top of page
Featured Posts

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்


மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்

வெற்றி சிரித்து வாழவைக்கும்

தோல்வி சிந்தித்து வாழவைக்கும்

இரண்டாவது அற்புதம்

ஒரு முறை காஞ்சி ஸ்ரீ மடத்தில் இரவு வேலை முடிந்தவுடன் பவாரின் மனைவியும் மகளும் ஊரிலிருந்து வந்தார்கள். அவர்கள் திருப்பதி போகவேண்டுமென்றும் அவர்களுடன் பவாரும் வரவேண்டுமென்றும் வற்புறுத்தினார்கள்.அதற்கு பவார் " நான் வரமுடியாது.எனக்கு பயமாக இருக்கிறது மஹாபெரியவாகிட்டே உத்தரவு கேட்க" என்று சொல்லி மறுத்து விட்டான்.

பணம் மட்டும் கொடுக்கிறேன் என்று சொன்னான். விடிந்தால் மனைவியும் மகளும் திருப்பதி கிளம்பவேண்டும். இரவு படுக்கபோகும்முன் மஹாபெரியவளிடத்தில் ரிப்போர்ட் செய்வது வழக்கம். அந்த முறையில் பவார் மஹாபெரியவாளிடத்தில் போய் ரிப்போர்ட் செய்தார்..அப்பொழுது மஹாபெரியவா பவாரிடம் கேட்டார்.என்ன நீ திருப்பதி போக வேண்டுமா. மனைவி மகளுடன் போயிட்டு வாயேன் என்று உத்தரவு கொடுத்தார்.

பவாருக்கு ஒன்றும் புரியவில்லை மிகவும் குழம்பினார் பவார். தான் யாரிட மும் திருப்பதி போவது பற்றி சொல்லவில்லை.மஹாபெரியவாளிடம் இந்த வினாடி வரை தெரியப்படுத்தவில்லை . ஆனால் எப்படி தெரிந்தது மஹாபெரியவாளுக்கு

மஹாபெரியவாளுக்கு சொன்னதும் தெரியும்

சொல்லாததும் தெரியும்

பரமேஸ்வரன் அல்லவா மஹாபெரியவா

ஈரேழு பதினாலு லோகத்தை ஆளும்

சக்கரவர்த்தி அல்லவா

மஹாபெரியவா

உத்தரவு கொடுத்து விட்டு மஹாபெரியவா சயனத்திற்கு சென்று விட்டார். பவாரும் விடை பெற்று கொண்டார். விடை பெற்றுக்கொண்டாரே தவிர படுக்கை மஹாபெரியவளுக்கு அருகில் தான். மஹாபெரியவா தினந்தோறும் அதிகாலை மூன்று மணி முதல் மூன்று முப்பது வரை பக்தர்களுக்கு விஸ்வரூப தரிசனம் கொடுப்பார். பவாரும் அந்த நேரத்தில் எழுந்து விடுவார்..

திருப்பதி பாலாஜி தரிசனம்

மறு நாள் அதிகாலை மணி மூன்று இருக்கும். பவாரும் திருப்பதி போக கிளம்பவேண்டும் என்ற எண்ணத்தில் மஹாபெரியவாளிடத்தில் தலையை சொரிந்து கொண்டு விடை பெற காத்திருந்தார் பவார்.மஹாபெரியவா பவார் நிற்பதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தான் ஸ்னானம் (குளிக்க) பண்ண தயாராகிக்கொண்டிருந்தார். பவாருக்கோ தன்னுடைய திருப்பதி பஸ் போய் விடுமே என்ற பயம்.பத்து பதினைந்து நிமிடங்கள் சென்றிருக்கும். தீடீர் என ஒரு பிரகாசமான ஒளி வெள்ளம்.

கண்ணைப்பறிக்கும் ஒளி வெள்ளத்திற்கு

நடுவே திருப்பதி பாலாஜி

அந்த ஒளி வெள்ளத்திற்கு நடுவில் மஹாபெரியவா சாட்ஷாத் திருப்பதி பாலாஜியாக காட்சி கொடுத்தார்.பவாருக்கோ ஒன்றும் புரியவில்லை.வாயடைத்து போய் நின்றிருந்தான். உடம்பு வியர்த்து கொட்டியது. தன் கண்ணை தன்னாலேயே நம்ப முடியவில்லை. பவாருக்கு.

நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து நமஸ்கரித்தார்.நாமெல்லாம் மனித ஜீவன்கள். நமஸ்கரிப்பதை விட வேறு என்ன செய்யமுடியும்.அதற்குள் மற்ற பக்தர்கள் மற்றும் ஸ்ரீ கார்ய மனுஷாள் எல்லோரும் வந்து விட்டனர். அங்கு வந்தவர்கள் எல்லோருக்கும் பெரியவா மஹாபெரியவளாகத்தான் தெரிந்தார்.ஆனால் பவாருக்கோ இன்னும் திருப்பதி பாலாஜியே கண் முன் நிற்பது தெரிந்தது. திரும்ப திரும்ப விழுந்து நமஸ்கரித்தார்.சுற்றி நிற்பவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படி புரியும். காட்சி கொடுத்தது பவாருக்கு மட்டும்தானே.

