Featured Posts

குரு பூஜை அற்புதங்கள்--பாகம்-II- விந்தியவாசினி


குரு பூஜை அற்புதங்கள்--பாகம்-II-விந்தியவாசினி

உருவத்தில் எப்படி இருந்தாலும்

உள்ளத்தில் குழந்தையாய் இரு

உலகமே உன்னை நேசிக்கும்

விந்தியவாசினியிடம் விடை பெற்றுக்கொண்ட பின் மறு நாள் காலை என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையின் பொழுது விந்தியவாசினியின் மனக்கலகத்தையும் அதற்கு காரணமான அஞ்சனாவின் தந்தை புற்று நோயால் அவதிப்படுவதையும் பின் வருமாறு மஹாபெரியவாளிடம் என் பிரார்த்தனைகளை சமர்பித்தேன்.

"பெரியவா விந்தியாவசினியை போல ஒரு ஆத்மாவை இந்த கலியுகத்தில் பார்ப்பது மிகவும் அபூர்வம்.தன்னிடம் கல்வி பயிலும் மாணவியின் தந்தை புற்று நோயால் அவதிப்படுவதால் குழந்தை அஞ்சனா சொல்ல முடியாத மனக்கலகத்தில் இருக்கிறாள்.

இதை அறிந்த ஆசிரியை விந்தியாவசினியும் மிகுந்த மன வேதனையில் இருக்கிறாள். இதற்கு ஒரு நல்ல தீர்வு கொடுங்கள் பெரியவா. அஞ்சனாவின் அப்பாவை காப்பாற்றி அஞ்சனாவிடம் கொடுங்கள் பெரியவா. விந்தியவாசினியும் மனக்கலகத்தில் இருந்து விடுபடுவாள். இத்துrgடன் என்னுடைய பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.

பெரியவா : மற்றவர்கள் சந்தோஷத்தில் உனக்கு அவ்வளவு சந்தோஷமா. இதுக்காகவே அஞ்சனாவின் அப்பாவை பிழைக்கவைக்க அனுகிரஹமும்

ஆசிர்வாதமும் பண்ணறேன்.. சந்தோஷமா என்று கேட்டார். விந்தியவாசினியை ஒன்பது வியாழக்கிழமை என்னுடைய குரு பூஜை பண்ணைக்ச்சொல்லு. எல்லாம் சரியாகிவிடும். என்று சொல்லி தன்னுடைய பதிலை முடித்துக்கொண்டார்.

மறு நாள் காலை விந்தியவாசினி என்னை தொடர்பு கொண்டாள். நானும் மஹாபெரியவா சொன்னவற்றை எல்லாம் விவரமாக சொல்லிவிட்டு ஒன்பது வார குரு பூஜை பற்றியும் சொன்னேன். தவறாமல் ஒவ்வொரு வாரமும் பண்ணறேன் மாமா என்று சொல்லி அப்பொழுதே தனக்கு மன நிம்மதி கிடைத்துவிட்டது போலெ உணர்ந்தாள். வழக்கமாக முதல் வார பூஜையில் இருந்தே மன நிம்மதியும் தங்களுடைய கஷ்டங்களில் இருந்து விடுதலை கிடைத்த உணர்வை பெறுவார்கள் ஒன்பது வார குரு பூஜை செய்யும் மஹாபெரியவா பக்தர்கள்..

நினைத்துப்பாருங்கள் தன்னுடைய மாணவி அஞ்சனாவை எதிர்காலத்தில் சந்திப்பது மிகவும் அரிது. தந்தையின் வேலை இட மற்றம் அஞ்சனாவின் மேல் படிப்புக்கு அவள் எங்கு செல்வாளோ தெரியாது. ஒரு விதத்தில் முகம் தெரியாத முகவரி தெரிந்து கொள்ள வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனாலும் ஒரு சக ஆத்தமாவாகத்தான் அஞ்சனாவை பார்த்தாள் விந்தியவாசினி. இது தான் மனித நேயத்தின் உச்சமோ. இந்த மாதிரி இதயங்கள் இருக்கும் வரை இயற்கை கூட நமக்கு தேவையான நேரத்தில் மழை தரும் வெயில் தரும். உயிர் வாழ தேவையான அனைத்தும் தரும்.

