மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்
மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-024

“மஹாபெரியவா”
எனக்கு நேற்று பேசியது நினைவில்லை
இன்று பேசியது புரியவில்லை
நாளை என்ன பேசுவது தெரியவில்லை
ஆனால் என் உயிர் இருக்கும் வரை
உங்களிடம் பேசிக்கொண்டே
இருக்கவேண்டும்போல இருக்கிறது
நாம் இதுவரை மஹாபெரியவாளின் ஞான திருஷ்டியை கண்டு அறிந்து அனுபவித்திருக்கிறோம். நாம் அறிந்த கேட்ட படித்த ஞான திருஷ்டிகள் எல்லாமே பெரும்பாலும் மனிதர்களை சார்ந்துதான் இருந்தது. ஆனால் மஹாபெரியவாளின் ஞான திருஷ்டி ஐந்தறிவே படைத்த பறவை இனங்கள் விலங்கு இனங்கள் தாவரங்கள் இவைகளிடமும் பின்னிப்பிணைந்திருந்தது என்பதை அறியும் பொழுது நம்முடைய மஹாபெரியவாளின் பக்திப்பார்வை விண்ணையும் தாண்டிச்செல்கிறது.அப்படி தாவரங்களிடம் நிகழ்ந்த அற்புதத்தை இந்த பதிவில் அனுபவிப்போம்.
மஹாபெரியவாளின் ஸ்ரீகார்ய மனுஷாள் எத்தனையோ பேர்.அத்தனைபேரும் பூர்வ ஜென்மத்தில் செய்த புன்னியங்கள் மூலம் இன்று மஹாபெரியவாளிடம் தொண்டாற்றுகின்றனர். அவர்களில் ஒருவர் கிருஷ்ணமூர்த்தி என்பவர். இவருடைய மனைவியும் ஸ்ரீ மடத்தில் கைங்கர்யம் செய்பவர்களில் ஒருவர்.
ஒரு நாள் காலைப்பொழுது மஹாபெரியவாளின் தீவிர பக்தர் ஒருவர் தன்னுடைய தோட்டத்தில் விளைந்த இரண்டு வாழைக்குலைகளை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு வந்தார். இரண்டு வாழைக்குலைகளையும் மஹாபெரியவா முன் வைத்து விட்டு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். மஹாபெரியவா அந்த பக்தரிடம் கேட்டார் என்ன வாழைக்குலை கொண்டு வந்திருக்கே.நல்ல விளைச்சலோ என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.
சிறிது நேரத்திற்குப்பின் அந்த பக்தர் விடை பெற்றுக்கொண்டார். மஹாபெரியவா மடத்து ஸ்ரீகார்ய மனுஷலில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தியை அழைத்தார். இந்த இரண்டு வாழைக்குலைகளிலும் எவ்வளவு வாழைப்பழம் இருக்கிறது என்று எண்ணி எனக்கு சொல்லு என்று உத்தரவிட்டார். கிருஷ்ணமூர்த்தியும் வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு தரையில் உட்கார்ந்து விட்டார்.இந்த உத்தரவு கொடுத்துவிட்டு மஹாபெரியவா மீண்டும் பக்தர்களிடம் பேச ஆரம்பித்துவிட்டார்.
கிருஷ்ணமூர்த்தி நீண்ட நேரம் எடுத்துக்கொண்டு எண்ணி முடித்தார். உடனே மஹாபெரியவாளை கூப்பிட்டுச்சொல்லமுடியாது.. மஹாபெரியவா தன் பக்கம் திரும்பும் வரை காத்திருக்கவேண்டும். சிறிது நேரம் கழித்து மஹாபெரியவா கிருஷ்ணமூர்த்தியின் பக்கம் திரும்பி என்ன எண்ணியாச்சா என்று கேட்டார். கிருஷ்ணமூர்த்தி எண்ணியாச்சு பெரியவா. ஒரு கொலையில் முந்நூற்று எழுபத்தைந்து பழங்களும் இன்னொரு கொலையில் இருநூற்று எழுபத்தைந்து பழங்களும் இருக்கு பெரியவா என்று சொல்லிவிட்டு.தன்னுடைய மற்ற வேலைகளை கவனிக்க கிளம்பினார்.
ஆனால் கிருஷ்ணமூர்த்தியை கொஞ்சம் இருடா உன்கிட்டே ஒரு கேள்வி கேட்கணும் என்று சற்று யோசித்தார்.கிருஷ்ணமூர்த்திக்கு கை கால்கள் உதறல் எடுக்க ஆரம்பித்தது. யாருமே மஹாபெரியவாளிடம் பேசுவதற்கு முன் பல கடவுள்களை வேண்டிக்கொண்டுதான் பேசுவார்கள். சிறந்த பண்டிதர்களுக்கே இந்த நிலமையென்றால் கிருஷ்ணமூர்த்திக்கு பெரியவாளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தார்.
