Featured Posts

குரு பூஜை அற்புதங்கள்--பாகம்-II- ஸ்வர்ணமால்யா


குரு பூஜை அற்புதங்கள்--பாகம்-II-ஸ்வர்ணமால்யா

“பொதுத்தொண்டு செய்பவன்

மான அவமானத்தை பார்க்கமாட்டான்

மிகவும் தூய்மையான எண்ணத்தை கொண்டிருப்பான்

தெய்வங்கள் அனைத்தும் அவனுக்கு துணை நிற்கும்”

சென்ற வாரம் மஹாபெரியவாளிடம் ஸ்வர்ணமால்யாவின் பிரச்சனைகளை எடுத்து வைத்து தீர்வு வேண்டினேன். வழக்கமாக மஹாபெரியவா பத்து நாட்கள் முதல் பதினைந்து நாட்கள்வரை எடுத்துக்கொள்வார் பதில் அளிக்க. ஆனால் ஸ்வர்ணமால்யாவின் பிரச்சனைக்கு நான்காவது நாள் குரு பூஜை உத்தரவு கொடுத்து விட்டார்.

நானும் ஸ்வர்ணமால்யாவிடம் குரு பூஜை உத்தரவு பற்றியும் அதன் பூஜை செய்யும் முறை பற்றியும் தெரிவித்தேன். இந்த போஸ்ட் எழுதும்பொழுது ஐந்து வார பூஜை முடித்திருந்தாள்.. ஒவ்வொரு வாரமும் எப்படி கடந்தது. என்னென்ன பேய் பிரச்சனைகளை எதிர்கொண்டாள் என்பதை பார்ப்போம்

முதல் வாரம்:

வழக்கமாக இரவு முழுவதும் தூங்காமல் பேயை எதிர் கொண்டு சமாளித்து பயத்துடனேயே காணப்பட்டாள். இருந்தாலும் மஹாபெரியவா முன்பே கனவில் வந்து தரிசனம் கொடுத்து என்னைத்தொடர்பு கொண்டால் பேய் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று சொன்னதால் மிகுந்த நம்பிக்கையோடு குளித்து விட்டு மஹாபெரியவா பூஜையை துவங்கினாள் ஸ்வர்ணமால்யா. மஹாபெரியவாளுக்கு விளக்கேற்றி நமஸ்காரம் செய்யும் பொழுது பேய் தூரத்தில் நின்று கொண்டு ஸ்வர்ணமால்யாவை மிரட்டுமாம்.

"என்ன என்னை துரத்தப்பார்க்கிறாயா." என்று

அது உன்னால் முடியாது நடக்கவும் நடக்காது என்று சிரிக்குமாம். ஸ்வர்ணமால்யாவும் மஹாபெரியவாளை கண் முன்னே நிறுத்தி ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர என்று கோஷம் போட்டுக்கொண்டே நூற்றி எட்டு பிரதக்க்ஷிணம் செய்து விடுவாள்.

வழக்கமாக வியாழக்கிழமை காலையில் மஹாபெரியவா குரு பூஜை முடித்துவிட்டு இரவு என்னை தொலை பேசியில் தொடர்பு கொண்டு தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்வாள். முதல் வாரம் அனுபவம் பேயைப்பார்த்து பயந்துபோனாலும் மஹாபெரியவாளை நினைத்துக்கொண்டே பூஜையை முடித்து விட்டாள்.

நான் சொன்னேன் இது ஒரு ஆரம்பம் தான் ஸ்வர்ணமால்யா.. ஒவ்வொரு வாரமும் போகப்போக நல்ல முன்னேற்றம் காண்பாய் என்று சொல்லி தைரியம் சொல்லுவேன்..ஸ்வர்ணமால்யாவும் என்னிடம் விடை பெற்றுக்கொண்டு மற்ற அலுவல்களை கவனிக்கச்செல்வாள்.

இரண்டாவது வாரம் :

முதல் வார பூஜைக்கு பின் ஸ்வர்ணமால்யாவிற்கு தனக்கு ஒரு மிகப்பெரிய தெய்வ சக்தி துனை இருப்பதை உணர்ந்து கொண்டாள்.. பேய் இரவில் வந்து பேசினாலும் பயமுறுத்தினாலும் மஹாபெரியவா த்யானமாகவே இருந்ததால் பேயை பற்றிய பயம் சற்று தணிந்திருந்தது. ஆனாலும் பயம் காரணமாக இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்து கிடந்தாள்.

