Featured Posts

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்


மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-021

உரிமை இல்லாத உறவும்

உண்மை இல்லாத அன்பும்

நேர்மை இல்லாத நட்பும்

நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும்

என்றும் நிரந்தரம் இல்லை

“மஹாபெரியவா”” இந்த வார்த்தையை கேட்டவுடன் நமக்குள் என்ன நடக்கிறது? என்ன செய்கிறது? ஒரு இனம் புரியாத இன்பச்சலனம் இல்லையா. ஜாதி மதம் குலம் கோத்திரம் எல்லாவற்றையும் தாண்டி "மனிதன்" என்று ஒரு சொல்லுக்குள் அடங்கும் அத்தனை பேருக்கும் ஒரே மாதிரியான அனுபவம். இது எப்படி சாத்தியம்.

இதோ என் கற்பனையில் பூத்த ஒரு காட்சி.

இடம்- திருப்பாற்கடல் இறை சபை. சபையில் உள்ளவர்கள் ஈஸ்வரன் ,விஷ்ணு, ப்ரம்மா மற்றும் மஹாலக்ஷ்மி பார்வதி சரஸ்வதி

சபை கூடிய காரணம்: வேத பரிபாலனம்

சபையோர் மனநிலை: கவலை தோய்ந்த முகம் --கலங்கிய மனது

காரணம் பஞ்ச பூதங்கள் தோன்றும் முன்னே தோன்றியது வேதம். உலகத்தில் உயிர்கள் நெறி பிறழா வாழ்க்கை வாழவேண்டுமானால் வேதம் தழைக்க வேண்டும் செழிக்க வேண்டும். ஆனால் வேதம் மறைந்து கொண்டும் அழிந்து கொண்டும் வருவது பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனை கடவுளுக்கும் ஒரு வித பயத்தை கொடுத்தது. வேதம் பகவத் பாஷை என்பது எல்லோருக்கும் தெரியும்.

மூன்று தலைமுறைக்கு காயத்திரி

ஜெபிக்கவில்லை என்றால்

பிராமணர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்

பிராமணர்கள் கூட

ப்ராமண பந்துக்கள்

என்றுதான் அழைக்கப்படுவார்கள்.

இந்த பூலோகம் ஒரு அபாயகரமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு முடுவு எடுக்கத்தான் இந்த சபை கூடியிருக்கிறது.

நாரதர் பிரவேசம்

இந்த நேரத்தில் நாரதர் சபையின் உள்ளே பிரவேசிக்கிறார். நாரதர் என்றுமே கலகத்திற்கு பெயர் போனவர். ஆனால் அந்த நாரதரே சபையோரின் கலக்கத்தை பார்த்துவிட்டு தானும் கலங்கினார். எல்லோரும் வேதம் அழிவதை தடுக்கவும் வேதத்தை செழித்து வளர்க்கவும் என்ன செய்யலாம் என்று நாரதரை கேட்டனர்.

நாரதர் ஒரு வினாடி யோசித்து விட்டு ஒரு யோசனை சொன்னார். நீங்கள் அத்தனை கடவுள்களும் பூமியில் அவதாரம் செய்து கூட்டாக வேதத்தை தழைக்க வைக்கலாமே என்று யோசனை சொன்னார். ஆனால் அந்த நாரதரின் யோசனையை எல்லோரும் ஒரு மனதாக நிராகரித்தனர். காரணம் எல்லோரும் பூமியில் அவதாரம் பண்ணினால் இங்கு ஸ்ரீவைகுண்டதையும் கைலாயத்தையும் பிரும்ம லோகத்தையும் யார் பரிபாலனம் செய்வார்கள் என்ற பயம்.

சிறிது யோசித்த நாரதர் ஒரு யோசனை செய்தார். பொதுவாக நாரதர் கலகம் நன்மையில்தான் முடியும். கடவுள்களின் கலக்கத்திற்கு நாரதர் கொடுத்த தீர்வும் நன்மையில் தான் முடிந்தது. இந்துதான் தீர்வு.