இதுதான் மனித நேயத்தின் உச்சமோ

மனித நேயம் காத்த மனிதர்கள்

அன்னை தெரசா நெல்சன் மண்டேலா

அவகர்களின் மனித நேயத்திற்கும்

விந்தியாவசினியின் மனித நேயத்திற்கும்

என்ன வித்தியாசம்

இதயங்கள் ஒன்றுதானே.

மறு நாள் காலை விந்தியவாசினி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டாள். நானும் மஹாபெரியவா சொன்ன அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி மஹாபெரியவா குரு பூஜையை விடாமல் செய்து வா உன்னுடைய மனக்கவலைகளும் மன அழுத்தமும் குறையும் என்று வாழ்த்துக்கள் சொல்லி தொலைபேசியயை துண்டித்தேன்.

வழக்கமாக ஒன்பது வாரமும் பூஜை முடிந்தவுடன் எனக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று எல்லா பக்தர்களிடமும் சொல்லி விடுவேன். விந்தியவாசினியும் ஒவ்வொரு வாரமும் மஹாபெரியவா குரு பூஜை முடிந்தவுடன் எனக்கு மின்னஞ்சல் மூல்லமாகவோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு தன்னுடைய அனுபவத்தை தெரிவிப்பாள்.

விந்தியவாசினியின் மஹாபெரியவா குரு பூஜை அனுபவத்தையும் அஞ்சனாவின் தந்தை உடல் நிலை முன்னேறியதா அல்லது மேலும் மோசமடைந்ததா என்பதை முதல் வாரத்திலிருந்து ஆரம்பித்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முதல் வாரம்:

செய்யும் வேளைகளில் ஈடுபாடு என்பது சொல்லிக்கொடுத்து வருவதில்லை. தானாக வருவது. நான் அனுப்பிய குரு பூஜை விவரங்களை நன்றாக படித்து அதன்படி முதல் நாளே எல்லாவற்றயும் சரி பார்த்து எடுத்து வைத்து பூஜைக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தாள் விந்தியவாசினி.

அதுவும் தனக்காக இல்லாமல் யாரோ ஒருவர் தன்னிடம் படிக்கும் குழந்தயின் தந்தைக்கு பூஜை செய்வது என்றால் எப்படிப்பட்ட புனித ஆத்மாவாக இருக்கவேண்டும் விந்தியவாசினி. மேலும் அவள் திருவாசகம் தேவாரம் போன்றவற்றில் உள்ள உடல் நலத்துக்கென்றே உள்ள ஸ்லோகங்களை ஒவ்வொரு நாளும் வாசிப்பாள்.

என்னுடைய பிரார்த்தனை என்பது இரண்டாம் பக்க்ஷம்தான். அவளுடைய உருகு பக்தியும் மஹாபெரியவாளின் மேல் இருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கையும் தான் பலனளிக்கப்போகிறது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

முதல் வாரம் தன்னுடைய முழு பக்தியையும் நம்பிக்கையும் வெளிப்படுத்தி நூற்றி எட்டு ப்ரதக்ஷிணம் செய்து குரு பூஜையை நல்லபடியாக முடித்து விட்டாள்.

விந்தியவாசினியின் மனம் சற்று ஆரோக்கியம் அடைவதையும் மனம் சிறிது தெளிவு அடைவதையும் உணர்ந்தாள். ஆனால் மாணவி அஞ்சனாவின் மனச்சோர்வு அப்படியே தான் இருந்தது. அஞ்சனா குழந்தைதானே. தந்தை பழைய நிலைக்கு திரும்பினால் தான் குழந்தையின் மனம் தெளிவு பெரும். இப்படியாக முதல் வார பூஜை நிறைவடைந்தது.

வானத்தில் இருந்த மேகக்கூடங்கள் விலகி சூரிய ஒளி ஒரு சிறிய புள்ளி போலெ விந்தியவாசினியின் மனதில் விழுந்தது.

இரண்டாம் வாரம்

ஒவ்வொரு வாரம் பூஜையை முடிந்த கையேடு எனக்கு மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்துவாள் விந்தியவாசினி.இரண்டாம் வார பூஜையும் நல்ல படியாக முடிந்ததை. அவள் அனுப்பிய மின் அஞ்சல் மூலம் அறிந்து கொண்டேன்.

