Featured Posts

மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்


மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்

ஞானம் என்பது நதியை போன்றது

அது எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ

அந்தளவுக்கு அமைதியாக இருக்கும்

அன்று காஞ்சி ஸ்ரீ மடத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மஹாபெரியவாளை தரிசனம் செய்து ஆசிர்வாதம் வாங்க பக்தர்கள் கூடியிருந்த நேரம். எல்லோரும் அவரவர்கள் தோட்டத்தில் விளைந்த காய் கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை மஹாபெரியவா முன் சமர்ப்பித்து விட்டு சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார்கள்.

தொடுக்காத மலர்களும் தொடுத்த மலர் மாலைகளும் எங்கும் நிரம்பி வழிய காஞ்சி ஸ்ரீ மடமே ஒரு பசுமையான பழச்சோலையாகவும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூஞ்சோலையாகவும் காட்சி அளித்தது. இவற்றிற்கு மத்தியில் மஹாபெரியவா சாட்ஷாத் பரமேஸ்வரன் ரூபத்தில் உட்கார்ந்து கொண்டு எல்லோருக்கும் ஆசிர்வாதமும் அனுகிரஹமும் செய்துகொண்டிருந்தார்.

ஒரு பக்தர் மட்டும் மூங்கில் கூடை நிரம்பி வழிய கொன்றை பூக்களை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். கொன்றைப்பூக்களின் வாசனை அந்த மொத்த இடத்தையும் ஆக்கிரமித்திருந்தது.

பரமேஸ்வரனுக்கு ஏற்ற பூக்களல்லவா. மஹாபெரியவாளின் முகம் மலர்ந்தது. கூடை வழிய வழிய கொன்றை பூக்களை கொண்டுவந்திருக்கயே என்று சொல்லிவிட்டு அந்த பூக்களை கொண்டுவந்திருந்த பக்தர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார் மஹாபெரியவா. அடுத்தது என்ன கேட்கப்போறாரோ மஹாபெரியவா என்று ஒருவித பயத்துடன் மஹாபெரியவளையே பார்த்துக்கொண்டிருந்தார்.

மஹாபெரியவா அந்த பக்தரிடம் கேட்டார் கூட நிறைய பூ மட்டும்தான் கொண்டுவந்திருக்கயா இல்ல கூடைக்குள்ளே வேறு ஏதுவும் இருக்கா. பக்தர் சொன்னார் கூடை நிறைய பூ மட்டும்தான் கொண்டுவந்திருக்கேன் பெரியவா. என்று சொன்னார். பெரியவா சொன்னார் " பாத்தா அப்படி தெரியலையே.. பக்தர் சொன்னார் நிச்சயம் பூ மட்டும்தான் கொண்டு வந்திருக்கேன் பெரியவா.

உடனே, இல்லையே நாகாபரணம் எல்லாம் கொண்டுவந்திருக்கயே. இங்க மடத்திலேயே நாகாபரணம் எல்லாம் இருக்கு.என்று சொன்னார். பக்தருக்கும் ஒன்றும் புரியவில்லை அங்கு சுற்றி இருந்தவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. பக்தர் கூடையை பிரிக்கப்பார்த்தார்.மஹாபெரியவா உடனே உத்தரவிட்டார். "இங்க பிரிக்காதே ரெண்டு பெரிய மூங்கில் தட்டுகளை எடுத்துண்டு அந்த ஓரமா போய் கொட்டிப்பாரு.என்று உத்திரவிட்டார்.

சுற்றி இருந்தபக்தர்கள் எல்லோரும் அந்த கொன்றை பூக்கள் கொண்டுவந்த பக்தரையே பார்த்துக்கொண்டிருந்தனர். பக்தரும் கூடையை பிரித்து இரண்டு மூங்கில் தடுகளிலும் கொட்டினார். புஸ் என்று ஒரு நாகப்பாம்பு படமெடுத்து ஆடியது. அனைவரும் அதிர்ந்து விட்டனர்.

பூ கொண்டு வந்த பக்தரும் எகிறி குதிக்காத குறைய தாவி ஓடினார். ஒரு வழியாக எல்லோரும் பயம் போய் அமர்ந்தார்கள். ஆனால் பூ கொண்ண்டுவந்த பக்தருக்கு இன்னும் கை கால்கள் நடுங்கிக்கொண்டுதான் இருந்தது. மஹரியாவா அந்த பக்தரிடம் சொன்னார்.இனிமே பூ மட்டும் கொண்டுவா. இந்த நாகபரணத்தையெல்லாம் தூக்கிண்டு வராதே. உனக்கும் கஷ்டம் என்று சொல்லி ஒரு சந்தோஷ முத்தாய்ப்பு வைத்தார்.

மஹாபெரியவாளின் ஞான திருஷ்ட்டி கூடையிலிருக்கும் நாகத்தை மட்டுமல்ல பூவுக்குள் இருக்கும் பூ நாகத்தை கூட கண்டு விடும்.

மஹாபெரியவாளுக்குத்தான்

எத்தனை எத்தனை பரிமாணங்கள்

எல்லா பரிமாணங்களையும்

நம்மையும் இணைக்கும் பாலம்

பக்தி ஒன்று தான்

இன்னும் பரிமாணங்கள் வரும்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square