மும்மூர்த்திகளும் அவர்கள் மூன்று தேவியர்களும் ஒன்றாக ஓருடல் எடுத்து அந்த உடலுக்குள் ஜீவனையும் செலுத்தி ஒரு மானிட உருவத்தை உருவாக்கினர். அந்த மானிட உருவம் உயிர் பெற்றதும் இறை உலகமே ஜொலித்து சுடர் விட ஆரம்பித்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் அனைத்துலக கடவுள்களும் பூ மாரி பொழிய வேத கோஷங்கள் முழங்க வாழ்த்தினர்.இந்த படைக்கப்பட்ட மானிட உருவம் நம் பூமியில் குழந்தையாக பிறந்து அவதரித்தது.

குழந்தை அவதரித்தவுடன் இயங்கும் பிரபஞ்சம் ஒரு வினாடி நின்று தான் மறுபடியும் இயங்கியது. வானத்து மும்மூர்த்திகளும் தேவாதி தேவர்களும் தேவ கணங்களும் அசுர கணங்களும் பூ மாரி பொழிந்தனர்.

நாம் வாழும் பூமியில் எல்லா உயிரினங்களும் ஆனந்தக்கண்ணீர் வடித்தன. எல்லா ஜீவராசிகளுக்கும் இதயத்தில் சந்தோஷத்தாமரை மலர்ந்தது. மறைந்து கொண்டிருந்த வேதம் வாடிய பயிர்கள் மழை மேகத்தை கண்டதும் உயிர்தெழுந்தது போலெ வேதங்கள் அனைத்தும் வேத கோஷங்களுடன் உயிர்தெழுந்தன.

ஒரு குழந்தையின் ஜனனம் இயங்கும் பிரபஞ்சத்தையே ஒரு வினாடி நிறுத்தி மீண்டும் இயங்குமானால் எப்படிப்பட்ட ஜனனம். ஒரு குழந்தயின் ஜனனம் எல்லா ஜீவராசிகளின் ஆத்மாவை வருடியது என்றால் எப்படிப்பட்ட ஜனனம்.

ராமா அவதாரம் கிருஷ்ணா அவதாரம்

எப்படி ஒரு பூர்ண அவதாரமோ

அது போல வேத அவதாரம் என்பதும்

மஹாபெரியவா என்னும் ஒரு

பூர்ண அவதாரம் தான்.

இப்பொழுது தெரிகிறதா "மஹாபெரியவா" என்றவுடன் ஒரு பயம் கலந்த இன்பமும் மரியாதையும் யாருக்கும் வருமே. இதற்கு காரணம் மொத்த கடவுள்களின் ஒரே அவதாரம் மஹாபெரியவா. மஹாபெரியவா பல நேரங்களில் பரமேஸ்வரனாக மகா விஷ்ணுவாக மஹாலட்சுமியாக காஞ்சி காமாட்சியாக பக்தர்களுக்கு காட்சி கொடுத்திருக்கிறார்.

மஹாபெரியவா அவதரித்த நாளில் இருந்து அணைத்து உயிர்களுக்கும் கருணை காட்டி வேதத்தை தழைக்க செழிக்க வைப்பதற்காக இந்தியாவையே மூன்று முறை வலம் வந்தார்.மஹாபெரியவாளின் கருணை காருண்யம் அனைத்து ஜீவன்களையும் ஆட்கொண்டது. மேட்டுக்குடி மக்களில் இருந்து அடித்தட்டு மக்கள் வரை படித்தவர் முதல் பாமரர்கள் வரை சாதாரண நோயாளிகளிலிருந்து .தொழு நோயாளிகள் வரை எல்லா ஜீவன்களுக்கும் அருள் பாலித்தார்.

மஹாபெரியவாளின் காருண்யமும் அற்புதமும் கலந்த நெஞ்சை கொள்ளை கொள்ளும் ஒரு நிகழ்ச்சியை தான் இந்த சாரலில் நனைந்து கொண்டே பார்க்கப்போகிறோம்.