இந்த இரண்டாவது வார பூஜையில் விந்தியாவசினிக்கு மனது மேலும் சற்று தெளிவடைந்திருந்தது. அஞ்சனாவின் தந்தை நிச்சயம் இந்த ஆட்கொல்லி புற்று நோயிலிருந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கையும் துளிர்த்தது.

ஆனால் மாணவி அஞ்சனாவின் மனதில் தெளிவு பிறக்கவில்லை. முகத்திலும் ஒரு விவரிக்க முடியாத சோர்வு காணப்பட்டது. ஒரு குழந்தையின் முகம் இவ்வளவு சோர்ந்து இருக்காது. சோகம் கூட குழந்தையின் முகத்தில் அழகாகிவிடும். இதுதான் இரண்டாவது வார முன்னேற்றம்.

நாம் ஒவ்வொரு வாரமும் முன்னேற்றம் குறித்து தெறித்து கொள்வது மிகவும் அவசியம்.அப்பொழுது தான் குரு பூஜை மனதில் படியும். பிற் காலத்தில் நம்முடைய பேரக்குழந்தைகளிடம் குரு பூஜை பற்றி சொல்லி இந்த குரு பூஜை பாரம்பரியம் காப்பாற்றப்படும். இந்த குரு பூஜை ஒரு சங்கிலி தொடர் போல வரும் தலைமுறையிலும் தொடர வேண்டும்.. இந்த குரு பூஜைக்கு மஹாபெரியவா உத்தரவு மிகவும் முக்கியம்.

மூன்றாவது வாரம்

மூன்றாவது வார பூஜையின் முதல் நாள் விந்தியவாசினியிடமிருந்து எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. அதன் விவரம் இதுதான்,

"மாமா இன்று நான் முன்றாவது குரு பூஜை செய்கிறேன். அஞ்சனாவின் அப்பாவிற்கு உடம்பு சரியாகி விடுமா. அஞ்சனா பழையமாதிரி கலகலப்பாக ஆகிவிடுவாளா. அவளின் குடும்பக்கஷ்டங்கள் தீர்ந்து விடுமா.இந்த சந்தேகத்திற்கு நான் சொன்ன பதில்."

இனிமேல் அஞ்சனாவின் அப்பா உடல்நிலை பற்றிய கவலையை விடுங்கள். அந்தக்கவலை இனிமேல் மஹாபெரியவாளுடையது. நீங்கள் தொடர்ந்து பூஜையை செய்து வாருங்கள். பூஜையின் பலன் தானாக வந்து சேரும் என்று சொல்லி என் பதிலை அனுப்பிவைத்தேன்.

நான்காவது வாரம்

நான்காவது வார பூஜையின் நாள் வியாழக்கிழமை நான் ஒரு மின் அஞ்சல் விந்தியவாசினிக்கு அனுப்பினேன். மனக்கிலேசம் இல்லாமல் பூஜை செய்யுங்கள். நிச்சயம் அஞ்சனாவின் தந்தை மீண்டு வருவார்.இதுதான் நான் அனுப்பிய மின்னஞ்சலின் விவரம்.

விந்தியவாசினியும் பூஜையை நல்ல படியாக முடித்து விட்டாள் என்பது அவளது பதில் மின்னஞ்சலின் மூலம் தெரிந்து கொண்டேன்.

விந்தியவாசினியின் மனதில் இனம் புரியாத ஒரு தெளிவு பிறந்து விட்டது.அஞ்சனாவின் தந்தை உயிருடன் மீண்டுவருவது நிச்சயம் என்பது போல உள் மன சமிக்கையைகள் தெரிவித்தன. இந்த உள் மன நம்பிக்கையை விவரிப்பது மிகவும் கடினம் ஓரளவு உணரலாம்.அனுபவித்தவர்களுக்கு தெரியும்.

