பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா திரு ராமநாதன் செட்டியார்
பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா
திரு ராமநாதன் செட்டியார்

ஆத்மாவிற்கு ஜாதிகள் உண்டா
இல்லையே
மஹாபெரியவா கடைபிடித்த
நெறிமுறைகளில் இதுவும் ஒன்று
இதை பறைசாற்றும் அனுபவம்
இந்த பக்தரின் அனுபவம்
பொதுவாகவே ஒரு அபிப்ராயம் நிலவிய காலம் அது. மஹாபெரியவா ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் உரியவரான குரு. பிராமணர் அல்லாதாருக்கு மஹாபெரியவா ஆசிர்வாதம் பண்ண மாட்டார் என்றும் ஒரு கருத்து நிலவியது.
இந்தக்கருத்தையெல்லாம் முறியடிக்கும் வண்ணம் மஹாபெரியவா தன்னை ஒரு ஜகத் குரு என்றும் சொன்னது மட்டுமல்லாமல் எல்லா ஜாதியினருக்கும் ஒன்றுபோல அருள் பாலித்த சம்பவங்கள் ஏராளம்.அப்படிப்பட்ட சம்பவங்களில் ஒன்றுதான் இந்த ராமநாதன் செட்டியார் என்ற மஹாபெரியவா பக்தரின் அனுபவமும் கூட.
ராமநாதன் செட்டியாருக்கு சங்கர மடத்துடன் ஒரு பாரம்பரிய சம்பந்தம் கிடையாது. ஒரு முறை செட்டியாரின் நண்பர் மஹாபெரியவாளை தரிசம் செய்ததுண்டா என்ற கேள்விக்கு செட்டியார் பதில் சொல்ல முடியாமல் விழித்துக்கொண்டிருந்தார்.
பின்னர் செட்டியாருக்கு மஹாபெரியவாளுடன் தொடர்பு ஏற்பட்டு அன்றாடம் மஹாபெரியவாளை தரிசிக்க சென்னையில் இருந்து காஞ்சிக்கு சென்று விடுவார்.அதிகாலை மூன்று மணிக்கு கிளம்பி மஹாபெரியவாளை தரிசித்து விட்டு காலை ஏழு மணிக்கெல்லாம் சென்னை திரும்பி விடுவார்.
ராமநாதன் செட்டியார் மஹாபெரியவாளிடம் அனுபவித்த மறக்க முடியாத சம்பவங்களில் சில இதோ உங்களுக்காக:
ராமநாதன் செட்டியார் ஒரு விஷயத்தை வழக்கமாக கொண்டிருந்தார்.காலையில் சென்னையில் இருந்து கிளம்பினால் தரிசனம் காணாமல் வாயில் பச்சை தண்ணீர் கூட படாது.
இப்படி ஒரு நாள் மஹாபெரியவா தரிசனம் காண பகல் பன்னிரண்டு மணியாகிவிட்டது.மஹாபெரியவா தன்னுடைய ஞான திருஷ்டியால் ராமநாதன் செட்டியார் காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடாமல் காலி வயிற்றுடன் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டார்.
உடனே தன்னுடைய கைங்கர்ய மனுஷாளில் ஒருவரான ஸ்ரீகண்டனை அழைத்து வரச்சொல்லி ஒரு டம்பளரில் பால் கொண்டுவரச்சொல்லி பாதி டம்பளர் பாலை தான் குடித்து விட்டு மீதி பாலை ராமநாதன் செட்டியாரிடம் கொடுத்து குடிக்கச்சொன்னார்.
ராமநாதன் செட்டியாருக்கு ஒரே அதிர்ச்சி. இருந்தாலும் பாலை வாங்கிக்கொண்டு அப்புறம் குடிப்பதாக சொன்னார். ஆனால் மஹாபெரியவா விடாமல் குடித்தால்தான் ஆயிற்று என்று சொல்லி குடிக்க வைத்து விட்டார். இந்த நிகழ்வை இன்றும் ராமநாதன் செட்டியார் மட்டுமல்ல பிராம்மணர் அல்லாதோரும் மறக்கமாட்டார்கள்.