மூன்றாவது வாரம்:

ஸ்வர்ணமால்யாவின் மஹாபெரியவா குரு பூஜைக்கு அவள் அம்மா மற்றும் தங்கைகள் உதவ ஆரம்பித்தார்கள். எல்லோருமே ஸ்வர்ணமால்யாவின் முன்னேற்றத்தை உணர்ந்தார்கள். பயத்துடன் கூடிய பூஜையாகவே முடிந்தது.

நான்காவது வாரம் :

நான்காவது வாரம் பூஜைக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் செய்தாகி விட்டது. ஸ்வர்ணமால்யாவிற்கு ப்ரதக்ஷிணம் செய்ய முடியாமல் தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. இருந்தாலும் பூஜையை முடித்து விட்டாள். அன்று மதியமே என்னைத்தொடர்பு கொண்டு தான் பட்ட கஷ்டங்களை என்னிடம் சொன்னாள். நானும் மஹாபெரியவாளை கேட்டு சொல்கிறேன் என்று சொன்னேன்.

மறு நாள் காலை என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையின் போது ஸ்வர்ணமால்யாவின் பிரச்சனைகளை எடுத்துச்சொன்னேன்.அதற்கு மஹாபெரியவா அவளை என் அதிஷ்டானத்திற்கு வந்து பிரார்த்தனை செய்யச்சொல் என்று சொன்னார்.

நானும் மஹாபெரியவா சொன்ன செய்தியை ஸ்வர்ணமால்யாவிடம் சொல்லி எவ்வளவு சீக்கிரம் காஞ்சி போக முடியுமோ அவ்வளவு விரைவாக அதிஷ்டானம் சென்று பிரார்த்தனை செய்யும் படி சொன்னேன். ஸ்வர்ணமால்யாவின் பெற்றோர்களும் அக்கா மாமா குடும்பத்துடன் ஸ்வர்ணமால்யாவை அழைத்துக்கொண்டு காஞ்சி சென்று விட்டார்கள்.

திங்கள் செவ்வாய் இரண்டு நாட்கள் காஞ்சியிலே தங்கி அதிஷ்டான பூஜையில் கலந்து கொண்டு தியானமும் செய்து மனமுருக வேண்டிக்கொண்டு தங்கள் ஊருக்கு செல்வதாக திட்டம்.. அவர்கள் அதிஷ்டானத்திலிருந்தே எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்தார்கள். ஏதோ ஒரு இனம் புரியாத தைரியமும் வாழ்க்கையில் நம்பிக்கையும் வந்ததுபோல் இருக்கிறது என்று என்னிடம் சொன்னார்கள்.

எல்லோருடைய ஒருமித்த அபிப்ராயம்

மஹாபெரியவா என்னும் திருநாமத்தை உச்சரித்தால்

மனதில் இருக்கும் பயம் சொல்லாமல் ஓடிவிடும்

அதிஷ்டானத்தில் த்யானம் செய்தால் பயமும் போய்

வாழ்க்கையில் நம்பிக்கையும் பிறக்கும்

ஸ்வர்ணமால்யாவின் குடும்பத்தாரின்

அபிப்பிராயமும் இதுவே

அவர்கள் மேலும் சொன்னது ஸ்வர்ணமால்யாவை பொறுத்தவரை திங்கட்கிழமை முழுவதும் எனக்காக பிரார்த்தனை செய்வதாக முடிவு செய்து தன்னுடைய பிரார்த்தனையை செவ்வாய் கிழமைக்கு தள்ளிப்போட்டாள்.

இதை கேட்டவுடன்

என்னையும் அறியாமல் நான் அழுது விட்டேன்

இப்படி ஒரு தூய ஆத்மாவா என்று அதிசியத்தேன்

சொன்னபடியே தான் எதுவும் வேண்டிக்கொள்ளவில்லை. ஸ்வர்ணமால்யாவிற்கு தனக்கு விரைவில் திருமணம் ஆகவேண்டும் என்ற பிரார்த்தனை எவ்வளவு முக்கியம் என்று நான் சொல்லத்தேவையில்லை. தன்னுடைய பிரார்த்தனையை கூட தள்ளிவைத்துவிட்டு என்னுடைய நலனுக்கு பிரார்த்தனை செய்வது என்பது புனித நட்பின் உச்சக்கட்டம் காருண்யத்தின் உச்சம் மஹாபெரியவா பக்தியின் உச்சம்

