top of page
Featured Posts

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-திரு விக்கு விநாயகராம் மாமா


பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-017

திரு விக்கு விநாயகராம் மாமா

மஹாபெரியவா

இந்த சொல்லை கேட்டாலோ உச்சரித்தாலோ

உங்கள் கண்களில் உங்களை அறியாமல்

கண்ணீர் பெருகுகிறதா

உங்களுக்குள் மஹாபெரியவா வாழ்கிறார்

இது சத்தியம்

ஒவ்வொருவர் வாழ்க்கையும் அவரவர்கள் செலுத்தும் திசையில் செல்லும்.. ஆனால் விநாயகராம் மாமாவின் வாழ்க்கை மஹாபெரியவளால் செங்கல் செங்கலாக வைத்து கட்டப்பட்டது.

சமுதாயத்தில் ஒரு சிலருக்குத்தான் அறிமுகம் தேவையிருக்காது.. அப்படி பட்ட ஒரு சிலரில் கடம் வித்வான் விக்கு விநாயகராம் மாமாவை தெரியாதவர்களே இல்லை எனலாம். கச்சேரிகளில் கடம் என்பது ஒரு உப பக்கவாத்தியம்.

அதை ஒரு கச்சேரி செய்யும் அளவிற்கு ஒரு முதன்மை வாத்தியமாக பரிமளிக்க வைத்த பெருமை மாமாவை சேரும். பிரதோஷ மாமாவை தெரியாதவர்களே இருக்க முடியாது. மஹாபெரியவாளின் அத்யந்த பக்தரான மஹாபெரியவாளே அறுபத்தி நான்காவது நாயன்மார் என்று போற்றப்பட்ட பிரதோஷ மாமா விநாயகராம் மாமாவிற்கு பெரியப்பா..

கேட்கவும் வேண்டுமா மஹாபெரியவாளின் அனுகிரஹத்திற்கும் ஆசிர்வாதத்திற்கும்.மாமாவை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்ற பெருமை எல்லாமே மஹாபெரியவாளையே சாரும். அதற்கு மாமாவும் தன்னை தகுதி ஆக்கிக்கொண்டு மஹாபெரியவாளையே தன்னுடைய சுவாசமாக கொண்டிருந்தார்.

விக்கு விநாயகராம் மாமா வாழ்க்கையில் மஹாபெரியவா நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.அவைகளில் ஒரு சிலவற்றை இந்த பதிவில் கொடுக்கிறேன். இது சாகரத்தில் ஒரு துளிதான். சாகரத்தையே அனுபவிக்க வேண்டுமா. இந்த காணொளியை காணுங்கள்.

மாமா தன்னுடைய இருபத்தி நான்காம் வயதில் இருந்து இந்தியாவின் பாரத் ரத்னா விருது பெற்ற M.S.. சுப்புலக்ஷ்மி அம்மா அவர்களுடன் இணைந்து இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் கச்சேரி செய்து வந்தார்.

அற்புதம் :-1

ஆயிரத்து தொள்ளாயிரத்து என்பதாம் வருடம் (1980) மாமாவிற்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இந்த விஷயத்தை மஹாபெரியவாளிடம் சொன்னார் மாமா. அப்பொழுது மஹாபெரியவா மாமாவை கேட்டாராம் இது விருதா இல்லை பணமுடிப்பா என்று. ஆங்கிலத்தில் பின் வருமாறு மஹாபெரியவா கேட்டாராம் இது அவார்டா இல்லை ரிவார்டா என்று.

விநாயகராம் மாமாவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.பிறகு சற்று நேரம் கழித்து இது பண முடிப்பு பெரியவா. ரூபாய் பதினைந்தாயிரம் கிடைக்கும் என்று சொன்னார். அந்தகாலங்களில் பதினைந்தாயிரம் ரூபாய் என்பது எவ்வளவு பெரிய தொகை என்று நான் சொல்லவும் வேண்டுமா.

அதற்கு மஹாபெரியவா உனக்கு இந்த பண முடிப்பை வருடம் வருடம் தருவார்களா? என்று கேட்டாராம்., அதற்கு மாமாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மஹாபெரியவா கேட்ட ஒரு கேள்விக்கு வருடா வருடம் பணமுடிப்பு கொடுத்தார்களா என்பதை காணொளியை கண்டு பிரம்மியுங்கள்.

மஹாபெரியவா ஒரு வினாடி ஒரு பக்தரை மனதில் நினைத்து விட்டால் அதன் வெளிப்பாடு பிரம்மாண்டம் என்பது நிச்சயம்.

அற்புதம் :-2

மஹாபெரியவா ஒரு முறை மாமாவின் கடத்தை தன்னுடைய விரல்களால் தட்டினார். அதன் விளைவு முதன் முறையாக உலகத்திலேயே ஒரு உப பக்கவாத்தியம் கடத்திற்கு கிராமி அவார்ட் வழங்கப்பட்டது. சென் பிரான்ஸஸிஸ்கோ நகரில் நடந்த விழாவில் மாமாவிற்கு வழங்கப்பட்டது.