இன்னும் கேள்வியே என்னனு தெரியலயே. பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தார் கிருஷ்ணமூர்த்தி.
மஹாபெரியவா கேட்டார் ஏன்டா கிச்சா நீ ஒரே தாரிலே ஆயிரத்து எட்டு பழங்கள் பாத்திருக்கையோ என்று கிருஷ்ணமூர்த்தியை கேட்டார்.. கிருஷ்ணமூர்த்தி என்ன பதில் சொவ்வதென்றே தெரியாமல் திரு திருவென்று முழித்துக்கொண்டிருந்தார். சுற்றி இருந்த பக்தர்கள் எல்லோரும் மஹாபெரியவாளின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தனர். சிறிது அமைதிக்கு பிறகு மஹாபெரியவா கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டார்.
உனக்கு தெரியலைங்கறது உன்ன பாத்தாலே தெரியறது. சரி நீ ஆயிரத்து எட்டு வாழை பழங்கள் உள்ள அந்த வாழைத்தாரை பாக்கணுமா என்று மஹாபெரியவா கேட்டார். கிருஷ்ணமூர்த்தி மிகவும் அவசரமா ஆசையாக ஆமாம் பெரியவா பாக்கணும் என்று சொன்னார். நீ அதை பாக்கணும்னா இளயத்தான்குடிக்கு போய்ப்பாரு. பாத்துட்டு அதை விலைக்கு வாங்கிண்டு வா என்று உத்தரவிட்டவுடன் கிரிஷ்ணமூர்த்திக்கும் சுற்றி இருந்தவர்களுக்கும் சப்பென்று போய் விட்டது.
பொதுவாகவே மஹாபெரியவாளின் உத்தரவோ செய்கைகளோ யாருக்கும் உடனடியாக புரியாது.அது நடந்து முடிந்தபின்தான் தெரியும் புரியும். ஆனால் மஹாபெரியவா சொன்ன வேலையை மறு கேள்வி கேட்க்காமல் செய்து முடிக்க வேண்டும் .ஆகவே கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய மனைவியுடன் இளயத்தான்குடிக்கு கிளம்பி வி ட்டார்.
இளயத்தான்குடியை பற்றி ஒரு சிறு குறிப்பு: சங்கர மடத்தின் அறுபத்தி ஐந்தாவது பீடாதிபதியாக விளங்கிய மஹாதேவீந்தர சரஸ்வதி ஸ்வாமிகள் இந்த சிற்றூரில் தான் அதிஷ்டானம் கொண்டுள்ளார்.
இளயத்தான்குடி சென்றடைந்தவுடன் அங்கிருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு சென்று மாரியம்மனை தரிசிக்க ஆரம்பித்தார் கிருஷ்ணமூர்த்தி. கண்களை மூடிக்கொண்டு ஆழ்ந்த பக்தியில் திளைத்துக்கொண்டிருந்தார் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு பின்னால் இரண்டு பேர் வாழைக்கொலைகளை பற்றிப்பேசிக்கொண்டிருந்தனர்.
கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு நிமிடம் மஹாபெரியவா சொல்லி இளயத்தான்குடிக்கு போ உனக்கு வாழைத்தார் தானாக கிடைக்கும் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. சட்டென்று திரும்பினார். அவர்களிடம் கிருஷ்ணமூர்த்தி பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். அவர்களிடம் கிருஷ்ணமூர்த்தி கேட்டார் " எனக்கு ஆயிரத்தி எட்டு பழங்கள் உள்ள வாழைக்குலை வேண்டும் எங்கு கிடைக்கும் என்று கேட்டார்.
உடனே அவர்கள் தெற்கு பக்கம் கை காண்பித்து அங்கே ஒரு வாழைத்தோட்டம் இருக்கிறது. அங்கே இருப்பவரிடம் சென்று விசாரியங்கள் என்று சொன்னார்கள். கிருஷ்ணமூர்த்தியும் அவர்கள் காண்பித்த தெற்கு திசையில் சென்றார். அங்கு ஒரு வாழைத்தோப்பை கண்டார். அங்கு இருந்தவரிடம் கிருஷ்ணமூர்த்தி கேட்டார் "எனக்கு ஆயிரத்தி எட்டு வாழைப்பழங்கள் உள்ள ஒரு வாழை தார் வேண்டுமென்று .
