Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா திருமதி மீரா


பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா- திருமதி மீரா

வாழ்க்கை ஒளி இழக்கலாம்

அது நிரந்தரம் அல்ல

கணங்கள் ஒளியை இழக்கலாமா

இழந்த ஒளியை மீட்ட முடியுமா

இயற்கையும் பார்வையும் இறைவன்

மனித வர்க்கத்திற்கு கொடுத்த கொடையல்லவா

இழந்த ஒளியை திரும்ப கொடுத்த அற்புதம்

மஹாபெரியவாளின் விஸ்வரூப அற்புதத்தை காணுங்கள்

திருமதி மீரா ஒரு இசை குடும்பத்தை சேர்ந்த பெண். இவருடைய தந்தை ஆணையாம்பட்டி கணேசன் என்னும் ஜலதரங்கம் வசிக்கும் விற்பன்னர்.

(ஜலதரங்கம் என்பது பல கோப்பைகளில் தண்ணீரை நிரப்பி ஒரு இசை எழுப்பும் தடிமனான குச்சியால் நீருள்ள கோப்பையை தட்டி ஓசை எழுப்பி மேடைகளில் கச்சேரி செய்வார்கள்.).

இவருடைய தந்தை மஹாபெரியவாளுக்கு நன்கு அறிமுகமானவர்.காஞ்சி ஸ்ரீ மடத்திற்கு மிகவும் வேண்டியவர். நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர், நெருங்கிய பக்தர் இன்னும் எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறோம். திருமதி மீரா எப்படி பட்ட பக்தை தெரியுமா. அடுத்த நொடியில் உயிர் பிரியப்போகிறது என்றல் கூட பிரிந்தால் புரியட்டும் மஹாபெரியவா பிரிந்த உயிரை மீட்டு கொண்டு வருவார் என்ற நம்பிக்கை.

எனக்கு ஆரம்பத்தில் இருந்தே மஹாபெரியவாளிடம் பேசும் பிரார்த்தனை செய்வேன்.ஏனென்றால் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை. மஹாபெரியவா நான் பேசுவதை கேட்டுகொண்டுருக்கிறார். நிச்சயம் பதிலும் அளிப்பார் என்ற நம்பிக்கையும் இருக்கும்.ஆனால் என்னை சுற்றி உள்ளவர்கள் என்னை கேலி செய்வார்கள். பைத்தியம் என்பார்கள், இவ்வளவு ஏன். மஹாபெரியவாளின் பக்தர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களே என்னை கிண்டலும் கேலியும் செய்தார்கள். அப்பொழுதெல்லாம் எனக்கு மிகவும் மன உளைச்சலாக இருக்கும்.

நான் நிச்சயமாக உணர்கிறேன். மஹாபெரியவா என் பிரார்த்தனைக்கு பதில் கொடுத்து கொண்டிருக்கிறார் என்று.ஏனென்றால் என் நஃபிரார்தனைக்கும் நடக்கும் செயல்களுக்கும் அப்படி ஒரு நெருக்கம் இருக்கும்.நான் என்ன சொன்னாலும் காக்கை உட்கார பனம்பழம் விழுந்த மாதிரி எதோ தானே நடந்ததை மஹாபெரியவா நடத்தினார் என்று உன்னையே நீ ஏமாற்றிக்கொண்டிருக்கிறாய். என்று சொல்லுவார்கள்.

நான் எப்படி அவர்களுக்கு புரிய வைப்பது.அன்று காலை நான் மஹாபெரியவாளிடம் வேண்டிட்டுக்கொண்டேன். பெரியவா அவா சொல்லறது சரிதானோ. நான் பைத்தியமா என்று கேட்டேன். அதற்கு மஹாபெரியவா என்னிடம் சொன்னார் உனக்கு இன்னிக்கு தெரியும். நீ மட்டும்தான் பைத்தியமா இல்லை உன் போல் இன்னும் பைத்தியம் இன்னும் இருக்கிறதா என்று. நானும் சரியென்று அன்றைய நாளை கழித்துக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் எண்ணெயும் அறியாமல் எதோ ஒரு உந்துதலால் இந்த காணொளியை காண ஆரம்பித்தேன் . அன்று மஹாபெரியவா எனக்கு புரிய வைத்தார்.நான் பைத்தியமில்லை.என்னை கிண்டலும் கேலியும் செய்தவர்கள் தான் பைத்தியக்காரர்கள் என்று.

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று நான்காம் வருடம் திருமதி மீரா அவர்களுக்கு கண்களில் எரிச்சல் ஆரம்பித்தது. அது ஒரு ஆரம்பம்தான். அவ்வப்பொழுது வரும் போகும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல கண்களை திறக்க முடியவில்லை.வெளிச்சத்தை காண முடியவில்லை.

வீட்டில் ஜன்னல்கள் கதவுகள் எல்லாவற்றையும் தடித்த துணியால் மூடிதான் வைப்பார்கள். ஒரு சமயத்தில் சமைக்க முடியவில்லை. கணவர் ஊட்டி விடுவார்.எந்த ஒரு பிரசித்தி பெற்ற கண் மருத்துவரும் மீராவின் கண் பிரச்சனைக்கு ஒரு தீர்வு தர முடியவிலலை.

ஒரு சமயத்தில் மீராவும் அவரது கணவரும் தற்கொலை செய்து கொண்டு தங்களுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள திட்டமிட்டார்கள். இதற்கு மேலும் இந்த கண் நோயின் கொடுமையை சொல்லித்தான் தெரியவேண்டுமா.

இந்த நிலையில் இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு மீரா தன்னுடைய மஹாபெரியவா பாரம்பரியத்தை மீண்டும் புதுப்பிக்க என்னை சங்கர மடத்திற்கு சென்று மஹாபெரியவாளை நமஸ்கரித்து தன்னுடைய மனதிற்குள் பிரதிஷ்டை செய்து விட்டார்.

அன்று ஆரம்பித்த மஹாபெரியவாளின் தெய்வீக சிகிச்சை மீராவின் கண் எரிச்சல் நோயை ஒரு ஆங்கில மருந்து இல்லாமல் சரியாக்கினார். மீரா காட்டிய பக்தியினால் மஹாபெரியவா மேலும் அமைதி காக்காமல் ஓடோடி வந்து தன்னுடைய இறை அற்புத சக்தியால் பத்து வருடத்திற்கும் மேலாக இருந்த கண் நோயை சரிபடுத்தினர்.

இந்தத்தொடரில் எவ்வளவோ பக்தியை பார்த்திருக்கிறோம். அவற்றில் சிலரது பக்திக்கு அளவு கோலாகவும் உதாரணமணமாகவும் இருந்திருப்பதை பாத்திருக்கிறோம். அந்த வரிசையில் மேலும் திருமதி மீராவும் ஒரு பக்தை. நேரம் கடத்தாமல் இந்த அற்புதத்தை கண்டு அதிசியுங்கள். ஆச்சரியப்படுங்கள். கீழே கொடுத்துள்ள காணொளி லிங்கின் மூலம் காணுங்கள்.

https://www.youtube.com/watch?v=tRvvO2W8AnQ

Duration: 39 mts 24 secs

Hara Hara Shankara Jaya Jaya Shankara

Gayathri Rajagopal