கால் உடைந்தாலும் மஹாபெரியவா தரிசனம் முக்கியம்
ஒரு முறை ராமநாதன் செட்டியார் வேலை விஷயமாக கோவை சென்றார்.அங்கிருந்து புதன் கிழமை இரவு காஞ்சிக்கு கிளம்ப வேண்டும்.வியாழக்கிழமை குரு வாரம் என்பதால் காஞ்சிக்கு கிளம்பவேண்டிய கட்டாயம். கிளம்புவதற்கு சற்று முன் தன்னுடைய ஹோட்டல் அறையில் சேரில் இருந்து கீழே விழுந்து கால் மடங்கி விட்டது. கால் வீங்கியும் விட்டது.
நண்பர்கள் காலில் எலும்பு முறிவு இருக்கிறதா என்பதை உறுதி செய்யும்படி அறிவுறுத்தினார்கள். ஆனால் செட்டியார் மஹாபெரியவாளை தரிசனம் காணாமல் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி மறுத்து விட்டார்.
மறு நாள் மதியம் காஞ்சி ஸ்ரீ மடத்திற்கு சென்றடைந்து மஹாபெரியவாளை தரிசனம் காண காத்திருந்தார். அப்பொழுது மஹாபெரியவா செட்டியாரை தன்னுடைய அறைக்கு வருமாறு அழைத்தார். ஆனால் ராமநாதன் செட்டியார் உள்ளே செல்லாமல் தயங்கினார். ஏனென்றால் தான் ஒரு பிராமணர் அல்லாதவர் என்ற காரணத்தால்.
ஆனால் மஹாபெரியவா செட்டியாரை வலுக்கட்டாயமாக உள்ள அழைத்து உன்னுடைய கால் எப்படி இருக்கிறது. எங்கே காலை தூக்கு என்று சொன்னவுடன் ராமநாதன் செட்டியார் அழுதே விட்டார். தானும் சொல்லவில்லை யாரும் மஹாபெரியவாளிடமும் சொல்லவில்லை. பின் எப்படி மஹாபெரியவளுக்கே தனக்கு காலில் அடிபட்டது தெரியும்.
ஒரு தந்தையின் கரிசனத்தோடு அழைத்து மஹாபெரியவா காரணம் கேட்டதில் இருந்து என்ன தெரிகிறது. ஆத்மா மட்டுமே ஞானம் உள்ளது. உடலை பொறுத்தவரை ஞானம் அற்ற ஒரு ஜடம்.ஒரு ஆத்மா உடலில் இருக்கும் வரைதான் அந்த உடலுக்கு ஞானம் என்பது உண்டு. ஆத்மா வெளியேறிவிட்டால் அது ஒரு ஜடப்பொருள்.
இன்னும் எத்தனையோ சம்பவங்கள். படிப்பிலிருந்து வேலை வரை செட்டியாருடைய பசங்களுக்கு வெளி நாட்டில் வேலை வரை அதுவும் எப்படி ஒரு பரீட்சையோ நேர் கானலோ இல்லாமல்.
வழக்கமாக நான் குறிப்பிடுவது போல சாகரத்தில் ஒரு துளிதான் நான் கொடுக்கும் சம்பவங்கள். எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டுமா. இந்த வீடியோ காணொளியை உடனே பாருங்கள்.
ஒரு சாதாரண மனிதனுக்குள்ள ஞானத்திற்கும்
மஹான்களின் ஞானத்திற்கும் உள்ள வித்யாசம்
மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்யாசம்.
புரியாது விளங்காது நடக்கும்பொழுது
மட்டுமே நாம் உணர முடியும்
மஹான்களுக்கும் மேல மஹாபெரியவா
நாம் அவருடன் கலக்கமுடியுமே தவிர
உணரக்கூட முடியாது
மஹாபெரியவா சரணம்
Duration: 1 hour 32 seconds
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்