Featured Posts

குரு பூஜை அற்புதங்கள்-7-பாகம்-I- விந்தியவாசினி


குரு பூஜை அற்புதங்கள்-7-பாகம்-I-

விந்தியவாசினி

“உனக்காக வாழ்கிறேன் என்று

பிறர் சொல்வதை விட

உன்னால் வாழ்கிறேன் என்று

ஒருவரை சொல்லவை”

விந்தியவாசினி ஒரு வாழும் உதாரணம்

விந்தியவாசினி குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் ஒரு ஆசிரியை. மஹாபெரியவா எனக்கு தொடர்பை ஏற்படுத்திக்கொடுக்கும் ஆத்மாக்கள் எல்லோருமே ஒரு விதத்தில் சிறந்த மனிதர்களாக இருக்கிறார்கள்.

விந்தியவாசினி எப்படிப்பட்ட பெண் என்று சொல்கிறேன். கேளுங்கள். ஒரு நல் முத்து எடுக்க கடலில் குதித்து எவ்வளவு ஆழம் செல்லவேண்டும் என்பது நமக்கெல்லாம் தெரியும்.தங்கமும் வைரமும் எடுக்க எவ்வளவு ஆழம் பூமியை தோண்ட வேண்டுமென்பதும் நமக்கெல்லாம் தெரியும்.

மனிதர்களில் ஒரு நல்ல மனிதரை கண்டு பிடிக்க பல காலம் பழகிய அனுபவம் மிகவும் அவசியம். ஆனால் ஆழத்திற்கு செல்லாமலும் பழகிய அனுபவம் இல்லாமலும் ஒருவரை நல்லவர் என்று எப்படி கண்டுபிடிப்பது. அவர்கள் பேச்சில் மற்றவர்கள் மேல் காட்டும் கருணையும் கரிசனமும் அல்லது மற்றவர் நலனுக்காக அவர் செய்யும் செயல்கள் இவைகளில் இருந்து நாம் கண்டுக்கொள்லாம்.

சமுதாயத்தில் யார் நல்லவர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

நீங்கள் நினைப்பதென்ன

டாக்டர் என்ஜினீயர் தொழில் அதிபர்

அரசியல் வாதி கோடீஸ்வரன்

இவர்கள் யாருமே இல்லை

யார் ஒருவரால் சமுதாயத்தில்

நான்கு பேருக்கு நல்லது நடக்கிறதோ

அவர்களே சமுதாயத்தின் தலை சிறந்த மனிதர்கள்

விந்தியவாசினி ஒரு மிகச்சிறந்த மானுடப்பிறவி. அடுத்தவர் நலனுக்காக தன்னுடைய சௌகரியங்களைக்கூட விட்டுக்கொடுக்கும் ஒரு பெண். மற்றவர் துன்பங்களைக்கூட தன் துன்பமாக நினைத்து துன்பப்படும் ஒரு ஆச்சரியப்படத்தக்க ஒரு மனிதப்பிறவி.

விந்தியவாசினி வகுப்பில் பாடம் பயிலும் மாணவச்செல்வங்கள் எல்லோரும் விந்தியாவசினியை ஒரு ஆசிரியராக மட்டுமல்லாமல் ஒரு தாயாகவும் பார்க்கின்றார்கள். ஒரு ஆசியரியைடம் தாயிடம் பழகுவதுபோல் பழக்கவேண்டுமென்று யாராவது குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பார்களா. இந்த ஆசிரியர் என்ற உறவையும் தாண்டி ஒரு தாயிடம் உள்ள உறவை உணர்வை எப்படி குழந்தைகளால் காட்ட முடியும்.

எந்தக்குழந்தையும் விந்தியாவசினியிடம் ஒரு ஆசிரியருக்குண்டான பயத்துடன் பழகுவதில்லை. எல்லா குழந்தைகளும் தாய் பாசமும் மரியாதையும் கலந்த உணர்வுடன் தான் இந்த ஆசிரியையிடம் பழகுகிறார்கள். எந்தக்குழந்தையும் இவள் வேலை பார்க்கும் பள்ளியில் சேர வரும்பொழுது எல்லாம் விந்தியவாசினியின் வகுப்பில் சேர போட்டி போட்டு இடம் வாங்குவார்கள்.

குழந்தைகளை அவர் அவர் இடத்தில உட்கார வைத்து பாடம் சொல்லிக்கொடுக்கமாட்டாள். எல்லா குழந்தைகளையும் தன் அருகில் உட்கார வைத்து தாயின் பாசத்துடன் தலையை வருடி பாடம் சொல்லிக்கொடுக்கும் பாங்கு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் கூட சொல்லித்தரமாட்டார்கள். இந்த அன்பு பாசம் எல்லாம் ரத்தத்தில் ஊறிய குணங்கள். இதை விலைக்கு வாங்க முடியாது. சொல்லிக்கொடுத்தாலும் வராது. பயிற்சியிலும் புரியாது.

