உங்கள் கவனத்திற்கு என் பணி சுமையை சுமக்கும் இரு ஆத்மாக்கள்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

பெரியவா
என் கடன் உன் பணி செய்து கிடப்பதே
மற்றவர்கள் துன்பத்தின் வலியை உணர்ந்து பார்
உனக்குள் இருக்கும் ஆத்மா உதயமாகும்
எண் பணி சுமையின் வலியை உணர்ந்த
இரண்டு ஆத்மக்களின் ஆத்மா உதயமானது
உதயமான இரு ஆத்மாக்கள்
சவிதா முரளிதர் - சௌம்யா
என் ஆன்மீக பணிகள் துவக்கத்தில் மிகவும் எளிமையாக தான் இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல என் பணி அதிகரித்து கொண்டே இருந்தது. ஒரு மனிதனின் இரண்டு பக்கங்களும் செயல் படும் பக்ஷத்தில் பணி சுமையை நன்றாகவே சமாளிக்கலாம். ஆனால் உடலின் ஒரு பகுதி செயல் இழந்து ஒரு பகுதி மட்டும் ஓரளவிற்கு செயல் படும் என்றால் ஓரளவிற்கு பணி சுமையை தாங்கலாம்..
என்ன செய்ய?. என் இடது புறம் முற்றிலும் செயல் இழந்து வலதுபுறம் ஓரளவிற்கு மட்டுமே செயல் படுகிறது.. ஆன்மீக பணி சுமையை மொத்தமாக சுமக்க இயலாமையால் என் பணி சுமையை சுமக்க இரண்டு ஆத்மாக்களை மஹாபெரியவாளிடம் வேண்டினேன்.
மஹாபெரியவா என் கஷ்டத்தை புரிந்து கொண்டு இரண்டு ஆத்மாக்களை எனக்கு சொன்னார். அவர்களில் ஒருவர் உங்களுக்கு பரிச்சயமான சவிதா முரளிதர்.. இனொருவர் இந்த மஹாபெரியவா இறைக்கு சாம்ராஜ்யத்தின் புது வரவு திருமதி சௌம்யா.
விரைவில் உங்கள் முன்னே மஹாபெரியவாளின் மற்றொரு பணியான சிதிலபமடைந்த கோவில்களை புனரமைத்து மக்களின் வழிபாட்டிற்கு உகந்ததாக செய்யும் பணியில் உங்கள் முன்னே தோன்றி முதல் கோவிலான திருமேற்றழி அறிமுகத்தில் இன்னும் சில நாட்களில் உங்கள் முன்னே தோன்றுவார்.
என்னுடைய மின்னஞ்சல் பதிவுகளை இன்று முதல் திருமதி சவிதா முரளிதர் அவர்கள் படித்து என் உத்தரவு பெற்று உங்களுக்கு பதில் அனுப்புவார்கள்.. மற்றபடி என்னுடைய வழக்கமான பிரார்த்தனைகள் தொடரும்.
உங்கள் பிரச்சனைகளை மஹாபெரியவாளிடம் சமர்ப்பித்து குரு பூஜைக்கு உத்தரவு வாங்கும் பணியை நான் மட்டுமே செய்வேன். இதன் மூலம் உங்கள் மின்னஞ்சல்களுக்கு தாமதம் இல்லாமல் பதில் கொடுக்க முடியும்..
கடந்த சில ஆண்டுகளாகவே என்னுடைய ஆன்மீக திருப்பணியில் ஈடு பட்டு மற்றவர்கள் கஷ்டங்களை புரிந்து கொண்டு செயல் படும் ஒரு ஆத்மா. சவிதா முரளிதர். அவர்களின் கைபேசி என்னை உங்களுக்கு இங்கே கொடுக்கிறேன்.
உங்கள் எல்லா கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் சவிதா முரளிதர் பதிலளிப்பார். உங்கள் நலனை முன்னிட்டே இந்த ஏற்பாட்டை மஹாபெரியவா ஆசியுடன் நான் உங்கள் முன் வைத்துளேன். உங்கள் ஒத்துழைப்பு இதற்கு மிகவும் அவசியம் என்பதை நானும் உணர்கிறேன். நீங்களும் உணர்வீர்கள் என்பது நிச்சயம் எனக்கு தெரியும்..
சவிதா முரளிதர் கை பேசி எண்: 9841633261
எண் ஆன்மீக பணியில் ஈடு பட்டிருக்கும் மற்றொரு ஆத்மா திருமதி சௌம்யா. இவருக்கு மஹாபெரியபவா இட்ட பணி என்னுடைய வாட் ஆப் பதிவுகளை தினமும் மாலை நேரத்தில் பார்த்து உங்களுக்கு பதில் அளிப்பார். இவர் மிகப்பெரிய நிறுவனத்தில் இந்தியாவிற்கே தலைமை பொறுப்பேற்று செயலாற்றி வருகிறார்.
இவர் நேரத்துடன் போட்டிபோட்டுக்கொண்டு ஓடும் ஒரு பதவியில் இருக்கிறார். ஆனால் இவரை பொறுத்தவரை மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று உறுதியாக நம்புபவர். இதனுடன் மஹாபெரியவா பக்தியும் இணைந்தால் எதுவும் சாத்தியமே. என்ற உண்மையில் உறுதியாக நிற்பவர். இவர் தான் என்னுடைய வாட்ஸ் ஆப் பதிவுகளை பார்த்து படித்து உங்களுடன் தொடர்பு கொள்ளுவார்.
இவருடைய கை பேசி எண்: 9677238786.
இந்த இருவருமே உங்கள் அழைப்புகளை ஏற்பார்கள். அவர்களின் வேலை பளு அதிகமாக இருப்பின் உங்கள் அழைப்பை அவர்களால் ஏற்க இயலாது.ஆனால் அவர்கள் இருவரும் நிச்சயம் உங்களை அழைத்து உங்களுடன் பேசி உங்கள் கவலைகளை பகிர்ந்து கொள்வார்கள். உங்களுக்கு உதவ நீங்கள் இந்த இருவருக்கும் உதவுங்கள். உங்களுக்காகவே என்னுடன் சேர்ந்து உழைக்கும் ஆத்மாக்கள் இவர்கள்.
ஒன்றை மட்டும் உங்களுக்கு தெரிபவித்து கொள்ள ஆசை படுகிறேன். நொடிப்பொழுதும் உங்கள் நினைவிலும் உங்கள் கஷ்டங்களுக்கு நிவர்த்தி தேடும் முயற்சியிலும் நான் என்றுமே உங்களுடன் தான் இருப்பேன் என்பது நிதர்சனமான உண்மை.

நீங்கள் இல்லையேல் நானும் இல்லை
மஹாபெரியவா இல்லயென்றால்
நாம் இருவருமே இல்லை
மஹாபெரியவா பாதமே சரணம்
என்றும் உங்கள்
நலன் நாடும்
காயத்ரி ராஜகோபால்