இந்த உச்சத்திற்கு மஹாபெரியவா கொடுத்த பரிசு என்ன தெரியுமா. வரும் வாரத்தில் நான் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். திங்கள் செவ்வாய் கிழமைகளில் அதிஷ்டானத்தில் நடந்த அற்புதங்களை கூற வேண்டியுள்ளதால் ஸ்வர்ணமால்யாவின் உச்சத்திற்கு மஹாபெரியவா கொடுத்த பரிசை அடுத்த வாரம் தள்ளிபோடுகிறேன்.

மஹாபெரியவா அதிஷ்டானத்தில்

திங்கள் கிழமை நடந்த அற்புதம்

திங்கள் கிழமை

என்னுடைய நலனுக்கு பிரார்த்தனை என்று ஒதுக்கியதால் ஸ்வர்ணமால்யாவின் திருமண பிரார்த்தனை செவ்வாய் கிழமைக்கு தள்ளிப்போடப்பட்டது.

ஸ்வர்ணமால்யாவின் அப்பழுக்கற்ற எண்ணங்கள் மஹாபெரியவளை போலவே காருண்யம் இதெல்லாம் மஹாபெரியவாளுக்கு தெரியாதா என்ன. ஒரு வயதான முதியவர் தோற்றத்தில் தாத்தாவாக அதிஷ்டானத்தை ப்ரதக்ஷிணமாக வந்து கொண்டிருந்தார். ஸ்வர்ணமால்யா தன்னையும் அறியாமல் அந்த தாத்தா காலில் விழுந்து நமஸ்காரம் செய்தாள்.

அந்த வயதான தாத்தா என்ன ஆசிர்வாதம் செய்தார் தெரியுமா.

"உனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகும்" என்று ஆசிர்வாதம் செய்தார்.

தாத்தாவிற்கு ஸ்வர்ணமால்யாவை பற்றி ஒன்றும் தெரியாது. கல்யாணம் ஆண பெண்ணா இல்லையா என்றும் ஒன்றும் தெரியாது.

இப்பொழுது தெரிகிறதா தாத்தா யாரென்று

சாட்ஷாத் மஹாபெரியவாளே தான்

எப்படி ஸ்வர்ணமால்யா தன்னுடைய கல்யாண பிரார்த்தனையை எனக்காக அடுத்த நாள் தள்ளிப்போட்டாளோ அந்த நல்ல புனித ஆத்மாவை ஆசிர்வதிக்கவில்லை என்றால் பக்தியின் இலக்கணத்திற்கு மாசு வந்து விடும் என்று தானே தாதாவாக வந்து ஆசிர்வதித்த அற்புதத்தை என்னவென்று சொல்ல. அதற்கு பிறகு ஆசிர்வாதம் பண்ண தாத்தாவை எங்கும் காணோம். ஒரு உண்மையான பக்தைக்கு தானே தாத்தா உருவில் வந்து அனுக்கிரஹம் செய்வது மஹாபெரியவா காருண்யத்தின் உச்சம்.. அதுவும் தன்னுடைய அதிஷ்டானத்திலேயே.

நான் அதிஷ்டானத்தில் இருக்கும்பொழுது எனக்காக ஒரு நாள் ஒதுக்குவது ஆச்சர்யம் அல்ல. நான் அங்கு இல்லாத பொழுது எனக்காக ஒரு நாள் ஒதுக்குவது என்பது என்னுடைய நலனுக்காக பிரார்த்தனை செய்வது உண்மையின் உச்சம் சத்திய ஆத்மாவின் இலக்கணம்.

ஸ்வர்ணமால்யாவைப்பற்றி நான் ஒன்று குறிப்பிட வேண்டும்.

வெளி ஊர்களில் உள்ள கோவில்களுக்கு அடிக்கடி செல்வது ஸ்வர்ணமால்யாவின் வழக்கம். அப்படி ஒரு முறை பழனி சென்று முருகனை தரிசனம் செய்தாள். அங்கும் அவளுக்கு எனக்கு பிரசாதம் கூரியரில் அனுப்பவேண்டும் என்று எப்படி தோன்றியதோ தெரியவில்லை.