிலை எப்படி இருந்தது. ஸ்வர்ணமால்யா .பேயை விட்டு விளகினாளா அல்லது பேயே ஸ்வர்ணமால்யாவை விட்டு விலகியதா என்று எழுதுகிறேன்.

முடிந்தால் மஹாபெரியவா அனுகிரஹமும் இருந்தால் ஸ்வர்ணமால்யாவிடம் கேட்டு பேயின் உருவத்தையும் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். பூத கணங்களும் மஹாபெரியவாளின் சொல்லுக்கு கட்டுப்பட்டவைதானே

இயந்திரங்களோடு உறவாட

வைப்பது அலுவலக சூழல்

இதயங்களோடு உறவாட

வைப்பது வீட்டுச்சூழல்

ஸ்வர்ணமால்யாவிற்கு

அலுவலகமும் தூரத்து கனவு

வீட்டுச்ச்சூழலும் எட்டாக்கனியாகவே இருந்தது

மஹாபெரியவாளை பற்றி தெரியும் வரை

மஹாபெரியவா ஸ்வர்ணமால்யாவை காஞ்சி அதிஷ்டானத்திற்கு அழைத்து அங்கு நடத்திய அற்புதங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள அடுத்த வாரமும் ஸ்வர்ணமால்யா வருவாள்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square