Featured Posts

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்


விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகர் ஹம்பி- கர்நாடக மாநிலம். இந்திய சிற்ப கலைக்கும் பழமை நாகரீகத்துக்கும் எஞ்சிய ஒரு சான்று.

ஹம்பி பற்றிய காணொளி விடியோவை கீழே கொடுத்துள்ள இணைப்பின் மூலம் கண்டு களித்து விட்டு மேலே அற்புதத்தின் உள்ளே நுழையுங்கள்.

https://www.youtube.com/watch?v=ik3KiYAMxic

அற்புதங்களை பகிர்ந்து கொண்டவர்: ஸ்ரீ அமரேந்தர்

அற்புதங்களை அனுபவித்தவர் : திரு பவார் -காவலாளி

வேலை பார்த்த வருடம் -1980 - 1994

இருவரும் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள்

மஹாபெரியவா அற்புதத்தை அனுபவித்த காவலாளி ஸ்ரீ பவாருக்கு

இந்த தொடர் சமர்ப்பணம் (௦22 அண்ட் ௦23)

மஹாபெரியவா அற்புதத்தை மட்டும் அனுபவிப்பதைவிட அற்புதம் நடந்த இடத்தின் பின்னணி குறித்தும் அறிந்து கொண்டால் அனுபவிக்கும் அற்புதம் இன்னும் சுவையாக இருக்கும் என்று நினைத்தேன்.அதன் விளைவு தான் இந்து ஒரு சிறு முயற்சி.

சாரலின் சுருக்கம்: இந்து மதத்தின் இரு பெரும் காவியங்கள் இதிகாசங்கள் ராமாயணமும் மகாபாரதமும். இன்றும் நாத்திகர்களுக்கு இடையே இது ஒரு சித்தரிக்கப்பட்ட கதை என்னும் ஒரு சர்ச்சைக்குரிய விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உண்மையில் ராமர் கட்டிய பாலமும் மஹாபாரத போர் நடந்த இடமும் இன்றும் உள்ளது. இதற்கு மேல் மஹாபெரியவா ராமாயணன அனுமனை தன்னுடைய காவலாளி ஒருவருக்கு காட்சி கொடுக்க வைத்த அற்புதம் இன்று நினைத்தாலே உடல் புல்லரிக்கிறது.இந்த ஒரு சான்று போதுமே ராமாயணம் கதையல்ல உண்மையில் நடந்த ஒரு காவியம் என்பதற்கு. நீங்களும் இந்தப்பதிவை படித்து ஆஞ்சநேயர் தரிசனம் காணுங்கள்.

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

ராமனை போலெ ராஜா இருந்தால்

அனுமனை போலெ சேவகன் இருப்பான்

மஹாபெரியவாளுக்கும் காஞ்சி ஸ்ரீ மடத்திற்கும் சுமார் பதினைந்து ஆண்டுகள் காவலாளி வேலை பார்த்து மஹாபெரியவாளே திருப்பதி பாலாஜி தரிசனம் கொடுத்து தன்னுடைய கால்களால் அவருடைய தலையில் தன் திருப்பாதங்களை வைத்து ஆசிர்வாதம் செய்தார். இப்படிப்பட்ட மனிதர் தான் காவலாளி பவார்.

இவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் செண்டூர் மஹாராஜாவிடம் காவலாளியாக வேலை பார்த்தவர். இந்த காவலாளியை மஹாபெரியவாளுக்கும் ஸ்ரீ மடத்திற்கும் வேலை பார்க்க அனுப்பி வைத்தவர் செண்டூர் மகாராஜா. பவார் சம்பந்தமான அற்புதங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டவர் ஸ்ரீ அமரேந்திரா. இவரும் மஹாராஷ்ட்ராவை சேர்ந்தவர்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

*****

மஹாபெரியவாளின் எத்தனையோ அற்புதங்களை அற்புதசாரல்கள் தொடர் மூலம் நனைந்து அனுபவித்து வருகிறோம்.மஹாபெரியவா அற்புதங்கள் பக்தர்களை மட்டும் ஆட்க்கொள்ளவில்லை. ஸ்ரீ மடத்தில் வேலை செய்தவர்களையும் ஆட்கொண்டது . அப்படி மஹாபெரியவாளிடத்தில் பாதுகாவல் பணியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர் திரு பவார். இவர் மஹாராஷ்ட்ராவை சேர்ந்த காவலாளி இருபத்திஐந்து வருடங்களாக ஸ்ரீ மடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ஸ்ரீ மடத்தை தவிர மஹாபெரியவா எங்கு சென்றாலும் கூடவே பாதுகாப்புக்காக செல்லுவார்.

இந்த பவார் கர்நாடகாவை சேர்ந்த செண்டூர் மகாராஜாவின் பாதுகாவலர். செண்டூர் மகாராஜா மஹாபெரியவாளின் தீவிர பக்தர்களில் ஒருவர். மஹாபெரியவளுக்காகவே இந்த பாதுகாவலர் பவாரை இறுதி வரை பணியாற்ற வேண்டும் என்று. சொல்லி ஸ்ரீ மடத்திற்கு அனுப்பிவைத்தார். செண்டூர் மகாராஜா.

இந்த பவாருக்கும் மஹாபெரியவா ஒரு அற்புதத்தை நிகழ்த்திக்காட்டினார். மஹாபெரியவா அற்புதமென்பது நடக்கவே சாmத்தியமில்லாதது நடந்தது, பல ஆண்டு காலம் பட்ட கஷ்டங்கள் ஒரே இரவில் ஒரு நல்ல முடிவுக்கு வந்து வாழ்க்கையில் வசந்தம் வீசிய அற்புதம். இன்னும் எத்தனையோ அற்புதங்களை கேட்டிடுகிறோம் படித்திருக்கிறோம் நம்மில் பலர் அற்புதங்களை அவர்கள் வாழ்க்கையில் கூட அனுபவித்திருக்கக்கூடும்.