மஹாபெரியவா பவாரிடம் கேட்டார்

"என்ன திருப்பதி எப்ப கிளம்பறே"

பவாரின் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டு பேச்சு வரவில்லை.இருந்தாலும் மிகவும் கஷ்டப்பட்டு சொன்னான்

."எஜமான் நீங்களே திருப்பதி பாலாஜி தரிசனம் கொடுத்துவிடீர்கள். இன்னும் திருப்பதி வேற போகணுமா. நான் போகவில்லை எஜமான் பாலாஜி தரிசனம் பார்த்து விட்டேன்.என்று சொல்லி தன் மனைவியிடமும் மகளிடமும் விவரத்தை சொல்லி தன்னுடைய காவலாளி வேலையை பார்க்க தொடங்கினார். மஹாபெரியவாளுக்கு தீப ஆராதனை காண்பித்து விட்டு தரிசனம் முடிந்து அங்கிருந்து எல்லோரும் கிளம்பினர்.

இந்த பதிவை படிப்பவர்களுக்கு

இப்பொழுது புரிந்திருக்கும்

மஹாபெரியவா ஒரு இறை அவதார புருஷர். கலியின் தாக்கத்திலிருந்து நம்மையெல்லாம் மீட்டெடுக்க வந்த கைலாய தாரி வைகுண்ட தாரி அம்பாள் காமாட்சி மஹாலக்ஷ்மி சிவ பார்வதி இப்பொழுது புரிகிறதா.என்னுடைய மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-௦21 மொத்த கடவுள்களின் ஓர் உருவம் தான் மஹாபெரியவா என்று நான் எழுதியிருந்தது சரிதானே.

இன்று அது என் கற்பனை

நாளை அதுவே உண்மையாகும்

உலகம் புரிந்து கொள்ளும்போது

தெரிந்து கொள்ளும்போது

மஹாபெரியவா சரணம்

மஹாபெரியவாளின் ஸ்ரீ பாத ஆசிர்வாதம் பவாருக்கு

ஒரு நாள் இரவு தன்னுடைய பணி முடிந்து மஹாபெரியவாளுக்கு அருகில் படுத்திருந்தார் பவார். அப்பொழுது அவரையும் அறியாமல் எண்ண அலைகள் அவருக்குள் பயணித்துக்கொண்டே இருந்தது. அந்த என்ன அலைகள் இதுதான்.

"எஜமான் திருப்பதி பாலாஜி தரிசனம் கொடுத்து விட்டார். .மற்றவர்கள் தலையில் தன்னுடைய பாதங்களை வைத்து ஆசிர்வாதம் பண்ணுவாரே அதே போலெ தன்னுடைய தலையிலும் எஜமான் பாதங்களை வைக்கச்சொல்லி ஆசிர்வாதம் வாங்கிவிட வேண்டுமென்று ஒரு விபரீத ஆசை தொற்றிக்கொண்டது. பாத ஆசிர்வாதத்தின் முக்கியத்துவம் கூட தெரியாது பவாருக்கு

.பகவான் நம் முன் காட்சி கொடுத்தவுடன் நமக்கு நம் வேண்டுதல்களுக்கும் கோரிக்கைகளுக்கும் பஞ்சமில்லையே. பவாரும் மனிதன் தானே. அந்த ஒரு நொடிப்பொழுதில் முடிவு செய்தார் பவார்.எஜமான் கிட்டே கேட்டு ஸ்ரீ பாத ஆசிர்வாதம் வாங்கிவிடவேண்டுமென்று.

மஹாபெரியவா மூன்று மணிக்கு எழுந்து விடுவார் என்பதால் மேனாவின் கீழேயே இரண்டு மணியிலிருந்து குந்தவைத்து உட்கார்ந்திருந்தார் பவார்.

சரியாக மூன்று மணிக்கு மேனாவின் கதவை திறந்தார் மஹாபெரியவா. பெரியவா தன்னுடைய ஸ்ரீ பாதங்களை தரையில் கூட வைக்கவில்லை.பவார் எழுந்து நின்று கைகளை இருபுறமும் கட்டிக்கொண்டு பயத்துடன் நின்று கொண்டிருந்தான். மஹாபெரியவா கேட்டார் "என்ன பவார் நீ தூங்கலையா என்று. அதற்கு பவார் சொன்னான்

எஜமான், நீங்க குடுமி வைத்துக்கொண்டு வரும் சில மரியாதைப்பட்ட பெரியவா மனிதர்களின் தலையில் உங்கள் ஸ்ரீ பாதங்களை வைத்து ஆசிர்வாதம் செய்வீர்களே அது போலெ எனக்கு செய்யவேண்டும் எஜமான் என்று கேட்டு அங்கேயே நின்று கொண்டிருந்தான்.மஹாபெரியவா.