அவர்களும் இருக்கிறது தருகிறேன் என்று சொல்லி தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்தனர். கிருஷ்ணமூர்த்தியும் அந்த வாழைத்தாருக்குண்டான விலை ருபாய் முப்பதை கொடுத்து விட்டு ஒரு சுமை சுமப்பவரின் தலையில் வைத்து பேருந்து நிலையத்திற்கு சென்றார்.
காஞ்சிபுரம் பஸ் பிடித்து காஞ்சிக்கு சென்றடைந்தார். மடத்திற்கு சென்று மஹாபெரியவாளின் முன் வாழைக்குலைகளை வைத்துவிட்டு வணங்கினார். மஹாபெரியவா சிரித்துக்கொண்டே கேட்டார். ஒன்னும் கஷ்டப்படாமயே சுலபமா வாங்கிண்டு வந்துட்டே.என்று சொல்லிவிட்டு கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டார். "ஆமாம் எண்ணிப்பாத்தாயோ என்று கேட்டார்.
எண்ணினேன் பெரியவா சரியாக ஆயிரத்து எட்டு பழம் இருக்கு.பெரியவா இந்த வாழைக்கொலையை வாங்கும்போது எல்லாம் காயாக இருந்தது. இப்போ இங்க வந்தப்பறம் எல்லாம் மஞ்சளா மாறிடுத்து பெரியவா என்று ஒரு சிறு குழந்தயைப்போல கண்கள் அகல விரித்துச்சொன்னார். மஹாபெரியவாளுக்கு எல்லாம் முக்கூட்டியே தெரிந்து நடத்திய நாடகம் தானே இந்த வாழைக்குலை விளையாட்டு.
இன்னும் விளையாட்டு முடியவில்லை. சற்று இருங்கள்.
மஹாபெரியவா கிருஷ்ணமூர்த்தியிடம் சொன்னார் கிச்சா மலையாள புத்தாண்டு விஷு வரப்போறது. இந்த வாழைக்குலையை குருவாயூர் கோவிலுக்கு அனுப்பிடு என்று சொன்னார். கிரிஷ்ணமூர்த்திக்கும் ஒன்னும் புரியவில்லை ஸ்ரீ கார்ய மனுஷாளுக்கும் ஒன்னும் புரியலே.
விஷுக்கு இன்னும் பதினான்கு நாட்கள் இருக்கு. இந்த வாழைத்தாரை எப்படி குருவாயூருக்கு அனுப்பமுடியும். இந்த வாழைக்குலை குருவாயூர் போய் சேரும்பொழுது வெறும் பஞ்சாமிர்தமாகத்தான் போகப்போகிறது. என்று அவர்களுக்குளேயே நினைத்துக்கொண்டார்கள்.
பதினான்காவது நாள் ஆயிரத்து எட்டு பழங்கள் கொண்ட வாழைத்தார் ஒரு பழம் கூட தாரிலிருந்து விழவில்லை. எந்தப்பழமும் அழுகவில்லை.
இது எப்படி சாத்தியம்
வாழைப்பழம் கூட மஹாபெரியவா சொன்ன பேச்சை கேட்குமா வாழைத்தார் என்று இல்லை மனிதனும் சரி இயற்க்கையும் சரி மஹாபெரியவா கட்டளைக்கு கீழ் படிந்து நடக்கும் என்பதில் என்ன சந்தேகம்.இந்த பிரபஞ்சத்தை படைத்த பரமேஸ்வரன் மஹாபெரியவா
தான் படைத்த இயற்கையையும் மனிதனையும் சரியாக வழிநடத்த இந்தப்பிரபஞ்சம் சரியாக இயங்க அன்றாடம் மனிதர்களிடமும் விலங்குகளிடமும் பறவைகளிடமும் தாவரங்களிடமும் விளையாட வேண்டியிருக்கிறதே.ஒரு தனி மனித வாழ்க்கைக்கே ஒரு மனிதன் அன்றாடம் போராடும்பொழுது ஒரு பிரபஞ்ச இயக்கத்திற்கு எவ்வளவு சிந்தித்து செயல் பட வேண்டியிருக்கிறது.
நமக்கு தெரிந்தது மஹாபெரியவாளின் திருவிளையாடல் தெரியாதது தேவ ரகசியம்
உங்களை அறியாமல் கைகள் தொழுகின்றனவா
என் கைகளும்தான்
நானும் தொழுது வணங்கினேன்
மஹாபெரியவா பாதாரவிந்தங்களில்
அடியேன் சரணம்
Hara Hara Shankara Jaya Jaya Shankara
காயத்ரி ராஜகோபால்