காவலாளி பவார் அனுபவித்த அற்புதம் நாக்கெல்லாம் சொல்லலும் செய்தி ராமாயணம் மஹாபாரதம் இதிகாச கதையல்ல உண்மையில் நடந்த சம்பவம். இதிகாசங்கள் உண்மை என்பதற்கு கட்டியம் கூறும் ஒரு அற்புதந்தான் பவார் அனுபவித்த அற்புதத்தின் மஹிமை.

திரேதாயுக ஆஞ்சநேயர்

கலியுகத்தில் காட்சி கொடுத்து

அருள் பாலித்த அற்புதம்

இப்பொழுது புரிகிறதா

மஹாபெரியவா யாரென்று

காலத்தை கடந்த அவதாரம்

ரத்தமும் சதையுமாக நம்மைப்போலவே அனுமன் இருபதாம் நூற்றாண்டில். சத்தியம் சாத்தியமானதுதான் அற்புதம்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி என்னுமிடத்தில் நிகழ்ந்த அற்புதம்.

அற்புதத்திற்குள் நுழையும் முன் எனக்கு இந்த அற்புதத்தை தெரிவித்து என்னுடன் பகிர்ந்து கொண்ட மஹாபெரியவா பக்தரை பற்றி ஒரு சிறிய அறிமுகம்.

இவரது பெயர் அமரேந்திர மஹாராஷ்ட்ராவை சேர்ந்த பிராமணர் வகுப்பை சேர்ந்தவர். இருபத்தைந்து ஆண்டுகள் மஹாபெரியவாளின் பக்தர். இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் மஹாபெரியவா ஜனவரி மாதம் எட்டாம் தேதி இரண்டு மணி ஐம்பத்தெட்டு நிமிடத்தில் சித்தி அடைந்தார். சித்தி அடைவதற்கு இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு முன் கடைசி தரிசனம் இவர்கள் குடும்பத்திற்குத்தான் கிடைத்தது. என்ன ஒரு பாகிய சாலிகள்.

இவர் வாழ்வது மஹாராஷ்டிராவில் நான் வசிப்பது சென்னையில் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பாத்துக்கொண்டது கிடையாது. ஆனால் இருவர் அறிமுகமும் நிகழ்ந்தது எப்படி. அதுதான் மஹாபெரியவாளின் அற்புதம். இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் பூமியிலும் செவ்வாய் கிரஹத்தில் இருக்கும் பக்தர் ஒருவருக்கும் அறிமுகம் நிகழ்ந்தாலும் அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.எதுவும் சாத்தியமே மஹாபெரியவா இறை உலகத்தில் இவர் தான் ஸ்ரீ மடத்தின் காவலர் பாவர் என்பவர் அனுபவித்த அற்புதத்தை எனக்கு சொன்னார்.

அற்புதத்தின் உள்ளே நுழைவதற்கு முன்னால் அற்புதம் நிகழ்ந்த ஹம்பி என்னும் கர்நாடகத்தில் உள்ள சரித்திர புகழ் வாய்ந்த சிறிய முற்றிலும் சீரழியாத கொஞ்சம் சீரழிந்தும் உள்ள ஊர். இந்த ஊரை பற்றி ஒரு சிறிய அறிமுகம். இந்த ஊரைப்பற்றி காதால் கேட்டல் மட்டும் போதுமா.. கண்ணால் பார்த்தால் தானே அற்புதத்தை நேரில் கண்ட அனுபவமும் மஹாபெரியவா தரிசனமும் சாத்தியமாகும்.

அதனால் இந்த ஊரின் காணொளி வீடியோ இணைப்பு கொடுத்துள்ளேன். ஒரு அரைமணி நேரத்திற்கும் குறைவாக ஓடக்கூடிய வீடியோ தான்.இந்த விடியோவை கண்டு களித்து விட்டு இந்த அற்புதத்தை அனுபவிக்கும் வரை ஹம்பியிலேயே வாழ்வதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். என்னால் முடிந்தால் உங்களையெல்லாம் ஹம்பிக்கே கூட்டிச்சென்று விடுவேன். ஆனால் எனக்கு அது சாத்யமில்லையே.மனது விசாலமாக இருந்ததால்தான் உங்கள் கண்களுக்காவது விருந்து படைக்கிறேன்.இதை ஏற்றுக்கொண்டு என்னுடன் ஹம்பிக்கு பயணமாகுங்கள்..

அற்புதம்

ஹம்பி என்னும் சிறிய ஊர். ஒரு காலத்தில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகராக இருந்தது. இது ஒரு பாறைகளால் ஆண ஊர். ஊரில் எங்கு பார்த்தாலும் பாறைகளால் ஆன மலைகள். இந்த ஊரில் மட்டும் ஏன் இவ்வளவு பாறைகள் தெரியுமா. யார் கொண்டுவந்து போட்டிருப்பார்கள் .எங்கிருந்து கொண்டுவந்து போட்டிருப்பார்கள். குழப்பமாக இருக்கிறதா. குழம்பவே வேண்டாம்.இதோ காரணம்.

இராமாயணத்தில் அழகன் என்றால் ராமர் தான் நமக்கெல்லாம் தெரியும். ஆனால் அனுமாருக்கு அழகன் சுந்தரன் என்றும் பெயர் உண்டே. அழகன் ஆஞ்சநேயன் சொலாற்றல் மிக்கவன். சொல்லாட்சியில் .மிகச்சிறந்து விளங்கினார். கேட்கவேண்டுமா ஆஞ