ஆனால் அஞ்சனாவின் முகம் மட்டும் மிகவும் வாடியிருந்தது. ஆனால் அவளது ஆசிரியை விந்தியவாசினி அஞ்சனாவிற்கு ஒவ்வொரு நாளும் நிச்சயம் உன்னுடைய அப்பா உடல் நலம் தேறி திரும்பி வந்துவிடுவார் என்று தைரியம் சொல்லுவாள். அந்த தைரியம்கூட ஒரு சில மணி நேரத்திற்குத்தான்.

ஐந்தாவது வாரம்

மிகுந்த நம்பிக்கையோடு நான்கு வார மஹாபெரியவா குரு பூஜை செய்து விட்டு ஐந்தாவது வார குரு பூஜைக்குள் அடியெடுத்து வைக்கிறாள் ஆசிரியை விந்தியவாசினி. அஞ்சனாவிற்கு தன்னுடைய தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று மட்டும் தான் தெரியும்.ஆனால் அது உயிர்க்கொல்லி நோய் என்பது தெரியாது. அஞ்சனா ஒரு சிறிய குழந்தை.யாரிடம் என்ன கேட்பது என்றும் தெரியவில்லை.

ஆனால் ஒன்று புரிந்து கொண்டாள். மற்றவர்கள் பேசும் பொழுது தன்னுடைய காதில் விழுவதை கேட்டுக்கொள்வாள். அப்படி மருத்துவ மனையில் டாக்டரும் அஞ்சனாவின் தாயாரும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது.காதில் விழுந்த செய்தி இதுதான்." புற்று நோய் மிகவும் முற்றிய நிலையில் உள்ளது. உங்கள் கணவரை காப்பாற்றுவது என்பது முடியாத காரியம்.

விவரம் ஒன்றும் புரியவில்லை அஞ்சனாவிற்கு.. தன்னுடைய தாயிடம் கேட்டுக்கொண்டே இருந்தாள் அஞ்சனா.திரும்ப திரும்ப துளைத்து எடுத்து கேட்டுக்கொண்டே இருந்தாள் அஞ்சனா. அஞ்சனாவின் தாய்க்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.அழுது கொண்டே அஞ்சனாவிடம் சொன்னாள் " அப்பா சாமிகிட்ட போகப்போறாரு. திரும்ப வரவே மாட்டார் என்று அழுதுகொண்டே சொன்னாள் அஞ்சனாவின் தாயார்..

அஞ்சனா தன்னுடைய தாயிடம் சொன்னாள் "அப்பாவை சாமிகிட்ட போக வேண்டான்னு சொல்லும்மா.எனக்கு அப்பா வேணும் என்று நிற்காமல் அழுதுகொண்டே இருந்தாள்.ஒரு தாய் தன்னுடைய நான்கு வயது குழந்தைக்கு எப்படி புரிய வைப்பது. அஞ்சனாவை கட்டிக்கொண்டு அழுதாள். தாய் அழ அஞ்சனா அழ இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அழுதார்கள்.

அஞ்சனாவின் தாய் ஒரு முடிவு செய்தாள். குழந்தை வீட்டிலிருந்தால் அழுது கொண்டே இருப்பாள்.தனக்கும் துக்கம் தாளாது. பள்ளியில் ஆசிரியை விந்தியவாசினியிடம் சற்று மன அமைதியுடன் இருப்பாள் என்று முடிவு செய்து அஞ்சனாவை பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்தாள் அஞ்சனாவின் தாய்.

இப்பொழுது ஆசிரியை விந்தியவாசினியின்

ஐந்தாவது வார மஹாபெரியவா

குரு பூஜைக்கு வருவோம்

விந்தியவாசினி அதி காலையிலே எழுந்து குரு பூஜைக்கு தயாராகிவிட்டாள். மஹாபெரியவா படத்தை வைத்து கொண்டைக்கடலை மலையை போட்டுவிட்டு மஹாபெரியவாளுக்கு முன்னால் ஒரு விளக்கும் ஏற்றி வைத்து ஸ்லோகம் சொல்லிக்கொண்டே நூற்றியெட்டு பிரதக்ஷிணம் செய்ய ஆரம்பித்தாள்.

விந்தியவாசினியின் மனதில் அஞ்சனாவின் முகம் மட்டும் வந்து வந்து போனது. அஞ்சனாவின் தந்தை நிச்சயம் பிழைத்து விடுவார் என்று உள்மனம் சொன்னாலும் மனதின் மறுபக்கம் பயத்தை வரவழைத்துக்கொண்டிருந்தது.