சாப்பாட்டு நேரத்தில் கூட எல்லா குழந்தைகளையும் தன் அருகே அழைத்து அன்புடன் சாப்பிடவைத்து தானும் சாப்பிடும் முறை, சொல்லிக்கொடுத்து வருவதில்லை. இவையெல்லாம் தன்னால் வருவதுதானே. எல்லா குழந்தைகளுக்கும் பள்ளிக்கூடங்கள் முடிந்தால் சந்தோஷம்.

ஆனால் விந்தியவாசினியின் வகுப்பு குழந்தைகளுக்கு மட்டும் ஆசிரியருடன் இருக்கும் வரை சந்தோஷம். பள்ளி முடிந்தவுடன் எல்லா குழந்தைகளும் ஒரு வித சோகம் இழையோடும் முகத்துடன் விடை பெற்றுக்கொண்டு தங்களுடைய பெற்றோர்களுடன் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே டாடா சொல்லிக்கொண்டே ஒருவித ஏக்கத்துடன் வீட்டுக்கு செல்லும்.

மறு நாள் காலை பள்ளிக்கு வந்தவுடன் ஒரு தாயைத்தேடும் குழந்தயை போல குழந்தைகள் எல்லாம் வகுப்பு ஆசிரியை விந்தியவாசினியை தேடும். இப்படிப்பட்ட அறிமுகம் எதற்கு என்று கேட்பது எனக்கு புரிகிறது.

எப்பவுமே உறவின் வலிமை தெரிந்தால்தான்

உள்ளத்தின் ஆழமும் அழகும் தெரியும் புரியும்.

வாழ்க்கை பிரச்சனை தீர்வின் முயற்சியில் எல்லா வழிகளும் அடை பட்டபின் இறுதியாக மஹாபெரியவளாயும் மஹாபெரியவா குரு பூஜையை இறுக பற்றுவதுதான் எல்லோருக்கும் தெரிந்த ஒரே இறுதி வழி.

மாணவிஅஞ்சனாவின் அறிமுகம்

ஒரு நாள் காலை ஒன்பது முப்பது பள்ளி திறந்து விட்டது. விந்தியவாசினியின் வகுப்பும் ஆரம்பித்து விட்டது. எல்லா குழந்தைகளும் வழக்கமான உற்சாகத்துடன் காணப்பட்டார்கள் ஒரு குழந்தையைத்தவிர. அந்த குழந்தைதான் அஞ்சனா. குழந்தைக்குண்டான சுறுசுறுப்பு இல்லாமல் சோர்ந்து காணப்பட்டாள்.

ஆசிரியர் விந்தியவாசினிக்கு கண்கள் கலங்கி விட்டன. வழக்கமாக அத்தனை குழந்தைகளும் அப்பொழுது மலர்ந்த மலர்களென்றால் அஞ்சனா மட்டும் சூரியணைக்கண்ட தாமரையை போல ஒரு சந்தோஷ எழுச்சியுடன் காணப்படுவாள்.

ஆனால் இன்று மட்டும் என்ன ஆச்சு அஞ்சனாவுக்கு என்று புரியாமல் ஆசிரியை விந்தியவாசினியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. இதைப்பார்த்த அஞ்சனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன புரியும் ஒரு குழந்தைக்கு. கலங்கும் உள்ளத்தின் உணர்வுகள் புரியலாம். கண்களில் கண்ணீர் பெருகலாம். ஆனால் காரணம் புரியுமா. மொத்தத்தில் ஆசிரியை விந்தியவாசினிக்கும் காரணம் தெரியவில்லை. குழந்தை அஞ்சனாவுக்கும் காரணம் புரிய வில்லை.

குழந்தை அஞ்சனாவின் மேல் இவ்வளவு பாசத்திற்கும் பிரிவுக்கும் என காரணம் என்று யோசிக்கிறீர்களா. காரணம் இதுதான்.

நம்முடைய குணாதிசயங்களை போலெ ஒரு சக ஆத்மாவை சந்தித்தால் பாசமும் சந்தோஷமும் பொங்குவது இயற்க்கை தானே வயது ஒரு பொருட்டே அல்ல. விந்தியவாசினியும் அஞ்சனாவும் அருகருகில் இருக்கும் பூச்செடியில் மலர்ந்த இரு மலர்கள்

ஆசிரியை விந்தியவாசினிக்கும் குழந்தை அஞ்சனாவுக்கும் ஒரு போலவே குணங்கள். குழந்தை அஞ்சனா சாப்பாட்டு நேரத்தில் தன்னுடைய சாப்பாட்டிலிருந்து உணவை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்து உண்பாள். எப்பொழுதும் அஞ்சனா இருக்குமிடத்தில் சந்தோஷத்திற்கு குறைச்சல் இல்லை. அப்படியொரு உடல் மகிழ்ச்சியும் உள்ளத்தில் மனித எழுச்சியும் கொண்ட குழந்தை. இப்படிப்பட்ட குழந்தை சாப்பிடாமல் இருந்தால் யாருக்குமே மனம் கலங்கும் தானே. ஆசிரியை விந்தியாவசினி மட்டும் விதிவிலக்கா என்ன.