தஞ்சையில் ஒரு பசுமை நெல் வயல்

தஞ்சாவூருக்கு பக்கத்தில் ஒரு சிறு கிராமம். காவேரி பாயும் தஞ்சையில் பசுமைக்கு கேட்கவேண்டாம். சோழ நாடு சோறுடைத்து என்ற பழமொழிக்கேற்ப வருடம் முப்போகம் விவசாயம் செய்யும் நன்செய் பூமி.

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

கரை புரண்டோடும் காவேரி. காவேரிக்கரையின் இரு புறமும் பச்சை பசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சியாய் வயல் வெளி,. பசுமை வயல் வெளி நம் கண்ணுக்கு மட்டும் விருந்தல்ல. ஆடு மாடுகளுக்கும் வயிற்றுக்கும் விருந்துதான்.

மஹாபெரியவா தினம் தோறும் கரை புரண்டோடும் காவேரியில் இறங்கி தன்னுடைய அன்றாட அனுஷ்டானங்களை அனுசரிக்கும் பாங்கு கண்ணுக்கு மற்றும் ஒரு விருந்து.

காவிரிக்கரையில் மஹாபெரியவா குளிக்கும் படித்துறைக்குப்பக்கத்தில் மஹாபெரியவா பக்தர்களும் குளிப்பதற்கு தயாராக இருப்பார்கள்.ஏனென்றால் மஹாபெரியவாளை தொட்ட தண்ணீரில் குளித்தால் அதே தண்ணீர் தங்கள் மேலும் பட்டு வினைகள் தீராதா என்ற ஏக்கம்.

மஹாபெரியவா குளித்துவிட்டு அன்றாட அனுஷ்டங்களை அனுஷ்டித்து விட்டு சந்திர மௌலீஸ்வர பூஜைக்கு உட்கார்ந்து விடுவார். பூஜை முடிந்த பின் பக்தர்களுக்கு தரிசம் கொடுக்க ஆரம்பித்து விடுவார். பக்தர்கள் தரிசனம் முடிந்த பின் மஹாபெரியவா பிட்க்ஷை பண்ணுவார். (பிட்க்ஷை -மஹாபெரியவா உணவு உட்கொள்வதைத்தான் இப்படி சொல்கிறோம்)

இந்த பிட்க்ஷை கொடுப்பதை பாக்கியம் உள்ள பக்தர்கள் அல்லது அந்த ஊரின் செல்வந்தர்கள் ஏற்றுக்கொள்வார்கள். செல்வந்தர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது அவர்கள் செய்யும் தான தர்மத்தை பொறுத்தது.

கிராமத்து மிராசுதார்க்கு நடந்த அற்புதம்:

அப்படி அந்த கிராமத்தின் மிராசுதார் இந்த பாக்கியத்தை கேட்டு பெற்றார். மறுநாள்; பிட்க்ஷை. ஆனால் பிட்க்ஷைக்கு மஹாபெரியவாளின் பக்தர்கள் கூட்டம் அவ்வளவாக இல்லை. மிராசுதார் மிகவும் வருத்தப்பட்டார். அதிக கூட்டம் வந்து தன்னுடைய பிட்க்ஷை இதுவரை யாரும் பார்த்திராத அளவிற்கு சிறப்பாக அமையவேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆனால் கூட்டம் மிகவும் குறைவாக இருந்ததால் மிகவும் வருத்தப்பட்டார்.

உண்மைதானே

பணமும் பணிவும்

ஒத்து போவது மிகவும் அபூர்வம் தானே

தன்னுடைய மன வருத்தத்தை மஹாபெரியவாளிடம் தெரிவித்தார் மிராசுதார். இதை கேட்ட மஹாபெரியவா சிறிது யோசித்து விட்டு சொன்னார். " நீ லட்டு பண்ண முடியுமா" என்று கேட்டார். நிச்சயமா முடியும் பெரியவா என்று மிராசுதார் பதிலளி