விந்தியவாசினியின் கண்கள் குளமாகின. தன்னையும் அறியாமல் ஒரு பதட்டம். இருந்தாலும் மஹாபெரியவா நிச்சயம் காப்பாற்றிவிடுவார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் மஹாபெரியவா குரு பூஜையை முடித்து விட்டாள்.

இப்பொழுது விந்தியவாசினி பள்ளியில் மிகவும் கனத்த இதயத்துடன் விந்தியவாசினி பள்ளிக்கு கிளம்பி சென்றாள். அழுது கொண்டே பூஜை செய்ததால் கண்கள் சிவந்து காணப்பட்டது. தன்னுடைய வகுப்புக்குள் நுழைந்தாள். நுழைந்தவுடன் கண்கள் அஞ்சனாவை தேடியது. இப்பொழுது அஞ்சனா பள்ளியின் நுழை வாயிலிலிருந்தே வேகமாக தன்னுடைய வகுப்புக்கு சென்றாள். வகுப்பறைக்குள் கால் எடுத்து வைத்தவுடன் கண்கள் ஆசிரியை விந்தியவாசினியை தேடியது.

விந்தியவாசினியோ வகுப்பறையின் வாசலையே அஞ்சனாவை எதிர்பார்த்து கண்களை பதித்திருந்தாள். இருவர் கண்களும் சந்தித்தன. இருவர் கண்களிலும் கண்ணீர். ஆசிரியை விந்தியவாசினி அஞ்சனாவை இருக்க அணைத்துக்கொண்டாள்.அஞ்சனாவும் விந்தியவாசினியின் கால்களை கட்டிக்கொண்டு அழுதாள்.

விந்தியவாசினி கேட்டாள் ஏன் அஞ்சனா அழறே என்று தன்னுடைய விரல்களால் அஞ்சனாவின் கண்களிலுருந்து வரும் கண்ணீரை துடைத்து வீட்டாள். அஞ்சனாவும் பதிலுக்கு விந்தியவாசினியின் கண்களில் கண்ணீர் துளிகளை பெரிய மனுஷி மாதிரி தன்னுடைய பிஞ்சு விரல்களால் துடைத்து விட்டாள்.

ஒரு சமயம் இருவரும் அழுகையை நிறுத்தினார்கள். இப்பொழுது விந்தியவாசினி அஞ்சனாவிடம் கேட்டாள். "ஆமாம் எதுக்கு அழுதாய்"

அஞ்சனா பதிலுக்கு ஒரு கேள்வியைத்தான் கேட்டாள். "அப்பா சாமிகிட்ட போய்டுவாரா. திரும்பி வரவே மாட்டாரா. அப்பாவை சாமிகிட்ட போக வேண்டாம்னு சொல்லுங்க டீச்சர் " என்று கேள்வியை முடித்துக்கொண்டாள் அஞ்சனா."

இந்த கேள்விக்கு எப்படி விந்தியவாசினி பதில் சொல்லுவாள்.என்ன பதில் சொல்லுவாள். அஞ்சனாவை வாரி அணைத்துக்கொண்டு நெஞ்சம் வெடித்து அழுதாள். இதைப்பார்த்த அஞ்சனாவும் தேம்பி தேம்பி அழுதாள்.

இதுதான் பூர்வ ஜென்ம பந்தமோ

இரு இதயங்களின் கண்ணீரை

எந்த இதயம் தாங்கிப்பிடிக்கும்

சந்தேகமென்ன மஹாபெரியவாளின்

பக்தி என்னும் இதயம்தான்

இதுதான் ஐந்து வார பூஜையின் வெளிப்பாடு. ஆறாவது வாரத்திலிருந்து ஒன்பதாவது வாரத்திற்குள் என்ன நடந்தது. அஞ்சனாவின் தந்தை காப்பாற்றப்பட்டாரா. விந்தியவாசினியின் மஹாபெரியவா குரு பூஜைக்கு பலன் கிடைத்ததா என்பதை தெரிந்து கொள்ள அடுத்த திங்கள்கிழமை வரை காத்திருப்போம்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square