அற்புதம் :-3

மஹாபெரியவா ஒரு விஷயத்தை நினைத்துவிட்டால் அதை வெளிப்படுத்துவது பிரதோஷ மாமா. எங்கிருந்தாலும் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவர்களுக்குள் அப்படியொரு எண்ணப்பரிமாற்றங்கள் காற்றிலேயே.

சைன் பிரான்ஸஸிகா அவார்ட் விழாவிற்கு பிரதோஷமமா விநாயகராம் மாமாவை வேஷ்டியில் பஞ்சக்கச்ச கட்டு உடுத்தி போகுமாறு சொன்னார். மாமாவிற்கு தர்ம சங்கடமான நிலைமை..மறுக்க முடியுமா எல்லோரும் கோட் சூட்டில் வருவார்கள். இருந்தாலும் . வெட்கத்துடன் மாமா கட்டிக்கொண்டு போனார். அங்கு என்ன ஆயிற்று தெரியுமா மாமா பெருமையாக தலை நிமிர்ந்து விழாவில் பங்கேற்றார். காணொளியை கண்டு பிரம்மியுங்கள்.

அற்புதம் :-4

ஒரு முறை ஏதென்ஸ் நகரில் மாமா தபேலா வித்வான் சாஹீர் ஹுசைன் இருவரும் இணைந்து கச்சேரி செய்யப்போகிறார்கள். அன்று மாலை கச்சேரி. இந்த சமயத்தில் மாமாவின் கடம் மாமா தங்கியிருந்த அறையில் கீழே விழுந்து உடைந்து விட்டது. மாமாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.ஏதென்ஸ் நகருக்கு பக்கத்தில் ஒரு சிறு குக்கிராமம். அந்த ஊரில் கடம் என்னும் வாத்தியத்தை அப்பொழுதான் முதல் முறையாக பார்க்கிறார்கள்.

மாமா திரும்ப ஊருக்கு கிளம்பி விடலாம் என்று முடிவு செய்த பொழுது கச்சேரி ஏற்பாடு செய்தவர்கள் அதற்கு சம்மதகிக்க மறுத்து விட்டனர், கான்ட்ராக்ட்டில் கையெழுத்து போட்டுத்தான் இங்கே வந்தீர்கள். நீங்கள் போக முடியாது என்று சொன்னவுடன் மாமா தன்னுடைய மனைவியை தொலை பேசியில் அழைத்து விவரத்தை சொன்னார்.

மாமி மாமாவிடம் நீங்கள் ஒன்றும் கவலை படவேண்டாம். நான் மஹாபெரியவா கிட்டே போய் விவரத்தை சொல்லி பிரசாதம் வாங்கிக்கொண்டு வருகிறேன். நீங்கள் மாலையில் நிச்சயம் கச்சேரி செய்வீர்கள் என்று சொல்லி தொலை பேசியை துண்டித்து விட்டு காஞ்சி மடத்திற்கு சென்று விட்டார்கள்.

மாமாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அது ஒரு சிறிய கிராமம்.அவர்களுக்கு கடம் என்ற வாத்தியமே இப்பொழுதான் தெரியப்போகிறது.எப்படி சாத்தியம் ஆகும்.கடம் யாரிடம் இருக்கும். கடையிலும் கிடைக்காதே. மஹாபெரியவா ஆசிர்வாதத்தால் நிச்சயம் எதாவது நடக்கும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது.

மாமாவின் நம்பிக்கை வீண் போகவில்லை. அங்கு புதிய இடத்தில் மாமாவிற்கு கடம் கிடைத்தது.அதுவும் மாமாவின் பெயர் பொறிக்கப்பட்ட கடம். இது எப்படி சாத்தியம். இந்த காணொளியை காணுங்கள் மஹாபெரியவாளின் ஞான திருஷ்ட்டி ஜென்மங்களையும் கடந்து செல்லும் என்பது உங்களுக்கு புலனாகும்.

விக்கு விநாயகராம் மாமா மஹாபெரியவாளின்

விஸ்வரூபத்தை ஏதென்ஸ் நகரத்தில் பார்த்தார்.

நம்முடைய தாத்தா பாட்டி எல்லாம்

கதை சொல்லி கேட்டிருக்கிறோம்

ஆனால் ஒரு உண்மை கதையை

மஹாபெரியவா நிகழ்த்தி விட்டார்.

உங்களுக்கு புரிகிறதா மஹாபெரியவாளுக்கு

பொருள் ஒரு பொருட்டு இல்லை தூரம் பற்றி கவலையே இல்லை.எதுவும் சாத்தியம்.

மஹாபெரியவா சங்கல்பித்தால்

இந்த பிரபஞ்சமே ஒன்று கூடி

சங்கல்பத்தை நிறைவேற்றும் என்பதை உணர்கிறீர்களா

நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன்

காணொளியை உடனே காணுங்கள்

https://www.youtube.com/watch?v=5IuWfYpeE2c

Duration: 1 hour 5 minutes 5 seconds

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page