மஹாபெரியவாளுக்கு ஒரு வினாடி சிரிப்பு தான் வந்தது.பாத ஆசிர்வாதம் எதுக்கு என்னத்துக்கு என்று தெரியாமல் கேட்கிறான். இருந்தாலும் அவன் பக்தியை மெச்சி அவனுக்கு பாத ஆசிர்வாதம் பண்ணுவோம் என்று முடிவு செய்தார்..

ஒரு சில வினாடிகள் யோசியத்து விட்டு பவாரிடம் சொன்னார். நீ உன்னுடைய தலையை என்னுடைய பாதத்தில் கொண்டு வந்து வை என்று கட்டளையிட்டர். பவாரும் தன்னுடைய தலையை மஹாபெரியவா ஸ்ரீ பாதத்தில் வைத்தான்.ஒரு வினாடிக்குப்பின் தன்னுடைய ஸ்ரீ பாதங்களை பவாரின் தலையிலிருந்து. தன்னுடைய ஸ்ரீ பாதங்களை எடுத்துக்கொண்டார்

இந்த பரப்பிரும்மத்திற்கு

என்ன ஒரு இரக்க சுபாவம்

நமக்கு வேண்டுமானால் பவார் ஒரு காவலாளி

ஆனால் மஹாபெரியவாளுக்கு

அவனும் ஒரு ஜீவன்தானே

.எடுத்த பின் பவாரிடம் மஹாபெரியவா கேட்டார். சந்தகோஷம்தானே என்று. ரொம்ப ரொம்ப சந்தோஷம் எஜமான். இனிமே எனக்கு என்ன வேணும். சாமியே தரிசனம் கொடுத்து தன்னுடைய பாதங்களால் ஆசிர்வாதமும் பணியாச்சு.ஒன்னும் வேண்டாம் எஜமான் என்று சொன்னான் பவார்.

மஹாபெரியவா சொன்னார் இல்லே பவார் உனக்கு என்ன தோன்றதோ அதை கேளு, நான் உனக்கு ஆசிர்வாதம் பண்ணறேன் என்று சொன்னார் மஹாபெரியவா. சிறிது யோசித்து விட்டு பவார் பின்வருமாறு கேட்கத்தொடங்கினான். " எஜமான் நான் கடைசி வரை வாழ எனக்கு ஒரு வீடு வேணும். தினமும் இரண்டு வேளை கஷ்டப்படாமல் சாப்பிட வேண்டும் என்று கேட்டார் பவார்.

மஹாபெரியவா ஆசிர்வாதம் பண்ணார் "நன்னா இரு"

இப்பொழுது பவார் தன்னுடைய குடும்பத்துடன் சொந்த வீட்டில் மூன்று வேளை கஷ்டப்படாமல் ஜீவனம் செய்கிறார்.என்றோ செய்த ஆசிர்வாதம் தன்னுடைய வாழ்நாள் இறுதி வரை பாய்கிறதே. இது இறைவன் ஆசிர்வாதம் அல்லவா. இந்த ஜென்மம் மட்டுமல்ல அடுத்த ஜென்மத்துக்கும் பாயும்.

பகவத் கீதை நமக்கெல்லாம் சொல்லிக்கொடுத்த பாடம் நினைவுக்கு வருகிறதா .பாடம் இதுதானே கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே.இதன் அர்த்தம் என்ன. பலன் தானாக வரும் என்பதுதானே.

காவலாளி பவார் பலனை எதிர்பார்க்கவில்லையே ஆனால் தானாகவே பலன் வந்துவிட்டதே. மடத்திற்கும் மஹாபெரியவாளுக்கும் உண்மையாக நேர்மையாக நாணயமாக உழைத்ததன் பலன்தான் இந்த இறை தரிசனமும் ஆசிர்வாதமும்.

மனிதன் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கட்டும். ஆனால் மனது சுத்தமாக இருந்தால் இறைவன் வந்து வாசம் செய்வான்.

எப்படி பட்ட ஒரு புண்ணிய ஆத்மா காவலாளி பவார்

ஆத்மா இந்த உடல் என்ற கூட்டைவிட்டு வெளியே வந்தால்;

எல்லோருமே இறைவனின் ஒரு அங்கம் தானே

பாவ புண்ணியம் உடலுக்குத்தான் ஆத்மாவிற்கு கிடையாதே

ஆத்மா என்றுமே புனிதமானதுதான் இறைவனை போலெ

ஆத்மாவும் உடலும் ஒரு சேர புண்ணியம் அடைந்து விட்டால்

வாழும் காலத்திலேயே எல்லோரும் கையெடுத்து கும்பிடும்

கடவுளாகவே வாழுவோம். நிஜம்தானே

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page