வீட்டில் நிலவும் குழப்பமான சூழ்நிலை தந்தை படும் உடல் உபாதை இவைகளை பார்த்து என்ன செய்வதென்றே தெரியாமல் தாய் படும் மனத்துன்பத்திற்க்கும் காரணம் புரியாமல் ஆசிரியை விந்தியவாசினியிடம் காட்டி இருக்கிறாள் அஞ்சனா. இந்த சமயத்தில் தான் என்ன செய்வது என்று தெரியாமல் விந்தியவாசினி குழம்பியிருந்தாள்.

அஞ்சனாவும் வகுப்பில் அழுவதும் சாப்பிட மாட்டேன் என்று ஆடம் பிடிப்பதும் மற்ற குழந்தைகளுடன் பேசுவதும் விளையாடுவதும் அறவே நின்று விட்டது. பெரியவர்கள் என்றல் மனக்குழப்பத்திற்கு காரணம் தெரியும். ஆனால் குழந்தை அஞ்சனாவுக்கு என்ன தெரியும். வீட்டு சூழ்நிலைக்கு காரணம் தெரியுமா. குழந்தைகளுக்கு தெரிந்த ஒரே மொழி அழுகை. இந்த அழுகையைத்தான் தன்னுடைய ஆசிரியை விந்தியவாசினியிடம் காட்டினாள் அஞ்சனா.

ஆசிரியை விந்தியாவசினி இதற்க்கான காரணங்களை அறிய முற்பட்டாள். காரணத்தை அறிய ஒரே வழி பெற்றோர்களிடம் கேட்பதுதான். விவரம் அறிய ஒரு மாற்று வழியும் இருத்தது விந்தியாவசினிக்கு. தன்னுடைய தலைமை ஆசிரியரிடமோ அல்லது அஞ்சனாவின் சித்தி இதே பள்ளியில் தான் சக ஆசிரியையாக பணிபுரிகிறாள். இவர்களிடம் விசாரித்தாள் விந்தியாவசினி.. ஓரளவு விவரம் புரிந்தது.

ஒரு சரியான முறை தலைமை ஆசிரியையிடம் கேட்பதுதான். விந்தியவாசினி தலைமை ஆசிரியரிடம் கேட்டுப்பெற்ற தகவல் இதுதான். அஞ்சனாவின் தந்தை தொண்டை புற்று நோயால் அவதிப்படுகிறார். டாக்டர்கள் எல்லோரும் இது மிகவும் முற்றிய நிலையில் இருக்கும் புற்று நோய். காப்பாற்றுவது மிகவும் கடினம். என்று சொல்லி தங்களுடைய இயலாமையை தெரிவித்து விட்டார்கள்

தந்தை சாப்பிட முடியாமல் படும் அவதியை அஞ்சனா தினமதோறும் பார்த்து மனக்கலக்கமுற்று தினந்தோறும் அழுவாள். டாக்டர்களும் காப்பாற்றுவது மிகவும் கiyaடினம் என்று சொல்லி கை விரித்து விட்டார்கள். இன்னும் உயிர் வாழப்போவது சில நாட்களோ சில வாரங்களோ சில மாதங்களோ. இந்த விவரங்கள் அனைத்தும் கிடைத்தபின் விந்தியவாசினி மிகவும் குழம்பிப்போனாள். தனிமையில் அழுதாள்.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடக்கூடியது தானே. கஷ்டங்கள் கைமீறி போகும் பொழுது நாம் எல்லோருமே இறைவனைத்தானே நாடுகிறோம்.

விந்தியவாசினிக்கு எப்பொழுதுமே கண்கண்ட தெய்வம் மஹாபெரியவா தான். மஹாபெரியவா படத்தை பார்த்தாலோ மஹாபெரியவா என்னும் எழுத்தை பார்த்தாலோ தன்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் பெருகும். இந்தக்கஷ்டகாலத்தில் என்னுடைய ப்ரார்தனையைவிட விந்தியாவசினியின் ஆழமான பக்தியும் அசைக்கமுடியாத மஹாபெரியவா நம்பிக்கையும் தான் முக்கிய பங்கு வகித்தது.

மஹாபெரியவாளின் பக்தை என்றாலே பெரியவா அருள் இணையதளமும் பின்னாலேயே வந்துவிடுமே. மற்ற பக்தர்களின் குரு பூஜை அற்புதங்களைப்படித்து விட்டு என்னை தொடர்பு கொண்டாள் விந்தியவாசினி. என்னிடம் அஞ்சனாவைப்பற்றியும் அவளது தந்தை புற்று நோயால் அவதிப்படுவதாயும் என்னிடம் எடுத்துச்ச்சொன்னாள். நானும் மஹாபெரியவாளிடம் உங்கள் பிரார்த்தனையை சமர்ப்பித்து பிறகு விவரம் கூறுகிறேன் என்று சொல்லி விடை பெற்றேன்.

என்னுடைய பிரார்த்தனைக்கு மஹாபெரியவாளின் பதில் அஞ்சனாவின் தந்தை அபாய கட்டத்தை தாண்டினாரா அஞ்சனாவின் மன நிலை எப்படி இருந்தது. விந்தியவாசினி தன்னுடைய மனக்கலகத்தில் இருந்து விடு